Memories

Friday, September 30, 2011

சமீபத்தில் ரசித்த படம் - உள்ளத்தை அள்ளித்தாசுமார் 14 வருடங்களுக்கு முன் வந்த படம், இப்போது பார்த்தாலும் சிரிக்க வைக்கிறது. 

காமெடிக்கு கார்த்திக், கௌண்டமணி ஜோடி பத்தாது என்றால், மணிவண்ணன், ஜெய்கணேஷ், செந்தில், பாண்டு என்று நகைச்சுவை கதாபாத்திரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரு கட்டத்தில் எல்லா கதாபாத்திரங்களும் ஒரே வீட்டுக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது இப்பவும் வாய் விட்டு சிரிக்க வைகிறது. "சுட்ட்ட்டு புடுவேன்" என்று விறைப்பாக வரும் ஜெய்கணேஷ் கடைசியில் "ரொட்டி சுடுவேன்" என்று அந்தர் பல்டி அடிப்பது நாம் முதலில் இருந்தே எதிர்பார்த்தது.

கார்த்திக் (ராஜா) மிகவும் கண்டிப்பான அப்பா ஜெய்கணேஷின் பிள்ளை. காலையில் எழுந்திருப்பதில் இருந்து பாத்ரூம், சாப்பாடு, என்ன உடுத்துவது என்று சகலமும் அப்பாவின் இஷ்டப்படி தான். ஜெய்கணேஷ் ரம்பாவை கார்த்திக்குத் தேர்வு செய்கிறார். ஆனால் போட்டோ மாறிப் போக ஏதோ ஒரு போட்டோ கார்த்திக்குக் கிடைக்கிறது. அதனால் வீட்டை விட்டு ஓடிப் போகிறார் ஊட்டிக்கு. அங்கு கௌண்டமணி (வாசு - கார்த்திக் ஆங்காங்கு செல்லமாக "வாச்சு" என்று கூப்பிடுகிறார்)  சிநேகிதம் கிடைக்கிறது. அங்கு ஊட்டியில் ரம்பாவும் இருக்கிறார். அவர் தான்  தனக்குப் பார்க்கப் பட்ட பெண் என்று தெரியாமல் ஜொள்ளாக விட்டுத் தள்ளி பார்க்கும் வேலை எல்லாம் இழக்கிறார். அதற்க்கு ஈடாக ரம்பாவைக் கடத்தி அவர் அப்பாவிடமிருந்து பணம் பறிக்க எண்ணுகிறது கார்த்திக், கௌண்டமணி கோஷ்டி.       

இவர்கள் கடத்தும் முன் வேறொரு கும்பல் கடத்துகிறது ரம்பாவை. "நாங்க செய்யனுண்டா அது" என்று சொல்லித் துரத்தி ரம்பாவை மீட்கிறார்.  ரம்பாவின் அப்பா மணிவண்ணன் கார்த்திக்கை டிரைவராக மற்றும் பாடிகார்டாக வேலைக்கு சேர்க்கிறார்.  இந்த சமயத்தில் கௌண்டமணி காணமல் போன ராஜா (கார்த்திக்) வாக மணிவண்ணன் வீட்டுக்கு வருகிறார். 

ஜெய்கனேஷும் மணிவண்ணனும் நண்பர்கள். இதே வீட்டுக்கு ஜெய்கனேஷும் வர, கார்த்திக்கும் கௌண்டமணியும் சமாளிக்கிறார்கள் - ராஜா & டிரைவர்-ஆக. மணிவன்னனுக்குத் தம்பியாக இன்னொரு மணிவண்ணன் வேறு வருகிறார். 

தன்னிடம் கார் டிரைவராக இருக்கும் கார்த்திக் தன் மகள் ரம்பாவை காதலிப்பது தெரிந்ததும் மணிவண்ணன் கார்த்திக்கை கூப்பிட்டு பேசுகிறார். இது வாக்குவாதமாக மாறி  கார்த்திக் 5 லட்சம் ஒரு மாதத்தில் சம்பாதிப்பதாக சவால் விடுகிறார். கார்த்திக்கும் கௌண்டமணியும் இந்த முறை(!?) மணிவண்ணனை கடத்தி அவர் மகள் ரம்பாவிடம் ஐந்து லட்சம் வாங்க நினைகிறார்கள். தம்பி மணிவண்ணன் அண்ணன் மணிவண்ணனைக்  கடத்தி  அண்ணன் சொத்துக்களைத் தனதாக்க எண்ணுகிறார்.  எல்லாரும் மணிவண்ணனைக் கடத்த ஒரே வீட்டுக்குள் முயற்சிக்கிறார்கள். இந்த இடம் தான் என்னை இப்போது பார்க்கும் போதும் வாய் விட்டு சிரிக்க வைக்கிறது.  ஒரு வழியாக அண்ணன் மணிவண்ணன் கடத்தப்பட்டு தம்பி அந்த இடத்துக்கு வருகிறார். அவர் மீது சந்தேகம் வருகிறது கார்த்திக், ரம்பா, கௌண்டமணி எல்லாருக்கும். 

பின்னர் என்ன ? டிஷ்யூம் டிஷ்யூம் தான். போலீஸ் வந்து கரெக்டா கெட்டவர்களைக் கைது செய்து எல்லாம் சுபம்.

சிற்பி இசை அமைத்திருக்கிறார். எல்லா பாடல்களையும் அராபிய நாட்டு பாடல்கள், பாகிஸ்தான் நாட்டு பாடல்களிலிருந்து சுட்டிருக்கிறார்.  

டைரக்ஷன் சுந்தர்.c எல்லா காட்சிகளிலும் நகைச்சுவை விருந்து படைக்கிறார். படம் கடைசி வரை விறு விருப்பாகவும் நல்ல பொழுது போக்கும் வகையிலும் கொடுத்திருப்பது சிறப்பு. சின்ன பட்ஜெட் சிறந்த படம் கொடுத்த இவருக்குப் பாராட்டுக்கள். 

நீங்கள் ரசித்த நினைவில் இன்னும் இருக்கிற காட்சிகளையும், உங்கள் கருத்துக்களையும் எழுதவும். 
Thursday, September 29, 2011

மாமாவுடைய போட்டோக்கள் - புதுசு

போட்டோ அனுப்பிய ரத்தினத்துக்கு நன்றிகள் !

பிரமு மாமா போட்டோக்கள்

பிரமு மாமா போட்டோக்கள்

Wednesday, September 28, 2011

கான்செர் புதிய நோயா ?

அகழ்வாராய்ச்சியில் ஒரு பிரிவு இருக்கிறது. அதில் அக்காலத்தில் புதைக்கப் பட்ட உயிரினங்களின் எலும்பு, முடி மற்றும் பல் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து அக்கால விலங்கு, மனிதர்களின் பழக்க வழக்கங்களையும் நோய் நொடி முதலியவற்றையும் கண்டு பிடிப்பார்கள். அந்த பிரிவு பல மனித எலும்புக்கூடுகளில் கான்செர்-ஐ கண்டுபிடித்துள்ளது. அந்த எலும்புக்கூடுகள் மிக மிகப் பழையவை. சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் ஆங்காங்கே இந்த நோய் பற்றிய குறிப்பு வருகிறது. எகிப்தியர்கள் இதை பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள், கிரேக்கர்கள் இந்த நோய்க்கு கான்செர் என்கிற பெயரை கொடுத்திருக்கிறார்கள். எகிப்தியரும் கிரேக்கர்களும் இதற்கு மருந்து இல்லை என்றே எழுதி வைத்திருக்கிறார்கள்.  

இந்த நோய் ஒன்றும் நவீன காலத்தியது இல்லை. இது மனித உலகின் ஆதி நோய். இது பற்றிய விழிப்புணர்வு அன்று இல்லாமல் போனது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. 

அந்த விழிப்புணர்வு இன்றும் இல்லை என்பது கொடுமை. இதற்கு கொடுக்கும் விலை ஈடு இணை இல்லாதது....

நன்றி: சித்தார்த்தா முகர்ஜி-யின் 'நோய்களின் அரசன் - கான்செர்'. 
உள்ளத்தால் குழந்தை இந்த சாமி!

  போட்டோவைப் பகிர்ந்த ரத்தினத்துக்கு கோடி நன்றிகள் !
Monday, September 26, 2011

போகிறவர் யார் தெரிகிறதா ?


Sunday, September 25, 2011

பிரமு மாமா வீடியோ - மீண்டும் !

பிரமு மாமா வீடியோ பலருக்கு பார்க்க முடியாத காரணத்தால் அதன் தரத்தைக் குறைத்து மறுபடியும் ஏற்றம் செய்கிறேன்
அடுத்து வரும் பதிவுகளில்....


அடுத்தடுத்த பல பதிவுகளில் கான்செர் பற்றி எழுத இருக்கிறேன். சிலர் என்னிடம் சொன்னார்கள், கான்செர் பற்றி நினைப்பதையும் அதை பற்றி படிப்பதையும் விட்டு விடு என்று. என்னுடைய நல்லதுக்காக இது சொல்லப் பட்டாலும், இது வரை நான் தெரிந்து கொண்டதை எழுதுவது என்னுடைய கடமை என்று எண்ணுகிறேன். சுமார் ஆறு எழு மாதங்களுக்கு முன்னர் அந்த நோயைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இப்போது அப்படியல்ல. மருத்துவம் ஆங்கில மொழியிலேயே சொல்லப் பட்டிருக்கிறது, அதை தமிழில் சொல்வது எளிது அல்ல, ஆனால் என்னால் முயன்றதை இங்கு செய்கிறேன். ஒருமுறை பிரமு மாமா சொன்னார்கள்: "கான்செர் கொல்லாது, ஆனால் தாமதம் கொன்று விடும்" என்று. என்னுடைய பதிவுகள் அந்தத் தாமதத்தை எங்கோ இருக்கிற யாருக்காவது போக்கினால், இந்த முயற்சி பயனுடையதாக ஆகும்.
கான்செர் என்கிற வார்த்தை மனதில் நிறைய வலியை உண்டாக்குகிறது, வேதனை உண்டாக்குகிறது என்றாலும் அதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
உங்களது எண்ணங்களை கருத்துக்கள் இணைப்பில் ("கருத்துக்கள்"-ஐ சொடுக்கி) எழுதுங்கள்.


கோரிக்கை

மாமாவுடைய நல்ல போட்டோ இருந்தால் தயவு செய்து எனக்கு அனுப்பவும், நான் அதை இந்த இணையத்தில் பதிவு செய்து விடுவேன். 
முழுமையான மனிதன்

என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்: "கல்யாணம் செஞ்ச பிறகு வேலை கவனம் போய்டும். இல்லன்னா குடும்ப கவனம் போய்டும்."
உடனே அம்மா சொன்னாங்க: " உன் பிரமு மாமாவை நெனச்சு பாரு. எவ்வளவு கஷ்டமான வேலை அவனது. அதனால குடும்பத்துக்கு எதாவது செய்யாம விட்டானா? குடும்பத்துக்கு செய்யறேன்னு சொல்லி தொழில விட்டானா? ஒரு முழுமையான மனிதன் எதையும் விட மாட்டான்"

உண்மைதான் !

மாமா குடும்பத்தையும் விட வில்லை, தொழிலையும் விட வில்லை, எந்த நல்லது கெட்டதுகளையும் விட வில்லை. இது தான் முழுமையான மனிதனுடைய இயல்பு...!!


Saturday, September 24, 2011

இந்த வார கார்ட்டூன் - துக்ளக்கில் இருந்து

Friday, September 23, 2011

ஒளியை விட வேகமாக பயணிக்கும் துகள்

இன்னிக்கி செய்திகள்-ல வந்திருக்கு: ஒளியை விட வேகமா போகக் கூடிய துகள் அறிவியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்க பட்டிருக்கு. சிலர் இது உபகரணங்கள்ள உள்ள தவறுன்னு சொல்லறாங்க. ஆனா இது உண்மையா இருந்தா ஐன்ஸ்டீனுடைய கண்டு பிடிப்புகள் தவறுன்னு நிரூபிக்கப் படும். ஐன்ஸ்டீன் ஒளியை விட வேகமா எதுவும் போகாது என்கிற விஷயத்தை அனுமானித்து எல்லா சூத்திரங்களும் கண்டு பிடித்தார். அது எல்லாம் தவறுன்னு ஆயிடும்.

ஆனா, இதனால ஐன்ஸ்டீன் ஒன்னும் அறிவாளி இல்லைன்னு ஆய்டாது. ஏன்னா அவரே நான் கண்டு பிடிச்சத இன்னும் 50 வருஷத்திலே தப்புன்னு நிரூபிக்காட்டி அறிவியல் வளரலேன்னு அர்த்தம் என்று சொல்லிருக்கார்.
பொறுத்திருந்து பாப்போம். 


பேச்சி பிரமராக்கு

இது தான் செவல் பிரான்சேரி என்கிற கிராமத்தில் இருக்கக் கூடிய குல தெய்வத்தின் பெயர். இந்த குல தெய்வத்துக்கு வேண்டி நல்ல படியாக பிறந்ததால் பிரமநாயகம் என்கிற பெயரை வைத்தார்கள் மாமாவுக்கு. பாட்டி ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் போது அவர்களுக்கு ஒரு வித வலி வந்திருக்கிறது. குழந்தை தவறி விடும் என்று எல்லாரும் பயந்திருக்கிறார்கள். நேரம் இரவு நெடு நேரம் ஆகிவிட்டபடியால் ஆஸ்பத்திரிக்கும் தூக்கிட்டு போக முடியவில்லை. அப்போது ஒரு அம்மன் கொண்டாடி (கோவிலில் சாமி ஆடுபவர்களை இப்படி தான் பாட்டி சொல்லுவாள்)  வந்து குழந்தைக்கு ஒன்னும் ஆகாது, நல்ல படியாக ஒரு ஆண் பிள்ளை பிறக்கும், குழந்தைக்கு பிரமநாயகம் என்ற பெயரை வை என்று சொல்லி போய் விட்டாள்.  இப்படி வைத்தது தான் அந்த பெயர். 


Thursday, September 22, 2011

சின்ன கோடும் பெரிய கோடும்


ஒரு தடவ வேலைல நிறைய கஷ்டம் வந்திட்டது. அது விடவே இல்ல. எப்போ தீரும்-ன்னு தெரியல. கஷ்டத்தை பத்தி நெனைக்கறதே ஒரு தனி கஷ்டமா போயிருச்சி. பிரமு மாமாவிடம் சொல்லிட்டு இருந்தேன். மாமா இப்படி சொன்னாங்க, அவங்க பாணியில்: கஷ்டம் என்பது தரையில் வரையிற பெரிய கோடு மாதிரி. அந்த கோடு எப்பவும் பெருசாத் தான் தெரியும். அது பக்கத்திலே அதை விட பெரிய இன்னொரு கோடு வரையும் போது இந்த கோடு சின்னதா ஆயிடும்.  

ஒரு நிமிஷம் நெனைச்சு பாத்தேன்...பத்தாம் கிளாஸ் படிக்கும் போது அதை விட பெரிய கஷ்டம் இல்லைன்னு தோனுச்சு. பன்னண்டாம் கிளாஸ் படிக்கும் போது பத்தாம் கிளாஸ் கஷ்டம் ஒண்ணுமே இல்லைன்னு தோனுச்சு. அது அப்படி போய் கிட்டே இருக்கு. எதாவது கஷ்டம் வரும் போது மாமா சொன்னத நெனச்சுக்குவேன், அந்த கஷ்டம் ஈசி ஆயிடும்.

Tuesday, September 20, 2011

Quotes from movies (தமிழில்)

முன்குறிப்பு: முடிந்த வரை தமிழ்ப் படுத்தி இருக்கிறேன் (தமிழை படுத்தி எடுத்திருக்கிறேன்).  
The Curious Case of Benjamin Button (film) -- பெஞ்சமின் பட்டன் பற்றிய வினோத தொகுப்பு  
+ நம் வாழ்வு நமக்கு மிகவும் பிடித்தவர்களை இழக்கும் படியாக படைக்கப் பட்டிருக்கிறது. இல்லாவிடில் அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வது.
+ வாழ்கையைப் பின்னோக்கி தான் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதை முன்னோக்கி தான் வாழ வேண்டும்.
+ [ படத்தை பார்த்தால் மட்டுமே இந்த வசனத்தை புரிந்து கொள்ள முடியும் ] சிலர் வாழ்கையை நதிக்கரையில் வாழ்வதற்காகப் பிறந்திருக்கிறார்கள். சிலர் மின்னலால் தாக்கப் படவே பிறந்திருக்கிறார்கள். சிலர் இசை உணரும் காது கொண்டவர்கள். சிலர் படைப்பாளிகள். சிலர் நீந்துவர். சிலருக்கு இலக்கியம் தெரியும். சிலர் அம்மாக்கள். சிலர் மட்டும் சாதனையாளர்கள்.
+ சில சமயம் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் நாம் குறைவாக நினைவு கூர்பவர்கள் நம்மில் அதிகமான தாக்கத்தை உண்டாக்கி இருப்பார்கள். சிலர் நம்மில் சோதனைகளை உண்டாக்கி இருப்பார்கள்.
+ பல நாள் கழித்து வீட்டுக்கு வரும் போது ஒரு வினோதம் புரியும். வீடு அதே போல் தான் தெரியும், பழைய உணர்வு தான் தோன்றும். மாற்றம் நம்மில் மட்டும் தான் என்கிற நிஜத்தை உணர்த்தும். 
+ நம்முடைய வாழ்க்கை வாய்ப்புகளால் செதுக்க படுகிறது, நாம் இழந்த வாய்ப்புகளால் கூட.


The Shawshank Redemption (film) [இந்த படத்தின் பெயரை எனக்கு மொழிபெயர்க்க முடியவில்லை ]
+ நம்பிக்கை என்பது ஒரு சிறந்த விஷயம், விஷயங்களில் தலை சிறந்தது எனலாம். சிறந்த விஷயங்களுக்கு அழிவு என்பது இல்லை.
+ சில பறவைகள் கூட்டில் அடை படாது. அதன் சிறகுகள் ஒளி பொருந்தியவை. அதை கூட்டுக்குள் அடைக்க வேண்டும் என்கிற எண்ணம் தவறானது என்பது நமக்குத் தெரிந்தாலும், அது சென்ற பின்னர் நாம் உணரும் வெறுமை கொடியது. 

லக்ஷ்மிராஜன்

இந்த வலைப்பூ தளத்தில்  லக்ஷ்மிராஜன் என்கிற பெயர் தெரிவதாக யாரோ சொன்னார்கள். அது சாட்ஷாத் நானேதான். தமிழில் கதைகள் எழுத வேண்டும் என்பதும் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்ப வேண்டும் என்பதும் என்னுடைய நீண்ட நாள் ஆசை. புனை பெயராக இந்த பெயரை தேர்வு செய்தேன். அந்த பெயரில் ஒரு மின்-அஞ்சல் முகவரியும் உருவாக்கினேன். அதன் வழியே இந்த வலைபூ தளத்துக்கு பங்களிப்பு செய்கிறேன். Monday, September 19, 2011

பிடிவாதம்


சச்சின் டெண்டுல்கரின் மனைவியிடம் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும் : 
"உங்கள் கணவரிடம் மிகவும் பிடிக்காத குணம் எது ?"
"அவரின் பிடிவாதம்"

"பிடித்த குணம் ?"
"அதுவும் பிடிவாதம் தான், அது தான் அவரை சாதனைகள் செய்ய தூண்டுகிறது"

பிரமு மாமாவிடமும் நெறைய பிடிவாதம் உண்டு, நெறைய போராட்ட குணமும் உண்டு. அது அவர்களிடம் கடைசி வரை இருந்தது....எத்தனை வலி வேதனைகள் இருந்தாலும்... அந்த குணங்கள் தான் அவர்களை ஒரு சாதனையாளராக ஆக்கி இருந்தது.பிரமு மாமா சொல்ல நெனைச்சதுபிரமு மாமா சொல்ல நெனைச்சது (தொடர்கிறது)

இந்த pdf  என்னமோ பிரமு மாமா நம்மக்கு சொல்லாம விட்டத சொல்லுதோனு  தோனிச்சு!!!  
good one see it.

அன்புடன் 
இரத்னம் 


--
"
That which you cannot express is Love.
That which you cannot reject/renounce is Beauty.
That which you cannot avoid is the Truth.
"

Sunday, September 18, 2011

பிரமு மாமா பற்றி ஒரு தகவல்

பிரமு மாமா அவர்கள் +2  படிக்கும் போது NCC தேர்வில் மாநில அளவில் முதலாக வந்தவர்கள். இந்த தேர்வு நிறைய உடற்பயிற்சிகள் நிறைந்தது.  இதை என்னிடம் சொல்லியதும் அவர்கள் தான்.


Quotes from movies

The Curious Case of Benjamin Button (film)


We're meant to lose the people we love. How else would we know how important they are to us?

Life can only be understood backward. It must be lived forward.

Some people were born to sit by a river. Some get struck by lightning. Some have an ear for music. Some are artists. Some swim. Some know buttons. Some know Shakespeare. Some are mothers. And some people — dance.

• It's funny how sometimes the people we remember the least make the greatest impression on us
• Along the way you bump into people who make a dent on your life.
• It's a funny thing about comin' home. Looks the same, smells the same, feels the same. You'll realize what's changed is you.
• Our lives are defined by opportunities, even the ones we miss.

You can be as mad as a mad dog at the way things went. You could swear, curse the fates, but when it comes to the end, you have to let go.


The Shawshank Redemption (film)

Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies.
some birds aren't meant to be caged. Their feathers are just too bright and when they fly away, the part of you that knows it was a sin to lock them up does rejoice, but still, the place you live in is that much more drab and empty that they're gone.

Saturday, September 17, 2011

பிரமு மாமாவுக்காக இந்த வீடியோ

உங்கள் கருத்துகளை எழுதவும்.

நல்வரவு !

பிரமநாயகம் என்கிற பெயரில் இந்த இணையம் தொடங்க பட்டது இன்று (செப்டம்பர் 17, 2011).