Memories

Tuesday, September 20, 2011

Quotes from movies (தமிழில்)

முன்குறிப்பு: முடிந்த வரை தமிழ்ப் படுத்தி இருக்கிறேன் (தமிழை படுத்தி எடுத்திருக்கிறேன்).  
The Curious Case of Benjamin Button (film) -- பெஞ்சமின் பட்டன் பற்றிய வினோத தொகுப்பு  
+ நம் வாழ்வு நமக்கு மிகவும் பிடித்தவர்களை இழக்கும் படியாக படைக்கப் பட்டிருக்கிறது. இல்லாவிடில் அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வது.
+ வாழ்கையைப் பின்னோக்கி தான் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதை முன்னோக்கி தான் வாழ வேண்டும்.
+ [ படத்தை பார்த்தால் மட்டுமே இந்த வசனத்தை புரிந்து கொள்ள முடியும் ] சிலர் வாழ்கையை நதிக்கரையில் வாழ்வதற்காகப் பிறந்திருக்கிறார்கள். சிலர் மின்னலால் தாக்கப் படவே பிறந்திருக்கிறார்கள். சிலர் இசை உணரும் காது கொண்டவர்கள். சிலர் படைப்பாளிகள். சிலர் நீந்துவர். சிலருக்கு இலக்கியம் தெரியும். சிலர் அம்மாக்கள். சிலர் மட்டும் சாதனையாளர்கள்.
+ சில சமயம் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் நாம் குறைவாக நினைவு கூர்பவர்கள் நம்மில் அதிகமான தாக்கத்தை உண்டாக்கி இருப்பார்கள். சிலர் நம்மில் சோதனைகளை உண்டாக்கி இருப்பார்கள்.
+ பல நாள் கழித்து வீட்டுக்கு வரும் போது ஒரு வினோதம் புரியும். வீடு அதே போல் தான் தெரியும், பழைய உணர்வு தான் தோன்றும். மாற்றம் நம்மில் மட்டும் தான் என்கிற நிஜத்தை உணர்த்தும். 
+ நம்முடைய வாழ்க்கை வாய்ப்புகளால் செதுக்க படுகிறது, நாம் இழந்த வாய்ப்புகளால் கூட.


The Shawshank Redemption (film) [இந்த படத்தின் பெயரை எனக்கு மொழிபெயர்க்க முடியவில்லை ]
+ நம்பிக்கை என்பது ஒரு சிறந்த விஷயம், விஷயங்களில் தலை சிறந்தது எனலாம். சிறந்த விஷயங்களுக்கு அழிவு என்பது இல்லை.
+ சில பறவைகள் கூட்டில் அடை படாது. அதன் சிறகுகள் ஒளி பொருந்தியவை. அதை கூட்டுக்குள் அடைக்க வேண்டும் என்கிற எண்ணம் தவறானது என்பது நமக்குத் தெரிந்தாலும், அது சென்ற பின்னர் நாம் உணரும் வெறுமை கொடியது. 





No comments:

Post a Comment