Memories

Thursday, October 20, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 3, 4, 5

பாகம் 1  - புது வெள்ளம்

அத்தியாயம் 3  - விண்ணகரக் கோட்டை 

வல்லவரையன் வந்தியத் தேவனோட குதிரைய பளுவேட்டரைரோட ஆளுங்க  வம்பு பிடிச்சி விரட்டி விட்டுடாங்க. வந்தியதேவனுக்கு ரொம்ப கோவம் வந்துச்சு, ஆனா சண்ட பிடிக்க இது நேரம் இல்லன்னு அமைதியா இருந்தான். குதிரைய தேடி பிடிச்சு வீதிக்கு கூட்டிட்டு வந்தான். அங்க ஆழ்வார்க்கடியான் நின்னுகிட்டு இருந்தான், வந்தியத் தேவன்கிட்ட கேட்டான்:"தம்பி நீ இன்னிக்கி கடம்பூர் மாளிகைக்கு போனீனா என்னையும் கூட்டிட்டு போறீயா? எனக்கு அங்க ஒரு வேலை இருக்கு."
வந்தியத்தேவன் சொன்னான்: "நான் அங்க தான் போறேன்னு உனக்கு எப்படி தெரியும், அங்க அப்படி என்ன வேலை?"
"தம்பி இதிலே ஆச்சர்யம் என்ன இருக்கு, எல்லா சிற்ரசர்களும், பழுவேட்டரையரும் அங்க தான் போறாங்க. அங்கே வர்ரவங்களுகேல்லாம் விருந்தும் அப்பறம் களியாட்டம்,  சாமியாட்டம், குரவை கூத்து எல்லாம் நடக்கும். இதெல்லாம் பாக்கனும்னு ஆசை எனக்கு"
நம்ம ஹீரோக்கு இது பிடிக்கலை, முன்னே பின்னே தெரியாத ஆளை எப்படி கூட்டிட்டு போறதுன்னு. ஆழ்வார்கடியானை ஒரு வழியா கழட்டி விட்டுட்டு அவன் கிளம்பினான். அதோட வந்தியதேவனுக்கு முறையான அழைப்பு இல்லே, அவன் பிரண்டு கந்தமாறன வச்சு அங்க தங்கிகலாம்னு நெனைசிருந்தான், இந்த கூட்டத்திலே அது நடக்குமான்னு தெரியல.

அத்தியாயம் 4  - கடம்பூர் மாளிகை

குதிரைலே கடம்பூர் மாளிகைக்கு போன வந்தியதேவன வாசல் காவக்காரங்க நிறுத்திடாங்க. இவ்வளவு காவல அவன் எதிர் பாக்கல.  இவன் குதிரைய வம்பு பிடிச்ச ஆளுங்க தான் நின்னுட்டு இருந்தாங்க. ஏற்கனவே இருந்த கோவம் அதிகமாச்சு. வாக்குவாதம் வந்துச்சு, கைகலப்பா மாறிச்சு. இத சாக்கா வச்சு அவங்களுக்கு கொடுக்க வேண்டியத(!) கொடுத்தான் வந்தியத்தேவன். இத சமாளிக்க முடியாம இன்னும் நிறைய ஆளுங்க இவன் கிட்ட சண்ட பிடிக்க வந்தாங்க.  கோட்டை மேலிருந்து ஒரு இடிமுழக்க குரல், "கந்தமாறா, கீழ என்ன கலவரம்னு பாரு" ன்னு சொன்னது. கந்தமாறன் இறங்கி வந்தான். சண்டை அப்படியே நின்னது, கந்தமாறனுக்கு வந்தியதேவன பாத்ததிலே ரொம்ப சந்தோஷம். காவல் காரன்கள சத்தம் போட்டுட்டு இவன கூட்டிகிட்டு அவன் அப்பா சம்புவரையர் கிட்ட அறிமுக படுத்தினான், அவருக்கு சந்தோஷம் இல்ல: "இவன் தான் கலவரம் செஞ்சவனா"ன்னு கேட்டார். தான் பையன் கிட்ட பிரயாண களைப்பு போக வந்தியதேவனுக்கு சீக்கிரம் சாப்பாடு கொடுத்து நல்ல ஒதுங்கின இடமா கொடுத்து தூங்க ஏற்பாடு பண்ண சொன்னார். கந்தமாறன் பளுவேட்டரயருக்கு வந்தியதேவன அறிமுகம் செஞ்சு வச்சான், அவருக்கும் ஒன்னும் சந்தோஷமோ வியப்போ இல்ல, வேண்டா வெறுப்பா தான் பேசினார். கந்தமாறன் அவன் அம்மா கிட்ட இவன அறிமுகபடுத்தினான். 

அத்தியாயம் 5  - குரவை கூத்து

அம்மா கூப்பிட்டான்னு கந்தமாறன் போயிட்டு வந்தான். இவன் நின்ன இடத்திலே ஒரு பொம்பளைங்க கும்பலே இருந்துச்சு. எதையோ பேசி கொல்லுன்னு சிரிச்சிட்டு இருந்தாங்க. வந்தியதேவனுக்கு இவன தான் கிண்டல் பண்றாங்கன்னு தோணிச்சு. கந்தமாரன்கிட்ட கேட்டான்: "ஒன்ன பத்தி சிரிக்கல , இந்த பழுவேட்டரையர் இந்த வயசில ஒரு சின்ன பெண்ணை கலியாணம் செய்திருக்கிறார், அவளை கலியாணம் முடிஞ்சு ஒரு இரண்டு வருஷம் தான் இருக்கும், ஆனா எல்லா இடத்துக்கும் மூடு பல்லகில் வச்சு அவளை கூட்டிட்டு போறார். அது பத்தி தான் இந்த சிரிப்பு. அந்த பொண்ண யாரும் பாத்ததிலைன்னு கேள்வி"  அப்போ வாத்தியங்கள் சத்தம் கேட்டுச்சு. அது குரவை கூத்து தொடங்க போறதுக்கு அறிகுறின்னு சொன்னான் கந்தமாறன். வந்தியத்தேவன் கூத்து பாக்க ஆசைபட்டான். கூத்து, ஆட்டம் பாத்தான் அதில் முருகன் சூரபத்மன சம்ஹாரம் பண்றத ஆடினாங்க. முடிவில முருகனா ஆடினவனுக்கு அருள் வந்திச்சு:"என் அம்மா சண்டிகேஸ்வரிக்கு நீங்கள் பூசை போடல, அதனால அவ பலி கேக்கறா...ஆயிரம் கால அரச ரத்தம் பலியா கேக்கறா"இன்னான். கூத்து பத்தவங்கல்லாம் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க. எங்கயோ நரி ஊளையிடற சதாம் கேட்டுச்சு. வந்தியத்தேவன் அந்த பக்கம் பாத்தான், அங்க ஆழ்வார்கடியான் தலைய கோட்டை சுவர் மேல பாத்தான், கண் மூடி திறந்து பாத்தா அங்க ஒன்னும் இல்ல, என் இப்படி தோணிச்சுன்னு நெனைச்சு வெக்கப் பட்டுகிட்டான்.

(தொடரும்) 

No comments:

Post a Comment