Memories

Thursday, October 20, 2011

ரத்தத்தில் சலம் - வெள்ளை ரத்தம்

1845-வது வருடம் மார்ச் 19, ஸ்காட்லாந்து மருத்துவர் ஜான் பென்னெட் ஒரு வித்தியாசமான நோயாளிக்கு சிகிச்சை அளிக்க நேரிட்டது. அந்த நோயாளி கூரை வேய்பவர். அவருக்கு வயிற்றில் வித்யாசமான ஒரு கட்டி இருந்தது. காரணமின்றி காய்ச்சல் வேறு, அடிக்கடி வயிற்றில் வலி இருந்தது. எவளவோ சிகிச்சை அளித்தும் பலனில்லை. அவரை பரிசோதனை செய்யும் போது ஜான் ஒரு விஷயத்தை கவனித்தார், நோயாளியின் ரத்தம் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதனால் இப்படி அறிக்கை எழுதினார்:"இந்த நோயாளி வித்தியசமானவர். இவருடைய வியாதிக்கான காரணம் ரத்தத்தில் ஏற்பட்ட சலம் - இது ரத்தத்தில் இருக்கிறது" இந்த கேசை அவர் "ரத்தத்தில் சலம்" என்று அழைத்தார். சலம் உண்மையில் ரத்த வெள்ளை அணுக்களால் வருகிறது. உடலில் காயம் வரும் போது, வெள்ளை அணுக்கள் நோய் கிருமிகளை எதிர்த்து சண்டையிடும் போது சலம் தோன்றுகிறது. இந்த நோயாளியின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் நீக்கமற நிறைந்து இருந்தன. உடலில் எங்கு அடி பட்டிருக்கிறது என்று தேடினார் ஆனால் எங்கும் அதற்கான அறிகுறி கிடைக்கவில்லை. அதோடு "ரத்தத்தில் சலம்" பைல் மூடப் பட்டது.

ஜான் பென்னெட்டின் இந்த கருத்து மிகவும் தவறானது. ரத்தம் சலம் வைப்பது என்பது நம்ப முடியாத விதமாக இருப்பதாக ருடால்ப் விர்சோவ் என்கிற ஜெர்மானிய மருத்துவர் அறிக்கை ஒன்றை சமர்பித்தார், ரத்தம் வெள்ளையாக மாறுவதற்கு சரியான காரணம் தெரியவில்லை என்பதே சரி என்று அதில் வாதிட்டார். இந்த வியாதியை "வெள்ளை ரத்தம்" என்று அழைத்தார். இது மிகவும் பொருத்தமானதே, நுண்நோக்கியை (மைக்ரோஸ்கோப்) வைத்து பார்க்கும் போது ரத்தம் முழுவதும் பெரிய பெரிய வெள்ளை ரத்த அணுக்கள் வியாபித்து இருப்பதனால் ரத்தம் வெள்ளை நிறமாக தோன்றும். இந்த வியாதிக்கு 1847-இல் "லுக்கீமியா" என்று பெயரிட்டார். லூகொஸ் என்கிற கிரேக்க வார்த்தைக்கு "வெள்ளை" என்கிற அர்த்தம் வரும்.

நன்றி: நோய்களின் அரசன் - கான்சர் - சித்தார்தா முக்கர்ஜி 

எனது கருத்து: மருத்துவரும் மனிதரே. அவருடைய அறிவுக்கு ஏற்ப ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதும், சிகிச்சை அளிப்பதும் செய்கிறார். எனவே நல்ல, திறமையான மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நோயாளிக்கு நல்லது. ஜான் பென்னெட் தனக்குத் தெரியவில்லை என்று கூடத் தெரியாமல் ரத்தத்தில் சலம் என்கிற முடிவுக்கு வந்தார், ஆனால் ருடால்ப் வெளிப்படையாக, தனக்கு இதை பற்றி தெரியவில்லை என்பதை ஒத்துக் கொண்டார். அதனால் ருடால்ப், ஜானை விட அறிவு மிகுந்தவர் என்பது என்னுடைய கருத்து. தெரியாது என்று சொல்பவர் அறிவு குறைந்தவர் என்று எண்ணுபவர்கள் ஜான் பென்னெட் தான் அறிவாளி என்று வாதிடலாம். திறமையான மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நோயாளிக்கு நல்லது என்பதாலேயே ரஜினி இந்தியாவில் சிறந்த ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஆசியாவில் சிறந்த சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேருகிறார். மருத்துவரையும் மருத்துவமனையையும் ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது சிறந்தது. 


No comments:

Post a Comment