Memories

Monday, January 30, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 11

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 11 - திடும் பிரவேசம் 



வானதியோட சாதகத்த பாத்த ஜோதிடர் அப்படியே திகைச்சுட்டாறு. குந்தவைய பாத்து சொன்னாரு: "ரொம்ப அதிர்ஷ்டக்கார ஜாதகம் அம்மா இது, உங்களை விட ஒரு படி மேலானது."  வானதியோட சாதகத்த பாத்து அவளுக்கு எப்போ கல்யாணம் வரும், மாப்பிள்ளை எங்க இருந்து வருவார் அப்படீன்னு கேட்டாரு குந்தவை. ஜோதிடர் பேசறதுல கில்லாடி. புரியற மாறி பேசுவாரு ஆனா ஒன்னும் தெளிவா சொல்ல மாட்டாரு.   
குந்தவை இன்னும் கேட்டா: "ஜோதிடரே கொஞ்ச நாளா வானத்தில ஒரு வால் நட்சத்திரம் தெரியுது. அதனால ராஜ்யத்துக்கு ஆபத்துன்னு ஜனங்கள் பேசிக்கறாங்களே...அத பத்தி  பாக்க முடியுமா"ஜோதிடர் பதில் சொல்லாம தப்பிக்க பாத்தாரு. குந்தவை விடுவாளா...கடைசீல சொன்னாரு: "ராஜாவுக்கு ஒரு கண்டம் இருக்கு. துர்க்கா தேவி அருளால சரியாகும்" அப்படீன்னார்.
அப்ப வாசல்ல சத்தம் கேட்டது, தடபுடல் தெரிஞ்சது. எதோ சொல்லிக்கிட்டே வந்தியத் தேவன் உள்ள வந்தான் (நினைவிருக்கா இவன் படகுல ஏறுனான் கடைசீயா) பெண்கள பாத்ததும் அப்படியே நின்னுட்டான்..பின்னாடியே ஜோதிடரோட சீடன் வந்தான். அவன் கிட்ட வந்தியத் தேவன் "உள்ளே பெண்கள் இருக்காங்கன்னு சொன்னா வந்திருக்க மாட்டேன் இல்லே" அப்படீன்னு சொல்லிட்டு வெளியே போய்ட்டான்.
பெண்கள் ரெண்டு பெரும் முடிச்சுட்டு வெளியே வந்தாங்க. ஒதுங்கி நின்ன வந்தியத் தேவன் சொன்னான் "உள்ளே பெண்கள் இருக்காங்கன்னு இந்த புத்திசாலி சொல்லலே, அதான் வந்திட்டேன், மன்னிச்சுக்கோங்க"ன்னான். அதுக்கு பதில் சொல்லாம அவன பாத்து ஒரு ஸ்மைல் பண்ணீட்டு போய்ட்டாங்க குந்தவை.




No comments:

Post a Comment