Memories

Saturday, February 4, 2012

சமீபத்தில் ரசித்த படம் - தாவணி கனவுகள்


ஐந்து தங்கைகள் உள்ள அண்ணன் கதை. பாக்யராஜ் தான் அந்த அண்ணன். துவக்கமே அமர்க்களம். 

அவர் வீட்டுக்கு முன் ஒரு இளைஞர் பட்டாளமே இருக்கும், ஒருவன் சைக்கிளை பழுது பார்த்துக் கொண்டிருப்பான்; அவருடன் ஒருத்தன். இருவர் பாடம் பற்றி சீரியசாக விவாதித்துக் கொண்டு இருப்பார்கள். மோட்டார் சைக்கிளில் இருவர். அனைவர் கவனமும் பாக்யராஜ் வீட்டு மேல். ஒரு மக்கர் போனில் பாக்யராஜ் சொல்வார்:" எங்க வீட்டிலே மானம் மரியாதை தான் மிச்சம் இருக்கு, அத கெடுத்த பாவம் உங்களுக்கு வேண்டாம். இன்னும் போக மாட்டீங்கன்னா உங்களுக்கு எந்த தங்கய பிடிக்குன்னு சொல்லுங்க, அவள உங்களுக்கு கட்டி வைக்கறேன்"  கூட்டம் கலைத்து காணாமல் போகிறது.

திரைக்கதை அமைப்பதில் அவருக்கு நிகர் அவரே.  வேலை கிடைக்காமல் பிளாஸ்டிக் சாமான் கூடை தூக்கித் தலைமேல் வைத்து கூவி விற்கிறார்.எதிரே வேலை இல்லா இளைஞர் போராட்ட ஊர்வலம் கோஷமிட்டுக் கொண்டே வருகிறது.  பாக்யராஜ் கூவி விற்பதும், போராட்ட கோஷமும் கீழ்க் கண்டவாறு சின்க் ஆகின்றன.

"வேலை இல்லா பட்ட தாரிகளுக்கு...." (கூட்டம்)
"பிளாஸ்டிக் சாமானம், பிளாஸ்டிக் சாமானம்"  (இது பாக்யராஜ்)
"படித்த பட்டதாரி வாலிபர்களுக்கு..."
"பிளாஸ்டிக் சாமானம், பிளாஸ்டிக் சாமானம்"

இன்னொரு கட்டம். மிலிட்டரியாக வரும்  சிவாஜி கணேசன் கோவில் பூசாரியிடம் கேட்டகிறார்: "நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் தெரியுமா உனக்கு?" 
"போஸூ  பக்கத்து தெருவில பொட்டிக்கட வச்சுருக்காருங்க. ஆனா, நேதாஜி, சுபாஸூ  இவங்கள நமக்கு பழக்கமில்லீங்க"



கடைசி தங்கையாக வருபவர் நடிப்பு சூப்பர். தன் தங்கைகளை கரையேற்ற வேண்டி வேலை தேடி சென்னை செல்கிறார் அண்ணன் பாக்யராஜ். சம்பாதிக்க பல வழிகளை முயன்று கடைசியில், பாரதி ராஜா கண்ணில் பட்டு ஹீரோ ஆகிறார், பணம் கிடைக்கிறது. அது வரை குடும்பத்துக்கு பாதுகாப்பாகவும் இருந்து மாத செலவுக்கு பணம் கொடுக்கிறார் சிவாஜி. போஸ்ட் மேனாக வருகிறார் பார்த்திபன். பாரதி ராஜா அவராகவே வருகிறார். ராதிகா சென்னையில் சினிமா வாய்ப்பு தேடும் பாக்ய ராஜாவுக்கு உதவுகிறார்.  பணத்தை பெரிதாக நினைக்கும்  வரன்களை ஒதுக்கி  நல்லவர்களான  வாலிபர்களை மனம் முடிக்கிறார்கள் தங்கைகள். இளையராஜாவின் இசை தாலாட்டுகிறது. காமிரா சில இடங்களில் சரியாக இருந்து இருக்கலாம். கல்யாணத்தை வியாபாரமாக்காதீர்கள் என்கிற செய்தியுடன் முடிகிறது படம்.   

1 comment:

  1. இந்த படம் கொஞ்ச மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் பார்த்தேன்..மறந்து போய் இத்தனை நாட்களுக்கு பிறகு தங்களது விமர்சனம் இந்த படத்தை பற்றிய ஞாபகத்தை தட்டி எழுப்புகிறது.அருமை..அருமை..நீங்கள் காட்சிகள் சிலவற்றை சொல்ல சொல்ல அந்த காட்சிக்கே சென்றுவிட்டேன்.
    சூப்பர்.பெரும்பாலும் எல்லாரும் பழைய உலக சினிமாக்களை பற்றி எழுதுவார்களே தவிர பழைய தமிழ் படங்களை எழுதுவது குறைவாகி வருகிறது..நீங்கள் அதை சிறப்பாக செய்துள்ளீர்.வாழ்த்துக்கள்.நன்றி.

    திகில் சிறந்த படைப்பு : சைக்கோ பட விமர்சனம்..

    ReplyDelete