Memories

Wednesday, March 21, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 16

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 16 - அருள்மொழி வர்மர் 






கி.பி. 970 வாக்கில் சுந்தர சோழ சக்கரவர்த்தியோட சாம்ராஜ்யம் செழிச்சு வளர்ந்து இருந்துச்சு. ஆனா இவர் பட்டத்துக்கு வரும்போது நெலமை வேறயா இருந்தது. வடக்கிலும் தெக்கிலும் விரோதிகள் இருந்தாங்க. தெக்க படை எடுத்து போனாரு. அங்க இருந்த பாண்டிய ராசாக்கும் இவருக்கும் சேவூர் அப்படீங்கற இடத்திலே சண்டை நடந்துச்சு. சிங்கள மன்னன் மகிந்தன் என்கிறவன் பாண்டியர்களுக்கு உதவியா பெரிய படைய அனுப்பி இருந்த்தான். பாண்டியர் படையும், சிங்கள படையும் சின்னா பின்னமாயிட்டது. பாண்டிய மன்னன் ஓடி ஒளிஞ்சுகிட்டான். சிங்களர்கள் படை அனுப்பி பாண்டியர்களுக்கு உதவி செய்றது வழக்கமா ஆய்ட்டதால, அத தடுக்க, மகிந்தனுக்கு புத்தி புகட்ட ஒரு சோழ சைன்யம் (மிலிட்டரி) இலங்கைக்கு போச்சு, 
கௌம்பாளூர் சிற்றரசன் பராந்தகன் சிறிய வேளாண் (இவர் தான் வானதியோட அப்பா) தலைமைல. சோழர் படை பயணத்துல வந்த சிரமங்கள் காரணமா பிரிஞ்சு போச்சு. கரை இறங்கின சின்ன படைய, தன்னோட பெரிய படைய அனுப்பி துப்புரவா அழிச்சான், மகிந்தன். தோத்து போவோம்ன்னு தெரிஞ்சும் திரும்பி ஓடாம, வீரமா சண்டை போட்டு உயிரை விட்டான், பராந்தகன் சிறிய வேளாண். சோழரோட பெரிய படை சிலோன் பாட்டுன்னு தெரிஞ்சு படை திரட்டி வந்தான் பாண்டிய மன்னன். இந்த தடவ பாண்டிய சேனை மட்டுமில்ல பாண்டிய ராஜாவும் அழிஞ்சான். இந்த சண்டைல சுந்தர சோழரோட மூத்த பையன், பட்டத்து இளவரசர் (14 வயசு தான் ஆய்ருந்தது அப்போ), ஆதித்த கரிகாலர் தலைமைல தான் நடந்தது. 


பராந்தகன் சிறிய வேளாண் இறந்ததுக்கு பழி வாங்கவும், மகிந்தனுக்கு புத்தி வர்றதுக்கும் அவன தண்டிக்கணும்னு நினைச்சாங்க சோழ ராஜ்யத்தோட வீராதி வீரர்கள் எல்லாரும். யாரோட தலமைலே படைய அனுப்பலாம்னா எல்லாரும், நான் நீன்னு போட்டி போட்டுட்டு இருந்தாங்க. ராஜ்யமே பிரிஞ்சு போய்டும்ன்னு பயந்தாரு சுந்தர சோழ சக்கரவர்த்தி. ஆதித்த கரிகாலன் வட திசைலே இருந்து வந்த ராஷ்டிரகூடர்கள அடக்க படையோட இருந்தாரு. இந்த நிலமைய சமாளிக்க ஹெல்ப் பண்ண வந்தாரு சின்னவர், அருண்மொழி வர்மர். 20 வயசு கூட ஆகல, ஆனா இவரு தலைமைய மற்ற சிற்றரசர்கள் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்கன்னு நினைச்சாரு சுந்தர சோழர்.  சின்னவர் படை நடத்தின விதமே வித்யாசமா இருந்தது, அத விட வித்யாசமா இருந்தது அவரோட போர்த்தந்திரங்கள். சரியான நேரத்தில போர்த் தளவாடங்கள் (supply, reinforcements) வரல்ல. இதனால திரும்பி வந்து அப்பா கிட்ட பேசி ஏற்பாடுகள் செஞ்சுகிட்டாரு. திரும்பி போறப்போ அரண்மனை பெண்கள் ராஜ மரியாதை செஞ்சாங்க. கிலே தீபத் தட்ட எடுத்து ஆரத்தி எடுத்தாங்க. வானதி நடுங்கி தீபத் தட்ட கீழ விட்டா. இளவரசர் ஸ்மைல் பண்ணிட்டு போயிட்டாரு. அபசகுனம்னு சொன்னாங்க எல்லாரும், இளவரசருக்கு எதனா ஆகலாம்னாங்க. இவ டென்சன் அதிகமா ஆயி மயங்கி விழுந்தா. சலசலப்புக்கு காரணம் கேள்விப்பட்டு உள்ள வந்து பாத்தாரு அருள்மொழி வர்மர். குந்தவை வானதி மயக்க தெளிய முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. இவளோட அப்பா பத்தி தெரிஞ்ச உடனே ரொம்ப இரக்கப் பட்டாரு. இதே போல இலங்கைக்கு போன தன்னோட அப்பா நியாபகம் வந்திருக்கும்னு நினைச்சாரு. வானதி மேல தனி அன்பு வந்தது இளவரசருக்கு. அக்கா கிட்ட, அம்மா அப்பா இல்லாத அவள நாமதான் பாத்துக்கணும் அப்படீன்னார். 
 (யோசிச்சு பாருங்க, அவளுக்கு பிரியமான அப்பா இலங்கைக்கு சண்டைக்கு போகும் போது இப்படி தான் அனுப்பி வச்சுருப்பா, அவரு திரும்ப வரல. அடுத்து ரொம்ப ஆசை படர அருள்மொழி வரமர இலங்கைக்கு அனுப்பி வைக்கறா)
குந்தவைக்கு ஏதோ புரிஞ்சது. வானதி மேல தனி பிரியம் அப்போ இருந்து. இதெல்லாம் கவனிச்ச மத்த இளவரசிகள் எல்லாருக்கும் வானதி மேல பொறாமை வந்தது.

Saturday, March 10, 2012

சமீபத்தில் ரசித்த படம் - அழகன்

பாலச்சந்தரின் அழகான படம். உழைப்பால் உயர்ந்த அழகப்பன் என்கிற ஹோட்டல் முதலாளி, மம்மூட்டி, மூன்று பெண்களின் நடுவில் சிக்கி சின்னா பின்னாகி பின் எல்லாம் சுபமாக முடிவது தான் படம்.


"அவன் தான் அழகன்" பாடல் சுகம் என்று பார்த்தால் எல்லா பாடல்களும் முன்னதை விட சூப்பராக இருக்கின்றன. இதற்காக இசையமைப்பாளர் மரகதமணிக்கு ஒரு சபாஷ்.

மனைவியின் இறப்புக்கு பிறகு வேறு யாரையும் திரும்பி பார்க்காத இவர் மேல் பதினெட்டு வயது "குயின் மேரிஸ் காலேஜ் குயின்" என்று சொல்லிக்கொண்டு வரும் சொப்னா (மதுபாலா), டுடோரியல் காலேஜ் டீச்சர் கண்மணி (கீதா), நடன கலைஞர் பிரியா (பானுப்ரியா) ஈர்க்கப்படுகிறார்கள். அதனால் வரும் குழப்பங்கள் தான் கதை. கதை திரைக்கதை இயக்கம் பாலசந்தர், டி.வீ. நாடகம் போலத் தோன்றி விடாமல் படத்தை நன்றாக கொண்டு போயிருக்கிறார்.   


மதுபாலாவுக்கு இது முதல் படம், ஆனால் நடிப்பில் குறும்பு கொப்பளிக்கிறது. சும்மா பின்னி பெடலெடுத்து இருக்கிறார். பானுப்பிரியா ஹோட்டலுக்கு வர அவரிடம் ஹோட்டல் மெனுவை  மம்மூட்டி ஒப்பிக்கும் காட்சி சூப்பர்மம்மூட்டிக்கு நான்கு குழந்தைகள். 'நாம வேற வீட்ல போய் பிறந்திருக்கலாண்டா' என்று சொல்லும் சிறுவன் நடிப்பு சிறப்பு.  போட்டோ-வில் அம்மாவின் முதுகு தெரிவது பார்த்து ஒரு குழந்தை போட்டோவின் பின் பக்கம் போய் முகம் பார்க்க முயல்வது சூப்பர்.  ஒரு இடத்தில் மம்மூட்டி பேசும் வசனம் இது: "நான் சொல்றேன் நீ கேட்டுக்கோ..ஆனா டான்ஸ் ஆடிக்கிட்டே பேசத் தெரியாதெனக்கு.." சீரியசான இடத்திலும் சிரிப்பு வரும் நமக்கு. 


படத்தில் பல சின்ன பாத்திரங்கள் கூட முக்கியத்துவம் பெறுகின்றன. சந்தானம் என்கிற டிரைவர், வீட்டு வேலைக்காரராக வரும் பிருதிவி ராஜ், அதிராமப் பட்டினம் சொக்கு என்கிற கோள்மூட்டும் பாத்திரம் (மூன்று பெண்களுக்கும் இடையில் போட்டியையும் குழப்பத்தையும் மாறி மாறி ஏற்படுத்துகிறது), பானுப்பிரியாவின் அப்பா, அம்மா, மதுபாலாவின் பாட்டியாக வரும் சாவ்கார் ஜானகி. டெலிபோன் கூட ஒரு முக்கிய பாத்திரமாக மாறி இருக்கிறது. ஒரு பாடலில் பானுப்ப்ரியாவும் மம்மூட்டியும் இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்கள்: "சங்கீத ஸ்வரங்கள்" என்கிற பாட்டு சூப்பரோ சூப்பர். தூர்தர்ஷனில் வளையம் வரும்போது வரும் இசையையும் பாடலில் சேர்த்திருப்பது அருமை,  இதை படமாகிய விதம் மிகவும் அருமை.




சில சமயம் மம்மூட்டி ஹோட்டலை கவனிக்கறாரா இல்லை இந்த மூன்று பெண்களை மட்டும் கவனிக்கறாரா என்று நினைக்க தோன்றுகிறது. இயக்குனர் கொஞ்சம் கதையை நீட்டி இருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது. 


இன்றும் கூட பார்க்கலாம், ரசிக்கலாம் என்கிற வகையில் படம் இருப்பது தான் இயக்குனரின் வெற்றி. சிறந்த படம்.


Thursday, March 8, 2012

இதை வரைந்தார்களா இல்லை படம் பிடித்தார்களா?








Sunday, March 4, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 14, 15

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை 




வந்தியத் தேவன் குதிரை மேல ஏறி ஆத்தங்கரை வழிய போயிட்டு இருந்தான்."ஐயோ முதலை ! முதலை !! காப்பாத்துங்க" ன்னு ஒரு பொம்பளை கத்துறது கேட்டுச்சு. தூரத்திலே பெண்கள் ஆத்துலே குளிச்சுட்டு இருந்தாங்க. பக்கத்து மர நிழல்லே முதல ஒன்னு பாதி தண்ணிலையும் பாதி தரைலையும் வாய அகலமா திறந்து இருந்தது. முன்னாடி ஒரு பொண்ணு. கொஞ்சமும் யோசிக்கல, வந்தியத்தேவன். வேல உருவினான், வீசினான் முதலை மேல, தப்புமா குறி ? முதல முதுகில குத்தி நின்னது வேல். வாள உருவிகிட்டு  குதிரைல இருந்து ஜம்ப் பண்ணி முதலைய பாத்து ஓடினான். எல்லாம் ஒரு செகண்ட்ல நடந்திட்டு. திக்குன்னு பாத்திட்டு இருந்த பெண்கள் மெதுவா சிரிக்க ஆரமிச்சாங்க. ஒருத்தி முன்னாடி வந்து "ஐயா! உங்களுக்கு ரொம்ப நன்றி. ஆனா சிரமப் பட வேண்டாம்"ன்னா. ஒன்னும் புரியல இவனுக்கு.




அத்தியாயம் 15 - வானதியின் ஜாலம் 



அரசிளம் குமரிகள் ரெண்டு பேரு சோதிடர பாக்கறதுக்கு வந்தாங்க இல்லையா ? ஆனா நெறைய இளவரசிகள் இவங்க கூட வந்திருந்தாங்க. அவங்கள விட்டுட்டு குந்தவை வானதிய மட்டும் கூட்டிட்டு வந்தாங்க. அந்த பெண்கள் எல்லாம் வானதி பத்தி புரணி பேசிட்டு இருந்தாங்க. வானதிக்கு அருள்மொழி வர்மர் மேல இருந்த காதல் பத்தி பொறாமையா பேசிட்டு இருந்தாங்க. குந்தவை கூட இதுக்கு சம்மதிச்சதா பேசிகிட்டாங்க. 

Thursday, March 1, 2012

யுவராஜ் சிங் - புகைப்படங்கள்

இரண்டாவது கீமோ முடிந்து விட்டது...யூவி (யுவராஜை இப்படி தான் கூபிடுகிரார்கள்) சிங்கம் தான் !!



டுவிட்டரில் தொடர: yuvsingh09
இணைய முகவரி : http://www.yuvrajsingh.in/index.html


கும்ப்ளே யூவியை பாஸ்டனில் போய் பார்த்தார். போட்டோ இங்கே...