Memories

Saturday, March 10, 2012

சமீபத்தில் ரசித்த படம் - அழகன்

பாலச்சந்தரின் அழகான படம். உழைப்பால் உயர்ந்த அழகப்பன் என்கிற ஹோட்டல் முதலாளி, மம்மூட்டி, மூன்று பெண்களின் நடுவில் சிக்கி சின்னா பின்னாகி பின் எல்லாம் சுபமாக முடிவது தான் படம்.


"அவன் தான் அழகன்" பாடல் சுகம் என்று பார்த்தால் எல்லா பாடல்களும் முன்னதை விட சூப்பராக இருக்கின்றன. இதற்காக இசையமைப்பாளர் மரகதமணிக்கு ஒரு சபாஷ்.

மனைவியின் இறப்புக்கு பிறகு வேறு யாரையும் திரும்பி பார்க்காத இவர் மேல் பதினெட்டு வயது "குயின் மேரிஸ் காலேஜ் குயின்" என்று சொல்லிக்கொண்டு வரும் சொப்னா (மதுபாலா), டுடோரியல் காலேஜ் டீச்சர் கண்மணி (கீதா), நடன கலைஞர் பிரியா (பானுப்ரியா) ஈர்க்கப்படுகிறார்கள். அதனால் வரும் குழப்பங்கள் தான் கதை. கதை திரைக்கதை இயக்கம் பாலசந்தர், டி.வீ. நாடகம் போலத் தோன்றி விடாமல் படத்தை நன்றாக கொண்டு போயிருக்கிறார்.   


மதுபாலாவுக்கு இது முதல் படம், ஆனால் நடிப்பில் குறும்பு கொப்பளிக்கிறது. சும்மா பின்னி பெடலெடுத்து இருக்கிறார். பானுப்பிரியா ஹோட்டலுக்கு வர அவரிடம் ஹோட்டல் மெனுவை  மம்மூட்டி ஒப்பிக்கும் காட்சி சூப்பர்மம்மூட்டிக்கு நான்கு குழந்தைகள். 'நாம வேற வீட்ல போய் பிறந்திருக்கலாண்டா' என்று சொல்லும் சிறுவன் நடிப்பு சிறப்பு.  போட்டோ-வில் அம்மாவின் முதுகு தெரிவது பார்த்து ஒரு குழந்தை போட்டோவின் பின் பக்கம் போய் முகம் பார்க்க முயல்வது சூப்பர்.  ஒரு இடத்தில் மம்மூட்டி பேசும் வசனம் இது: "நான் சொல்றேன் நீ கேட்டுக்கோ..ஆனா டான்ஸ் ஆடிக்கிட்டே பேசத் தெரியாதெனக்கு.." சீரியசான இடத்திலும் சிரிப்பு வரும் நமக்கு. 


படத்தில் பல சின்ன பாத்திரங்கள் கூட முக்கியத்துவம் பெறுகின்றன. சந்தானம் என்கிற டிரைவர், வீட்டு வேலைக்காரராக வரும் பிருதிவி ராஜ், அதிராமப் பட்டினம் சொக்கு என்கிற கோள்மூட்டும் பாத்திரம் (மூன்று பெண்களுக்கும் இடையில் போட்டியையும் குழப்பத்தையும் மாறி மாறி ஏற்படுத்துகிறது), பானுப்பிரியாவின் அப்பா, அம்மா, மதுபாலாவின் பாட்டியாக வரும் சாவ்கார் ஜானகி. டெலிபோன் கூட ஒரு முக்கிய பாத்திரமாக மாறி இருக்கிறது. ஒரு பாடலில் பானுப்ப்ரியாவும் மம்மூட்டியும் இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்கள்: "சங்கீத ஸ்வரங்கள்" என்கிற பாட்டு சூப்பரோ சூப்பர். தூர்தர்ஷனில் வளையம் வரும்போது வரும் இசையையும் பாடலில் சேர்த்திருப்பது அருமை,  இதை படமாகிய விதம் மிகவும் அருமை.
சில சமயம் மம்மூட்டி ஹோட்டலை கவனிக்கறாரா இல்லை இந்த மூன்று பெண்களை மட்டும் கவனிக்கறாரா என்று நினைக்க தோன்றுகிறது. இயக்குனர் கொஞ்சம் கதையை நீட்டி இருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது. 


இன்றும் கூட பார்க்கலாம், ரசிக்கலாம் என்கிற வகையில் படம் இருப்பது தான் இயக்குனரின் வெற்றி. சிறந்த படம்.


2 comments:

  1. சில நாட்களுக்கு முன்புதான் இந்த படத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன்...அழகான திரை விமர்சனம்..தங்களிடம் எனக்கு பிடித்ததில் ஒன்று எல்லோரும் மறந்துப்போன படங்களை பற்றி சிறப்பான விமர்சனத்தை தருவதுதான்.அந்த வரிசையில் இதுவும் ஒன்று.மிக்க நன்றி.

    Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

    ReplyDelete
  2. எப்போதெல்லாம் நல்ல படம் பார்க்க வேண்டும் என தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நான் பார்க்க விரும்பும் படங்களில் இதுவும் அன்பே சிவமும் உண்டு !!!

    ReplyDelete