Memories

Sunday, September 30, 2012

கதிரும் வீச்சும் தொடர்கிறது...

கதிரும் வீச்சும் என்கிற தலைப்பில் அறிவியல் அறிஞர்களான மேரி க்யுரி ஆய்வுகள் பற்றி பார்த்தோம். அவருடைய ஆய்வு கதிர் வீச்சின் மோசமான மறு பக்கத்துக்கு சான்றாக இருந்தது. வாரக்கணக்கில் ரேடியத்தை பிரிக்க நடத்திய ஆய்வு அவருடைய கைகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது: தோல் கருகி காய்ந்து உரிய ஆரம்பித்தது. உள்ளிருந்து தசைகள் எரித்து கருகியது போலிருந்தது. கதிர் வீச்சின் காரணமாக அவருடைய எலும்பு மஜ்ஜை எரிந்து தீராத ரத்த சோகை வேறு வந்திருந்தது. எலும்பு மஜ்ஜை தான் ரத்தம் சுரக்க காரணம் என்று உங்களுக்க்து தெரிந்திருக்கும்.


ஆராய்சிகள் பல செய்து பல வருடங்களுக்கு பின்னால் தான் இவற்றுக்கான காரணங்கள் புரிய ஆரம்பித்தது. டி.என்.எ  என்கிற செல்லின் மூலக்கூறினை இந்த கதிர்வீச்சு தாக்குகின்றது என்று புரிய ஆரம்பித்தது அறிஞர்களுக்கு. குழந்தை அப்பா, அம்மாவின் அம்சங்களையும் தாத்தா, பாட்டி போன்ற பரம்பரை குணாதிசயங்களுடன் பிறக்கக் காரணம் தான் இந்த டி.என்.எ. ஒரு தலை முறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு தகவல்களை எடுத்து செல்லக்கூடியது. இந்த டி.என்.எ கதிர்வீச்சால் பாதிக்கப் பட்டு கான்சராகிறது.



கான்சரை உண்டாக்கும் எக்ஸ் கதிர்கள் கான்சரை அழிக்கவும் உதவுகிறது.1896 ஆம் ஆண்டு (எக்ஸ் கதிர்கள் கண்டு பிடிக்கப் பட்ட மறு ஆண்டு) எமில் கிரப் என்கிற மருத்துவக் கல்லூரி மாணவர் ரோஸ் லீ என்ற மருத்துவர்கள் கை விடப் பட்ட மூதாட்டிக்கு இருந்த மார்பக புற்று நோயை எக்ஸ் கதிர்கள் கொண்டு தாக்கினார்.தொடர்ந்து சுமார் 18 நாட்கள் இந்த வலி மிகுந்த மருத்துவம் செய்தார். லீ நிலையில் நல்ல முன்னேற்றம் வந்தது, சிகிச்சை முடிந்து பல மாதங்கள் கழித்து லீ மருத்துவரை பார்க்க திரும்ப வந்தார். கிரப்புக்கு எக்ஸ் கதிர்கள் கொண்டு மருத்துவம் செய்வதில் நம்பிக்கை வந்தது. ஆனாலும் ஒன்று புலப்பட்டது: ஆரம்ப நிலையில் கான்சரை குணப்படுத்த எக்ஸ் கதிர் பயன்படும் ஆனால் முதிர்ந்த கான்சருக்கு இது தீர்வாகாது. இந்த கதிர்வீச்சு மருத்துவம் இன்னும் ரேடியோதேரப்பி என்ற பெயரில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

மூலம்: சித்தார்த் முக்கர்ஜி.

No comments:

Post a Comment