Memories

Sunday, October 7, 2012

சாயமும், சாதலும்....

கான்சர் ஒரு தீர்க்கமான செயல்பாடுடைய வியாதி. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கும், ஒரு உறுப்பில் இருந்து மற்றொன்றுக்கும்  பரவிக்கொண்டே இருப்பது. பெயருக்கு ஏற்றார் போல புற்று போல பல இடங்களில் இருந்து வெளித் தோன்றிக்கொண்டே இருப்பது. இதை வெட்டித் தள்ளும் கத்தி தான் கதிர்வீச்சு. இந்த கத்தி அதனுடைய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகாது. எனவே இது இறுதி தீர்வாக முடியாது.

தீர்க்கமான செயல்பாடுடைய வியாதிக்கு அதை விட தீர்க்கமான செயல்பாடுடைய சிகிச்சை தேவை. நோயின் வேரைக் கண்டறிந்து அதை வெட்டி வீழ்த்த வேண்டும் கான்சருக்கான மருந்து. கான்சர் செல்லும் அதன் மூலமான நல்ல செல்லும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்பு உடையன. உதாரணமாக கண்டு பிடிக்கப் பட வேண்டிய மருந்து இடது காதை மட்டும் அரிக்க வேண்டும், ஆனால் வலது காதை  ஒன்றும் செய்யக் கூடாது. எப்படி பாருங்கள்?


கான்சரை குணப்படுத்த ஓரளவு நல்ல மருந்து சாயப் பட்டறையில் இருந்து தோன்றியது என்றால் வேடிக்கையாகத் தான் இருக்கும். யோசித்து பாருங்கள் சாயத் தொழிலுக்கும் கான்சருக்கும் என்ன சம்பந்தம் என்று..



1850 வாக்கில் இங்கிலாந்தில் தறி நெசவு வெகு வேகமாக வளர்ந்து வரும் தொழில். தறி நெசவும் சாயத் தொழிலும் சம்பந்தப் பட்ட தொழில்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே? வேகமாக வளரும் நெசவு தொழிலுக்கு சாயத் தொழிலால் ஈடு கொடுக்க முடிய வில்லை. இயற்கையாக பெறப் பட்ட சாயங்களை தயாரிக்கவும், பாதுகாக்கவும் மிகவும் மெனக்கெட வேண்டி இருந்தது. நெசவு செய்யப் பட்ட துணிகள் சாயத்துக்காக காத்துக் கிடந்தன.



(படம்: வயோதிக வில்லியம் பேர்க்கின் மற்றும் இள  வயது புகைப்படம்)

1856-இல் வில்லியம் பெர்கின் என்கிற மாணவன் செய்த இரசாயன ஆராய்ச்சி வயலட் நிற பொருளை ஆராய்ச்சி குடுவையில் உண்டாக்கி இருந்தது. பஞ்சை (பருத்தி) கொண்டு  தொட பஞ்சின் நிறத்தை வயல்ட்டாக மாற்றியது. ரசாயன சாயத் துறை என்கிற புதிய துறை பிறந்தது. நெசவுத் தொழிலுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக தோன்றியது.

மூலம்: சித்தார்த் முக்கர்ஜி.

No comments:

Post a Comment