Memories

Friday, August 23, 2013

ராமாயணத்திலிருந்து ஒரு கதை - விஸ்வாமித்திரர்




விஸ்வாமித்திரர் கௌசிக நாட்டு ராஜாவாக இருந்த போது பிரம்மரிஷி வசிஷ்டரின் ஆசிரமம் வழியாக, தன்னுடைய பெரும் படையுடன் சென்று கொண்டிருந்தார்.  மரியாதை நிமித்தம் பேசும்போது வசிஷ்டர் விஸ்வாமித்திரரையும் படையையும் சாப்பிட அழைத்தார். இவ்வளவு பெரிய படையை எப்படி இந்த ரிஷியால் உணவளித்து கவனிக்க முடியும்  என்று நினைத்து "மகரிஷி! நீங்கள் இப்படி கேட்டதே போதும். நாங்கள் கிளம்புகிறோம்" என்று சொன்னார் விஸ்வாமித்திரர். வசிஷ்டரோ விடவில்லை.

சரி என்று அமர்ந்த படைகளுக்கோ விருந்து பானங்கள் என்று கேட்க கேட்க வந்து கொண்டே இருந்தன ஆசிரமத்தில் இருந்து. ஒரே ஆச்சர்யம் விஸ்வாமித்திரருக்கு, கேட்டே விட்டார் வசிஷ்டரிடம். வசிஷ்டரின் வீட்டு பசு காமதேனு தான் இதற்கு காரணம் என்று புரிந்ததும் கேட்டார்: " ரிஷியே நாட்டில் உள்ள அனைத்து பொருட்களும் அரசனுக்கே சொந்தம். எனவே இந்த பசுவை என் அரண்மனைக்குக் கொடுங்கள்" என்றார். பசு வந்தால் கூட்டிப் போகுமாறு சொல்லி விட்டார் வசிஷ்டர். பசு வர வில்லை. படை வீரர்களை அனுப்பி இழுத்து வருமாறு அனுப்பினார் விஸ்வாமித்திரர். முனிவரைப் பார்த்து கதறியது அப்பசு. "உணவு படைத்த உனக்கு உன்னை காத்துக் கொள்ள  தெரியாதா" என்றார் வசிஷ்டர். உடனே அந்தப் பசுவிடம் இருந்து எண்ணற்ற வீரர்கள் தோன்றினர், அவர்கள் விஸ்வாமித்திரரின் படையை காண நேரத்தில் நிர்மூலமாக்கினார்கள். பெருந்தோல்வி விஸ்வாமித்திரருக்கு.

அங்கேயே தன ராஜ்யத்தை எஞ்சி இருந்த மகனிடம் கொடுத்து விட்டு காட்டுக்கு தவம் செய்ய சென்றார் விஸ்வாமித்திரர். சிவனை நினைத்து இருந்து முடிவில் சிவனிடமிருந்து தனுர் வேதத்தையும் எல்லா அஸ்திரங்களையும் பெற்றார் விஸ்வாமித்திரர். அடுத்து அவர் வந்தது வசிஷ்டரின் ஆசிரமம் முன்பு.

(தொடரும்)



Creative resume series (வினோத ரெசியூம்கள் )

உங்களை கவர்ந்தது எது என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் 

1) 

2)

3)

4)

5)

6)

7)

8)

9)

10)

11)

12)

13)

14)

15)

16)

17)

18)

19)

20)

21)

22)

23)

24)

25)

26)

27)

28)

29)

30)