Person who made many lives change better. பலரது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியவர்.மேலும்...
Memories
Sunday, April 8, 2012
Sunday, April 1, 2012
நண்பன் திரைப்படத்தில் உள்ள தவறுகள்
தவறு 1: காட்சி: செந்திலும், வெங்கட்டும் ஊட்டியில் உண்மையான பாரியை சந்திக்கின்றனர். பாரியின் அப்பாவுடைய அஸ்தியை கழிப்பறையில் கரைப்பதாக மிரட்டுகின்றனர். அப்படி மிரட்டும் போது ஒரு காட்சியில் கலசத்தின் மூடியை உள்ளே போடுகிறான் வெங்கட். பேசி முடித்த பிறகு உள்ள காட்சியில் கலசத்தை மூடியோடு கொடுக்கிறான் செந்தில். (ஹிந்தி படத்தில் கூட இது இப்படியே, தவறாக, வருகிறது)
தவறு 2: காட்சி: இலியானாவின் திருமண காட்சி. காட்சியில் இலியானாவின் திருமண மேடைக்கு நேர் முன்னே கார் வந்து நிற்கிறது. இலியானா செந்திலை இழுத்துக் கொண்டு காரில் ஏறுகிறார். அடுத்த காட்சியில் வைரசும் அவருடைய மூத்த மகளும் சேர்ந்த கூட்டம் ஓடி வருகிறது. அப்போது அவர்கள் மாடியில் இருப்பது போலவும் கார் கீழே போவது போலவும் வருகிறது. முந்தய காட்சியில் ஒரே தளத்தில் இருந்த மனமேடை அடுத்த காட்சியில் மாடிக்கு சென்றது? (ஹிந்தில் படத்தில் இது சரியாக வருகிறது.)
தவறு 3: காட்சி: முதன் முதலில் சைலேன்சரும், செந்தில் மற்றும் வெங்கட் சந்திக்கும் காட்சி. செந்திலும் வெங்கட்டும் பாரியை பத்து வருடங்களாக தேடுவதாக சொல்கிறார்கள். கல்லூரி முதல் வருடம் சைலேன்சர் பத்து வருடங்களுக்கு பிறகு அதே இடத்தில் சந்திப்பதாக சொல்கிறான். ஆனால் நான்கு வருடம் கல்லூரி முடிந்த பின் சுமார் ஆறு அல்லது ஏழு வருடங்களே இவர்கள் பாரியை தேடுவதாக சொல்லி இருக்க வேண்டும்.
இதை தவிர நீங்கள் கண்டு பிடித்த தவறுகளை பின்னூட்டமாக போடவும்...
Subscribe to:
Posts (Atom)