Memories

Showing posts with label கோரிக்கை. Show all posts
Showing posts with label கோரிக்கை. Show all posts

Monday, January 16, 2012

நம்முடைய இணையம் இப்போது "www.piramu.tk" தளத்தில்

நம்முடைய பிரமு இணையத்தை இப்போது www.piramu.tk என்கிற இணைய முகவரியில் அடையலாம். piramu.blogspot.com என்கிற முகவரி மேற்கண்ட இணையதளத்துக்கு மாற்றி விடப் படுகிறது. இணையத்தை அடைய ஏதேனும் சிக்கல்கள்  இருந்ததால் இங்குள்ள "கருத்துக்கள்" இணைப்பு வழியாக தகவல் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, October 8, 2011

ஒரு வேண்டுகோள்...!


இந்த வலைப்பூ மாமா பற்றிய நினைவு கூறத் தக்க நல்ல விஷயங்களை பதிவு செய்வதற்காக தொடங்கப் பட்டது. மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது மாமாவின் இயல்பு. உலகின் மிகப் பெரிய பணக்காரரும் நிதியுலகின் சக்கரவர்த்தியான Warren Buffet ஒரு முறை சொன்னார்: "நான் இந்த சமுதாயத்தால் தான் நல்ல மனிதனாக, பணக்காரனாக வந்தேன். அதனால் தான் இந்த சமுதாயமும் நல்ல நிலைக்கு வருவதற்காக எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது" இதனால் தான் அமெரிக்க அரசாங்கம் அவரிடம் போய் அறிவுரை கேட்கிறது, அவர் சொல்வதை சட்டமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து எனக்குத் தெரிவது என்னவென்றால் சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணுவது பெரிய மனிதர்களின் குணம். அது பிரமு மாமாவிடம் இருந்ததில் வியப்பு இல்லை.
 இந்த வலைப்பூ வழியாக மற்றவர்களுக்கு நல்லது செய்ய முயற்சிப்போம். எல்லாருக்கும் பயன்படுகிற,  எல்லாரும் ரசிக்க தக்க விஷயங்களை பதிவு செய்வோம். தனிப்பட்ட நம்முடைய தொடர்புகளை மின்னஞ்சல் வழியாக  தொடருவோம், அல்லது இந்த வலைப்பூவில் நண்பராக (உறுப்பினராக)  சேர்ந்தால் மற்றவர்களுடன் தனிப்பட்ட தொடர்புகளை தொடரலாம். ஆனால் வலைப்பூ பதிவாக வேண்டாமே... மேலும் இந்த வலைப்பூ பல நாடுகளில் இருந்து நிறைய பேரால் பார்க்கப் படுகிறது, அதில் பலருக்கு பிரமு யார் என்பது தெரியாது.  மாமாவை எப்படிப் பட்ட மனிதராக நாம் நினைகிறோமோ அந்த எண்ணம் எல்லாருக்கும் வரும் வகையில் இந்த இணையத்தை தொடருவோம், நம்முடைய பங்களிப்பைத் தொடருவோம். உங்களுடைய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கிறேன்.  

நன்றி



Sunday, September 25, 2011

கோரிக்கை

மாமாவுடைய நல்ல போட்டோ இருந்தால் தயவு செய்து எனக்கு அனுப்பவும், நான் அதை இந்த இணையத்தில் பதிவு செய்து விடுவேன்.