அப்போ ஒரு கூட்டம் சவுண்ட் அந்தப் பக்கம் வந்தது. யார் அவங்க என விசாரித்தான் வந்தியதேவன் அதுக்கு இவங்கதான் வேளக்கார படைனு பதில் கிடைத்தது. 'இவங்களைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கிறேன், இவங்களோட சேர்ந்து கிட்ட போறேன்' அப்படின்னு சொல்லி அந்த கும்பல்குள்ள ஓடிட்டான் வந்தியதேவன். சின்ன பழுவேட்டரையர் ஆளுங்களுக்கு அந்தக் கூட்டத்துக்கு உள்ள நுழைய முடியல. அந்த கும்பலில் ஒரு சின்ன குழப்பம் அவங்கள்ள ஒருத்தன் ஒரு மோர் விக்கிற பொம்பளைகிட்ட சச்சரவு பண்ணி அவளை துரத்திட்டு ஓடினான், தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கூட இன்னும் கொஞ்சம் பெரு ஓடினார்கள். இதுதான் நம்ம வாய்ப்பு என்று வந்தியத்தேவனும் கூட ஒன்னா ஓடினான். அங்க இங்க வளைஞ்சு ஓடி ஒரு முட்டுச் சந்தில நின்னுட்டான்.
ரொம்ப டயர்டு, ஓரமா உக்காந்தவன் அப்படியே தூங்கிட்டான். ராத்திரி ஆயிருச்சு. ஏதோ தோண, நிமிர்ந்து பார்த்தான். மரத்தில் ஒரு பேய்; அது பேச வேற செஞ்சது 'எவ்வளவு நேரம் கூப்பிடுறது? சரியான தூங்கு மூஞ்சி நீங்க" அப்படின்னு ஒரு பொம்பள குரல்ல சொல்லுச்சு. இது பேய் இல்ல, பொண்ணுதான் அப்படின்னு அவனுக்கு புரிஞ்சுது. அந்த பொண்ணு, "ராணி எவ்வளவு நேரம் வெயிட் பண்றாங்க... கொஞ்சம் கூட அவசரமே இல்லை உனக்கு" அப்படின்னா. சரிதான், இதுதான் நம்ம எஸ்கேப் ரூட்டு அப்படின்னு அவ கூட போன மரத்து மேல நூலேணி வழியாக ஏறி அந்தப் பக்கமே இறங்கினான்.
No comments:
Post a Comment