Memories

Showing posts with label பிரமு மாமா பற்றிய தகவல். Show all posts
Showing posts with label பிரமு மாமா பற்றிய தகவல். Show all posts

Friday, October 5, 2012

பிரமு மாமாவின் பிறந்த நாள் இன்று....


பிரமு மாமாவின் ஐம்பதாவது பிறந்த நாள் இன்று. இன்று நம்மால் முடிந்த நல்லவைகளை செய்வோமாக!

Sunday, April 8, 2012

சின்னக்கண்ணன் அழைக்கிறான்

இது மாமாவுக்கு பிடித்த பாட்டு...

Saturday, January 28, 2012

சில தருணங்கள் மறக்க முடியாதவை


Saturday, December 31, 2011

பிரமு நினைவு நூலகம் !!

இந்த இனிய புத்தாண்டு பிறக்கும் நன்னாளில் நெஞ்சம் நிறைந்த சந்தோஷத்தோடு இந்த அறிவிப்பு செய்யப் படுகிறது. பிரமு மாமா பெயரில் நினைவு  நூலகம் 2012 ஜனவரி முதல் தேதியில் திறக்கப் படுகிறது.


முன் நின்று இதை செயல்படுத்திய சாதனையாளரான முருகா சித்தப்பாவுக்கு பிரமு இணையத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல கோடி !!


-- இந்த நூலகம் கால காலமாய் பிரமு பெயரை சொல்லுமாறு நிற்கும் என்று வணங்கி வாழ்த்தும் இளைய உள்ளங்கள் 

Wednesday, December 7, 2011

மன உறுதி - மேலும் !!

 மாமா, கான்சர் வந்த பிறகும் நிமிர்ந்து தான் நடந்தார்கள், தனக்கு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள், கடைசியில் சென்னை போக வேண்டும் என்பது வரை. சாதாரண மனிதன் நொறுங்கி போய் இருப்பான், விழுந்து கிடப்பான். ஆனால் நோய்க்கு பயப்பட வில்லை மாமா, அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதை...யாரால் தான் முடியும் ? ஆனால் கடைசி வரை சோர்ந்து போக வில்லை, தோல்வி என்று துவங்கவில்லை... 



Monday, November 28, 2011

உங்களுக்கு ஒரு சவால்

ஒரு வரியில் சொல்லுங்கள், பிரமு மாமாவை எப்படி உணர்கிறீர்கள் ?
(கருத்துக்கள் இணைப்பை சொடுக்கி பதில் சொல்லுங்கள்)  


Sunday, November 27, 2011

மன உறூதி!!!

என் மனதில் பட்டது.

நோய்களின் அரசனாம் கான்சர்,
கொஞ்சம் பயந்து தான் போனான் எங்கள் மாமாவை பார்த்து.......  

-ரமேஷ்

Monday, November 14, 2011

மன உறுதி

இந்த வார்த்தையை படித்திருக்கிறேன், கேள்வி பட்டு இருக்கிறேன் பெரிய மன்னர்களிடத்தில் இது நிறைய இருந்தது என்று. இன்றைய காலகட்டத்தில் கேட்டதில்லை. 

மாமா முதல் கீமோ ஏற்றி விட்டு வந்து இருக்கிறார்கள். மேல வீடு சசிகலா சித்தி அப்ப தான் செல்வம் சித்தப்பா இறந்த சோகத்தில் இருந்திருக்கிறார்கள். ஊரை விட்டு போய்டலாம்னு  இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் பிரமு மாமா இப்படி சொன்னார்களாம்: "உனக்கு யாரும் இல்லை இங்கன்னோ, ஊரை விட்டு போலாம்னோ நெனைக்காதே சசிகலா. அண்ணன் நான் இருக்கேன் அந்த பிள்ளைகளுக்கு"

கீமோ ஏறும் போது கூட இந்த மன உறுதி இருக்குமா, நான் பாத்துக்கறேன் குழந்தைகளைன்னு அந்த சமயத்துல கூட சொல்லறதுக்கு யாருக்கு வரும் அந்த உறுதி. 




Wednesday, October 12, 2011

வியாபாரி

 ஓரிரு வருடங்களுக்கு முன்பு மாமா நிறைய கடனில் இருந்தார்கள். பணத்தை கைமாற்றி விட்டு சமாளித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு சமயத்தில் ஒருவரிடமிருந்து மாமாவுக்கு வர வேண்டிய பணம் வாங்குவதற்காக ஒருவரிடம் கேட்டு கொண்டு இருந்தார்கள்.  ஆனால் அந்த மனிதரோ தான் மகன் படிப்புக்கு வைத்திருக்கும் பணத்தை எடுத்து தருவதாக சொன்னார். மாமாவுக்கோ நிறைய டென்ஷன் பணம் வாங்கி உடனே தான் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். மாமா ஒரு தொழில் அதிபர், அடிப்படையில் ஒரு வியாபாரி. அவர்கள் தன்னுடைய லாபத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்திருக்க முடியும். ஆனால் மாமாவோ அந்த ஆளிடம் அவர் பையனுடைய படிப்புக்கு பணத்தை கட்டுமாறு சொல்லி விட்டு திரும்ப வந்து விட்டார்கள். அவர்கள் முகம் மிகுந்த நிறைவை வெளிப்படுத்தியது.

மாமாவோ ஒரு வியாபாரி என்பதைத் தாண்டி ஒரு உயர்ந்த மனிதர் என்பது புலப்பட்டது. 

Monday, October 3, 2011

மாமாவின் பிறந்த நாள்

மாமாவின் பிறந்த நாள் அக்டோபர் 5 (தகவல் - சுமதி)

இந்த நாளில் பிரமநாயகம் நினைவு அறக்கட்டளை வழியாக எதாவது செய்வோமா ?





Sunday, September 25, 2011

முழுமையான மனிதன்

என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்: "கல்யாணம் செஞ்ச பிறகு வேலை கவனம் போய்டும். இல்லன்னா குடும்ப கவனம் போய்டும்."
உடனே அம்மா சொன்னாங்க: " உன் பிரமு மாமாவை நெனச்சு பாரு. எவ்வளவு கஷ்டமான வேலை அவனது. அதனால குடும்பத்துக்கு எதாவது செய்யாம விட்டானா? குடும்பத்துக்கு செய்யறேன்னு சொல்லி தொழில விட்டானா? ஒரு முழுமையான மனிதன் எதையும் விட மாட்டான்"

உண்மைதான் !

மாமா குடும்பத்தையும் விட வில்லை, தொழிலையும் விட வில்லை, எந்த நல்லது கெட்டதுகளையும் விட வில்லை. இது தான் முழுமையான மனிதனுடைய இயல்பு...!!






Friday, September 23, 2011

பேச்சி பிரமராக்கு

இது தான் செவல் பிரான்சேரி என்கிற கிராமத்தில் இருக்கக் கூடிய குல தெய்வத்தின் பெயர். இந்த குல தெய்வத்துக்கு வேண்டி நல்ல படியாக பிறந்ததால் பிரமநாயகம் என்கிற பெயரை வைத்தார்கள் மாமாவுக்கு. பாட்டி ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் போது அவர்களுக்கு ஒரு வித வலி வந்திருக்கிறது. குழந்தை தவறி விடும் என்று எல்லாரும் பயந்திருக்கிறார்கள். நேரம் இரவு நெடு நேரம் ஆகிவிட்டபடியால் ஆஸ்பத்திரிக்கும் தூக்கிட்டு போக முடியவில்லை. அப்போது ஒரு அம்மன் கொண்டாடி (கோவிலில் சாமி ஆடுபவர்களை இப்படி தான் பாட்டி சொல்லுவாள்)  வந்து குழந்தைக்கு ஒன்னும் ஆகாது, நல்ல படியாக ஒரு ஆண் பிள்ளை பிறக்கும், குழந்தைக்கு பிரமநாயகம் என்ற பெயரை வை என்று சொல்லி போய் விட்டாள்.  இப்படி வைத்தது தான் அந்த பெயர். 






Thursday, September 22, 2011

சின்ன கோடும் பெரிய கோடும்


ஒரு தடவ வேலைல நிறைய கஷ்டம் வந்திட்டது. அது விடவே இல்ல. எப்போ தீரும்-ன்னு தெரியல. கஷ்டத்தை பத்தி நெனைக்கறதே ஒரு தனி கஷ்டமா போயிருச்சி. பிரமு மாமாவிடம் சொல்லிட்டு இருந்தேன். மாமா இப்படி சொன்னாங்க, அவங்க பாணியில்: கஷ்டம் என்பது தரையில் வரையிற பெரிய கோடு மாதிரி. அந்த கோடு எப்பவும் பெருசாத் தான் தெரியும். அது பக்கத்திலே அதை விட பெரிய இன்னொரு கோடு வரையும் போது இந்த கோடு சின்னதா ஆயிடும்.  

ஒரு நிமிஷம் நெனைச்சு பாத்தேன்...பத்தாம் கிளாஸ் படிக்கும் போது அதை விட பெரிய கஷ்டம் இல்லைன்னு தோனுச்சு. பன்னண்டாம் கிளாஸ் படிக்கும் போது பத்தாம் கிளாஸ் கஷ்டம் ஒண்ணுமே இல்லைன்னு தோனுச்சு. அது அப்படி போய் கிட்டே இருக்கு. எதாவது கஷ்டம் வரும் போது மாமா சொன்னத நெனச்சுக்குவேன், அந்த கஷ்டம் ஈசி ஆயிடும்.





Monday, September 19, 2011

பிடிவாதம்


சச்சின் டெண்டுல்கரின் மனைவியிடம் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும் : 
"உங்கள் கணவரிடம் மிகவும் பிடிக்காத குணம் எது ?"
"அவரின் பிடிவாதம்"

"பிடித்த குணம் ?"
"அதுவும் பிடிவாதம் தான், அது தான் அவரை சாதனைகள் செய்ய தூண்டுகிறது"

பிரமு மாமாவிடமும் நெறைய பிடிவாதம் உண்டு, நெறைய போராட்ட குணமும் உண்டு. அது அவர்களிடம் கடைசி வரை இருந்தது....எத்தனை வலி வேதனைகள் இருந்தாலும்... அந்த குணங்கள் தான் அவர்களை ஒரு சாதனையாளராக ஆக்கி இருந்தது.







Sunday, September 18, 2011

பிரமு மாமா பற்றி ஒரு தகவல்

பிரமு மாமா அவர்கள் +2  படிக்கும் போது NCC தேர்வில் மாநில அளவில் முதலாக வந்தவர்கள். இந்த தேர்வு நிறைய உடற்பயிற்சிகள் நிறைந்தது.  இதை என்னிடம் சொல்லியதும் அவர்கள் தான்.