Person who made many lives change better. பலரது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியவர்.மேலும்...
Memories
Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts
Monday, October 15, 2012
Monday, January 30, 2012
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 11
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 11 - திடும் பிரவேசம்
அத்தியாயம் 11 - திடும் பிரவேசம்
வானதியோட சாதகத்த பாத்த ஜோதிடர் அப்படியே திகைச்சுட்டாறு. குந்தவைய பாத்து சொன்னாரு: "ரொம்ப அதிர்ஷ்டக்கார ஜாதகம் அம்மா இது, உங்களை விட ஒரு படி மேலானது." வானதியோட சாதகத்த பாத்து அவளுக்கு எப்போ கல்யாணம் வரும், மாப்பிள்ளை எங்க இருந்து வருவார் அப்படீன்னு கேட்டாரு குந்தவை. ஜோதிடர் பேசறதுல கில்லாடி. புரியற மாறி பேசுவாரு ஆனா ஒன்னும் தெளிவா சொல்ல மாட்டாரு.
குந்தவை இன்னும் கேட்டா: "ஜோதிடரே கொஞ்ச நாளா வானத்தில ஒரு வால் நட்சத்திரம் தெரியுது. அதனால ராஜ்யத்துக்கு ஆபத்துன்னு ஜனங்கள் பேசிக்கறாங்களே...அத பத்தி பாக்க முடியுமா"ஜோதிடர் பதில் சொல்லாம தப்பிக்க பாத்தாரு. குந்தவை விடுவாளா...கடைசீல சொன்னாரு: "ராஜாவுக்கு ஒரு கண்டம் இருக்கு. துர்க்கா தேவி அருளால சரியாகும்" அப்படீன்னார்.
அப்ப வாசல்ல சத்தம் கேட்டது, தடபுடல் தெரிஞ்சது. எதோ சொல்லிக்கிட்டே வந்தியத் தேவன் உள்ள வந்தான் (நினைவிருக்கா இவன் படகுல ஏறுனான் கடைசீயா) பெண்கள பாத்ததும் அப்படியே நின்னுட்டான்..பின்னாடியே ஜோதிடரோட சீடன் வந்தான். அவன் கிட்ட வந்தியத் தேவன் "உள்ளே பெண்கள் இருக்காங்கன்னு சொன்னா வந்திருக்க மாட்டேன் இல்லே" அப்படீன்னு சொல்லிட்டு வெளியே போய்ட்டான்.
பெண்கள் ரெண்டு பெரும் முடிச்சுட்டு வெளியே வந்தாங்க. ஒதுங்கி நின்ன வந்தியத் தேவன் சொன்னான் "உள்ளே பெண்கள் இருக்காங்கன்னு இந்த புத்திசாலி சொல்லலே, அதான் வந்திட்டேன், மன்னிச்சுக்கோங்க"ன்னான். அதுக்கு பதில் சொல்லாம அவன பாத்து ஒரு ஸ்மைல் பண்ணீட்டு போய்ட்டாங்க குந்தவை.
Tuesday, January 24, 2012
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 12
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 12 - நந்தினி
போன அத்தியாயத்தில படகில விட்ட வந்தியத்தேவன் குடந்தை ஜோசியரப் பாக்கறதுக்கு எப்படி வந்தான்? என்ன நடந்ததுன்னா...ன்னு சொல்லி ப்ளாஷ்-பேக் உடுவோமா?
சரி, தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லேன்னு நீங்க நினைக்கலாம். படகில வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியான கிண்டி கிடைச்சது தான் நந்தினி பத்தின கதை. நந்தினி தான் வந்தியத்தேவனுக்கு தந்த மோதிரத்த கொடுத்தவ. பெரிய பளுவேட்டரயரோட சம்சாரம். அவ ஆழ்வார்க்கடியானோட தங்கை. ஆழ்வார்க்கடியான் சின்ன பையனா இருந்த போது அவனோட அப்பா நதிக்கரையில அனாதையா கிடந்த ஒரு பெண் குழந்தைய எடுத்து நந்தினின்னு பேரு வச்சு வளத்தாரு. அவரு இறக்கும்போது நந்தினிய ஆழ்வார்க்கடியானோட பொறுப்பில விட்டுட்டு இறந்திடாறு. இவன் பக்தீயில ரொம்ப ஊறிப்போய் இருந்தாலும் தங்கைய நல்லா கவனிசுக்கிட்டான். ஒரு வாட்டி திருவேங்கடத்துக்கு யாத்திரை போனான் ஆழ்வார்க்கடியான். அபப ஒரு விபரீதம் நடந்தது. சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில ஒரு பெரிய போர் நடந்தது. [ நல்லா நியாபகம் வச்சுக்கோங்க..இது திருப்பி திருப்பி வரும், ஒவ்வொருத்தர் பார்வையில.. ] அது நடந்த இடத்துக்கு பக்கத்தில தான் இவன் வீடு இருந்தது. பாண்டியர்களோட படை நிர்மூலமா ஆயிடுச்சு. ரத்த காயத்தோட அவங்க ராஜா வீரபாண்டியன தூக்கி கொண்டு வந்து நந்தினி வீட்டில போட்டாங்க கொஞ்ச வீரர்கள். அவனோட நிலமைய பாத்து இறக்கப் பட்டு பணிவிடை செஞ்சா இவ. ஆனா இத கண்டு பிடிச்சு சோழ வீரர்கள் அங்க நுழைஞ்சு வீர பாண்டியன கொன்னுட்டாங்க, நந்தினிய சிறை பிடிச்சுட்டு போயிட்டாரு பழுவேட்டரையர். மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது இது; அதில இருந்து அவள எப்படியாவது அங்க இருந்து மீட்கனும்னு, காப்பாத்தனும்னு டிரை பண்ணிக்கிட்டு இருக்கான் திருமலை என்கிற ஆழ்வார்க்கடியான்.
அத்தியாயம் 12 - நந்தினி
போன அத்தியாயத்தில படகில விட்ட வந்தியத்தேவன் குடந்தை ஜோசியரப் பாக்கறதுக்கு எப்படி வந்தான்? என்ன நடந்ததுன்னா...ன்னு சொல்லி ப்ளாஷ்-பேக் உடுவோமா?
படகில கடைசீய வந்து ஏறினான் ஆழ்வார்க்கடியான். அவன் வாய கிளறினான் வந்தியத்தேவன். ஆழ்வார்க்கடியான் எப்பேர்ப்பட்ட கில்லாடி...அவன் அத அப்படியே திருப்பி உட்டான் வந்தியத்தேவன் மேல...வந்தியத்தேவன் லேசுப்பட்டவனா? அவன் விடாக்கண்டன்னா இவன் கொடாக்கண்டன். வந்தியத்தேவன் பத்தி ஒன்னும் கண்டு பிடிக்க முடியல இவனால. ஆனா வந்தியத்தேவன் மனசோ ரொம்ப குழம்பி போய் கிடந்தது. அது தீர ஆழ்வார்க்கடியான் ஒன்னும் தீர்மானமா சொல்லல. ஆனா ஒண்ணு மட்டும் சொன்னான்: குடந்தை சோதிடர கேட்டு பாருன்னு சொல்லிட்டான். சேரி அவரப் பாத்தா குழப்பம் தீர்ந்தாலும் தீரலாம்னு அங்க போக நினைச்சான் வந்தியத் தேவன். அப்படித்தான் அங்க வந்து சேந்தான்.
Tuesday, December 20, 2011
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 9, 10
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு
பெரிய குழப்பத்தோடையும் கலக்கத்தோடையும் வந்தியத்தேவன் படுத்திருந்தான் எப்ப தூங்கினான்னு தெரியல. யாரோ தட்டி எழுப்பினாங்க. அது கந்தமாறன் தான். விடிஞ்சு ரொம்ப நேரம் ஆயிரிச்சின்னு சொன்னான் அவன். வந்தியத்தேவன் கிளம்பனும்னு சொன்னான், கந்தமாறன் விடல. ஏதேதோ பொய் காரணம் சொல்லிட்டு கிளம்பிட்டான். ரெண்டு பெரும் வெட்டிக் கதை பேசிட்டே வந்தாங்க. அப்போ கந்தமாறன் முந்தின நாள் நடந்த விஷயங்கள்ல இருந்து நெறைய பேசினான்: போர் வரும்னான், ஈழத்தில நக்கர சண்டைல தப்புகள் இருக்கறதா சொன்னான். கொள்ளிடக் கரைக்கு வந்து சேந்தாங்க ரெண்டு பேரும். அங்க படகில வந்தியத் தேவன ஏத்தி விட்டுட்டு அந்தக் கரைல அவனுக்கு குதிரை ஏற்பாடு செஞ்சு கொடுக்க வேலையாள் ஒருத்தனையும் அனுப்பினான் கந்தமாறன். படகு கிளம்பற நேரத்திலே படக நிறுத்த சொல்லி கூவிட்டே வந்து கடைசி நேரத்துல ஏறினான் ஒருத்தன், அது ஆழ்வார்க்கடியான்.
அத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்
அரசிளங் குமரிகள் குந்தவை நாச்சியார் & வானதி ரெண்டு பேரும் குடந்தை சோதிடர பாக்க வர்றாங்க. குந்தவை நாச்சியார் சோழ சக்கரவர்த்தியோட மகள். அவள இளைய பிராட்டி அப்படீன்னும் மக்கள் அன்பா கூப்பிடுவாங்க. இவளுக்கு நேர அடுத்த தம்பி அருண்மொழிவர்மன், அவன் மேல ரொம்ப பாசம் அக்காக்கு.
வானதி கொடும்பாளூர் குறுநில மன்னரோட மகள், அருண்மொழி மேல அதீத காதல் இவளுக்கு. ரொம்ப அன்பும் அடக்கமும் உள்ளவ. கொஞ்ச நாளா விளையாட்டும் பேச்சும் இல்லாம சோர்ந்து பொய் இருக்கறா. அதுக்கு காரணம் என்னான்னு தெரிஞ்சுக்க ரெண்டு பேரும் குடந்தை சோதிடர் முன்னால இருக்கறாங்க, சோதிடர் வானதியோட சாதகத்த பாக்கறாரு.
Friday, December 16, 2011
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 8
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 8 - பல்லக்கில் யார் ?
அத்தியாயம் 8 - பல்லக்கில் யார் ?
சுருக்கம்: இளவரசர்கள்ள மூத்தவரான மதுராந்தகத் தேவருக்குத் தான் பட்டம் கொடுக்கணும்னு பழுவேட்டரையர் சொன்னார். கூட்டத்தில இருந்தவங்க சிலர் மதுராந்தக தேவர் பத்தி கேள்வி பட்டத சொன்னாங்க. அதாவது இவர் பட்டம் வேண்டாம்னு சிவ பக்தியிலே கரைஞ்சு காணாம போயிட்டாரு-ன்னு. பழுவேட்டரையர் பல்லக்கில் இருக்கிற மதுராந்தக தேவர வெளியில வந்து தனக்கு ராஜ பதவி ஏதுக்கதுக்கு சம்மதமான்னு சொல்ல சொன்னாரு. அவரும் வந்து சொன்னாரு.
விளக்கம்:
"சோழ சாம்ராஜ்யம் ஆண்ட மன்னரான கண்டராதித்த தேவர் எதிபாராத விதமா இறக்கிற சூழ்நிலையில தான் மகன் மதுராந்த தேவர் ஒரு வயசு குழந்தைங்கிரதால தன் தம்பி அரிஞ்சய சோழருக்கு பட்டம் கட்டும் படி சொல்லிட்டு இறந்துட்டாரு. இந்த விஷயத்த சொன்னது கனடராதித்த தேவரோட மனைவி பட்டது ராணி தான். விதி வசமா அரிஞ்சய தேவர் ஒரு வருஷம் கூட நீடிக்கல, இறந்து போயிட்டாரு. இதனால அவர் பையன் இருபது வயசான சுந்தர சோழருக்கு நாங்க பட்டம் கட்டினோம்." அப்படீன்னு சொன்னாரு பழுவேட்டரையர்.
சம்புவரையர் சொன்னாரு "கண்டராதித்த தேவரோட பையன் மதுராந்தக தேவர் இப்போ பிராயத்திலே இருக்கார், அவர் பெரியவரா இருந்திருந்த அன்னிக்கே பட்டம் அவருக்கு போயிருக்கும். இப்போ அவருக்கு பட்டம் கொடுக்கறதே சரி" ன்னு சொன்னார்.
கூட்டத்திலே யாரோ கேட்டாங்க " இப்போ மதுராந்தக தேவர் எங்க இருக்கார் ? ராஜ்ஜியம் ஆள ஆசை இல்லாம சிவ பக்தியிலே மூள்கிட்டாருன்னு சொல்றாங்க. உண்மையிலேயே அவருக்கு ஆசை இருக்கா ? இருக்குன்னாலும் அது எங்களுக்கு எப்படி தெரியும் ?"
பழுவேட்டரையர் சொன்னாரு "தெரிஞ்சா ஆதரவு தருவீங்களா ? " எல்லாரும் சம்மதம் சொன்னாங்க. பழுவேட்டரையர் பல்லக்கு இருந்த திசைய பாத்து சொன்னாரு "இளவரசே பல்லக்கு திரைய விலக்கி எங்களுக்கு போஸ் கொடுங்க. உங்க சம்மதத்தை சொல்லுங்க"ன்னாரு. மதுராந்தக தேவர் வெளியே வந்தாரு. எல்லாரும் "பட்டத்து இளவரசர் வாழ்க ! மதுராந்தக சோழர் வாழ்க !!" அப்படி கோஷம் போட்டாங்க.
இதுக்கு மேல இங்க நிக்க முடியாதுன்னு வந்தியத் தேவன் அவன் இடத்துக்கு வந்து படுத்துக் கிட்டான், அப்படியே தூங்கி போனான் இவன்.
ஆத்திசூடி
ஆசான் ஔவையார்
1. ஆத்திசூடி
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.
உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.
ககர வருக்கம்
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.
சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.
தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.
நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.
பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.
மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.
வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.
நன்றி "தமிழ் தந்த சித்தர்கள்" வலை தளம்.....
1. ஆத்திசூடி
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.
உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.
ககர வருக்கம்
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.
சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.
தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.
நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.
பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.
மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.
வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.
நன்றி "தமிழ் தந்த சித்தர்கள்" வலை தளம்.....
Tuesday, December 13, 2011
Saturday, December 10, 2011
Friday, December 9, 2011
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 7
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்
அத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்
"இப்ப என்ன யோசிக்கறது. அதுதான் இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு இளவரசு பட்டம் கட்டியாச்சே" யாரோ கோட்டத்தில இருந்து சொன்னாங்க.
"உண்மை தான். இளவரசு பட்டம் கட்ட முன்னாடி நம்ம யார் கிட்டயாவது கேட்டாங்கள? நாம ஒவ்வொருத்தரும் பல தலைமுறையா சோழ ராஜ்யதோட மேன்மைக்காக பாடு பட்டுட்டு இருக்கோம், ஆனா நம்மள ஒரு வார்த்த கூட கேக்கல"
மழவரையர் சொல்ல ஆரமிச்சார்: "சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிஞ்சு கிடக்கு. அதோட வேகத்துக்கு இதுக்குள்ள வடக்க வேங்கியும், கலிங்கமும் தேக்க ஈழமும் இதுக்குள்ள பணிஞ்சு இருக்கணும். ஆனா இல்ல. அதுக்கு காரணம் ராஜாவோட மூத்த பையன் வட திசை மாதண்ட நாயகர் ஆதித்த கரிகாலர். தென் திசைல ஈழம் பணியாததுக்கு காரணம் படை தலைவரான தம்பி அருண்மொழி வர்மர். "
பழுவேட்டரையர் பதில் சொன்னாரு: "சரி தான், இது வரை சேனாதிபதி வைக்கற வழக்கம் வேற, இப்ப நடக்கிறது வேற. வடக்க அண்ணன் தளபதி, தெக்க தம்பி தளபதி. வடக்க என்ன நடக்கு ? அண்ணன் வெங்கி மேலயோ, கலிங்கம் மேலயோ படை எடுக்கல. ஆனா தங்கத்தால மாளிகை கட்டிட்டு இருக்கார். வைர வைடூரியங்கள அதில பதிச்சுகிட்டு இருக்கார், தலை நகரத்துல இருக்கற பொக்கிஷ சாலைக்கு ஒரு செப்பு காசு கூட அனுப்பல.
பழுவேட்டரையர் பதில் சொன்னாரு: "சரி தான், இது வரை சேனாதிபதி வைக்கற வழக்கம் வேற, இப்ப நடக்கிறது வேற. வடக்க அண்ணன் தளபதி, தெக்க தம்பி தளபதி. வடக்க என்ன நடக்கு ? அண்ணன் வெங்கி மேலயோ, கலிங்கம் மேலயோ படை எடுக்கல. ஆனா தங்கத்தால மாளிகை கட்டிட்டு இருக்கார். வைர வைடூரியங்கள அதில பதிச்சுகிட்டு இருக்கார், தலை நகரத்துல இருக்கற பொக்கிஷ சாலைக்கு ஒரு செப்பு காசு கூட அனுப்பல.
தம்பி பண்ணறது ரொம்ப வித்தியாசமா இருக்கு. நாம கடைப் பிடிக்கறது என்ன, சண்ட போட போற இடத்திலேயே வீரர்களுக்கு சாப்பாடு சம்பாதிச்சுகுவோம். இவரு என்னடான்னா சோழ நாட்டில இருந்து சாப்பாடு சிலோனுக்கு போகணும்னு சொல்லறார். நானும் பத்து தடவ கப்பல்ல சாப்பாடு அனுப்பிட்டேன். அதுக்கு அவரு சொல்லற காரணம் என்னான்னா ஈழ ராஜா கூடத் தான் சண்டையாம், அங்க இருக்கற மக்கள் கூட இல்லையாம். மக்கள் கிட்ட இருந்து சாப்பாடு எடுத்தா மக்கள் நம்மள வெறுத்துருவான்கலாம். அரசர ஜெயிச்ச பிறகு மக்கள் விருப்பதோட ஆட்சி நடத்தணுமாம். அதுவர இங்க இருந்து தான் சாப்பாடும், பணமும் அனுப்பனுமாம்.
இப்படி ரெண்டு பெரும் செய்யற காரியத்தால தஞ்சைலே பணமும் தானியமும் கரைஞ்சு போகுது. அத சமாளிக்க அதிக வரி போட வேண்டி இருக்கு. இதுக்கு தான் என்னைய இந்த பதவியில வச்சிருக்காங்க. நாட்டு நன்மைய நெனச்சு தான் இந்த பதவியில இருக்க வேண்டி இருக்கு இல்லன்ன எப்பவோ பதவிய விட்டுருப்பேன்"
உடனே கூட்டதில இருந்து " அப்படி செஞ்சிராதீங்க. எங்கள கை விட்டுறாதீங்க. இந்த ராஜ்யத கை விட்டுறாதீங்க. இது சின்னா பின்னமாயடும்" ன்னு சொன்னாரு சம்புவரையர்.
"அப்படீன்னா என்ன செய்யறதுன்னு நீங்க தாங்க சொல்லணும். ரொம்ப கேவலமா ஆன இந்த அரசுக்கு என்ன பரிகாரம் செய்யனும்னு நீங்க தான் சொல்லணும்." அப்படீன்னு சொல்லி முடிச்சாரு பழுவேட்டரையர்.
வாசகர்களுக்கு ஒரு விளக்கம்: குறுகிய பதிப்புன்னு சொல்லிட்டு பெரிசா எழுதறேன்னேன்னு நெனைக்க வேண்டாம். அத்தியாயம் 6 ல இருந்து 8 வர உள்ளது தான் இந்த நாவலோட ஆதாரம். இது தான் இப்ப இருந்து கதையோட கடைசி வர நடக்கற பல நிகழ்சிகளுக்கு காரனமாகுது. இத சொல்லும்போது கல்கி பத்தி சொல்லணும். அவர் காலத்துக்கு அப்பாற்பட்டு சூப்பரான நாவல எழுதிட்டு போயிருக்கார். யாரையும் நல்லவன், கெட்டவன் சொல்லிருக்க மாட்டாரு. நிகழ்சிகள் நடக்கறத அப்படியே கொடுத்திட்டு மத்த எல்லாத்தையும் நாமளா தீர்மானிக்க விட்டுடுவாரு. சந்தர்ப்பம், சூழ்நிலை, தான் இருக்கும் இடம், தான் கேள்விப்படும் தகவல் எல்லாம் தான் ஒரு மனிதனை முன்னோக்கி கொண்டு போகுது. வல்லவரையன் வந்தியதேவன் வழியா நாம இத எல்லாத்தையும் பாக்கிற சூழ்நிலைய கல்கி கொண்டு வருவாரு. நல்ல கதை அது நடக்கிற, இடம் (லொக்கேஷன்), காலம் (டயம்), மனிதர்களோட வித்தியாமான காரக்டர் எல்லாத்தையும் கணக்கில எடுக்கும், வித்தியாசங்கள கரக்டா காட்டும். கல்கியோட இந்த கதை அப்படித் தான். இப்ப வர்ற நிகழ்சிகள பாத்துட்டு பழுவேட்டரையர் கெட்டவர், வில்லன்னு நாம எல்லாருமே நெனைப்போம் (அது தப்பில்லே) ஆனா கல்கி பளுவேட்டரயர்களோட புகழ, அவங்க எப்படி இந்த இடத்துக்கு (ராஜாவுக்கு அடுத்த இடத்துக்கு) வந்தாங்கன்னு பின்னால சொல்லுவாரு. பழுவேட்டரையர் கூட தான் ராஜா ஆகணும்னு பேசல, யாருக்கு பட்டம் கொடுக்கணும்னு தான் சொல்லறாரு. அவர பாத்து நாம கேக்கனும்னு நெனைக்கறது எல்லாம் 'நீங்க நல்லவரா, கெட்டவரா?'
Monday, December 5, 2011
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 6
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்
அத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்
குரவைக் கூத்துக்கு அப்பறம் வந்தவங்களுக்கு பெரிய விருந்து நடந்துச்சி. கந்தமாறன் வந்தவங்க யாரு யாருன்னு வந்தியத் தேவனுக்கு சொல்லிட்டே வந்தான். பளுவேட்டரைரையும், சம்புவரையரையும் தவிர மழபாடி தென்னவன் மழவரையர், குன்றத்தூர் பேரு நிலக் கிழார், மும் முடிப் பல்லவராயர், தான் தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவ சேனாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பேரு நில வேளார்-ன்னு பெரிய சிற்றரசர் கூட்டமே வந்திருந்தது. அரசர்-ங்கறது மாறி அரயர்ந்னு ஆயிட்டது, அதனால எல்லா பேருலயும் அரயர்ங்கரத சேத்துகிட்டாங்க. இது அவங்க படிச்சு வாங்கின பட்டமில்ல, பல பொர்கள்-ள பங்கெடுத்துகிட்டு சம்பாதிச்சது. இதுலே பலரு சோழ சாம்ராஜ்யத்திலே நல்ல பொறுப்பிலே இருந்தாங்க.
இவ்வளவு பேரு ஒரே நேரத்துல ஒரே இடத்துல கூடறது லேசா நடக்கற காரியமில்லே. இது தெளிவா தெரிஞ்சுது வந்தியத் தேவனுக்கு. இவங்க சங்கத்த ஏன் கூட்டி இருக்காங்கன்னு நெனைச்சான் வந்தியத் தேவன், இவன் வந்தத பலரு விரும்பலங்கறதும் சேந்துகிச்சு. விருந்து மேல பெரிசா ஈடுபாடு இல்ல அவனுக்கு.
"ரொம்ப களச்சு போயிருப்பே"-ன்னு அவனுக்கு தூங்கறதுக்கு இடத்த காமிச்சான் கந்தமாறன். மாளிகைல மேல் மாடத்தில இருந்த திறந்த மண்டபம் அது. "மத்த விருந்தாளிங்கள கவனிச்சுட்டு நானும் உன் பக்கம் வந்து படுத்துகிறேன்"ன்னு சொல்லிட்டு போய்ட்டான் கந்தமாறன்.
வந்தியத் தேவன் படுத்த உடனே தூங்கிட்டான். தூக்கத்திலே பயங்கரமான கனவெல்லாம் வந்தது, திடுக்குன்னு முழிச்சுகிட்டான். நேரா பாத்தா மாளிகயோட எதிர் பக்கம் சுத்து சுவர் மேல ஆழ்வார்கடியானோட தல தெரிஞ்சுது. துள்ளி எந்திச்சான், வாள எடுத்து இடுப்பில செருகினான், விறு விறுன்னு ஆழ்வார்கடியான் தல தெரிஞ்ச இடம் பாத்து நடக்க ஆரம்பிச்சான். மாளிகை சுவர், தூண்கள் எல்லாம் கடந்து நடக்க வேண்டி இருந்தது, அப்ப ஒரு இடத்துல நடக்கும் போது ஏதோ பேச்சு சத்தம் கேட்டது, அதுல தான் பேரு வேற கேட்டுச்சி இவனுக்கு. தூண்கள் பின்னாடி மறைவா நின்னுகிட்டு மெல்ல எட்டி பாத்தான்.
கீழ குறுகலான மறைவான முற்றம் ஒண்ணுல கொஞ்சம் மறைவான இடத்துல சுமார் பத்து பன்னெண்டு பேரு இருந்து பேசிட்டு இருந்தாங்க அதுல கந்தமாறனும் இருந்தான். பக்கத்திலே பழுவேட்டரையர் கூட வந்த மூடுபல்லக்கு இருந்தது. ஆழ்வார்கடியான் பெரிய ஆளு தான். அவன் பாத்துட்டு இருந்த இடத்த கீழ இருந்து யாரும் பாத்திட முடியாது ஆனா இவனுக்கு கீழ நடக்கிறது தெரியும், நல்லா கேக்கும்.
"...அந்த சிநேகிதன் எங்க படுத்திருக்கான்? நம் பேச்சு அவன் காதில விழுந்திடக் கூடாது. அவன் வட திசை மாதண்ட நாயகருக்கு கீழே வேலை செய்யற ஆளுங்கறது நினைவில இருக்கட்டும். நம் திட்டம் நெறைவேருற காலம் வரை அது ரகசியமா இருக்கணும். அவனுக்கு இது தெரிஞ்சதுன்னா அவன வெளிய விடக் கூடாது, வேலை முடிச்சிட வேண்டியது தான்"
வந்தியத் தேவனுக்கு திக்-ன்னு இருந்துச்சி, வட திசை மாதண்ட நாயகர்ன்னா இளவரசர் ஆதித்த கரிகாலர். அவருக்கு தெரியாம என்ன திட்டம் இதுன்னு நெனைச்சான். கந்தமாறன் வந்தியத் தேவனுக்கு பரிஞ்சு பேசினான்.பழுவேட்டரையர் சொன்னார்: "இவ்வளவு நம்பிக்கை உனக்கு இருந்தா சந்தோஷம். எங்களுக்கெல்லாம் அவனை தெரியாது, அதனால அப்படி சொன்னேன். நாம பேசறது ஒரு சாம்ராஜ்யத்தின் உரிமை பத்தின விஷயம் பாரு. கொஞ்சம் வெளிய தெரிஞ்சா கூட பல விபரீதங்கள் நடக்கலாம். இது எல்லாருக்கும் கவனத்திலே இருக்கட்டும்"
உச்சியில சுர்ருன்னு இருந்தது வந்தியத் தேவனுக்கு. முழு விசயத்தையும் கேட்டுர்ரதுன்னு முடிவு பண்ணினான்.
(தொடரும்)
Thursday, October 20, 2011
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 3, 4, 5
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 3 - விண்ணகரக் கோட்டை
வல்லவரையன் வந்தியத் தேவனோட குதிரைய பளுவேட்டரைரோட ஆளுங்க வம்பு பிடிச்சி விரட்டி விட்டுடாங்க. வந்தியதேவனுக்கு ரொம்ப கோவம் வந்துச்சு, ஆனா சண்ட பிடிக்க இது நேரம் இல்லன்னு அமைதியா இருந்தான். குதிரைய தேடி பிடிச்சு வீதிக்கு கூட்டிட்டு வந்தான். அங்க ஆழ்வார்க்கடியான் நின்னுகிட்டு இருந்தான், வந்தியத் தேவன்கிட்ட கேட்டான்:"தம்பி நீ இன்னிக்கி கடம்பூர் மாளிகைக்கு போனீனா என்னையும் கூட்டிட்டு போறீயா? எனக்கு அங்க ஒரு வேலை இருக்கு."
வந்தியத்தேவன் சொன்னான்: "நான் அங்க தான் போறேன்னு உனக்கு எப்படி தெரியும், அங்க அப்படி என்ன வேலை?"
"தம்பி இதிலே ஆச்சர்யம் என்ன இருக்கு, எல்லா சிற்ரசர்களும், பழுவேட்டரையரும் அங்க தான் போறாங்க. அங்கே வர்ரவங்களுகேல்லாம் விருந்தும் அப்பறம் களியாட்டம், சாமியாட்டம், குரவை கூத்து எல்லாம் நடக்கும். இதெல்லாம் பாக்கனும்னு ஆசை எனக்கு"
நம்ம ஹீரோக்கு இது பிடிக்கலை, முன்னே பின்னே தெரியாத ஆளை எப்படி கூட்டிட்டு போறதுன்னு. ஆழ்வார்கடியானை ஒரு வழியா கழட்டி விட்டுட்டு அவன் கிளம்பினான். அதோட வந்தியதேவனுக்கு முறையான அழைப்பு இல்லே, அவன் பிரண்டு கந்தமாறன வச்சு அங்க தங்கிகலாம்னு நெனைசிருந்தான், இந்த கூட்டத்திலே அது நடக்குமான்னு தெரியல.
குதிரைலே கடம்பூர் மாளிகைக்கு போன வந்தியதேவன வாசல் காவக்காரங்க நிறுத்திடாங்க. இவ்வளவு காவல அவன் எதிர் பாக்கல. இவன் குதிரைய வம்பு பிடிச்ச ஆளுங்க தான் நின்னுட்டு இருந்தாங்க. ஏற்கனவே இருந்த கோவம் அதிகமாச்சு. வாக்குவாதம் வந்துச்சு, கைகலப்பா மாறிச்சு. இத சாக்கா வச்சு அவங்களுக்கு கொடுக்க வேண்டியத(!) கொடுத்தான் வந்தியத்தேவன். இத சமாளிக்க முடியாம இன்னும் நிறைய ஆளுங்க இவன் கிட்ட சண்ட பிடிக்க வந்தாங்க. கோட்டை மேலிருந்து ஒரு இடிமுழக்க குரல், "கந்தமாறா, கீழ என்ன கலவரம்னு பாரு" ன்னு சொன்னது. கந்தமாறன் இறங்கி வந்தான். சண்டை அப்படியே நின்னது, கந்தமாறனுக்கு வந்தியதேவன பாத்ததிலே ரொம்ப சந்தோஷம். காவல் காரன்கள சத்தம் போட்டுட்டு இவன கூட்டிகிட்டு அவன் அப்பா சம்புவரையர் கிட்ட அறிமுக படுத்தினான், அவருக்கு சந்தோஷம் இல்ல: "இவன் தான் கலவரம் செஞ்சவனா"ன்னு கேட்டார். தான் பையன் கிட்ட பிரயாண களைப்பு போக வந்தியதேவனுக்கு சீக்கிரம் சாப்பாடு கொடுத்து நல்ல ஒதுங்கின இடமா கொடுத்து தூங்க ஏற்பாடு பண்ண சொன்னார். கந்தமாறன் பளுவேட்டரயருக்கு வந்தியதேவன அறிமுகம் செஞ்சு வச்சான், அவருக்கும் ஒன்னும் சந்தோஷமோ வியப்போ இல்ல, வேண்டா வெறுப்பா தான் பேசினார். கந்தமாறன் அவன் அம்மா கிட்ட இவன அறிமுகபடுத்தினான்.
அத்தியாயம் 5 - குரவை கூத்து
அம்மா கூப்பிட்டான்னு கந்தமாறன் போயிட்டு வந்தான். இவன் நின்ன இடத்திலே ஒரு பொம்பளைங்க கும்பலே இருந்துச்சு. எதையோ பேசி கொல்லுன்னு சிரிச்சிட்டு இருந்தாங்க. வந்தியதேவனுக்கு இவன தான் கிண்டல் பண்றாங்கன்னு தோணிச்சு. கந்தமாரன்கிட்ட கேட்டான்: "ஒன்ன பத்தி சிரிக்கல , இந்த பழுவேட்டரையர் இந்த வயசில ஒரு சின்ன பெண்ணை கலியாணம் செய்திருக்கிறார், அவளை கலியாணம் முடிஞ்சு ஒரு இரண்டு வருஷம் தான் இருக்கும், ஆனா எல்லா இடத்துக்கும் மூடு பல்லகில் வச்சு அவளை கூட்டிட்டு போறார். அது பத்தி தான் இந்த சிரிப்பு. அந்த பொண்ண யாரும் பாத்ததிலைன்னு கேள்வி" அப்போ வாத்தியங்கள் சத்தம் கேட்டுச்சு. அது குரவை கூத்து தொடங்க போறதுக்கு அறிகுறின்னு சொன்னான் கந்தமாறன். வந்தியத்தேவன் கூத்து பாக்க ஆசைபட்டான். கூத்து, ஆட்டம் பாத்தான் அதில் முருகன் சூரபத்மன சம்ஹாரம் பண்றத ஆடினாங்க. முடிவில முருகனா ஆடினவனுக்கு அருள் வந்திச்சு:"என் அம்மா சண்டிகேஸ்வரிக்கு நீங்கள் பூசை போடல, அதனால அவ பலி கேக்கறா...ஆயிரம் கால அரச ரத்தம் பலியா கேக்கறா"இன்னான். கூத்து பத்தவங்கல்லாம் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க. எங்கயோ நரி ஊளையிடற சதாம் கேட்டுச்சு. வந்தியத்தேவன் அந்த பக்கம் பாத்தான், அங்க ஆழ்வார்கடியான் தலைய கோட்டை சுவர் மேல பாத்தான், கண் மூடி திறந்து பாத்தா அங்க ஒன்னும் இல்ல, என் இப்படி தோணிச்சுன்னு நெனைச்சு வெக்கப் பட்டுகிட்டான்.
(தொடரும்)
Monday, October 3, 2011
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 1, 2
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 1 - ஆடித் திருநாள்
சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி நடக்கற கதை இது. வந்தியத் தேவன் தான் நம்ம ஹீரோ. குதிரைய்ல ஏறி நம்ம ஆளு சோழ நாட்டுக்குள்ள வர்றான், அவன் கிட்டே ரெண்டு ஓலை இருந்தது - ஒண்ணு சோழ மகாராஜாவுக்கு இன்னொன்னு குந்தவை பிராடியாருக்கு (நாட்டு இளவரசி, கரிகாலனோட அக்கா) . கொடுத்தது, வந்தியதேவனுடைய எஜமான், நாட்டு இளவரசன் ஆதித்த கரிகாலன். ஓலை இருக்கற விஷயத்த பத்தி யாரு கிட்டயும் மூச்சு விட கூடாதுனும் சொல்லி இருந்தார். ராத்திரிக்கு கடம்பூர் சம்புவரையர் (நண்பன் கந்தமாறனோட அப்பா, சோழ மகாராஜவோட ஆதிக்கத்துக்குட்பட்ட குறுநில மன்னர்) மாளிகைலே தங்கிட்டு காலைலே பிரயாணத்தை தொடரலாம்னு நெனைச்சான்.
அத்தியாயம் 2 - ஆழ்வார்க் கடியான் நம்பி
அப்படிப் போயடீருந்த வந்தியத் தேவன் மூணு பேரு வாக்குவாதம் பண்றத பாத்தான். அதிலே ஒருத்தன் முன்குடுமி வச்ச வீர வைஷ்ணவன் - ஆழ்வார்கடியான் நம்பி. சிவன் பெருசா விஷ்ணு பெருசான்னு தான் வாக்குவாதம். வந்திய தேவன் உள்ளே புகுந்து தடுத்து கூட்டத்த களச்சு விட்டான். அப்ப முரசு சத்தம் கேட்டுச்சு. "பெரிய பழுவேட்டரையர் வர்றார்"ன்னு கட்டியம் கூறுதல் கேட்டுச்சி. கைலே வேல் தாங்கி வீரர் கூடம் வந்துச்சு, அதுக்கு பின்னாடி பெரிய யானை மேல ஆஜானுபாகுவா பெரியவர் ஒருத்தர் வந்திட்டு இருந்தார். அவர் தான் பெரிய பழுவேட்டரையர் - சோழ நாட்டுக்கு பைனான்சியர், டாக்ஸ் கலக்ட் பண்ணறவர், எல்லா பொன் பொருளுக்கும், விளையிற பயிருக்கும் இன்-சார்ஜ். சோழ ராஜாக்கு பாடி-கார்டும் இவர் தான். சோழ ராஜா இவர் மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தார். அதனாலே பளுவேட்டரயருக்கு தனி கொடி, சின்னம் வைக்க அனுமதி கொடுத்திருந்தார். இவருக்கு பின்னாடி மூடின பல்லக்கு போயிட்டு இருந்தது. கொஞ்சம் தள்ளி மறைவா இருந்து ஆழ்வார்கடியான் நம்பி இந்த பல்லக்கையே உத்து பாத்திட்டு இருக்கறத நம்ம ஹீரோ கவனிச்சான்.
(தொடரும்)
Subscribe to:
Posts (Atom)






