Person who made many lives change better. பலரது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியவர்.மேலும்...
Memories
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Monday, April 14, 2014
இது கூட்டணி காமடி !
இந்த வீடியோக்கான டியூப் - விளக்கம் : நாக்கை துரத்தி, கையை மடக்கி, நிருபர்களை விரட்டி....
கூட்டணி அறிவிப்புக் கூட்டத்தில் விஜயகாந்தின் ஒன் மேன் ஷோ!
கூட்டணி அறிவிப்புக் கூட்டத்தில் விஜயகாந்தின் ஒன் மேன் ஷோ!
யாரோ வழி மறிக்கிறார் என நாக்கை துருத்தி திட்டுகிறார், 'நீங்க ப்ளேனை தேடுங்க, நாங்க எங்க வேலைய பாக்கறோம்'ன்னு பஞ்ச் வசனம் பேசறார். கேப்டன் அரசியல்லயும் ஹீரோவாகவே வாழுராறு !
Sunday, September 30, 2012
கதிரும் வீச்சும் தொடர்கிறது...
கதிரும் வீச்சும் என்கிற தலைப்பில் அறிவியல் அறிஞர்களான மேரி க்யுரி ஆய்வுகள் பற்றி பார்த்தோம். அவருடைய ஆய்வு கதிர் வீச்சின் மோசமான மறு பக்கத்துக்கு சான்றாக இருந்தது. வாரக்கணக்கில் ரேடியத்தை பிரிக்க நடத்திய ஆய்வு அவருடைய கைகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது: தோல் கருகி காய்ந்து உரிய ஆரம்பித்தது. உள்ளிருந்து தசைகள் எரித்து கருகியது போலிருந்தது. கதிர் வீச்சின் காரணமாக அவருடைய எலும்பு மஜ்ஜை எரிந்து தீராத ரத்த சோகை வேறு வந்திருந்தது. எலும்பு மஜ்ஜை தான் ரத்தம் சுரக்க காரணம் என்று உங்களுக்க்து தெரிந்திருக்கும்.
ஆராய்சிகள் பல செய்து பல வருடங்களுக்கு பின்னால் தான் இவற்றுக்கான காரணங்கள் புரிய ஆரம்பித்தது. டி.என்.எ என்கிற செல்லின் மூலக்கூறினை இந்த கதிர்வீச்சு தாக்குகின்றது என்று புரிய ஆரம்பித்தது அறிஞர்களுக்கு. குழந்தை அப்பா, அம்மாவின் அம்சங்களையும் தாத்தா, பாட்டி போன்ற பரம்பரை குணாதிசயங்களுடன் பிறக்கக் காரணம் தான் இந்த டி.என்.எ. ஒரு தலை முறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு தகவல்களை எடுத்து செல்லக்கூடியது. இந்த டி.என்.எ கதிர்வீச்சால் பாதிக்கப் பட்டு கான்சராகிறது.
கான்சரை உண்டாக்கும் எக்ஸ் கதிர்கள் கான்சரை அழிக்கவும் உதவுகிறது.1896 ஆம் ஆண்டு (எக்ஸ் கதிர்கள் கண்டு பிடிக்கப் பட்ட மறு ஆண்டு) எமில் கிரப் என்கிற மருத்துவக் கல்லூரி மாணவர் ரோஸ் லீ என்ற மருத்துவர்கள் கை விடப் பட்ட மூதாட்டிக்கு இருந்த மார்பக புற்று நோயை எக்ஸ் கதிர்கள் கொண்டு தாக்கினார்.தொடர்ந்து சுமார் 18 நாட்கள் இந்த வலி மிகுந்த மருத்துவம் செய்தார். லீ நிலையில் நல்ல முன்னேற்றம் வந்தது, சிகிச்சை முடிந்து பல மாதங்கள் கழித்து லீ மருத்துவரை பார்க்க திரும்ப வந்தார். கிரப்புக்கு எக்ஸ் கதிர்கள் கொண்டு மருத்துவம் செய்வதில் நம்பிக்கை வந்தது. ஆனாலும் ஒன்று புலப்பட்டது: ஆரம்ப நிலையில் கான்சரை குணப்படுத்த எக்ஸ் கதிர் பயன்படும் ஆனால் முதிர்ந்த கான்சருக்கு இது தீர்வாகாது. இந்த கதிர்வீச்சு மருத்துவம் இன்னும் ரேடியோதேரப்பி என்ற பெயரில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
மூலம்: சித்தார்த் முக்கர்ஜி.

Sunday, September 9, 2012
ஒளியில் மிளிரும் தூசித் துகள் போல...
வாயேஜர் என்கிற விண்கலம் சுமார் 35 வருடங்களுக்கு முன் விண்ணில் செலுத்தப் பட்டது. இதன் முக்கிய குறிக்கோள் சூரிய குடும்பத்தை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது. இந்த விண்கலம் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்களான வியாழன், சனி கிரகங்களை பற்றி ஆராய்ச்சி செய்து புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது.
இந்த விண்கலம் பூமியில் இருந்து பல கோடிக்கணக்கான மைல்கள் தாண்டி இன்னும் சென்று கொண்டே இருக்கிறது. சூரியனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் எல்லையை தொட்டு விட்டதாக அறிவியல் அறிகர்கள் சொல்கிறார்கள்.
அவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது அது திரும்பி பூமியை கடைசீயாக எடுத்த போட்டோ கீழே.
அம்புக்குறியிட்டு காட்டப் பட்டுள்ள இடத்தில் ஒளியில் தெரியும் பொட்டு தான் பூமி. கார்ல் சகான் என்கிற அறிஞர் சொல்கிறார்: "திரும்பவும் பாருங்கள் அந்த பொட்டுத் துகளை, அங்கு தான் இருக்கிறது...வீடு. அது தான் நாம். இங்கு தான் நீங்கள் அன்பு செலுத்துகிற ஒவ்வொருவரும், உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொருவரும், நீங்கள் கேள்விப் பட்ட எல்லாரும், நமக்குத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் - மகான்கள், அறிஞர்கள், ஹீரோக்கள், வீரர், கோழை, அரசன், சாமான்யன் - எல்லாரும் அந்த ஒளியில் மிளிரும் தூசித் துகளில் வாழ்ந்திருக்கிறார்கள், வாழுகிறார்கள்..."
குறிப்பு: வாயேஜர் விண்கலம் மீது சூரியனின் ஒளி பட்டு அந்த பிரதிபலிப்பின் கோடுகள் தெரிகின்றன. இதே போன்ற பிரதிபலிப்பினால் பூமியும் தெரிகிறது. இந்த இரு பிரதிபலிப்புகளும் ஒரே கோட்டில் வந்தது தற்செயல் தான். இந்த பிரதிபலிப்பில் தெரியும் பூமி அறிஞருக்கு தூசித் துகள் போல தோன்றியிருக்கிறது. "வெளிர் நீல துணுக்கு" என்கிற இந்த புகைப்படம் உலகப் புகழ் பெற்றது.
Sunday, February 5, 2012
சட்டசபையில் இருந்து...
விஜயகாந்துக்கு பேச சரியா வாய்ப்புத் தரல்லன்னு அவருக்கு கோவம் வந்துது. ஆளும் கட்சி ஆளுங்க இவர உக்கார சொல்லி கத்தினாங்க. ஒரு கட்டத்தில இவருக்கு ரொம்ப கோபம் வந்து எழுந்து கத்திடாரு. சட்ட சபையில முரட்டுத் தனமா நடந்துக்கிட்டாருன்னு ஆளுங் கட்சி சொன்னது. கேப்டனுக்கு எப்பவுமே கோவம் கொஞ்சம் அதிகம் தான். சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலே வேட்பாளர அடிசிட்டாருன்னு பேச்சு இருந்தது.
போட்டோலே தே.மு.தி.க அவைத் தலைவர் (விஜயகாந்துக்கு இடது புறம் இருக்கவரு) அதிர்ச்சியா இருக்கறதையும் ஸ்டாலின் புன்னகையும் நிறைய விஷயங்கள சொல்லாம சொல்லுது. இவங்களுக்குள்ள இருந்த பகை இப்ப வெளிய வந்திட்டதா எல்லாரும் சொல்றாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க ?
Subscribe to:
Posts (Atom)