Person who made many lives change better. பலரது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியவர்.மேலும்...
Memories
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Monday, April 14, 2014
இது கூட்டணி காமடி !
இந்த வீடியோக்கான டியூப் - விளக்கம் : நாக்கை துரத்தி, கையை மடக்கி, நிருபர்களை விரட்டி....
கூட்டணி அறிவிப்புக் கூட்டத்தில் விஜயகாந்தின் ஒன் மேன் ஷோ!
கூட்டணி அறிவிப்புக் கூட்டத்தில் விஜயகாந்தின் ஒன் மேன் ஷோ!
யாரோ வழி மறிக்கிறார் என நாக்கை துருத்தி திட்டுகிறார், 'நீங்க ப்ளேனை தேடுங்க, நாங்க எங்க வேலைய பாக்கறோம்'ன்னு பஞ்ச் வசனம் பேசறார். கேப்டன் அரசியல்லயும் ஹீரோவாகவே வாழுராறு !
Sunday, December 29, 2013
பீர்பால்
பீர்பால்கிட்ட ஒரு பண்டிதர் கேட்டார்: "கஷ்டமான 1 கேள்வி கேட்கட்டுமா, இல்ல 100 சிம்பிள் கேள்விகள் கேட்கட்டுமா?"
சக்கரவர்த்தி அக்பர் உடனே ஒரு வேலையா கிளம்ப வேண்டி இருந்தது. பீர்பால் சொன்னார்:"கஷ்டமான 1 கேள்வி கேளுங்க, பண்டிதரே"
"முட்டைல இருந்து கோழி வந்ததா இல்ல கோழி-ல இருந்து முட்டை வந்தாதா?"
"சந்தேகமே இல்ல, கோழி தான் முதல்ல வந்தது. "
"எப்படி?"
"இது இரண்டாவது கேள்வி, பண்டிதரே!" அப்படி முடிச்சார் பீர்பால்.
ஜென் கதைகள் - கோப்பை
ரொம்ப படித்த மேதை ஒரு ஜென் துறவி கிட்ட போனாரு : "குருவே, நான் படிக்காதது ஏதாவது இருந்தா அதை எனக்கு கத்துக் கொடுங்க" அப்படீன்னாரு. அதை கவனிக்காத துறவி அவரோட கோப்பைல தேநீர் ஊத்திட்டு இருந்தார். கோப்பை நிரம்பின பிறகும் இவர் ஊத்திரத்தை விடல. கோப்பை நிரம்பி வழிஞ்சது , இவரு நிறுத்தவே இல்ல. பண்டிதர் கேட்டாரு "குருவே, கோப்பை நிறைந்து விட்டது. இன்னும் இதில ஊத்த முடியாது"-ன்னு சொன்னாரு. குரு ஒரு ஸ்மைலோட சொன்னாரு:
"நிறைந்த கோப்பைல தேநீர் ஊத்த முடியாது; நிறைந்து இருப்பதாக எண்ணப் படும் மனது மேலும் அறிவை எடுத்துக்க முடியாது"
(இந்த கதையை நினைவு படுத்தும் வசனம் "avatar" படத்தில கூட வரும்.)
ஜென் கதைகள் - சொர்க்கம்
மிகப் பெரிய தளபதி ஒருத்தர் ஒரு ஜென் துறவி கிட்ட கேட்டார்: "குருவே!, சொர்க்கம் நரகம் எங்க இருக்கு?" அப்படீன்னு கேட்டார். குரு உடனே "மூடனே, இது கூட தெரியாதா?" அப்படீன்னு டக்குனு கேட்டார். எதிர் பாராத தளபதி கண் இமைக்கரதுக்குள்ள வாளை உருவி துறவிய வெட்டறதுக்கு ஓங்கினான். "இதோ நரகத்தின் கதவுகள் திறந்து விட்டன"-ன்னு சொன்னார். தவறை உணர்ந்த தளபதி குருவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். குரு சொன்னார்:"சொர்கத்தின் வாசல்கள் திறக்கின்றன"
சொர்க்கம் நரகம் ரெண்டுமே மனசில தான் இருக்கு.
Saturday, December 1, 2012
Sunday, November 18, 2012
Monday, October 1, 2012
"என்ன மாமா! சாத்தூர் ரோட்ல போறீங்க': "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண்
விருதுநகர்:"மின் தடையால, சமையலுக்கு மசாலா அரைக்க முடியல; குழந்தைங்க தூக்கமே போச்சு; "டேங்க்' ல, தண்ணீர் இல்ல' என, பெண்களின் புலம்பல்களுக்கு மத்தியில், ஒரு பெண் சந்தித்த "தர்மசங்கட' பிரச்னை இது. கனநேரத்தில், இப்படியும் கூட பிரச்னைஏற்படும் என்பது மற்ற இல்லத்தரசிகளுக்கு, இது ஒரு பாடம்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் "பங்க்' ல், நேற்று முன்தினம், இரவு 7 மணிக்கு, வாடிக்கையாளர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். "எப்போது போகும், எப்ப வரும்' என, யாரும் அறியாதமின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரம்.அப்போது, மனைவியுடன் இரு
நபர்கள், "பைக்கில்' வந்தனர்;இருவருமே அணிந்திருந்தது, ஒரேமாதிரியான ஹெல்மெட். வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிய பின், அதில் ஒரு ஜோடி புறப்பட்டுச் சென்றது.
சாத்தூர் ரோட்டில் நீண்ட தூரம் சென்ற பின், பின்னால் இருந்த பெண்,
""என்ன மாமா! நாம் தாதம்பட்டிபோகணும்; நீங்க சாத்தூர் ரோட்ல போறீங்க,'' என்றார். வாகனத்தை
ஓட்டிய நபருக்கு தூக்கி வாரிப்போட்டது. உடனடியாக நிறுத்தி,திரும்பிப் பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி.பின்னால் இருந்தது அவர் மனைவி இல்லை. இருட்டில், அந்தப் பெண்,"கணவர்' என, நினைத்து, தன்னுடன் வந்ததை உணர்ந்தார். மன்னிப்புக் கோரி, மீண்டும் பெட்ரோல் "பங்க்' அழைத்து வந்தார். அங்கு, கணவரைக் காணாமல் மனைவியும்; மனைவியைக் காணாமல் கணவரும் தவியாய் தவித்துக் கொண்டிருந்தனர். "மாறி பயணப்பட்டு' திரும்பிய இருவரையும் பார்த்தவுடன், நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்;பிரிந்தவர் கூடினால் பேசவும்வேண்டுமோ!"மின்தடையால் குடும்பத்திலும் குழப்பம் ஏற்படும் போலிருக்கே?' என, புலம்பினர் அங்கிருந்தவர்கள்.
வாசகர் கருத்து:
kochadaiyan - ,இந்தியா
மூலம்: "என்ன மாமா! சாத்தூர் ரோட்ல போறீங்க': "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண்
-- நன்றி: தினமலர்
Sunday, September 30, 2012
Thursday, February 23, 2012
Tuesday, February 7, 2012
Sunday, January 22, 2012
Tuesday, January 3, 2012
Monday, November 14, 2011
Subscribe to:
Posts (Atom)









