Memories

Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Sunday, April 27, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 2 - அத்தியாயம் 31

பாகம் 2  - புது வெள்ளம்

அத்தியாயம் 31 - திருடர்! திருடர் !! 
சித்திர மண்டபத்தை சுத்தி பாத்திட்டு இருந்தான் வந்தியத் தேவன். இவன் சுத்தி பாக்கறத பாக்கறதுக்கு 3 தடியன்கள வேற அனுப்பி இருந்தார் சின்ன பழுவேட்டரையர். கொஞ்ச நேரத்தில போர் அடிச்சு அவங்களே உக்காந்து சொக்கட்டான் (சீட்டு மாதிரி) ஆட ஆரம்பிச்சிட்டாங்க. இவன் ஒவ்வொரு படமா பாத்திட்டு இருந்தான். 

ஒவ்வொரு படமும் சோழ சாம்ராஜியதோட முக்கியமான இன்சிடண்ட்-ஸ சொல்லிச்சி. ஒரு விஷயம் கவனிச்சான். அந்த ஒவ்வொரு ரிஸ்கான முக்கியமான நேரத்தில கூட பக்கத்தில கூட சேவை செய்தவங்க பழுவேட்டரையர்கள் தான். பரம்பரை பரம்பரையா அவங்க சோழ ராஜாக்கு கூடவே இருந்து உதவிய இருந்திருக்காங்க. அதனாலதான் இவங்களுக்கு அவ்வளவு மரியாதை.  (அத்தியாயம் 7-இல சொல்லி இருந்த மாதிரி இந்த இடத்தில கல்கி எந்த சோழ மன்னருக்கு எந்த இடத்தில பழுவேட்டரையர்கள் உதவி செய்தார்கள் அப்படீன்னு விளக்கமாக சொல்லுவார்)  


வெளிய சின்ன பழுவேட்டரையர் வர்றதா அறிவிப்பு வந்தது. சீக்கரம் எதனா பண்ணனும். அங்க சொக்கட்டான் விளையாடிட்டு இருந்த அந்த 3 தடியன்களோட வம்பு இழுக்க ஆரம்பிச்சான். 'என்னோட டிரஸ் எல்லாம் எங்க?' அப்படீன்னு கேக்க ஆரம்பிச்சான். அவங்க திருடிகிட்டாங்க-ன்னு பழி சொன்னான். 3 பேரு கூடையும் சண்டை பிடிச்சான்.  

விஸ்வரூபம் கமல் மாதிரி ஒரு நிமிஷத்தில அவங்க 3 பேரையும் தரைல உருள வச்சான். சின்ன பழுவேட்டரயர் உள்ள வந்தார். அவர் கிட்ட ஓடி போய் "திருடர்கள்! திருடர்கள்!!" அப்படீன்னு சொன்னான்.

Tuesday, April 22, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 27, 28, 29, 30





பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 27 - ஆஸ்தானப் புலவர்கள் 
ஒரு புலவர்கள் கும்பல் சுந்தர சோழர் இருந்த அறைக்குள்ள வந்தாங்க. அரசரும் வேற வழி  இல்லாம அவங்கள கொஞ்சம் கவிதைகள் சொல்லணும்னு கேட்டுகிட்டாரு. புலவர்களும் பாடல்கள் சொன்னாங்க. சின்ன பழுவேட்டரையர் வந்தியத் தேவனை அவர் கண் பார்வையில இருக்கட்டும் அப்படீன்னு அங்கேயே இருக்க வச்சுகிட்டாரு. இவனும் அரசர் கிட்ட முழுசா சொல்லிட்டு போலாம்ன்னு  இருந்துகிட்டான்.


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 28 - இரும்புப் பிடி 
சக்கரவர்த்தி அவரு தன்னோட பொண்ணு குந்தவை கிட்ட சொன்ன பாடல் ஒன்ன புலவர்கள் கிட்ட சொல்லிட்டு இருந்தாரு. வந்தியத் தேவன் அநிச்சையா தன் இடுப்பில் கட்டி இருந்த துணிய தொடப் போனது. இங்க குந்தவை தேவிக்கு கொடுக்க வச்சிருந்த ஒலைய வச்சிருந்தான். தொட்டவனுக்கு திக்குன்னு இருந்தது. ஓலை அங்க இல்ல, எங்கேயோ தவற விட்டுட்டான். 

புலவர் கூட்டம் எல்லாம் முடிஞ்சி கிளம்பும் போது கூட்டத்தோட கலஞ்சு எஸ்கேப் ஆய்டலாம்னு டிரை பண்ணினான். அப்போ ஒரு கை அவன வலுவா பிடிச்சது - அது சின்ன பழுவேட்டரையர் தான்.  

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 29 - நம் விருந்தாளி 
சக்கரவர்த்தி கிட்ட வந்தியத் தேவனை தள்ளிகிட்டு பொய் நிருத்தினாறு சின்ன பழுவேட்டரையர்: 'அரண்மனை வைத்தியர் அரசருக்கு அபாயம் இல்லங்கராரு, சோதிடர்கள்  அபாயம் இல்லைங்கறாங்க. ஆனா இந்த தம்பி ஏதோ அபாயம் அப்படீன்னு சொல்லிச்சி. என்னத்த பத்தி சொன்ன?' அப்படீன்னு கேட்டாரு.
வந்தியத்தேவன் ரொம்ப உஷாரு பார்ட்டி. கவுக்க முடியுமா? 'நானு வாணர் குலத்தோட கடைசி துரும்பு. ஒரு காலத்தில நாங்க அரசர்களா இருந்தோம். பட் இப்போ எனக்கு இருக்க வீடு கூட இல்ல. அதனால "அபயம், அரசர் கிட்ட அபயம்" அப்படீன்னு கேட்டு ஒரு அஞ்சி கிராமமாவது கொடுத்தா புண்ணியமா இருக்குமின்னு கேட்டேன்' அப்படீன்னு பிளேட்ட மாத்தி  போட்டான்.
பழுவேட்டரையர் மட்டுமில்ல சக்கரவர்த்தியும் அப்படியே கவுந்திடாங்க. மன்னர் சின்ன பழுவேட்டரையர் கிட்ட 'இந்த பிள்ள நம்ம விருந்தாளி. இன்னிக்கி இவன் இங்கயே தங்கட்டும்'-ன்னார் 




பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 30 - சித்திர மண்டபம்
சின்ன பழுவேட்டரையர் வந்தியதேவனை அவரோட சேவகர்கள் கிட்ட நல்ல படியா கவனிக்க சொல்லிட்டு திரும்ப வந்தார். வரும் போது ஒரு சேவகன் ஒரு ஓலை சுவடிய அவர் கிட்ட கொடுத்தான், மண்டபத்துக்கு வெளிய கிடைச்சதுன்னு சொன்னான். இவர் என்னன்னு பார்த்தார் : குந்தவை தேவிக்கு அவரோட அண்ணன் ஆதித்த கரிகாலர் அவர் கைப்பட எழுதிய ஓலை. 'அந்தரங்க காரியங்களுக்கு ஒற்றன் தேவைன்னு கேட்டாயில்ல, இவன் தான் அவன்' சின்ன பழுவேட்டரையர் அப்படியே ஷாக் ஆய்டாறு.

வந்தியத் தேவன் சாப்பிட்டு மண்டபத்தை வேடிக்கை பாத்தான். நெறைய பெயண்டிங்க்ஸ் வரஞ்சிருந்தாங்க சுவர்ல. அதில இருந்து சுந்தர சோழரோட ப்ளாஷ் பேக் தெரிஞ்சிகிட்டான்: சோழ சக்கரவர்த்தி பராந்தகர்க்கு 2 பசங்க. மூத்தவரு ராஜாதித்யர். ராஷ்டிர கூடர்களோட நடந்த சண்டைல வீர சொர்க்கம் அடஞ்சிட்டாரு (அப்படீன்னா சண்டைலே சாவறது). 





இவரோட தம்பி கண்டராதிடர் அவர் அப்பா ஆசைப்படி ராஜாவானாறு. ஏன்னா அண்ணனுக்கு கொழந்த இல்ல. இவரு பக்தியில முழுகி போய் இருந்தாரு அப்படீங்கரதால அவரு தம்பி அரிஞ்சயர் அரசாங்கத்த கவனிச்சுகிட்டாறு. ராஷ்டிர கூடர்கள் கூட சண்டை போட்டுஜெயிச்சாரு. நல்ல திறமை இருந்ததாலும் அண்ணன் கண்டராதித்தர் கல்யாணம் செஞ்சுக்காது இருந்ததாலும் தம்பிய பட்டத்துக்கு இளவரசரா அனௌன்ஸ் பண்ணிட்டாரு.  தம்பிக்கு கல்யாணம் ஆயீ குழந்தை இருந்ததால அரிஞ்சயருக்கும் அப்பறம் அவரு வாரிசுகளே பட்டத்துக்கு வரணும்னு அக்ரீமெண்ட் போட்டுடாரு அமைச்சர், மற்ற குறுநில ராஜாக்கள் கூட. இவங்கள எல்லாம் ஒரு பாடு பட்டு சம்மதிக்க வச்சாரு. எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. ரொம்ப நாள் கழிச்சு மழவராயர் அப்படீங்கற குறுநில மன்னரோட மகளை பாத்து பிடிச்சுப் போய் கல்யாணம் செஞ்சுகிட்டாறு. மதுராந்தகன் என்கிற மகன் பிறந்தான் இவங்களுக்கு. முறைப் படி பாத்தா மதுராந்தகன் தான் பட்டத்துக்கு வரணும், அரசரோட மகன் அப்படீங்கரதால. ஆனா மன்னரோட அரேஞ்ச்மேன்ட்ஸ் படி அரிஞ்சயர் பட்டத்துக்கு வந்தார், மன்னர் இறந்து போனப்பறம். இவரும் ரொம்ப நாள் வாழல. அப்பறம் இவர் பையன் சுந்தர சோழருக்கு பட்டம் சூட்டினாங்க எல்லாரும். சுந்தர சோழர் திறமையா ஆட்சிய நடத்தினாரு. அவரு பையங்க ஆதித்த கரிகாலர் & அருண்மொழி வர்மர் ரொம்ப சூப்பர். ஒருத்தர் நார்த் லயும் ஒருத்தர் சௌத்லயும் நடக்கற போர்கள நடத்திட்டு இருந்தாங்க.

(உறவு முறை விளக்கத்துக்கு இந்த பதிவை http://www.piramu.tk/2014/04/blog-post_14.html பாருங்க.
...அப்பறம் பின்னூட்டம் போட்டு உங்க கருத்த கக்குங்க பாஸ்!!)

இத்தோட "பாகம் 1  - புது வெள்ளம்" முடிந்தது.

Monday, April 14, 2014

Sunday, April 13, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 25, 26




பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே 
பனை சின்ன மோதிரம் சக்தி உள்ளதா இருந்தது. போற இடமெல்லாம் வழி  கிடைச்சது. பெரிய பழுவேட்டரையர் இன்னும் திரும்ப வரல்லன்னும் சின்னவர் அரண்மனைல இருக்கராருன்னும் தெரிஞ்சுகிட்டான். சக்கரவர்த்தி இருக்கற மாளிகைய கண்டுபிடிக்கறது ஒன்னும் பெரிய விஷயமா இல்ல. ஊரிலேயே பெரிய புலி கொடி பறக்கற மாளிகை தான் இவன் போக வேண்டிய இடம். எப்படியும் சக்கரவர்த்திய நேர்ல பார்த்து ஓலையகொடுத்திடனும்னு நெனைச்சான். மாளிகைய கண்டுபிடிச்சான்; காவலாளிகள் தடுக்கும் போது பனை சின்ன மொதிரத்த காமிச்சான். வழி  கிடைச்சது; உள்ள நுழைஞ்சான். சக்கரவர்த்தி இருக்கற இடத்த எப்படி கண்டு பிடிக்கறது? பெரிய புலவர் கூட்டம் அந்த சமயத்திலே உள்ள வந்தது. காவலாளி ஒருத்தன் இன்னொருத்தனுக்கு புலவர்கள சின்ன பழுவேட்டரையர் கிட்ட கூட்டிட்டு போக சொன்னான். இவங்க கூடவே போய்டனும்னு முடிவு பண்ணினான் வந்தியத்தேவன்.

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 26 -அபாயம் ! அபாயம் !!
புலவர்களுக்கு முன்னாலேயே கதவு வழியா உள்ளே போனான் வந்தியத்தேவன். உள்ள சிம்மாசனத்தில இருக்கறவர் சின்ன பழுவேட்டரையரா இருக்கணும்னு நெனைச்சான். காஞ்சிபுரத்தில இருந்து இளவரசர் அனுப்பினதாகவும் சக்கரவர்த்திக்கு ஓலை கொண்டு வந்திருக்கறதா சொன்னான். உடனே அந்த ஒலைய  கேட்டு வாங்கி இவன் மறுக்கறத கண்டுக்காம படிச்சாரு சின்ன பழுவேட்டரையர். புதிசா ஒன்னும் இல்லன்னு சொல்லிகிட்டாரு. சக்கரவர்த்தி கிட்ட நேர்ல ஒலைய கொடுக்கணும்னு உத்தரவு-ன்னான். இளவரசரா என் மேல சந்தேகப் பட்டு இப்படி சொன்னாருன்னு கேட்டாரு சின்ன பழுவேட்டரையர். அவரில்ல உங்க அண்ணன் தான் அப்படி சொன்னாருன்னு பிளேட்ட மாத்தி போட்டான் வந்தியத் தேவன். இத ஏன்  முன்னாடியே சொல்லலே அப்படீன்னு சொல்லிட்டு சக்கரவர்த்தி கிட்ட அனுப்பினாரு சின்னவரு. நோயில கிடந்த சுந்தர சோழ சக்கரவர்த்திய பார்த்து வந்தியத் தேவனுக்கு ரொம்ப கஷ்டமா போயிட்டது.  இளவரசர் தந்த ஓலைய கொடுத்தான்.  'இங்க உங்கள அபாயம் சுத்தி இருக்கு. அபாயம்! அபாயம்!!" அப்படீன்னு சொல்லிட்டு இருக்கும்போது புலவர்கள கூட்டிட்டு சின்ன பழுவேட்டரையர் வந்திட்டார். இவன் கடைசீய சொன்ன வர்ட்ஸ் அவர் காதில விழுந்திட்டது. டெரர் ஆய்ட்டாரு.  

Sunday, December 29, 2013

வெறும் கை - நிமிடக் கதை




ஒரு ஓய்வான சோர்வான மத்திய பொழுதில் கணினியில் இணைய உலா சென்று கொண்டிருந்தேன். 

அப்போது எதேச்சையாக சீனாவின் குங்பூ மாஸ்டர்கள் செய்யும் சாகசத்தை பார்க்க நேரிட்டது. யப்பா...எத்தகைய சாகசங்களை செய்கிறார்கள். ஒருவர் கடப்பாரை கம்பியை கையில் வளையமாக சுற்றிக் கொள்கிறார். இருவர் நூற்றுக்கணக்கான செங்கற்களை உடைத்து   தள்ளுகிறார்கள். சிலர் கருங்கல் பளிங்கு சிமண்ட் பாளங்களை உடைக்கிறார்கள். இளம் வயது யுவதி ஒருவர் மீது கட்டைகள் கொண்டு தாக்க அவை தூள் தூளாகின்றன. ஒரு மாஸ்டர் வெறும் கையால் தடிமனான கட்டையில் ஆணிகள் அடிக்கிறார். 

ல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நான் வேகமாக சென்று சாத்துக்குடி ஒன்றை எடுத்து வெறும் கையால் உரிக்க ஆரம்பித்தேன்.... ஏதோ நம்மால் முடிந்தது (?)...

பீர்பால்




பீர்பால்கிட்ட ஒரு பண்டிதர் கேட்டார்: "கஷ்டமான 1 கேள்வி கேட்கட்டுமா, இல்ல 100 சிம்பிள் கேள்விகள் கேட்கட்டுமா?"

சக்கரவர்த்தி அக்பர் உடனே ஒரு வேலையா கிளம்ப வேண்டி இருந்தது. பீர்பால் சொன்னார்:"கஷ்டமான 1 கேள்வி கேளுங்க, பண்டிதரே"

"முட்டைல இருந்து கோழி வந்ததா இல்ல கோழி-ல இருந்து முட்டை வந்தாதா?"

"சந்தேகமே இல்ல, கோழி தான் முதல்ல வந்தது. "

"எப்படி?"

"இது இரண்டாவது கேள்வி, பண்டிதரே!" அப்படி முடிச்சார் பீர்பால்.

ஜென் கதைகள் - கோப்பை



ரொம்ப படித்த மேதை ஒரு ஜென் துறவி கிட்ட போனாரு : "குருவே, நான் படிக்காதது ஏதாவது இருந்தா அதை எனக்கு கத்துக் கொடுங்க" அப்படீன்னாரு. அதை கவனிக்காத துறவி அவரோட கோப்பைல தேநீர் ஊத்திட்டு இருந்தார். கோப்பை நிரம்பின பிறகும் இவர் ஊத்திரத்தை விடல. கோப்பை நிரம்பி வழிஞ்சது , இவரு நிறுத்தவே இல்ல. பண்டிதர் கேட்டாரு "குருவே, கோப்பை நிறைந்து விட்டது. இன்னும் இதில ஊத்த முடியாது"-ன்னு சொன்னாரு. குரு ஒரு ஸ்மைலோட சொன்னாரு:

"நிறைந்த கோப்பைல தேநீர் ஊத்த முடியாது; நிறைந்து இருப்பதாக எண்ணப் படும் மனது மேலும் அறிவை எடுத்துக்க முடியாது"

(இந்த கதையை நினைவு படுத்தும் வசனம் "avatar" படத்தில கூட வரும்.)

பெர்னாட் ஷா



பெர்னாட் ஷா கிட்ட ஒரு பெண் சொன்னா :"நீங்கள் மட்டும் என் கணவனா இருந்தா நான் காபியில் விஷம் வச்சு கொடுப்பேன்"

பெர்னாட் ஷா புன்முருவலோட சொன்னார்: "நீ மட்டும் என் மனைவியா இருந்தா நான் அத உடனே குடிச்சிடுவேன்"

ஜென் கதைகள் - சொர்க்கம்



மிகப் பெரிய தளபதி ஒருத்தர் ஒரு ஜென் துறவி கிட்ட கேட்டார்: "குருவே!, சொர்க்கம் நரகம் எங்க இருக்கு?" அப்படீன்னு கேட்டார். குரு உடனே "மூடனே, இது கூட தெரியாதா?" அப்படீன்னு டக்குனு கேட்டார். எதிர் பாராத தளபதி கண் இமைக்கரதுக்குள்ள  வாளை உருவி துறவிய வெட்டறதுக்கு ஓங்கினான். "இதோ நரகத்தின் கதவுகள் திறந்து விட்டன"-ன்னு சொன்னார். தவறை உணர்ந்த தளபதி குருவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். குரு சொன்னார்:"சொர்கத்தின் வாசல்கள் திறக்கின்றன"



சொர்க்கம் நரகம் ரெண்டுமே மனசில தான் இருக்கு. 

முயலும் ஆமையும்




அறிஞர் அண்ணா கிட்ட கேட்கப் பட்ட கேள்வி: "முயலும் ஆமையும்  கதையில், முயல் தோற்றது எதனால்?"

அண்ணாவின்  பதில்:"முயலாமையால்"

(முயல்+ஆமை = முயலாமை )

Friday, August 23, 2013

ராமாயணத்திலிருந்து ஒரு கதை - விஸ்வாமித்திரர்




விஸ்வாமித்திரர் கௌசிக நாட்டு ராஜாவாக இருந்த போது பிரம்மரிஷி வசிஷ்டரின் ஆசிரமம் வழியாக, தன்னுடைய பெரும் படையுடன் சென்று கொண்டிருந்தார்.  மரியாதை நிமித்தம் பேசும்போது வசிஷ்டர் விஸ்வாமித்திரரையும் படையையும் சாப்பிட அழைத்தார். இவ்வளவு பெரிய படையை எப்படி இந்த ரிஷியால் உணவளித்து கவனிக்க முடியும்  என்று நினைத்து "மகரிஷி! நீங்கள் இப்படி கேட்டதே போதும். நாங்கள் கிளம்புகிறோம்" என்று சொன்னார் விஸ்வாமித்திரர். வசிஷ்டரோ விடவில்லை.

சரி என்று அமர்ந்த படைகளுக்கோ விருந்து பானங்கள் என்று கேட்க கேட்க வந்து கொண்டே இருந்தன ஆசிரமத்தில் இருந்து. ஒரே ஆச்சர்யம் விஸ்வாமித்திரருக்கு, கேட்டே விட்டார் வசிஷ்டரிடம். வசிஷ்டரின் வீட்டு பசு காமதேனு தான் இதற்கு காரணம் என்று புரிந்ததும் கேட்டார்: " ரிஷியே நாட்டில் உள்ள அனைத்து பொருட்களும் அரசனுக்கே சொந்தம். எனவே இந்த பசுவை என் அரண்மனைக்குக் கொடுங்கள்" என்றார். பசு வந்தால் கூட்டிப் போகுமாறு சொல்லி விட்டார் வசிஷ்டர். பசு வர வில்லை. படை வீரர்களை அனுப்பி இழுத்து வருமாறு அனுப்பினார் விஸ்வாமித்திரர். முனிவரைப் பார்த்து கதறியது அப்பசு. "உணவு படைத்த உனக்கு உன்னை காத்துக் கொள்ள  தெரியாதா" என்றார் வசிஷ்டர். உடனே அந்தப் பசுவிடம் இருந்து எண்ணற்ற வீரர்கள் தோன்றினர், அவர்கள் விஸ்வாமித்திரரின் படையை காண நேரத்தில் நிர்மூலமாக்கினார்கள். பெருந்தோல்வி விஸ்வாமித்திரருக்கு.

அங்கேயே தன ராஜ்யத்தை எஞ்சி இருந்த மகனிடம் கொடுத்து விட்டு காட்டுக்கு தவம் செய்ய சென்றார் விஸ்வாமித்திரர். சிவனை நினைத்து இருந்து முடிவில் சிவனிடமிருந்து தனுர் வேதத்தையும் எல்லா அஸ்திரங்களையும் பெற்றார் விஸ்வாமித்திரர். அடுத்து அவர் வந்தது வசிஷ்டரின் ஆசிரமம் முன்பு.

(தொடரும்)



Sunday, December 9, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 21, 22, 23, 24

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 21 - திரை சலசலத்தது  


திருவையாறு வழியா தஞ்சைக்கு குதிரைல வந்திட்டு இருந்தான் வந்தியத் தேவன். தன காரியங்கள எப்படி முடிக்க போறோம், மகாராஜாவ எப்படி பாக்க முடியும் எல்லா தடைகள் தாண்டி அப்படீன்னு நெனைச்சுட்டே வந்திட்டு இருந்தான். தூரத்தில பழுவேட்டரையரோட பல்லக்கு போயிட்டு இருந்தது. அதில பழுவேட்டரையர், இல்ல மதுராந்தகர் இருக்கலாம். மதுராந்தகர் இருந்தா அவர் கூட பழகி அப்படியே கோட்டைகுள்ள போய்டலாம் அப்படீன்னு நெனைச்சான். வேகமா போய் குதிரையால பல்லக்கை மோதினான்; உடனே கத்தினான்: "மஹாராஜா! மஹா ராஜா!! பல்லக்கு தூக்கரவங்க என்னோட குதிரைய இடிக்கறாங்க. ஐயோ ! ஐயோ!!" பல்லக்கோட திரை மெதுவா விலகிச்சி.

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 22 - வேளக்கார படை  
திரை விலகரத பாத்துட்டு உடனே இறங்கி கம்ப்ளைன்ட் செய்ய போனான் வந்தியத் தேவன். உள்ள இருந்தது மதுராந்தக தேவர் இல்ல, ஆனா ஆம்பளைங்கள கவர்ந்து பைத்தியமாக்குற அழகும் வசீகரமும் உள்ள பெண். ஷாக்  ஆகி நின்ன இவன வீரர்கள் சுத்திகிட்டாங்க. அதிசயமா இவனுக்கு மூள  வேலை செஞ்சது. பழுவூர் இளையராணிய பாக்கறதுக்காக இவளவு தூரம் வந்தான் அப்படீன்னும், ஆழ்வார்க்கடியான் அனுப்பி வச்சதாகவும் சொன்னான்.  இளையராணி ஸ்மைல் பண்ணினா மெதுவா, தன்னுடைய முத்திரை மோதிரத்தை கொடுத்து அப்பறமா வர சொன்னா. சாயங்கால வேளைலே மன்னரோட பாடி கார்ட்ஸ் - அதான் வேளக்கார படை - கோட்டைகுள்ள இருந்து வெளிய போனாங்க (அத்தியாய தலைப்ப மாட்ச் பண்ணனுமே..)


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 23 - அமுதனின் அன்னை  
ஊரை சுத்தி பாத்துட்டு மறுநாள் கோட்டைகுள்ள போகலாம்னு நெனைச்சான். அப்ப சேந்தன் அமுதன் என்கிற, கோவில்ல வேலை செய்யற இளைஞன் அறிமுகம் ஆனான். அவன் வீட்ல தங்கினான் வந்திய தேவன், அன்னிக்கி இராத்திரி. நெறைய விஷயங்கள் தெரிஞ்சது - மதுராந்தக தேவர் சின்ன பளுவேட்டரைரோட  பொன்னைத் தான் கல்யாணம் செய்திருக்காரு, இது நெறைய பேருக்கு தெரியாது. சின்ன பழுவேட்டரையர் தான் கோட்டை காவலுக்கு பொறுப்பு. பெரியவரும், சின்னவரும் கோட்டைகுள்ள மன்னர் கூட தான் தங்கி இருக்காங்க. இன்னும் முதல் மந்திரி அநிருத்த பிரம்மராயரும் மற்ற மந்திரிங்களும், பளுவேத்ட்டரைரோட வேலை செயாரவங்களும் உள்ள தான் தங்கி இருக்காங்க. 


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்  
ரெண்டு பழுவேட்டரையரும் தான் நாட்ட ஆளுராங்கன்னும், சக்கரவர்த்திய அவங்களோட கட்டுபாட்டில தான் வச்சிருக்காங்கன்னும் சொன்னான் சேந்தன் அமுதன். மதுரைல நடந்த யுத்தத்துக்கு அப்பறமா வீரபாண்டியன் மரணத்துக்கு பழி  வாங்க மன்னற கொள்ள சதி அப்படீன்னு சொல்லி மன்னற தஞ்சைக்கு கூட்டிட்டு வந்திட்டதாவும் அவரோட உடல் நிலை சரி இல்ல, பக்கவாதம் வந்து ரெண்டு காலும் சுவாதீனம் இல்லாம போச்சி, வைத்தியங்களும் இங்க தான் மன்னர் இருக்கணும்னு சொல்லிட்டாங்க. மன்னர் எதுவும் சொல்ல முடியல. அவருக்கு புத்தி சுவாதீனம் வேற இல்லாம போச்சின்னும் சொல்லிக்கறாங்க.
சேந்தன் அமுதனோட அம்மாக்கு காது கேக்காது, வாய் பேச வராது. சேந்தன் அமுதனுக்கு அவன் மாமன் மகள் பூங்குழலி மேல ஈடுபாடு. ஆனா, அவளுக்கு இவன் மேல ஈடுபாடான்னு தெரியல. 
அன்னிக்கே மன்னர கோட்டைக்குள பாத்திடணும்னு நெனைச்சான் வந்தியத் தேவன்.

Sunday, November 18, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 19, 20


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 19 - ரணகள அரண்யம்  




ப்ரதீவிபதி அப்படீங்கற கங்க நாட்டு மன்னன், முன்னாடி சோழ ராஜா கூட சேந்து பாண்டிய ராசாவ எதிர்த்து போர் நடத்தினான். அதில ரொம்ப வீரமா சண்ட போட்டு வீரமரணம் அடைஞ்சான். அவனுக்கு பள்ளிப் படை கோவில் ஒன்னு கட்டினாங்க சண்டை நடந்த இடத்தில. வருஷங்கள் கழிஞ்சு அந்த இடம் காடு மண்டிப் போச்சு. பிரதிவீபதியை பகைவன்னு சொன்னா, பாண்டியர்கள் தான் சொல்லணும்..புரிஞ்சதா? குறுக்கு வழியில பொய் ஆழ்வார்க்கடியான் பள்ளிப் படை கோவில் மேல ஏறி ஒளிஞ்சுகிட்டான், ஈசியா பாத்துட முடியாது அவன. ரொம்ப நேரம் ஆச்சு எதுவும் நடக்கல, சரி திரும்ப போய்டலாம்னு நெனைக்கும் போது தூரத்தில தீவட்டி வெளிச்சம் தெரிஞ்சது, 2 பேரு வந்தாங்க. கொஞ்ச நேரத்தில இன்னும் 2 பேரு அப்பறம் ஒருத்தன் வந்தான். யாருடைய அடையாளமும் சரியா தெரியல, இவன் ஒளிஞ்சு இருந்த இடம் தூரமா போச்சு. அரகொறையா கேட்டதை தெரிஞ்சது என்னான்னா: ரவிதாசன் அப்படீங்கறவன் தான் அவங்க ஹெட். அவன் கிட்ட பளுவேட்டரயரோட தங்க காசுங்க இருந்தது. பக்கத்தில போனா கொஞ்சமாவது அவங்க பேசறது சரியாய் காதில விழும்னு நெனைச்சான். மெதுவா இறங்கி பக்கத்தில போனான்.




பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 20 - "முதற் பகைவன்!" 



ரவி தாசன் எதோ பிளான் சொல்லிட்டு இருந்தான்: 'ரெண்டு டீமா பிரிஞ்சு ஒன்னு இலங்கைக்கும் இன்னொன்னு ஆதித்த கரிகாலன் இருக்கற தொண்டை மண்டலம் போகணும். வெயிட் பண்ணி நல்ல சமயத்தில காரியத்த முடிக்கணும்.'

அப்ப அங்க இடும்பன் காரியும் வந்து சேந்தான். சம்புவரையர் மாளிகைல நடந்ததை எல்லாம் சொன்னான். இத எல்லாம் கவனிச்ச ஆழ்வார்க்கடியானையும் இவன் பாத்துட்டத்தையும் சொன்னான். ஆழ்வார்க்கடியானை இவங்க ஆளுன்னு நேனைச்சதையும் இவங்க முத்திரைய செஞ்சு காட்டினதையும் சொன்னான். ஆழ்வார்க்கடியானுக்கு அது புரியாததனால அவன் வேற ஆளுன்னு பபுரிஞ்சு கிட்டதையும் சொன்னான்.

ரவி தாசன் ரொம்ப கோபப் பட்டான். யாரு கிட்டயும் ரகசிய சமிக்ஜய செய்ய கூடாதுன்னு கட்டளை போட்டான். ஆழ்வார்க்கடியான் தான் முதல் எதிரி, நம்மள காப்பாத்திற தேவிய கொண்டு போக பாக்கறவன். அவன எங்க பாத்தாலும் கொன்னு போடுங்க அப்படின்னு ஆர்டர் போட்டான். ஆழ்வார்க்கடியான் ஒரு ஒற்றனும் கூட, ஆனா யாருடைய ஒற்றன் என்கிற விபரம் தெரியல அப்படீன்னான்.

ஆழ்வார்க்கடியானுக்கு தும்மல் வந்திட்டு, தோள் துண்ட கவ்விகிட்டு தும்மினான், ஆனாலும் சத்தம் கேட்டிருச்சி. ரவி தாசன் ஆள் அனுப்பி என்ன சத்தம்னு பாக்க சொன்னான். அங்க இருந்து ஒரு வழியா தப்பிச்சு வந்தான் ஆழ்வார்க்கடியான்.

Monday, October 1, 2012

"என்ன மாமா! சாத்தூர் ரோட்ல போறீங்க': "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண்





விருதுநகர்:"மின் தடையால, சமையலுக்கு மசாலா அரைக்க முடியல; குழந்தைங்க தூக்கமே போச்சு; "டேங்க்' ல, தண்ணீர் இல்ல' என, பெண்களின் புலம்பல்களுக்கு மத்தியில், ஒரு பெண் சந்தித்த "தர்மசங்கட' பிரச்னை இது. கனநேரத்தில், இப்படியும் கூட பிரச்னைஏற்படும் என்பது மற்ற இல்லத்தரசிகளுக்கு, இது ஒரு பாடம்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் "பங்க்' ல், நேற்று முன்தினம், இரவு 7 மணிக்கு, வாடிக்கையாளர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். "எப்போது போகும், எப்ப வரும்' என, யாரும் அறியாதமின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரம்.அப்போது, மனைவியுடன் இரு
நபர்கள், "பைக்கில்' வந்தனர்;இருவருமே அணிந்திருந்தது, ஒரேமாதிரியான ஹெல்மெட். வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிய பின், அதில் ஒரு ஜோடி புறப்பட்டுச் சென்றது.
சாத்தூர் ரோட்டில் நீண்ட தூரம் சென்ற பின், பின்னால் இருந்த பெண்,

""என்ன மாமா! நாம் தாதம்பட்டிபோகணும்; நீங்க சாத்தூர் ரோட்ல போறீங்க,'' என்றார். வாகனத்தை
ஓட்டிய நபருக்கு தூக்கி வாரிப்போட்டது. உடனடியாக நிறுத்தி,திரும்பிப் பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி.பின்னால் இருந்தது அவர் மனைவி இல்லை. இருட்டில், அந்தப் பெண்,"கணவர்' என, நினைத்து, தன்னுடன் வந்ததை உணர்ந்தார். மன்னிப்புக் கோரி, மீண்டும் பெட்ரோல் "பங்க்' அழைத்து வந்தார். அங்கு, கணவரைக் காணாமல் மனைவியும்; மனைவியைக் காணாமல் கணவரும் தவியாய் தவித்துக் கொண்டிருந்தனர். "மாறி பயணப்பட்டு' திரும்பிய இருவரையும் பார்த்தவுடன், நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்;பிரிந்தவர் கூடினால் பேசவும்வேண்டுமோ!"மின்தடையால் குடும்பத்திலும் குழப்பம் ஏற்படும் போலிருக்கே?' என, புலம்பினர் அங்கிருந்தவர்கள். 

வாசகர் கருத்து:

kochadaiyan - ,இந்தியா
01-அக்-201203:26:37 IST Report Abuse
kochadaiyanதமிழ்நாட்டில் இதுவரை மின்சாரம் தான் போகும் என்று பார்த்தால் இப்போது சம்சாரமும் கூட சேர்ந்து போகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.


மூலம்: "என்ன மாமா! சாத்தூர் ரோட்ல போறீங்க': "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் 

-- நன்றி: தினமலர்

Wednesday, March 21, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 16

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 16 - அருள்மொழி வர்மர் 






கி.பி. 970 வாக்கில் சுந்தர சோழ சக்கரவர்த்தியோட சாம்ராஜ்யம் செழிச்சு வளர்ந்து இருந்துச்சு. ஆனா இவர் பட்டத்துக்கு வரும்போது நெலமை வேறயா இருந்தது. வடக்கிலும் தெக்கிலும் விரோதிகள் இருந்தாங்க. தெக்க படை எடுத்து போனாரு. அங்க இருந்த பாண்டிய ராசாக்கும் இவருக்கும் சேவூர் அப்படீங்கற இடத்திலே சண்டை நடந்துச்சு. சிங்கள மன்னன் மகிந்தன் என்கிறவன் பாண்டியர்களுக்கு உதவியா பெரிய படைய அனுப்பி இருந்த்தான். பாண்டியர் படையும், சிங்கள படையும் சின்னா பின்னமாயிட்டது. பாண்டிய மன்னன் ஓடி ஒளிஞ்சுகிட்டான். சிங்களர்கள் படை அனுப்பி பாண்டியர்களுக்கு உதவி செய்றது வழக்கமா ஆய்ட்டதால, அத தடுக்க, மகிந்தனுக்கு புத்தி புகட்ட ஒரு சோழ சைன்யம் (மிலிட்டரி) இலங்கைக்கு போச்சு, 
கௌம்பாளூர் சிற்றரசன் பராந்தகன் சிறிய வேளாண் (இவர் தான் வானதியோட அப்பா) தலைமைல. சோழர் படை பயணத்துல வந்த சிரமங்கள் காரணமா பிரிஞ்சு போச்சு. கரை இறங்கின சின்ன படைய, தன்னோட பெரிய படைய அனுப்பி துப்புரவா அழிச்சான், மகிந்தன். தோத்து போவோம்ன்னு தெரிஞ்சும் திரும்பி ஓடாம, வீரமா சண்டை போட்டு உயிரை விட்டான், பராந்தகன் சிறிய வேளாண். சோழரோட பெரிய படை சிலோன் பாட்டுன்னு தெரிஞ்சு படை திரட்டி வந்தான் பாண்டிய மன்னன். இந்த தடவ பாண்டிய சேனை மட்டுமில்ல பாண்டிய ராஜாவும் அழிஞ்சான். இந்த சண்டைல சுந்தர சோழரோட மூத்த பையன், பட்டத்து இளவரசர் (14 வயசு தான் ஆய்ருந்தது அப்போ), ஆதித்த கரிகாலர் தலைமைல தான் நடந்தது. 


பராந்தகன் சிறிய வேளாண் இறந்ததுக்கு பழி வாங்கவும், மகிந்தனுக்கு புத்தி வர்றதுக்கும் அவன தண்டிக்கணும்னு நினைச்சாங்க சோழ ராஜ்யத்தோட வீராதி வீரர்கள் எல்லாரும். யாரோட தலமைலே படைய அனுப்பலாம்னா எல்லாரும், நான் நீன்னு போட்டி போட்டுட்டு இருந்தாங்க. ராஜ்யமே பிரிஞ்சு போய்டும்ன்னு பயந்தாரு சுந்தர சோழ சக்கரவர்த்தி. ஆதித்த கரிகாலன் வட திசைலே இருந்து வந்த ராஷ்டிரகூடர்கள அடக்க படையோட இருந்தாரு. இந்த நிலமைய சமாளிக்க ஹெல்ப் பண்ண வந்தாரு சின்னவர், அருண்மொழி வர்மர். 20 வயசு கூட ஆகல, ஆனா இவரு தலைமைய மற்ற சிற்றரசர்கள் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்கன்னு நினைச்சாரு சுந்தர சோழர்.  சின்னவர் படை நடத்தின விதமே வித்யாசமா இருந்தது, அத விட வித்யாசமா இருந்தது அவரோட போர்த்தந்திரங்கள். சரியான நேரத்தில போர்த் தளவாடங்கள் (supply, reinforcements) வரல்ல. இதனால திரும்பி வந்து அப்பா கிட்ட பேசி ஏற்பாடுகள் செஞ்சுகிட்டாரு. திரும்பி போறப்போ அரண்மனை பெண்கள் ராஜ மரியாதை செஞ்சாங்க. கிலே தீபத் தட்ட எடுத்து ஆரத்தி எடுத்தாங்க. வானதி நடுங்கி தீபத் தட்ட கீழ விட்டா. இளவரசர் ஸ்மைல் பண்ணிட்டு போயிட்டாரு. அபசகுனம்னு சொன்னாங்க எல்லாரும், இளவரசருக்கு எதனா ஆகலாம்னாங்க. இவ டென்சன் அதிகமா ஆயி மயங்கி விழுந்தா. சலசலப்புக்கு காரணம் கேள்விப்பட்டு உள்ள வந்து பாத்தாரு அருள்மொழி வர்மர். குந்தவை வானதி மயக்க தெளிய முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. இவளோட அப்பா பத்தி தெரிஞ்ச உடனே ரொம்ப இரக்கப் பட்டாரு. இதே போல இலங்கைக்கு போன தன்னோட அப்பா நியாபகம் வந்திருக்கும்னு நினைச்சாரு. வானதி மேல தனி அன்பு வந்தது இளவரசருக்கு. அக்கா கிட்ட, அம்மா அப்பா இல்லாத அவள நாமதான் பாத்துக்கணும் அப்படீன்னார். 
 (யோசிச்சு பாருங்க, அவளுக்கு பிரியமான அப்பா இலங்கைக்கு சண்டைக்கு போகும் போது இப்படி தான் அனுப்பி வச்சுருப்பா, அவரு திரும்ப வரல. அடுத்து ரொம்ப ஆசை படர அருள்மொழி வரமர இலங்கைக்கு அனுப்பி வைக்கறா)
குந்தவைக்கு ஏதோ புரிஞ்சது. வானதி மேல தனி பிரியம் அப்போ இருந்து. இதெல்லாம் கவனிச்ச மத்த இளவரசிகள் எல்லாருக்கும் வானதி மேல பொறாமை வந்தது.

Sunday, March 4, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 14, 15

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை 




வந்தியத் தேவன் குதிரை மேல ஏறி ஆத்தங்கரை வழிய போயிட்டு இருந்தான்."ஐயோ முதலை ! முதலை !! காப்பாத்துங்க" ன்னு ஒரு பொம்பளை கத்துறது கேட்டுச்சு. தூரத்திலே பெண்கள் ஆத்துலே குளிச்சுட்டு இருந்தாங்க. பக்கத்து மர நிழல்லே முதல ஒன்னு பாதி தண்ணிலையும் பாதி தரைலையும் வாய அகலமா திறந்து இருந்தது. முன்னாடி ஒரு பொண்ணு. கொஞ்சமும் யோசிக்கல, வந்தியத்தேவன். வேல உருவினான், வீசினான் முதலை மேல, தப்புமா குறி ? முதல முதுகில குத்தி நின்னது வேல். வாள உருவிகிட்டு  குதிரைல இருந்து ஜம்ப் பண்ணி முதலைய பாத்து ஓடினான். எல்லாம் ஒரு செகண்ட்ல நடந்திட்டு. திக்குன்னு பாத்திட்டு இருந்த பெண்கள் மெதுவா சிரிக்க ஆரமிச்சாங்க. ஒருத்தி முன்னாடி வந்து "ஐயா! உங்களுக்கு ரொம்ப நன்றி. ஆனா சிரமப் பட வேண்டாம்"ன்னா. ஒன்னும் புரியல இவனுக்கு.




அத்தியாயம் 15 - வானதியின் ஜாலம் 



அரசிளம் குமரிகள் ரெண்டு பேரு சோதிடர பாக்கறதுக்கு வந்தாங்க இல்லையா ? ஆனா நெறைய இளவரசிகள் இவங்க கூட வந்திருந்தாங்க. அவங்கள விட்டுட்டு குந்தவை வானதிய மட்டும் கூட்டிட்டு வந்தாங்க. அந்த பெண்கள் எல்லாம் வானதி பத்தி புரணி பேசிட்டு இருந்தாங்க. வானதிக்கு அருள்மொழி வர்மர் மேல இருந்த காதல் பத்தி பொறாமையா பேசிட்டு இருந்தாங்க. குந்தவை கூட இதுக்கு சம்மதிச்சதா பேசிகிட்டாங்க. 

Sunday, February 26, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 13

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 13 - வளர்பிறை சந்திரன் 







வந்தியத் தேவன் அந்த பெண்கள் யாருன்னு சோதிடர் கிட்ட விசாரிச்சான், அவரு பிடி கொடுக்கல. பலரும் வந்து போவாங்க, யார் பத்தியும் யார் கிட்டயும் சொல்லறதுக்கு இல்லன்னு சொல்லிட்டார். இவரு கிட்ட நம்ம பருப்பு வேகாதுன்னு நினைச்சு நேரடியா கேட்டான்: "நான் போற காரியம் நல்ல படியா நடக்குமா?"
இவன் பேரு கேட்ட உடனே அவனோட ஜாதகத்த பொட்டிலே இருந்து எடுத்துக்கிட்டாரு. இவன் தஞ்சாவூரு போகனும்னும், அங்க சக்கரவர்த்திய பாக்கனும்னும், பழுவேட்டரையர் தடையா இருப்பாங்கன்னும் நெனைச்சு கேட்டான்.
ஜோசியரும் குறிப்பா பதில் சொல்லிட்டு இருந்தாரு. இளவரசர் அருள்மொழி வர்மர் கூட சேந்துக்க சொன்னாரு.  

Saturday, February 18, 2012

என்று மாறும் இந்த நிலைமை ?

நன்றி: தினமலர் 


Monday, January 30, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 11

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 11 - திடும் பிரவேசம் 



வானதியோட சாதகத்த பாத்த ஜோதிடர் அப்படியே திகைச்சுட்டாறு. குந்தவைய பாத்து சொன்னாரு: "ரொம்ப அதிர்ஷ்டக்கார ஜாதகம் அம்மா இது, உங்களை விட ஒரு படி மேலானது."  வானதியோட சாதகத்த பாத்து அவளுக்கு எப்போ கல்யாணம் வரும், மாப்பிள்ளை எங்க இருந்து வருவார் அப்படீன்னு கேட்டாரு குந்தவை. ஜோதிடர் பேசறதுல கில்லாடி. புரியற மாறி பேசுவாரு ஆனா ஒன்னும் தெளிவா சொல்ல மாட்டாரு.   
குந்தவை இன்னும் கேட்டா: "ஜோதிடரே கொஞ்ச நாளா வானத்தில ஒரு வால் நட்சத்திரம் தெரியுது. அதனால ராஜ்யத்துக்கு ஆபத்துன்னு ஜனங்கள் பேசிக்கறாங்களே...அத பத்தி  பாக்க முடியுமா"ஜோதிடர் பதில் சொல்லாம தப்பிக்க பாத்தாரு. குந்தவை விடுவாளா...கடைசீல சொன்னாரு: "ராஜாவுக்கு ஒரு கண்டம் இருக்கு. துர்க்கா தேவி அருளால சரியாகும்" அப்படீன்னார்.
அப்ப வாசல்ல சத்தம் கேட்டது, தடபுடல் தெரிஞ்சது. எதோ சொல்லிக்கிட்டே வந்தியத் தேவன் உள்ள வந்தான் (நினைவிருக்கா இவன் படகுல ஏறுனான் கடைசீயா) பெண்கள பாத்ததும் அப்படியே நின்னுட்டான்..பின்னாடியே ஜோதிடரோட சீடன் வந்தான். அவன் கிட்ட வந்தியத் தேவன் "உள்ளே பெண்கள் இருக்காங்கன்னு சொன்னா வந்திருக்க மாட்டேன் இல்லே" அப்படீன்னு சொல்லிட்டு வெளியே போய்ட்டான்.
பெண்கள் ரெண்டு பெரும் முடிச்சுட்டு வெளியே வந்தாங்க. ஒதுங்கி நின்ன வந்தியத் தேவன் சொன்னான் "உள்ளே பெண்கள் இருக்காங்கன்னு இந்த புத்திசாலி சொல்லலே, அதான் வந்திட்டேன், மன்னிச்சுக்கோங்க"ன்னான். அதுக்கு பதில் சொல்லாம அவன பாத்து ஒரு ஸ்மைல் பண்ணீட்டு போய்ட்டாங்க குந்தவை.




Tuesday, January 24, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 12

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 12 - நந்தினி  





போன அத்தியாயத்தில படகில விட்ட வந்தியத்தேவன் குடந்தை ஜோசியரப் பாக்கறதுக்கு எப்படி வந்தான்? என்ன நடந்ததுன்னா...ன்னு சொல்லி ப்ளாஷ்-பேக் உடுவோமா?

படகில கடைசீய வந்து ஏறினான் ஆழ்வார்க்கடியான். அவன் வாய கிளறினான் வந்தியத்தேவன். ஆழ்வார்க்கடியான் எப்பேர்ப்பட்ட கில்லாடி...அவன் அத அப்படியே திருப்பி உட்டான் வந்தியத்தேவன் மேல...வந்தியத்தேவன் லேசுப்பட்டவனா? அவன் விடாக்கண்டன்னா இவன் கொடாக்கண்டன். வந்தியத்தேவன் பத்தி ஒன்னும் கண்டு பிடிக்க முடியல இவனால. ஆனா வந்தியத்தேவன் மனசோ ரொம்ப குழம்பி போய் கிடந்தது. அது தீர ஆழ்வார்க்கடியான் ஒன்னும் தீர்மானமா சொல்லல. ஆனா ஒண்ணு மட்டும் சொன்னான்: குடந்தை சோதிடர கேட்டு பாருன்னு சொல்லிட்டான். சேரி அவரப் பாத்தா குழப்பம் தீர்ந்தாலும் தீரலாம்னு அங்க போக நினைச்சான் வந்தியத் தேவன். அப்படித்தான் அங்க வந்து சேந்தான்.


சரி, தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லேன்னு நீங்க நினைக்கலாம். படகில வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியான கிண்டி கிடைச்சது தான் நந்தினி பத்தின கதை. நந்தினி தான் வந்தியத்தேவனுக்கு தந்த மோதிரத்த கொடுத்தவ.  பெரிய பளுவேட்டரயரோட சம்சாரம். அவ ஆழ்வார்க்கடியானோட தங்கை. ஆழ்வார்க்கடியான் சின்ன பையனா இருந்த போது அவனோட அப்பா நதிக்கரையில அனாதையா கிடந்த ஒரு பெண் குழந்தைய எடுத்து நந்தினின்னு பேரு வச்சு வளத்தாரு. அவரு இறக்கும்போது நந்தினிய ஆழ்வார்க்கடியானோட பொறுப்பில  விட்டுட்டு இறந்திடாறு. இவன் பக்தீயில ரொம்ப ஊறிப்போய் இருந்தாலும் தங்கைய நல்லா கவனிசுக்கிட்டான்.  ஒரு வாட்டி திருவேங்கடத்துக்கு யாத்திரை போனான் ஆழ்வார்க்கடியான். அபப ஒரு விபரீதம் நடந்தது. சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில ஒரு பெரிய போர் நடந்தது. [ நல்லா நியாபகம் வச்சுக்கோங்க..இது திருப்பி திருப்பி வரும், ஒவ்வொருத்தர் பார்வையில.. ] அது நடந்த இடத்துக்கு பக்கத்தில தான் இவன் வீடு இருந்தது. பாண்டியர்களோட படை நிர்மூலமா ஆயிடுச்சு. ரத்த காயத்தோட அவங்க ராஜா வீரபாண்டியன தூக்கி கொண்டு வந்து நந்தினி வீட்டில போட்டாங்க கொஞ்ச வீரர்கள். அவனோட நிலமைய பாத்து இறக்கப் பட்டு பணிவிடை செஞ்சா இவ. ஆனா இத கண்டு பிடிச்சு சோழ வீரர்கள் அங்க நுழைஞ்சு வீர பாண்டியன கொன்னுட்டாங்க, நந்தினிய சிறை பிடிச்சுட்டு போயிட்டாரு பழுவேட்டரையர். மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது இது; அதில இருந்து அவள எப்படியாவது அங்க இருந்து மீட்கனும்னு, காப்பாத்தனும்னு டிரை பண்ணிக்கிட்டு இருக்கான் திருமலை என்கிற ஆழ்வார்க்கடியான்.