Memories

Showing posts with label கான்செர் பற்றி. Show all posts
Showing posts with label கான்செர் பற்றி. Show all posts

Sunday, December 30, 2012

கீமோதெரப்பி..

 சென்ற அத்தியாயத்தில் உயிரியலும் வேதியியலும் ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடயன என்று பார்த்தோம். 1878-இல் 24 வயது மருத்துவ கல்லூரி மாணவர் பால் எஹ்ர்லிச் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தார் - செயற்கை இரசாயனங்களைக் கொண்டு உயிர் திசுக்களை நிறம் மாற்ற வேண்டும் என்கிற முயற்சியே அது. எப்படி தலைக்கு டை அடித்து நிறம் மாற்றம் செய்கிறார்களோ அதை போல. இந்த முயற்சியில் ஒரு வித்தியாசமான விஷயம் அவருக்குப் பட்டது - ரசாயனம் செல்லை முழுமையாக நிறம் மாற்றம் செய்யாமல் செல்லின் பகுதிகளை நிறம் மாற்றம் செய்தது. அதாவது செல்லின் சில ரசாயனங்களை அடையாளம் காட்டியது.

(படம்: பால் எஹ்ரில்ச் )

1882-இல் ராபர்ட் கோச் என்ற விஞ்சானியுடன் கூடு சேர்ந்து ஒரு மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். மைக்கோ பாக்டீரியா என்கிற நுண்ணுயிரியை அடையாளம் காட்டும் ரசாயனத்தை உண்டாக்கினார்.

(படம்: ராபர்ட் கோச்)


(படம்: செல்லின் பகுதியானது நீல சாயம் கொண்டு அடையாளம் காட்டப் படுகிறது)

பால் எஹ்ல்றிச் சில வருடங்களுக்கு பின்னால் இன்னொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். சில வகை விஷத் தன்மை பொருந்திய ரசாயனங்கள் உடலுக்குள் நுழையும்போது உடலானது ஒரு எதிர்விஷங்களை உருவாக்குகிறது. இந்த "எதிர்விஷங்கள்" தற்பொழுது "எதிர் உயிரிகள்" என்று அழைக்கப் படுகின்றன.

ஓர் இரவில் சாதாரணமாக பேசிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு உண்டான எண்ணம்: ஏன்  இந்த எதிர் உயிரிகள் நோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கக்  கூடாது? இந்த எண்ணம் தான் பின் நாளில் கீமோதெரபி உண்டாகக் காரணமானது.

செல்லின் பற்பல பகுதிகளையும், பல நுன்னுயிரிகளையும் அடையாளப் படுத்த புதிய புதிய சாயங்கள் தேவைப் பட்டன. எஹ்ர்ளிச்-இன் பார்வை சாயத் தொழிற்சாலைகள் குவித்து வைத்திருந்த சாயங்களின் மேல் பதிந்தது.

(தேடல் தொடரும்)

Sunday, October 7, 2012

சாயமும், சாதலும்....

கான்சர் ஒரு தீர்க்கமான செயல்பாடுடைய வியாதி. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கும், ஒரு உறுப்பில் இருந்து மற்றொன்றுக்கும்  பரவிக்கொண்டே இருப்பது. பெயருக்கு ஏற்றார் போல புற்று போல பல இடங்களில் இருந்து வெளித் தோன்றிக்கொண்டே இருப்பது. இதை வெட்டித் தள்ளும் கத்தி தான் கதிர்வீச்சு. இந்த கத்தி அதனுடைய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகாது. எனவே இது இறுதி தீர்வாக முடியாது.

தீர்க்கமான செயல்பாடுடைய வியாதிக்கு அதை விட தீர்க்கமான செயல்பாடுடைய சிகிச்சை தேவை. நோயின் வேரைக் கண்டறிந்து அதை வெட்டி வீழ்த்த வேண்டும் கான்சருக்கான மருந்து. கான்சர் செல்லும் அதன் மூலமான நல்ல செல்லும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்பு உடையன. உதாரணமாக கண்டு பிடிக்கப் பட வேண்டிய மருந்து இடது காதை மட்டும் அரிக்க வேண்டும், ஆனால் வலது காதை  ஒன்றும் செய்யக் கூடாது. எப்படி பாருங்கள்?


கான்சரை குணப்படுத்த ஓரளவு நல்ல மருந்து சாயப் பட்டறையில் இருந்து தோன்றியது என்றால் வேடிக்கையாகத் தான் இருக்கும். யோசித்து பாருங்கள் சாயத் தொழிலுக்கும் கான்சருக்கும் என்ன சம்பந்தம் என்று..



1850 வாக்கில் இங்கிலாந்தில் தறி நெசவு வெகு வேகமாக வளர்ந்து வரும் தொழில். தறி நெசவும் சாயத் தொழிலும் சம்பந்தப் பட்ட தொழில்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே? வேகமாக வளரும் நெசவு தொழிலுக்கு சாயத் தொழிலால் ஈடு கொடுக்க முடிய வில்லை. இயற்கையாக பெறப் பட்ட சாயங்களை தயாரிக்கவும், பாதுகாக்கவும் மிகவும் மெனக்கெட வேண்டி இருந்தது. நெசவு செய்யப் பட்ட துணிகள் சாயத்துக்காக காத்துக் கிடந்தன.



(படம்: வயோதிக வில்லியம் பேர்க்கின் மற்றும் இள  வயது புகைப்படம்)

1856-இல் வில்லியம் பெர்கின் என்கிற மாணவன் செய்த இரசாயன ஆராய்ச்சி வயலட் நிற பொருளை ஆராய்ச்சி குடுவையில் உண்டாக்கி இருந்தது. பஞ்சை (பருத்தி) கொண்டு  தொட பஞ்சின் நிறத்தை வயல்ட்டாக மாற்றியது. ரசாயன சாயத் துறை என்கிற புதிய துறை பிறந்தது. நெசவுத் தொழிலுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக தோன்றியது.

மூலம்: சித்தார்த் முக்கர்ஜி.

Sunday, September 30, 2012

கதிரும் வீச்சும் தொடர்கிறது...

கதிரும் வீச்சும் என்கிற தலைப்பில் அறிவியல் அறிஞர்களான மேரி க்யுரி ஆய்வுகள் பற்றி பார்த்தோம். அவருடைய ஆய்வு கதிர் வீச்சின் மோசமான மறு பக்கத்துக்கு சான்றாக இருந்தது. வாரக்கணக்கில் ரேடியத்தை பிரிக்க நடத்திய ஆய்வு அவருடைய கைகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது: தோல் கருகி காய்ந்து உரிய ஆரம்பித்தது. உள்ளிருந்து தசைகள் எரித்து கருகியது போலிருந்தது. கதிர் வீச்சின் காரணமாக அவருடைய எலும்பு மஜ்ஜை எரிந்து தீராத ரத்த சோகை வேறு வந்திருந்தது. எலும்பு மஜ்ஜை தான் ரத்தம் சுரக்க காரணம் என்று உங்களுக்க்து தெரிந்திருக்கும்.


ஆராய்சிகள் பல செய்து பல வருடங்களுக்கு பின்னால் தான் இவற்றுக்கான காரணங்கள் புரிய ஆரம்பித்தது. டி.என்.எ  என்கிற செல்லின் மூலக்கூறினை இந்த கதிர்வீச்சு தாக்குகின்றது என்று புரிய ஆரம்பித்தது அறிஞர்களுக்கு. குழந்தை அப்பா, அம்மாவின் அம்சங்களையும் தாத்தா, பாட்டி போன்ற பரம்பரை குணாதிசயங்களுடன் பிறக்கக் காரணம் தான் இந்த டி.என்.எ. ஒரு தலை முறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு தகவல்களை எடுத்து செல்லக்கூடியது. இந்த டி.என்.எ கதிர்வீச்சால் பாதிக்கப் பட்டு கான்சராகிறது.



கான்சரை உண்டாக்கும் எக்ஸ் கதிர்கள் கான்சரை அழிக்கவும் உதவுகிறது.1896 ஆம் ஆண்டு (எக்ஸ் கதிர்கள் கண்டு பிடிக்கப் பட்ட மறு ஆண்டு) எமில் கிரப் என்கிற மருத்துவக் கல்லூரி மாணவர் ரோஸ் லீ என்ற மருத்துவர்கள் கை விடப் பட்ட மூதாட்டிக்கு இருந்த மார்பக புற்று நோயை எக்ஸ் கதிர்கள் கொண்டு தாக்கினார்.தொடர்ந்து சுமார் 18 நாட்கள் இந்த வலி மிகுந்த மருத்துவம் செய்தார். லீ நிலையில் நல்ல முன்னேற்றம் வந்தது, சிகிச்சை முடிந்து பல மாதங்கள் கழித்து லீ மருத்துவரை பார்க்க திரும்ப வந்தார். கிரப்புக்கு எக்ஸ் கதிர்கள் கொண்டு மருத்துவம் செய்வதில் நம்பிக்கை வந்தது. ஆனாலும் ஒன்று புலப்பட்டது: ஆரம்ப நிலையில் கான்சரை குணப்படுத்த எக்ஸ் கதிர் பயன்படும் ஆனால் முதிர்ந்த கான்சருக்கு இது தீர்வாகாது. இந்த கதிர்வீச்சு மருத்துவம் இன்னும் ரேடியோதேரப்பி என்ற பெயரில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

மூலம்: சித்தார்த் முக்கர்ஜி.

Sunday, April 8, 2012

புற்றுநோய் சிகிச்சை முடிந்தது : யுவராஜ் சிங் நாளை நாடு திரும்புகிறார்


செய்தி, படம் - நன்றி: தினகரன்





Thursday, March 1, 2012

யுவராஜ் சிங் - புகைப்படங்கள்

இரண்டாவது கீமோ முடிந்து விட்டது...யூவி (யுவராஜை இப்படி தான் கூபிடுகிரார்கள்) சிங்கம் தான் !!



டுவிட்டரில் தொடர: yuvsingh09
இணைய முகவரி : http://www.yuvrajsingh.in/index.html


கும்ப்ளே யூவியை பாஸ்டனில் போய் பார்த்தார். போட்டோ இங்கே...


Sunday, February 26, 2012

கதிரும் வீச்சும்

சில மாதங்கள் கழித்து பிரான்ஸ் நாடு விஞ்ஞானி ஹென்றி பெக்வேறல், வில்ஹேல்மிங் கண்டுபிடிப்பை படித்து தெரிந்து மேலும் அதை ஆராய்ந்து புது கண்டுபிடிப்பை வெளியிட்டார்: சில தனிமங்கள் - யுரேனியம்  போன்றவை - இயற்கையாகவே எக்ஸ் கதிர்வீச்சை உருவாகுகின்றன. பிரான்சிலேயே பெக்வேரைல்ன் நண்பர்கள், பியரி மற்றும் மேரி க்யுரி இத்துறையில் தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார்கள். தன்னிச்சையாக கதிர்வீச்சை வெளியிடும் தனிமங்கள் கண்டுபிடிப்பதே அவர்கள் லட்சியம். அதற்காக ஒரு கருவியை கண்டுபிடித்தார்கள் 1880 ஆம் வருடம்.
[ புகைப்படம்: மேரி க்யுரி (நிற்பவர்), அவர் கணவர் பியரி க்யுரி (அமர்ந்திருப்பவர்) ] 


எவ்வளவு குறைவான கதிர்வீச்சையும் கண்டுபிடிக்கவும் அளவிடவும் கூடிய கருவி அது. அதைக் கொண்டு அருகாமையில் இருக்கக் கூடிய இடங்களுக்கு சென்று ஏதேனும் கதிர்வீச்சு கொண்ட வஸ்து இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த கருவி முயற்சி வீண் போகவில்லை, கருவி கதிர்வீச்சை தரும் பொருள் இங்கு இருக்கிறது என்று காட்டியது.  அந்த இடம் காட்டின் நடுவே இருந்த ஒரு தாது உற்பத்தி நிலையத்தின் கழிவுப்பொருள்  கூடம். டன் கணக்கில் இருந்த கழிவு பொருளை சுத்திகரிக்க ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான டன் தண்ணீர் தேவைப் பட்டது. அதில் இருந்து இறுதியாக ஒரு கிராமை விடக் குறைவான அந்த தனிமத்தை பிரித்து எடுத்தார்கள், 1902-ஆம் வருடம்.
[ புகைப்படம்: கதிர்வீசும் ரேடியம்]


யுரேனியத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிக கதிர்வீச்சை வீசிக் கொண்டிருந்தது அது.தன்னையே உருக்கி ஒளியாக கதிர்வீசிக் கொண்டு இருந்தது அது. இந்த தனிமத்தை பிரித்து தனிமைப் படுத்துவதற்கு பல மாதங்கள் ஆனது. நிலையிலாத தனிமம் அது, வஸ்து (mass) என்பதற்கும் எனர்ஜி (energy) என்பதற்கும் நடுவில் இருந்தது. ஒளியை ஏற்படுத்திக் கொண்டிருந்த இந்த தனிமத்தை "ரேடியம்" என்று பெயரிட்டு அழைத்தார் மேரி கியூரி. கிரேக்க மொழியில் ஒளி என்று பொருள் தரக்கூடிய  வார்த்தை அது.


[ புகைப்படம்: ஆராய்ச்சி கூடத்தில் மேரி க்யுரி ]

 கதிர்வீச்சு உடலின் தசைகளை தாண்டி போகக் கொடிய எக்ஸ் கதிர்கள் வெளியிடக் கூடியது என்பது தெரியும். இத்தகைய குணத்தால் தான் ராண்ட்ஜன் தன் மனைவியின் கையை எக்ஸ் ரே படம் பிடித்தார். (மேலும் தகவலுக்கு நம்முடைய தளத்தில் இந்த பதிப்பை பாருங்கள்: கதிர்கள் - வல்லிய கதிர் மெல்லிய வீச்சு ) ஆனால் தசைகளுக்குள்ளே தன்னுடைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பது ராண்ட்ஜனுக்கும், மேரி க்யுரிக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Sunday, January 29, 2012

X கதிர்கள் - வல்லிய கதிர் மெல்லிய வீச்சு

 1895- ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஜெர்மானிய விஞ்சானி வில்ஹெல்ம் ரொண்ட்ஜென், எலக்ட்ரான் கதிர் குழாய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். காற்றுப் புக முடியா வெற்றுக் குழாயில் எலக்ட்ரான் துகள் உற்பத்தி செய்து ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது.  அப்போது இந்த எலக்ட்ரான் குழாயில் இருந்து வினோத கதிர்க் கசிவு ஏற்படுவது புலப்பட்டது இவருக்கு. அறையில் இருந்த திரையில் ஒரு ஒளி வட்டம் தோன்றியிருந்தது.
தன் மனைவி "ஆனா"வின் கையை கதிர்க் கசிவின் வழியில் வைத்து பின்னால் ஒரு  புகைப்படத் தகடை வைத்து பார்த்தால் ஆனாவின் கை எலும்புகளையும் அவர் கையில் அணிந்து இருந்த கல்யாண மோதிரத்தையும் காட்டியது. "என்னுடைய சாவைப் பார்த்தேன்" என்று சொன்னார் "ஆனா" புகைப் படத்தை பார்த்த பின்பு. இனம் தெரியாத இந்த கதிர்களை  X கதிர்கள் என்று அழைத்தார் வில்ஹெல்ம். உடலை அறுக்காமல் உடலின் உள்ளே பார்க்கக் கூடிய சாத்தியம் தோன்றியது.
  
- கதிர் வீச்சு தொடரும் 
(நன்றி: சித்தார்த்த முகர்ஜி )  


Friday, December 16, 2011

ஆண்டி செப்டிக்

   காயங்கள் செப்டிக் ஆவது ஒரு பெரிய மர்மமாக இருந்தது டாக்டர்களுக்கு. 1865 ஆம் ஆண்டு ஜோசப் லிஸ்டர் என்ற மருத்துவர் காயங்கள் திறந்து இருப்பதால் தான் செப்டிக் ஆகிறது என்று கண்டுபிடித்தார். பிரான்ஸ் நகர ரசாயன விஞ்ஞானி லூயிஸ் பாய்ச்ச்சர் திறந்த நிலையில் இருந்த மாமிசம் சீக்கிரம் அழுகி விடுவதையும், அதே மாமிசம் காற்றுபுக முடியாத கண்ணாடி குவளையில் வெகு நாள்கள் கெடாமல் இருப்பதையும் வைத்து, காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுன்னுயிர்கள் இருப்பதால் தான் இந்த மாற்றம் நிகழ்கிறது என்ற கண்டு பிடிப்பை வெளியிட்டார்.  
இந்த கண்டு பிடிப்பும் காயங்கள் அழுகுவதும் ஏறக்குறைய ஒன்றே என்று லிஸ்டர் எண்ணினார். தான் கிராமத்துக்கு அருகே சாக்கடை சுத்தம் செய்பவர்கள் கார்பாலிக் அமிலத்தை பயன்படுத்துவதை பார்த்தார். அந்த அமிலத்தால் காயங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தார் லிஸ்டர். சாக்கடை சுத்தம் செய்வதை கொண்டு காயம் சுத்தம் செய்வது அவருக்கு வித்தியாசமாக தெரியவில்லை. இருந்தாலும் செப்டிக் ஆகும் நிலையில் இருந்த பல காயங்கள் நல்ல நிலைக்கு மாற ஆரம்பித்தன, முன்னேற்றம் ஏற்ப்பட்டன. இதுவும் ஒரு மிக சிறந்த கண்டுபிடிப்பே. அறுவை சிகிச்சை ஏற்படுத்தும் காயத்தையும் குணமாக்குவது சாத்தியமே என்ற நிலைக்கு மருத்துவ உலகம் முன்னேற ஆரம்பித்தது.

நன்றி - சித்தார்த்த முகர்ஜி

Monday, December 12, 2011

மயக்க மருந்து




   1846 அக்டோபர் 16  - அமெரிக்காவில் மாசசுசட்ஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் எட்வர்ட் அப்பாட் என்ற நோயாளிக்கு கழுத்தில் இருந்த கட்டியை புதுமையான முறையில் நீக்குவதாக கூறினார் மருத்துவர் வில்லியம் மார்டன். மருத்துவர்கள் பலரும், வேறு பலரும் கூடி பார்த்துக் கொண்டிருக்கையில், ஈத்தர் என்ற பொருள் நிரம்பிய கண்ணாடி குப்பியை கொடுத்து நன்கு மூச்சு இழுக்க சொன்னார் வில்லியம். சில முறை அப்படி செய்திருப்பார் எட்வர்ட், தன்னை மறந்த மயக்க நிலையை அடைந்தார் எட்வர்ட். சில சீக்கிர அசைவுகளில் கட்டியை நீக்கி தையல் போட்டார்  மருத்துவர்.
   சிகிச்சை முடிந்த பிறகு "வலி எதுவும் தெரியவில்லை, ஆனால் அறுவை சிகிச்சை நடக்கிறது என்பது தெரிந்து இருந்தது எனக்கு" என்று கூறினார் எட்வர்ட். மருத்துவ உலகில் அப்போதைக்கு அது ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பு. இதற்கு அப்பறம் பல மணி நேரம் நீடிக்கக் கூடிய அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது, பல்லாயிரக் கணக்கான உயிர்களை காப்பாற்ற முடிந்தது.
    ஆனாலும் கத்தி பட்ட இடத்தில் நோய் தோற்று ஏற்படுவது சகஜமாக இருந்தது. செப்டிக் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து உருவாக்கும் சூழ்நிலை இருந்தது.



Wednesday, December 7, 2011

அறுவை சிகிச்சை





பதினேழாம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சைகள் முடி திருத்தகத்தின் பின் பகுதியில் இருந்த இருண்ட அறையில் செய்யப்பட்டன. மயக்க மருந்து என்பது கண்டு பிடிக்கப் படாத காலம் அது. கத்தியால் மருத்துவர் வெட்டும் போது நோயாளி அசைந்து விடாமல் இருக்க தோல் வார் போட்டு இறுகக் கட்டிவிடுவார்கள், கட்டிலோடு. மருத்துவர் கத்தியால் வெட்டும் போதோ, தையல் போடும் போதோ சிலர் கதறி துடித்து விடுவார்கள், சில பெண்கள் ஒரு சத்தம் கூட எழுப்பாமல் சிகிச்சையை முடித்து விடுவார்கள்.  சில சமயங்களில் இரும்பு கத்தியை பழுக்க காய்ச்சி வெட்டுவார்கள், அரிக்கக் கூடிய அமிலங்கள் பயன்படுத்தப் பட்டன. அமிலங்கள் பயன் படுத்தும் போது ஒரு சொட்டு உடலில் வேறு இடத்திலோ காயத்திலோ பட்டால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. மயக்க மருந்து இல்லாததைப் போல நோய் தோற்று இல்லாமல் இருக்க ஆண்டி-செப்டிக் (anti-septic) எதுவும் இல்லை.  ஒருவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிழைத்து வருவது அதிசயம் தான். வெட்டும் போது, தைக்கும் போது நோயாளி கத்துவதையும் கதறுவதையும் பொருட் படுத்தாமல் மனதை திடப் படுத்திக் கொண்டு மருத்துவர்கள் அதை செய்து வந்தார்கள். 

பதினேழாம் நூற்றாண்டில் ஸ்கொட்லாந்து அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் ஹன்டர் கான்சர் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி கொண்டு இருந்தார். அவர் கான்சர் கட்டி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகருமானால் அதை உடலில் இருந்தே வெளியே நகர்த்துவது சாத்தியமே என நினைத்தார். பல வருடங்கள் அறுவை சிகிச்சை செய்ததாலே அவர் ஒரு விஷயத்தை கவனித்தார். அதன் அடிப்படையில் நகரக் கூடிய கட்டிகள், நகராத கட்டிகள் என்று பிரிக்க ஆரம்பித்தார். கான்சரை பாகுபாடு செய்ய வேண்டும் என்று முதலில் செய்தவர் அவரே. இன்று கான்சரின் முதலும் அடிப்படையுமான ஒன்று அதை பாகுபாடு செய்வதே. 





Sunday, December 4, 2011

கான்சர் பற்றி...

 இரசாயனம் பற்றியோ மருத்துவம் பற்றியோ தெரியாதவர்களுக்கு கான்சர் சிகிச்சை எவ்வளவு கடினமானது என்பது புரிவதில்லை. உதாரணமாக சொல்ல வேண்டுமானால் உபயோகப் படுத்தும் மருந்து இடது காதை அரிக்க வேண்டும், ஆனால் வலது காதை ஒன்றும் செய்யக் கூடாது. கான்சர் செல்லும் அதை உருவாக்கிய நல்ல செல்லும் அவ்வளவு நெருங்கிய தொடர்புடையன
-- வில்லியம் வோக்லோம் 

இந்த உலகத்தில் உயிர் உருவானது ஒரு இரசாயன விபத்து.
-- பவுல் எர்லிச், 1870   

ஆங்கிலத்தில் கீழே:


Those who have not been trained in chemistry or medicine may not realize how difficult the problem of cancer treatment really is. It is almost - not quite, but almost - as hard as finding some agent that will dissolve away the left ear, say, and leave the right ear unharmed. So light is the difference between the cancer cell and its normal ancestor -- William Woglom

Life  is... a chemical incident. -- Paul Ehrlich as a school boy, 1870

Thursday, November 24, 2011

கான்சர் எப்படி தோன்றுகிறது...

இதை தெரிந்து கொள்ள மனித உடலின் அடிப்படை கட்டுமானத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். மனித உடம்பு பல கோடிக்கணக்கான செல்களால் கட்டப் பட்டுள்ளது. வீடு ஆயிரக் கணக்கான செங்கலால் கட்டப் பட்டுள்ளதைப் போல. செல் என்பது உடலின் அடிப்படை மூலக்கூறு. செல்கள் பெரிதாவதில்லை, மனித உடல் வளரும்போது கூட. பெரிய வீடு கட்ட வேண்டுமானால் நாம் செங்கல்களைப் பெரிதாக்குவதில்லை, ஆனால் செங்கல்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவோம். அது போல உடல் வளரும்போது செல்கள் எண்ணிக்கையில் அதிகமாகுகின்றன. ஒவ்வொரு செல்லும் அதை போல் இன்னொரு செல்லை உருவாகுகிறது. ஒன்று இரண்டாகும், இரண்டு நாலாகும், நாலு எட்டாகும் இது போல பெருகி கொண்டே இருக்கும். இப்படி ஒரு செல் இன்னொரு செல்லை உருவாகுவதற்கு செல்லுடைய அடிப்படை கட்டுமானத்தை (செல்லுடைய மூளை-ன்னு நினைத்துக் கொள்ளுங்கள்) பிரதி எடுக்கிறது. அப்படி பிரதி எடுக்கும் போது வரும் குறைபாடுகள் தான் பின்னர் கான்சராக உருவாகிறது.  


நன்றி: சித்தார்த்தா முகர்ஜி-யின் நோய்களின் அரசன் கான்சர் 



Thursday, October 20, 2011

ரத்தத்தில் சலம் - வெள்ளை ரத்தம்

1845-வது வருடம் மார்ச் 19, ஸ்காட்லாந்து மருத்துவர் ஜான் பென்னெட் ஒரு வித்தியாசமான நோயாளிக்கு சிகிச்சை அளிக்க நேரிட்டது. அந்த நோயாளி கூரை வேய்பவர். அவருக்கு வயிற்றில் வித்யாசமான ஒரு கட்டி இருந்தது. காரணமின்றி காய்ச்சல் வேறு, அடிக்கடி வயிற்றில் வலி இருந்தது. எவளவோ சிகிச்சை அளித்தும் பலனில்லை. அவரை பரிசோதனை செய்யும் போது ஜான் ஒரு விஷயத்தை கவனித்தார், நோயாளியின் ரத்தம் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதனால் இப்படி அறிக்கை எழுதினார்:"இந்த நோயாளி வித்தியசமானவர். இவருடைய வியாதிக்கான காரணம் ரத்தத்தில் ஏற்பட்ட சலம் - இது ரத்தத்தில் இருக்கிறது" இந்த கேசை அவர் "ரத்தத்தில் சலம்" என்று அழைத்தார். சலம் உண்மையில் ரத்த வெள்ளை அணுக்களால் வருகிறது. உடலில் காயம் வரும் போது, வெள்ளை அணுக்கள் நோய் கிருமிகளை எதிர்த்து சண்டையிடும் போது சலம் தோன்றுகிறது. இந்த நோயாளியின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் நீக்கமற நிறைந்து இருந்தன. உடலில் எங்கு அடி பட்டிருக்கிறது என்று தேடினார் ஆனால் எங்கும் அதற்கான அறிகுறி கிடைக்கவில்லை. அதோடு "ரத்தத்தில் சலம்" பைல் மூடப் பட்டது.

ஜான் பென்னெட்டின் இந்த கருத்து மிகவும் தவறானது. ரத்தம் சலம் வைப்பது என்பது நம்ப முடியாத விதமாக இருப்பதாக ருடால்ப் விர்சோவ் என்கிற ஜெர்மானிய மருத்துவர் அறிக்கை ஒன்றை சமர்பித்தார், ரத்தம் வெள்ளையாக மாறுவதற்கு சரியான காரணம் தெரியவில்லை என்பதே சரி என்று அதில் வாதிட்டார். இந்த வியாதியை "வெள்ளை ரத்தம்" என்று அழைத்தார். இது மிகவும் பொருத்தமானதே, நுண்நோக்கியை (மைக்ரோஸ்கோப்) வைத்து பார்க்கும் போது ரத்தம் முழுவதும் பெரிய பெரிய வெள்ளை ரத்த அணுக்கள் வியாபித்து இருப்பதனால் ரத்தம் வெள்ளை நிறமாக தோன்றும். இந்த வியாதிக்கு 1847-இல் "லுக்கீமியா" என்று பெயரிட்டார். லூகொஸ் என்கிற கிரேக்க வார்த்தைக்கு "வெள்ளை" என்கிற அர்த்தம் வரும்.

நன்றி: நோய்களின் அரசன் - கான்சர் - சித்தார்தா முக்கர்ஜி 

எனது கருத்து: மருத்துவரும் மனிதரே. அவருடைய அறிவுக்கு ஏற்ப ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதும், சிகிச்சை அளிப்பதும் செய்கிறார். எனவே நல்ல, திறமையான மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நோயாளிக்கு நல்லது. ஜான் பென்னெட் தனக்குத் தெரியவில்லை என்று கூடத் தெரியாமல் ரத்தத்தில் சலம் என்கிற முடிவுக்கு வந்தார், ஆனால் ருடால்ப் வெளிப்படையாக, தனக்கு இதை பற்றி தெரியவில்லை என்பதை ஒத்துக் கொண்டார். அதனால் ருடால்ப், ஜானை விட அறிவு மிகுந்தவர் என்பது என்னுடைய கருத்து. தெரியாது என்று சொல்பவர் அறிவு குறைந்தவர் என்று எண்ணுபவர்கள் ஜான் பென்னெட் தான் அறிவாளி என்று வாதிடலாம். திறமையான மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நோயாளிக்கு நல்லது என்பதாலேயே ரஜினி இந்தியாவில் சிறந்த ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஆசியாவில் சிறந்த சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேருகிறார். மருத்துவரையும் மருத்துவமனையையும் ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது சிறந்தது. 


Wednesday, October 12, 2011

நண்டு, சுமை


கி.மு 400 கிரேக்க அறிஞர் ஹிப்போக்ரட்ஸ் காலத்தில் "கார்கினோஸ்" என்கிற பெயர் தோன்றியது. இந்த பெயராலேயே கான்செர் வியாதி அழைக்கப் பட்டது. கிரேக்க மொழியில்  கார்கினோஸ் என்றால் நண்டு என்று பொருள். பின் வந்த மருத்துவர்கள் இந்த பெயருக்கு மேலும் விளக்கம் சேர்த்தார்கள். கான்செர் கட்டியும், சுற்றியிருக்கக் கூடிய பருத்த ரத்தக் குழாய்களையும் சேர்த்து பார்க்கும் போது கால்களை நன்கு பரப்பி மணலில் பதிந்து இருக்கும் நண்டு போன்று இருந்தது சிலருக்கு. நண்டின் ஓடு போன்று கடினமான கட்டியின் மேற்பரப்பு சிலருக்கு நண்டை நியாபகப் படுத்தியது. சிலர், தோலுக்கு அடியில் நண்டு போன்று ஒரு இடத்தில் இருந்து இது அடுத்த இடத்துக்கு சத்தமின்றி பரவுவதை நினைத்துக் கொண்டார்கள்.  இன்னொரு கிரேக்க வார்த்தையும் புழக்கத்தில் தோன்றியது - "ஆன்கொஸ்". கிரேக்க மொழியில் இதற்ககு சுமை என்று பொருள் உண்டு. ஒரு வகையில் இது சுமை தான். 
கிரேக்கர்களுக்கு உடலின் மூலக்கூறு "செல்" பற்றி தெரிந்து இருக்க நியாயம் இல்லை. எனவே பல பெயர்களை கொடுத்து கொண்டார்கள்.

நன்றி: நோய்களின் அரசன் - கான்செர் பற்றிய வரலாறு - சித்தார்தா முகர்ஜி

Saturday, October 8, 2011

Emperor All Maladies - Biography of Cancer ( நோய்களின் அரசன் - கான்செர் பற்றிய வரலாறு)



இந்த புத்தகம் தமிழ்லே இன்னும் வரல்ல. இது கான்செர் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அறிவை ஏற்படுத்துற புத்தகம். இலக்கியத்துக்கான உயர்ந்த பரிசு - புலிட்சர் பரிசு - சித்தார்தா முகர்ஜி என்கிற புது தில்லியில் பிறந்த அமரிக்க குடியுரிமை வாங்கிவிட்டருக்கு கிடைத்திருக்கிறது.

ரொம்ப நல்லாவே எழுதி இருக்காரு (சுமார் 600 பக்கங்கள்)

அவருடைய இணைய தளம்: http://sidmukherjee.com/
புத்தகத்தை வாங்க இந்த இணைப்பை சொடுக்கவும்: http://www.amazon.com/Emperor-All-Maladies-Biography-Cancer/dp/1439107955
அவரை பற்றி தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்: http://en.wikipedia.org/wiki/Siddhartha_Mukherjee 
புத்தகத்தை பற்றி இங்கு பேசுகிறார்: http://www.amazon.com/gp/mpd/permalink/m1YK7X32OA8WBY/ref=ent_fb_link





Wednesday, September 28, 2011

கான்செர் புதிய நோயா ?

அகழ்வாராய்ச்சியில் ஒரு பிரிவு இருக்கிறது. அதில் அக்காலத்தில் புதைக்கப் பட்ட உயிரினங்களின் எலும்பு, முடி மற்றும் பல் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து அக்கால விலங்கு, மனிதர்களின் பழக்க வழக்கங்களையும் நோய் நொடி முதலியவற்றையும் கண்டு பிடிப்பார்கள். அந்த பிரிவு பல மனித எலும்புக்கூடுகளில் கான்செர்-ஐ கண்டுபிடித்துள்ளது. அந்த எலும்புக்கூடுகள் மிக மிகப் பழையவை. சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் ஆங்காங்கே இந்த நோய் பற்றிய குறிப்பு வருகிறது. எகிப்தியர்கள் இதை பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள், கிரேக்கர்கள் இந்த நோய்க்கு கான்செர் என்கிற பெயரை கொடுத்திருக்கிறார்கள். எகிப்தியரும் கிரேக்கர்களும் இதற்கு மருந்து இல்லை என்றே எழுதி வைத்திருக்கிறார்கள்.  

இந்த நோய் ஒன்றும் நவீன காலத்தியது இல்லை. இது மனித உலகின் ஆதி நோய். இது பற்றிய விழிப்புணர்வு அன்று இல்லாமல் போனது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. 

அந்த விழிப்புணர்வு இன்றும் இல்லை என்பது கொடுமை. இதற்கு கொடுக்கும் விலை ஈடு இணை இல்லாதது....

நன்றி: சித்தார்த்தா முகர்ஜி-யின் 'நோய்களின் அரசன் - கான்செர்'.