Person who made many lives change better. பலரது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியவர்.மேலும்...
Memories
Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts
Sunday, April 27, 2014
Sunday, December 30, 2012
கீமோதெரப்பி..
சென்ற அத்தியாயத்தில் உயிரியலும் வேதியியலும் ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடயன என்று பார்த்தோம். 1878-இல் 24 வயது மருத்துவ கல்லூரி மாணவர் பால் எஹ்ர்லிச் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தார் - செயற்கை இரசாயனங்களைக் கொண்டு உயிர் திசுக்களை நிறம் மாற்ற வேண்டும் என்கிற முயற்சியே அது. எப்படி தலைக்கு டை அடித்து நிறம் மாற்றம் செய்கிறார்களோ அதை போல. இந்த முயற்சியில் ஒரு வித்தியாசமான விஷயம் அவருக்குப் பட்டது - ரசாயனம் செல்லை முழுமையாக நிறம் மாற்றம் செய்யாமல் செல்லின் பகுதிகளை நிறம் மாற்றம் செய்தது. அதாவது செல்லின் சில ரசாயனங்களை அடையாளம் காட்டியது.
(படம்: பால் எஹ்ரில்ச் )
1882-இல் ராபர்ட் கோச் என்ற விஞ்சானியுடன் கூடு சேர்ந்து ஒரு மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். மைக்கோ பாக்டீரியா என்கிற நுண்ணுயிரியை அடையாளம் காட்டும் ரசாயனத்தை உண்டாக்கினார்.
(படம்: ராபர்ட் கோச்)
(படம்: செல்லின் பகுதியானது நீல சாயம் கொண்டு அடையாளம் காட்டப் படுகிறது)
பால் எஹ்ல்றிச் சில வருடங்களுக்கு பின்னால் இன்னொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். சில வகை விஷத் தன்மை பொருந்திய ரசாயனங்கள் உடலுக்குள் நுழையும்போது உடலானது ஒரு எதிர்விஷங்களை உருவாக்குகிறது. இந்த "எதிர்விஷங்கள்" தற்பொழுது "எதிர் உயிரிகள்" என்று அழைக்கப் படுகின்றன.
ஓர் இரவில் சாதாரணமாக பேசிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு உண்டான எண்ணம்: ஏன் இந்த எதிர் உயிரிகள் நோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கக் கூடாது? இந்த எண்ணம் தான் பின் நாளில் கீமோதெரபி உண்டாகக் காரணமானது.
செல்லின் பற்பல பகுதிகளையும், பல நுன்னுயிரிகளையும் அடையாளப் படுத்த புதிய புதிய சாயங்கள் தேவைப் பட்டன. எஹ்ர்ளிச்-இன் பார்வை சாயத் தொழிற்சாலைகள் குவித்து வைத்திருந்த சாயங்களின் மேல் பதிந்தது.
(தேடல் தொடரும்)

Saturday, December 29, 2012
உலகம் அழியும்னு சொல்லிட்டு திரிஞ்சாய்களே..என்னாச்சி?
எல்லாருக்கும் இந்த கதை தெரிஞ்சாலும், தொகுத்து சொல்லிப் புடலாம்னு பாக்றேனுங்கோ..
மாயர்கள் அப்படீங்கற இனம் இப்ப மெக்ஸிகோ நாடு இருக்கற இடத்தில முன்ன வாழ்ந்தாங்க. அவங்க ஜோசியம் பாக்கறதில நம்மள மிஞ்சினவங்க. வானத்தில இருக்கற கிரகங்கள எல்லாம் கணிச்சி சுத்தமா ஜாதகம் கணிச்சாங்க. அந்த ஜாதகம் இந்த மாசத்தில முடியறதா இருந்தது. அத பாத்த உடனே பல பேரு கப்சா உட ஆரமிச்சாங்க பாருங்க...
மாயகர்கள் ஜாதகம் கணிக்கரத முடிக்க காரணம் உலகம் அழியரதால தான். நிபுரு அப்படீன்னு ஒரு கிரகம் (?) இருக்கறதாவும் அது பூமி மேல இந்த டிசம்பர் மாசம் மோதும்னும் சொன்னாயங்க சில பேரு. இத உலகம் அழிகிற கான்சப்ட் வச்சு ஹாலிவூட் படம் எடுத்து காசு பாத்தாங்க கொஞ்ச பேரு. கொழந்த பெருரத கூட தள்ளிப்போட்டவங்க சில பேரு. எல்லா நல்ல காரியங்களையும் தொடங்க யோசிச்சாங்க ரொம்ப பேரு.
எப்ப டி.வீ. பெட்டிய திருக்கி (சாரி, பழைய நியாபகம்) ...அமுக்கி.. டிஸ்கவரி சானல், நஷனல் ஜீயோகிரபி வச்சா இந்த கத தான் ஓடும். நம்ம இனைய தளத்தில கூட ஒரு கருத்து கணிப்பு வச்சோம் - அழியுமா? அழியாதா? அப்படீன்னு...அதுல கூட யாரும் அழியும்னு சொல்லல.
நாசா (அமெரிக்க இஸ்ரோ) போன மாசத்தில இருந்தே தெளிவா சொல்ல ஆரம்பிச்சுது, ஒன்னும் நடக்காது அப்படீன்னுட்டு. உலகம் அழியும்ன்னு சொன்ன பயக எல்லாம், உலகம் அழியர வருஷம் 2012 இல்ல 3012 அப்படீன்னு உளற ஆரம்பிச்சானுங்க. இப்படியா யாரும் கண்டுக்க கூட இல்லாம அவய்ங்க சொன்ன நாள் வந்து போச்சி.
நீங்க என்ன செஞ்சீங்க, நெனச்சீங்க அப்படீங்கறத பின்னூட்டத்தில போடுங்க....
Sunday, December 2, 2012
Stress decoded— relax and thrive this season
Stress decoded— relax and thrive this season
What's causing it?
What's at risk?
What does stress have to do with my eyes?
How do I get rid of it?
What's causing it?
The most common cause of stress is feeling like you have little or no control, but that sense of helplessness comes in many forms—like putting up with inebriated party guests and Uncle Wayne's off-color jokes.
Biologically, stress causes your body to shift into survival mode where it releases epinephrine and cortisol, a.k.a., "the stress hormones." When these hormones appear, they trigger the liver to release extra glucose for a boost of energy to fuel the "fight or flight" response.
This shift that stress brings upon the body causes your heart rate and blood pressure to rise. Trouble surfaces when you spend too much time in survival mode.
What's at risk?
The "breaking point" between a decent level of stress and stress overload can trigger numerous side effects. Since stress is a subjective phenomenon, its effects are specific to each individual. However, some common side effects include:
| • a weakened immune system • diabetes • high blood pressure • weight gain/loss • stroke | • heart attack • hypertension • depression • insomnia • emotional disorders |
What does stress have to do with my eyes?
Due to the interconnectedness of the body, most of the common side effects listed above can affect the eyes in one way or another. Joseph Udvari, a VSP doctor at West Hills Vision Center in Moon Township, PA explains a few of the possible repercussions:
"High blood pressure and hypertension can strain your eye's blood vessels and optic nerve, possibly resulting in bleeding, difficulty seeing clearly, or permanent vision loss. Strokes often leave their victims with vision impairments, and insomnia can lead to dry and bloodshot eyes." For a deeper look into diabetes' effects on the eyes, check out this month's Your Eye Health article.
How do I get rid of it?
Chronic and intense stress often leads its victims into self-destructive coping strategies, which don't usually solve the problem. Taking a self-constructive approach has better potential for success. Here are some simple pointers from Dr. Udvari on how to help yourself RELAX.
R - Rest
|
Aim to get seven to eight hours of sleep each night.
|
E - Eat Well
|
Balance out the holiday sweets with fruits and vegetables.
|
L - Laugh
|
Laughing releases endorphins, which are natural mood enhancers.
|
A - Accept
|
Accept the things you can't change—such as traffic jams and annoying coworkers.
|
X - Exercise
|
Like laughing, regular exercise also naturally improves your mood.
|
If you find that the stressors in your life are becoming too much to handle, contact your primary care physician as soon as possible to avoid a serious health condition. To prevent the effects of stress on your eyes, be sure to schedule your annual eye exam where your VSP doctor can look for potential health or vision problems.
Courtesy: http://email-vspenvision.com/newsletter.jsp?nn=vsp_feature_1211&s=Zr6A&i=878822654306
Sunday, October 7, 2012
சாயமும், சாதலும்....
கான்சர் ஒரு தீர்க்கமான செயல்பாடுடைய வியாதி. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கும், ஒரு உறுப்பில் இருந்து மற்றொன்றுக்கும் பரவிக்கொண்டே இருப்பது. பெயருக்கு ஏற்றார் போல புற்று போல பல இடங்களில் இருந்து வெளித் தோன்றிக்கொண்டே இருப்பது. இதை வெட்டித் தள்ளும் கத்தி தான் கதிர்வீச்சு. இந்த கத்தி அதனுடைய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகாது. எனவே இது இறுதி தீர்வாக முடியாது.
தீர்க்கமான செயல்பாடுடைய வியாதிக்கு அதை விட தீர்க்கமான செயல்பாடுடைய சிகிச்சை தேவை. நோயின் வேரைக் கண்டறிந்து அதை வெட்டி வீழ்த்த வேண்டும் கான்சருக்கான மருந்து. கான்சர் செல்லும் அதன் மூலமான நல்ல செல்லும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்பு உடையன. உதாரணமாக கண்டு பிடிக்கப் பட வேண்டிய மருந்து இடது காதை மட்டும் அரிக்க வேண்டும், ஆனால் வலது காதை ஒன்றும் செய்யக் கூடாது. எப்படி பாருங்கள்?
கான்சரை குணப்படுத்த ஓரளவு நல்ல மருந்து சாயப் பட்டறையில் இருந்து தோன்றியது என்றால் வேடிக்கையாகத் தான் இருக்கும். யோசித்து பாருங்கள் சாயத் தொழிலுக்கும் கான்சருக்கும் என்ன சம்பந்தம் என்று..
1850 வாக்கில் இங்கிலாந்தில் தறி நெசவு வெகு வேகமாக வளர்ந்து வரும் தொழில். தறி நெசவும் சாயத் தொழிலும் சம்பந்தப் பட்ட தொழில்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே? வேகமாக வளரும் நெசவு தொழிலுக்கு சாயத் தொழிலால் ஈடு கொடுக்க முடிய வில்லை. இயற்கையாக பெறப் பட்ட சாயங்களை தயாரிக்கவும், பாதுகாக்கவும் மிகவும் மெனக்கெட வேண்டி இருந்தது. நெசவு செய்யப் பட்ட துணிகள் சாயத்துக்காக காத்துக் கிடந்தன.
1856-இல் வில்லியம் பெர்கின் என்கிற மாணவன் செய்த இரசாயன ஆராய்ச்சி வயலட் நிற பொருளை ஆராய்ச்சி குடுவையில் உண்டாக்கி இருந்தது. பஞ்சை (பருத்தி) கொண்டு தொட பஞ்சின் நிறத்தை வயல்ட்டாக மாற்றியது. ரசாயன சாயத் துறை என்கிற புதிய துறை பிறந்தது. நெசவுத் தொழிலுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக தோன்றியது.
மூலம்: சித்தார்த் முக்கர்ஜி.

(படம்: வயோதிக வில்லியம் பேர்க்கின் மற்றும் இள வயது புகைப்படம்)
1856-இல் வில்லியம் பெர்கின் என்கிற மாணவன் செய்த இரசாயன ஆராய்ச்சி வயலட் நிற பொருளை ஆராய்ச்சி குடுவையில் உண்டாக்கி இருந்தது. பஞ்சை (பருத்தி) கொண்டு தொட பஞ்சின் நிறத்தை வயல்ட்டாக மாற்றியது. ரசாயன சாயத் துறை என்கிற புதிய துறை பிறந்தது. நெசவுத் தொழிலுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக தோன்றியது.
மூலம்: சித்தார்த் முக்கர்ஜி.
Sunday, August 26, 2012
செவ்வாயில் க்யுரியாசிட்டி
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப் பட்ட க்யுரியாசிட்டி என்கிற எந்திர வாகனம் பத்திரமாக இறங்கி தன் சோதனைகளைத் தொடங்கியது.
க்யுரியாசிட்டியின் ஒன்பது மாத பயணத்தையும் தரை இறங்குவதையும் காட்டும் விளக்கப் படம் மேலே. செவ்வாயின் வளி மண்டலத்தில் இது இறங்க ஆரம்பித்ததில் இருந்து தரையைத் தொடும் வரை உள்ள நேரம் ஏழு நிமிடங்கள் மட்டுமே. ஆனால் செவ்வாயில் இருந்து இந்த விண்கலம் அனுப்பும் செய்தி பூமியை வந்து அடைய பதினாலரை நிமிடங்கள் ஆகும். இந்த கலம் செவ்வாயின் வளி மண்டலத்தை அடைந்ததில் இருந்து ஒரு ஏழரை நிமிடங்கள் விஞ்சானிகள் குழுவுக்கு ஒரு மிகப் பெரிய சஸ்பென்சாக இருந்தது.
இந்த ஏழரை நிமிட காத்திருப்புக்குப் பின் அவர்களுக்கு க்யுரியாசிட்டி பத்திரமாக தரை இறங்கிய செய்தி வந்ததும் அவர்களுடைய சந்தோசம் கண்கொள்ளாதது.
Monday, June 11, 2012
விண்வெளியில் ஒரு அதிசயம்
சில நாட்களுக்கு முன்னால் விண்வெளியில் ஒரு அதிசயம் நடந்தது. வெள்ளி கிரகம் சூரியனை கடந்து சென்றது. 105 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் நடக்கும் அதிசயம் இது. இப்போது இதைப் பார்த்தவர்கள் திரும்ப பார்க்க முடியாது இதை.
மேற்புறமாக இருக்கக்கூடிய கரும் பொட்டு தான் வெள்ளி. கீழே ஒரு விமானம் பறப்பதும் இந்த படத்தில் தெரிகிறது. வட்டமாக தெரிவது சூரியன் (எத்தா....தண்டி !!)
தக தக என எரியும் சூரியன் முன் கருப்பு பொட்டு போல ஜாகரதையாக கடந்து செல்கிறது வெள்ளி.
Saturday, May 5, 2012
Sunday, February 26, 2012
கதிரும் வீச்சும்
சில மாதங்கள் கழித்து பிரான்ஸ் நாடு விஞ்ஞானி ஹென்றி பெக்வேறல், வில்ஹேல்மிங் கண்டுபிடிப்பை படித்து தெரிந்து மேலும் அதை ஆராய்ந்து புது கண்டுபிடிப்பை வெளியிட்டார்: சில தனிமங்கள் - யுரேனியம் போன்றவை - இயற்கையாகவே எக்ஸ் கதிர்வீச்சை உருவாகுகின்றன. பிரான்சிலேயே பெக்வேரைல்ன் நண்பர்கள், பியரி மற்றும் மேரி க்யுரி இத்துறையில் தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார்கள். தன்னிச்சையாக கதிர்வீச்சை வெளியிடும் தனிமங்கள் கண்டுபிடிப்பதே அவர்கள் லட்சியம். அதற்காக ஒரு கருவியை கண்டுபிடித்தார்கள் 1880 ஆம் வருடம்.
எவ்வளவு குறைவான கதிர்வீச்சையும் கண்டுபிடிக்கவும் அளவிடவும் கூடிய கருவி அது. அதைக் கொண்டு அருகாமையில் இருக்கக் கூடிய இடங்களுக்கு சென்று ஏதேனும் கதிர்வீச்சு கொண்ட வஸ்து இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த கருவி முயற்சி வீண் போகவில்லை, கருவி கதிர்வீச்சை தரும் பொருள் இங்கு இருக்கிறது என்று காட்டியது. அந்த இடம் காட்டின் நடுவே இருந்த ஒரு தாது உற்பத்தி நிலையத்தின் கழிவுப்பொருள் கூடம். டன் கணக்கில் இருந்த கழிவு பொருளை சுத்திகரிக்க ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான டன் தண்ணீர் தேவைப் பட்டது. அதில் இருந்து இறுதியாக ஒரு கிராமை விடக் குறைவான அந்த தனிமத்தை பிரித்து எடுத்தார்கள், 1902-ஆம் வருடம்.
யுரேனியத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிக கதிர்வீச்சை வீசிக் கொண்டிருந்தது அது.தன்னையே உருக்கி ஒளியாக கதிர்வீசிக் கொண்டு இருந்தது அது. இந்த தனிமத்தை பிரித்து தனிமைப் படுத்துவதற்கு பல மாதங்கள் ஆனது. நிலையிலாத தனிமம் அது, வஸ்து (mass) என்பதற்கும் எனர்ஜி (energy) என்பதற்கும் நடுவில் இருந்தது. ஒளியை ஏற்படுத்திக் கொண்டிருந்த இந்த தனிமத்தை "ரேடியம்" என்று பெயரிட்டு அழைத்தார் மேரி கியூரி. கிரேக்க மொழியில் ஒளி என்று பொருள் தரக்கூடிய வார்த்தை அது.
கதிர்வீச்சு உடலின் தசைகளை தாண்டி போகக் கொடிய எக்ஸ் கதிர்கள் வெளியிடக் கூடியது என்பது தெரியும். இத்தகைய குணத்தால் தான் ராண்ட்ஜன் தன் மனைவியின் கையை எக்ஸ் ரே படம் பிடித்தார். (மேலும் தகவலுக்கு நம்முடைய தளத்தில் இந்த பதிப்பை பாருங்கள்: கதிர்கள் - வல்லிய கதிர் மெல்லிய வீச்சு ) ஆனால் தசைகளுக்குள்ளே தன்னுடைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பது ராண்ட்ஜனுக்கும், மேரி க்யுரிக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
[ புகைப்படம்: மேரி க்யுரி (நிற்பவர்), அவர் கணவர் பியரி க்யுரி (அமர்ந்திருப்பவர்) ]
எவ்வளவு குறைவான கதிர்வீச்சையும் கண்டுபிடிக்கவும் அளவிடவும் கூடிய கருவி அது. அதைக் கொண்டு அருகாமையில் இருக்கக் கூடிய இடங்களுக்கு சென்று ஏதேனும் கதிர்வீச்சு கொண்ட வஸ்து இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த கருவி முயற்சி வீண் போகவில்லை, கருவி கதிர்வீச்சை தரும் பொருள் இங்கு இருக்கிறது என்று காட்டியது. அந்த இடம் காட்டின் நடுவே இருந்த ஒரு தாது உற்பத்தி நிலையத்தின் கழிவுப்பொருள் கூடம். டன் கணக்கில் இருந்த கழிவு பொருளை சுத்திகரிக்க ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான டன் தண்ணீர் தேவைப் பட்டது. அதில் இருந்து இறுதியாக ஒரு கிராமை விடக் குறைவான அந்த தனிமத்தை பிரித்து எடுத்தார்கள், 1902-ஆம் வருடம்.
[ புகைப்படம்: கதிர்வீசும் ரேடியம்]
யுரேனியத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிக கதிர்வீச்சை வீசிக் கொண்டிருந்தது அது.தன்னையே உருக்கி ஒளியாக கதிர்வீசிக் கொண்டு இருந்தது அது. இந்த தனிமத்தை பிரித்து தனிமைப் படுத்துவதற்கு பல மாதங்கள் ஆனது. நிலையிலாத தனிமம் அது, வஸ்து (mass) என்பதற்கும் எனர்ஜி (energy) என்பதற்கும் நடுவில் இருந்தது. ஒளியை ஏற்படுத்திக் கொண்டிருந்த இந்த தனிமத்தை "ரேடியம்" என்று பெயரிட்டு அழைத்தார் மேரி கியூரி. கிரேக்க மொழியில் ஒளி என்று பொருள் தரக்கூடிய வார்த்தை அது.
[ புகைப்படம்: ஆராய்ச்சி கூடத்தில் மேரி க்யுரி ]
Sunday, January 29, 2012
X கதிர்கள் - வல்லிய கதிர் மெல்லிய வீச்சு
1895- ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஜெர்மானிய விஞ்சானி வில்ஹெல்ம் ரொண்ட்ஜென், எலக்ட்ரான் கதிர் குழாய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். காற்றுப் புக முடியா வெற்றுக் குழாயில் எலக்ட்ரான் துகள் உற்பத்தி செய்து ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது இந்த எலக்ட்ரான் குழாயில் இருந்து வினோத கதிர்க் கசிவு ஏற்படுவது புலப்பட்டது இவருக்கு. அறையில் இருந்த திரையில் ஒரு ஒளி வட்டம் தோன்றியிருந்தது.
தன் மனைவி "ஆனா"வின் கையை கதிர்க் கசிவின் வழியில் வைத்து பின்னால் ஒரு புகைப்படத் தகடை வைத்து பார்த்தால் ஆனாவின் கை எலும்புகளையும் அவர் கையில் அணிந்து இருந்த கல்யாண மோதிரத்தையும் காட்டியது. "என்னுடைய சாவைப் பார்த்தேன்" என்று சொன்னார் "ஆனா" புகைப் படத்தை பார்த்த பின்பு. இனம் தெரியாத இந்த கதிர்களை X கதிர்கள் என்று அழைத்தார் வில்ஹெல்ம். உடலை அறுக்காமல் உடலின் உள்ளே பார்க்கக் கூடிய சாத்தியம் தோன்றியது.
- கதிர் வீச்சு தொடரும்
(நன்றி: சித்தார்த்த முகர்ஜி )
Thursday, December 22, 2011
விண்வெளி அதிசயம்
லவ்ஜாய் என்கிற வால் நட்சத்திரம் (தூமகேது என்பது அந்த கால வழக்கு) சூரியனை நோக்கிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது டிசம்பர் 15 ஆம் தேதி. சூரியனை நெருங்கும் போதே பஸ்பமாகி விடும் என்று எண்ணினார்கள் அறிவியல் வல்லுனர்கள். வால் நட்சத்திரத்தின் பாதையை கணக்கிட்டு பார்க்கும்போது சூரியனுக்கு அருகில் சென்று அதை சுற்றி செல்லும் (எரிந்து போகாது இருந்தால்) என்று தெரிந்தது. ஒரு சஸ்பென்ஸ் படத்தை பார்ப்பது போல பல வானியல் வல்லுனர்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் .
மேற்கண்ட படத்தில் நடுவில் உள்ள நீல நிற தட்டின் நடுவே உள்ள வெள்ளை வட்டம் தான் சூரியன். அதன் வெப்பம் மிகுந்த வெளிச்சமான பகுதி தான் நீல நிறமாக்கப் பட்டு காண்பிக்கப் படுகிறது. அந்த வெளிச்ச தட்டை நோக்கி பாய்ந்து செல்பவர் தான் நம்ம லவ்ஜாய் வால் நட்சத்திரம். நீங்கள் நினைப்பது சரி தான் - நீளமாக தெரிவது அதன் வாலே தான்.
லவ்ஜய் பிழைக்குமா இல்லையா என்று நமக்கும் ஆர்வம் தோன்றுவது இயல்பே...சரி என்ன ஆச்சு ?
எல்லா தொலை நோக்கிகளும் லவ்ஜாய் மேல் கண்களை பதித்து இருந்தன. லவ்ஜாய் சூரியனை நெருங்குவது வரை பார்க்கமுடிந்தது ஆனால் அடுத்து என்ன நடந்தது என்பது சில நிமிடங்கள் பெரிய சஸ்பென்ஸ் தான். சூரியனின் பின் பக்கத்தில் இருந்து சின்ன வெளிச்ச போட்டு ஒன்று பறந்து செல்வதை பார்த்த போது எல்லாருக்கும் பெரிய ஆச்சர்யம் ... லவ்ஜாய் பிழைத்துக் கொண்டது என்று.
அவ்வளவு பக்கத்தில் சூரியனை நெருங்கியதால் லவ்ஜாயின் வால் அறுபட்டு போனது...அறுபட்ட வால் சூரியனுக்கு ஒரு பக்கமும் தலை இன்னொரு பக்கமும் வந்தது.
ஆனாலும் லவ்ஜாய் அதிர்ஷ்டக் கார வால் (இல்லாத) நட்சத்திரம் தான்..!
பின் குறிப்பு: நம்முடைய முன்னோர்கள் இந்த சூழ்நிலையில் சூரிய பகவானுக்கும் எதாவது பாம்பு அரக்கனுக்கும் சண்டை என்றும் தலையும் வாலும் பிரிந்தன என்றும் கதை எழுதி இருப்பார்கள் இந்நேரம்.

Monday, December 12, 2011
மயக்க மருந்து
1846 அக்டோபர் 16 - அமெரிக்காவில் மாசசுசட்ஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் எட்வர்ட் அப்பாட் என்ற நோயாளிக்கு கழுத்தில் இருந்த கட்டியை புதுமையான முறையில் நீக்குவதாக கூறினார் மருத்துவர் வில்லியம் மார்டன். மருத்துவர்கள் பலரும், வேறு பலரும் கூடி பார்த்துக் கொண்டிருக்கையில், ஈத்தர் என்ற பொருள் நிரம்பிய கண்ணாடி குப்பியை கொடுத்து நன்கு மூச்சு இழுக்க சொன்னார் வில்லியம். சில முறை அப்படி செய்திருப்பார் எட்வர்ட், தன்னை மறந்த மயக்க நிலையை அடைந்தார் எட்வர்ட். சில சீக்கிர அசைவுகளில் கட்டியை நீக்கி தையல் போட்டார் மருத்துவர்.
சிகிச்சை முடிந்த பிறகு "வலி எதுவும் தெரியவில்லை, ஆனால் அறுவை சிகிச்சை நடக்கிறது என்பது தெரிந்து இருந்தது எனக்கு" என்று கூறினார் எட்வர்ட். மருத்துவ உலகில் அப்போதைக்கு அது ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பு. இதற்கு அப்பறம் பல மணி நேரம் நீடிக்கக் கூடிய அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது, பல்லாயிரக் கணக்கான உயிர்களை காப்பாற்ற முடிந்தது.
ஆனாலும் கத்தி பட்ட இடத்தில் நோய் தோற்று ஏற்படுவது சகஜமாக இருந்தது. செப்டிக் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து உருவாக்கும் சூழ்நிலை இருந்தது.
Monday, November 14, 2011
Friday, September 23, 2011
ஒளியை விட வேகமாக பயணிக்கும் துகள்
இன்னிக்கி செய்திகள்-ல வந்திருக்கு: ஒளியை விட வேகமா போகக் கூடிய துகள் அறிவியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்க பட்டிருக்கு. சிலர் இது உபகரணங்கள்ள உள்ள தவறுன்னு சொல்லறாங்க. ஆனா இது உண்மையா இருந்தா ஐன்ஸ்டீனுடைய கண்டு பிடிப்புகள் தவறுன்னு நிரூபிக்கப் படும். ஐன்ஸ்டீன் ஒளியை விட வேகமா எதுவும் போகாது என்கிற விஷயத்தை அனுமானித்து எல்லா சூத்திரங்களும் கண்டு பிடித்தார். அது எல்லாம் தவறுன்னு ஆயிடும்.
ஆனா, இதனால ஐன்ஸ்டீன் ஒன்னும் அறிவாளி இல்லைன்னு ஆய்டாது. ஏன்னா அவரே நான் கண்டு பிடிச்சத இன்னும் 50 வருஷத்திலே தப்புன்னு நிரூபிக்காட்டி அறிவியல் வளரலேன்னு அர்த்தம் என்று சொல்லிருக்கார்.
பொறுத்திருந்து பாப்போம்.
Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)