Memories

Monday, October 15, 2012

படித்ததில் பிடித்தது - கவிதை


                                                 காவியம்

                                                 சிறகிலிருந்து உதிர்ந்த
                                                 ஒற்றை இறகு
                                                 காற்றின்
                                                 தீராத பக்கங்களில்
                                                 ஒரு பறவையின் வாழ்வை
                                                 எழுதிச்செல்கிறது




-- எழுதியது யார் என்று தெரியவில்லை.

Sunday, October 7, 2012

சாயமும், சாதலும்....

கான்சர் ஒரு தீர்க்கமான செயல்பாடுடைய வியாதி. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கும், ஒரு உறுப்பில் இருந்து மற்றொன்றுக்கும்  பரவிக்கொண்டே இருப்பது. பெயருக்கு ஏற்றார் போல புற்று போல பல இடங்களில் இருந்து வெளித் தோன்றிக்கொண்டே இருப்பது. இதை வெட்டித் தள்ளும் கத்தி தான் கதிர்வீச்சு. இந்த கத்தி அதனுடைய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகாது. எனவே இது இறுதி தீர்வாக முடியாது.

தீர்க்கமான செயல்பாடுடைய வியாதிக்கு அதை விட தீர்க்கமான செயல்பாடுடைய சிகிச்சை தேவை. நோயின் வேரைக் கண்டறிந்து அதை வெட்டி வீழ்த்த வேண்டும் கான்சருக்கான மருந்து. கான்சர் செல்லும் அதன் மூலமான நல்ல செல்லும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்பு உடையன. உதாரணமாக கண்டு பிடிக்கப் பட வேண்டிய மருந்து இடது காதை மட்டும் அரிக்க வேண்டும், ஆனால் வலது காதை  ஒன்றும் செய்யக் கூடாது. எப்படி பாருங்கள்?


கான்சரை குணப்படுத்த ஓரளவு நல்ல மருந்து சாயப் பட்டறையில் இருந்து தோன்றியது என்றால் வேடிக்கையாகத் தான் இருக்கும். யோசித்து பாருங்கள் சாயத் தொழிலுக்கும் கான்சருக்கும் என்ன சம்பந்தம் என்று..



1850 வாக்கில் இங்கிலாந்தில் தறி நெசவு வெகு வேகமாக வளர்ந்து வரும் தொழில். தறி நெசவும் சாயத் தொழிலும் சம்பந்தப் பட்ட தொழில்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே? வேகமாக வளரும் நெசவு தொழிலுக்கு சாயத் தொழிலால் ஈடு கொடுக்க முடிய வில்லை. இயற்கையாக பெறப் பட்ட சாயங்களை தயாரிக்கவும், பாதுகாக்கவும் மிகவும் மெனக்கெட வேண்டி இருந்தது. நெசவு செய்யப் பட்ட துணிகள் சாயத்துக்காக காத்துக் கிடந்தன.



(படம்: வயோதிக வில்லியம் பேர்க்கின் மற்றும் இள  வயது புகைப்படம்)

1856-இல் வில்லியம் பெர்கின் என்கிற மாணவன் செய்த இரசாயன ஆராய்ச்சி வயலட் நிற பொருளை ஆராய்ச்சி குடுவையில் உண்டாக்கி இருந்தது. பஞ்சை (பருத்தி) கொண்டு  தொட பஞ்சின் நிறத்தை வயல்ட்டாக மாற்றியது. ரசாயன சாயத் துறை என்கிற புதிய துறை பிறந்தது. நெசவுத் தொழிலுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக தோன்றியது.

மூலம்: சித்தார்த் முக்கர்ஜி.

Friday, October 5, 2012

பிரமு மாமாவின் பிறந்த நாள் இன்று....


பிரமு மாமாவின் ஐம்பதாவது பிறந்த நாள் இன்று. இன்று நம்மால் முடிந்த நல்லவைகளை செய்வோமாக!

Monday, October 1, 2012

"என்ன மாமா! சாத்தூர் ரோட்ல போறீங்க': "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண்





விருதுநகர்:"மின் தடையால, சமையலுக்கு மசாலா அரைக்க முடியல; குழந்தைங்க தூக்கமே போச்சு; "டேங்க்' ல, தண்ணீர் இல்ல' என, பெண்களின் புலம்பல்களுக்கு மத்தியில், ஒரு பெண் சந்தித்த "தர்மசங்கட' பிரச்னை இது. கனநேரத்தில், இப்படியும் கூட பிரச்னைஏற்படும் என்பது மற்ற இல்லத்தரசிகளுக்கு, இது ஒரு பாடம்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் "பங்க்' ல், நேற்று முன்தினம், இரவு 7 மணிக்கு, வாடிக்கையாளர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். "எப்போது போகும், எப்ப வரும்' என, யாரும் அறியாதமின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரம்.அப்போது, மனைவியுடன் இரு
நபர்கள், "பைக்கில்' வந்தனர்;இருவருமே அணிந்திருந்தது, ஒரேமாதிரியான ஹெல்மெட். வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிய பின், அதில் ஒரு ஜோடி புறப்பட்டுச் சென்றது.
சாத்தூர் ரோட்டில் நீண்ட தூரம் சென்ற பின், பின்னால் இருந்த பெண்,

""என்ன மாமா! நாம் தாதம்பட்டிபோகணும்; நீங்க சாத்தூர் ரோட்ல போறீங்க,'' என்றார். வாகனத்தை
ஓட்டிய நபருக்கு தூக்கி வாரிப்போட்டது. உடனடியாக நிறுத்தி,திரும்பிப் பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி.பின்னால் இருந்தது அவர் மனைவி இல்லை. இருட்டில், அந்தப் பெண்,"கணவர்' என, நினைத்து, தன்னுடன் வந்ததை உணர்ந்தார். மன்னிப்புக் கோரி, மீண்டும் பெட்ரோல் "பங்க்' அழைத்து வந்தார். அங்கு, கணவரைக் காணாமல் மனைவியும்; மனைவியைக் காணாமல் கணவரும் தவியாய் தவித்துக் கொண்டிருந்தனர். "மாறி பயணப்பட்டு' திரும்பிய இருவரையும் பார்த்தவுடன், நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்;பிரிந்தவர் கூடினால் பேசவும்வேண்டுமோ!"மின்தடையால் குடும்பத்திலும் குழப்பம் ஏற்படும் போலிருக்கே?' என, புலம்பினர் அங்கிருந்தவர்கள். 

வாசகர் கருத்து:

kochadaiyan - ,இந்தியா
01-அக்-201203:26:37 IST Report Abuse
kochadaiyanதமிழ்நாட்டில் இதுவரை மின்சாரம் தான் போகும் என்று பார்த்தால் இப்போது சம்சாரமும் கூட சேர்ந்து போகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.


மூலம்: "என்ன மாமா! சாத்தூர் ரோட்ல போறீங்க': "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் 

-- நன்றி: தினமலர்