Person who made many lives change better. பலரது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியவர்.மேலும்...
Memories
Sunday, November 18, 2012
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 19, 20
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 19 - ரணகள அரண்யம்
அத்தியாயம் 19 - ரணகள அரண்யம்
ப்ரதீவிபதி அப்படீங்கற கங்க நாட்டு மன்னன், முன்னாடி சோழ ராஜா கூட சேந்து பாண்டிய ராசாவ எதிர்த்து போர் நடத்தினான். அதில ரொம்ப வீரமா சண்ட போட்டு வீரமரணம் அடைஞ்சான். அவனுக்கு பள்ளிப் படை கோவில் ஒன்னு கட்டினாங்க சண்டை நடந்த இடத்தில. வருஷங்கள் கழிஞ்சு அந்த இடம் காடு மண்டிப் போச்சு. பிரதிவீபதியை பகைவன்னு சொன்னா, பாண்டியர்கள் தான் சொல்லணும்..புரிஞ்சதா? குறுக்கு வழியில பொய் ஆழ்வார்க்கடியான் பள்ளிப் படை கோவில் மேல ஏறி ஒளிஞ்சுகிட்டான், ஈசியா பாத்துட முடியாது அவன. ரொம்ப நேரம் ஆச்சு எதுவும் நடக்கல, சரி திரும்ப போய்டலாம்னு நெனைக்கும் போது தூரத்தில தீவட்டி வெளிச்சம் தெரிஞ்சது, 2 பேரு வந்தாங்க. கொஞ்ச நேரத்தில இன்னும் 2 பேரு அப்பறம் ஒருத்தன் வந்தான். யாருடைய அடையாளமும் சரியா தெரியல, இவன் ஒளிஞ்சு இருந்த இடம் தூரமா போச்சு. அரகொறையா கேட்டதை தெரிஞ்சது என்னான்னா: ரவிதாசன் அப்படீங்கறவன் தான் அவங்க ஹெட். அவன் கிட்ட பளுவேட்டரயரோட தங்க காசுங்க இருந்தது. பக்கத்தில போனா கொஞ்சமாவது அவங்க பேசறது சரியாய் காதில விழும்னு நெனைச்சான். மெதுவா இறங்கி பக்கத்தில போனான்.
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 20 - "முதற் பகைவன்!"
அத்தியாயம் 20 - "முதற் பகைவன்!"
ரவி தாசன் எதோ பிளான் சொல்லிட்டு இருந்தான்: 'ரெண்டு டீமா பிரிஞ்சு ஒன்னு இலங்கைக்கும் இன்னொன்னு ஆதித்த கரிகாலன் இருக்கற தொண்டை மண்டலம் போகணும். வெயிட் பண்ணி நல்ல சமயத்தில காரியத்த முடிக்கணும்.'
அப்ப அங்க இடும்பன் காரியும் வந்து சேந்தான். சம்புவரையர் மாளிகைல நடந்ததை எல்லாம் சொன்னான். இத எல்லாம் கவனிச்ச ஆழ்வார்க்கடியானையும் இவன் பாத்துட்டத்தையும் சொன்னான். ஆழ்வார்க்கடியானை இவங்க ஆளுன்னு நேனைச்சதையும் இவங்க முத்திரைய செஞ்சு காட்டினதையும் சொன்னான். ஆழ்வார்க்கடியானுக்கு அது புரியாததனால அவன் வேற ஆளுன்னு பபுரிஞ்சு கிட்டதையும் சொன்னான்.
ரவி தாசன் ரொம்ப கோபப் பட்டான். யாரு கிட்டயும் ரகசிய சமிக்ஜய செய்ய கூடாதுன்னு கட்டளை போட்டான். ஆழ்வார்க்கடியான் தான் முதல் எதிரி, நம்மள காப்பாத்திற தேவிய கொண்டு போக பாக்கறவன். அவன எங்க பாத்தாலும் கொன்னு போடுங்க அப்படின்னு ஆர்டர் போட்டான். ஆழ்வார்க்கடியான் ஒரு ஒற்றனும் கூட, ஆனா யாருடைய ஒற்றன் என்கிற விபரம் தெரியல அப்படீன்னான்.
ஆழ்வார்க்கடியானுக்கு தும்மல் வந்திட்டு, தோள் துண்ட கவ்விகிட்டு தும்மினான், ஆனாலும் சத்தம் கேட்டிருச்சி. ரவி தாசன் ஆள் அனுப்பி என்ன சத்தம்னு பாக்க சொன்னான். அங்க இருந்து ஒரு வழியா தப்பிச்சு வந்தான் ஆழ்வார்க்கடியான்.

Subscribe to:
Posts (Atom)