Person who made many lives change better. பலரது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியவர்.மேலும்...
Memories
Saturday, October 29, 2011
Saturday, October 22, 2011
பையன்
மாமாவின் அருளாசியோடு சனிக் கிழமை அக்டோபர் 22, 2011 மதியம் 3:04 மணிக்கு (இந்திய நேரம்) ஆண் குழந்தை சுக பிரசவமாகப் பிறந்திருக்கிறது. தாயும் குழந்தையும் நலம்.
Thursday, October 20, 2011
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 3, 4, 5
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 3 - விண்ணகரக் கோட்டை
வல்லவரையன் வந்தியத் தேவனோட குதிரைய பளுவேட்டரைரோட ஆளுங்க வம்பு பிடிச்சி விரட்டி விட்டுடாங்க. வந்தியதேவனுக்கு ரொம்ப கோவம் வந்துச்சு, ஆனா சண்ட பிடிக்க இது நேரம் இல்லன்னு அமைதியா இருந்தான். குதிரைய தேடி பிடிச்சு வீதிக்கு கூட்டிட்டு வந்தான். அங்க ஆழ்வார்க்கடியான் நின்னுகிட்டு இருந்தான், வந்தியத் தேவன்கிட்ட கேட்டான்:"தம்பி நீ இன்னிக்கி கடம்பூர் மாளிகைக்கு போனீனா என்னையும் கூட்டிட்டு போறீயா? எனக்கு அங்க ஒரு வேலை இருக்கு."
வந்தியத்தேவன் சொன்னான்: "நான் அங்க தான் போறேன்னு உனக்கு எப்படி தெரியும், அங்க அப்படி என்ன வேலை?"
"தம்பி இதிலே ஆச்சர்யம் என்ன இருக்கு, எல்லா சிற்ரசர்களும், பழுவேட்டரையரும் அங்க தான் போறாங்க. அங்கே வர்ரவங்களுகேல்லாம் விருந்தும் அப்பறம் களியாட்டம், சாமியாட்டம், குரவை கூத்து எல்லாம் நடக்கும். இதெல்லாம் பாக்கனும்னு ஆசை எனக்கு"
நம்ம ஹீரோக்கு இது பிடிக்கலை, முன்னே பின்னே தெரியாத ஆளை எப்படி கூட்டிட்டு போறதுன்னு. ஆழ்வார்கடியானை ஒரு வழியா கழட்டி விட்டுட்டு அவன் கிளம்பினான். அதோட வந்தியதேவனுக்கு முறையான அழைப்பு இல்லே, அவன் பிரண்டு கந்தமாறன வச்சு அங்க தங்கிகலாம்னு நெனைசிருந்தான், இந்த கூட்டத்திலே அது நடக்குமான்னு தெரியல.
குதிரைலே கடம்பூர் மாளிகைக்கு போன வந்தியதேவன வாசல் காவக்காரங்க நிறுத்திடாங்க. இவ்வளவு காவல அவன் எதிர் பாக்கல. இவன் குதிரைய வம்பு பிடிச்ச ஆளுங்க தான் நின்னுட்டு இருந்தாங்க. ஏற்கனவே இருந்த கோவம் அதிகமாச்சு. வாக்குவாதம் வந்துச்சு, கைகலப்பா மாறிச்சு. இத சாக்கா வச்சு அவங்களுக்கு கொடுக்க வேண்டியத(!) கொடுத்தான் வந்தியத்தேவன். இத சமாளிக்க முடியாம இன்னும் நிறைய ஆளுங்க இவன் கிட்ட சண்ட பிடிக்க வந்தாங்க. கோட்டை மேலிருந்து ஒரு இடிமுழக்க குரல், "கந்தமாறா, கீழ என்ன கலவரம்னு பாரு" ன்னு சொன்னது. கந்தமாறன் இறங்கி வந்தான். சண்டை அப்படியே நின்னது, கந்தமாறனுக்கு வந்தியதேவன பாத்ததிலே ரொம்ப சந்தோஷம். காவல் காரன்கள சத்தம் போட்டுட்டு இவன கூட்டிகிட்டு அவன் அப்பா சம்புவரையர் கிட்ட அறிமுக படுத்தினான், அவருக்கு சந்தோஷம் இல்ல: "இவன் தான் கலவரம் செஞ்சவனா"ன்னு கேட்டார். தான் பையன் கிட்ட பிரயாண களைப்பு போக வந்தியதேவனுக்கு சீக்கிரம் சாப்பாடு கொடுத்து நல்ல ஒதுங்கின இடமா கொடுத்து தூங்க ஏற்பாடு பண்ண சொன்னார். கந்தமாறன் பளுவேட்டரயருக்கு வந்தியதேவன அறிமுகம் செஞ்சு வச்சான், அவருக்கும் ஒன்னும் சந்தோஷமோ வியப்போ இல்ல, வேண்டா வெறுப்பா தான் பேசினார். கந்தமாறன் அவன் அம்மா கிட்ட இவன அறிமுகபடுத்தினான்.
அத்தியாயம் 5 - குரவை கூத்து
அம்மா கூப்பிட்டான்னு கந்தமாறன் போயிட்டு வந்தான். இவன் நின்ன இடத்திலே ஒரு பொம்பளைங்க கும்பலே இருந்துச்சு. எதையோ பேசி கொல்லுன்னு சிரிச்சிட்டு இருந்தாங்க. வந்தியதேவனுக்கு இவன தான் கிண்டல் பண்றாங்கன்னு தோணிச்சு. கந்தமாரன்கிட்ட கேட்டான்: "ஒன்ன பத்தி சிரிக்கல , இந்த பழுவேட்டரையர் இந்த வயசில ஒரு சின்ன பெண்ணை கலியாணம் செய்திருக்கிறார், அவளை கலியாணம் முடிஞ்சு ஒரு இரண்டு வருஷம் தான் இருக்கும், ஆனா எல்லா இடத்துக்கும் மூடு பல்லகில் வச்சு அவளை கூட்டிட்டு போறார். அது பத்தி தான் இந்த சிரிப்பு. அந்த பொண்ண யாரும் பாத்ததிலைன்னு கேள்வி" அப்போ வாத்தியங்கள் சத்தம் கேட்டுச்சு. அது குரவை கூத்து தொடங்க போறதுக்கு அறிகுறின்னு சொன்னான் கந்தமாறன். வந்தியத்தேவன் கூத்து பாக்க ஆசைபட்டான். கூத்து, ஆட்டம் பாத்தான் அதில் முருகன் சூரபத்மன சம்ஹாரம் பண்றத ஆடினாங்க. முடிவில முருகனா ஆடினவனுக்கு அருள் வந்திச்சு:"என் அம்மா சண்டிகேஸ்வரிக்கு நீங்கள் பூசை போடல, அதனால அவ பலி கேக்கறா...ஆயிரம் கால அரச ரத்தம் பலியா கேக்கறா"இன்னான். கூத்து பத்தவங்கல்லாம் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க. எங்கயோ நரி ஊளையிடற சதாம் கேட்டுச்சு. வந்தியத்தேவன் அந்த பக்கம் பாத்தான், அங்க ஆழ்வார்கடியான் தலைய கோட்டை சுவர் மேல பாத்தான், கண் மூடி திறந்து பாத்தா அங்க ஒன்னும் இல்ல, என் இப்படி தோணிச்சுன்னு நெனைச்சு வெக்கப் பட்டுகிட்டான்.
(தொடரும்)
ரத்தத்தில் சலம் - வெள்ளை ரத்தம்
1845-வது வருடம் மார்ச் 19, ஸ்காட்லாந்து மருத்துவர் ஜான் பென்னெட் ஒரு வித்தியாசமான நோயாளிக்கு சிகிச்சை அளிக்க நேரிட்டது. அந்த நோயாளி கூரை வேய்பவர். அவருக்கு வயிற்றில் வித்யாசமான ஒரு கட்டி இருந்தது. காரணமின்றி காய்ச்சல் வேறு, அடிக்கடி வயிற்றில் வலி இருந்தது. எவளவோ சிகிச்சை அளித்தும் பலனில்லை. அவரை பரிசோதனை செய்யும் போது ஜான் ஒரு விஷயத்தை கவனித்தார், நோயாளியின் ரத்தம் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதனால் இப்படி அறிக்கை எழுதினார்:"இந்த நோயாளி வித்தியசமானவர். இவருடைய வியாதிக்கான காரணம் ரத்தத்தில் ஏற்பட்ட சலம் - இது ரத்தத்தில் இருக்கிறது" இந்த கேசை அவர் "ரத்தத்தில் சலம்" என்று அழைத்தார். சலம் உண்மையில் ரத்த வெள்ளை அணுக்களால் வருகிறது. உடலில் காயம் வரும் போது, வெள்ளை அணுக்கள் நோய் கிருமிகளை எதிர்த்து சண்டையிடும் போது சலம் தோன்றுகிறது. இந்த நோயாளியின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் நீக்கமற நிறைந்து இருந்தன. உடலில் எங்கு அடி பட்டிருக்கிறது என்று தேடினார் ஆனால் எங்கும் அதற்கான அறிகுறி கிடைக்கவில்லை. அதோடு "ரத்தத்தில் சலம்" பைல் மூடப் பட்டது.
ஜான் பென்னெட்டின் இந்த கருத்து மிகவும் தவறானது. ரத்தம் சலம் வைப்பது என்பது நம்ப முடியாத விதமாக இருப்பதாக ருடால்ப் விர்சோவ் என்கிற ஜெர்மானிய மருத்துவர் அறிக்கை ஒன்றை சமர்பித்தார், ரத்தம் வெள்ளையாக மாறுவதற்கு சரியான காரணம் தெரியவில்லை என்பதே சரி என்று அதில் வாதிட்டார். இந்த வியாதியை "வெள்ளை ரத்தம்" என்று அழைத்தார். இது மிகவும் பொருத்தமானதே, நுண்நோக்கியை (மைக்ரோஸ்கோப்) வைத்து பார்க்கும் போது ரத்தம் முழுவதும் பெரிய பெரிய வெள்ளை ரத்த அணுக்கள் வியாபித்து இருப்பதனால் ரத்தம் வெள்ளை நிறமாக தோன்றும். இந்த வியாதிக்கு 1847-இல் "லுக்கீமியா" என்று பெயரிட்டார். லூகொஸ் என்கிற கிரேக்க வார்த்தைக்கு "வெள்ளை" என்கிற அர்த்தம் வரும்.
நன்றி: நோய்களின் அரசன் - கான்சர் - சித்தார்தா முக்கர்ஜி
எனது கருத்து: மருத்துவரும் மனிதரே. அவருடைய அறிவுக்கு ஏற்ப ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதும், சிகிச்சை அளிப்பதும் செய்கிறார். எனவே நல்ல, திறமையான மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நோயாளிக்கு நல்லது. ஜான் பென்னெட் தனக்குத் தெரியவில்லை என்று கூடத் தெரியாமல் ரத்தத்தில் சலம் என்கிற முடிவுக்கு வந்தார், ஆனால் ருடால்ப் வெளிப்படையாக, தனக்கு இதை பற்றி தெரியவில்லை என்பதை ஒத்துக் கொண்டார். அதனால் ருடால்ப், ஜானை விட அறிவு மிகுந்தவர் என்பது என்னுடைய கருத்து. தெரியாது என்று சொல்பவர் அறிவு குறைந்தவர் என்று எண்ணுபவர்கள் ஜான் பென்னெட் தான் அறிவாளி என்று வாதிடலாம். திறமையான மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நோயாளிக்கு நல்லது என்பதாலேயே ரஜினி இந்தியாவில் சிறந்த ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஆசியாவில் சிறந்த சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேருகிறார். மருத்துவரையும் மருத்துவமனையையும் ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது சிறந்தது.
Wednesday, October 19, 2011
மகாபாரதத்தில் இருந்து ஒரு குட்டிக் கதை
மகாபாரதத்தின் முடிவில் இந்த மனித உடலோடு சொர்க்கம் செல்லும் வாய்ப்பு தருமன் ஒருவனுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த பொழுதில் கூட அவனுக்கு ஒரு பரீட்சை வைக்கப் பட்டது. அது பற்றி தனியே எழுதுகிறேன், இப்போது இந்த கதைக்கு வருவோம்.
சொர்க்கத்துக்கு சென்ற தருமன் அங்கே துரியோதனனைப் பார்த்தான். தருமனுக்கோ ஒரே ஆச்சர்யம். துரியோதனனுக்கு ராஜ மரியாதை கிடைத்துக் கொண்டு இருந்தது. போரில் வீரமரணம் அடைந்ததால் அவனுக்கு சொர்க்கம் கிட்டியது என்று அவனுடன் வந்த தரும தேவதை சொல்லியது.
என் தம்பிகளை எங்கே என்று தருமன் கேட்பதற்குள் அவனுக்கு கடைசி தம்பி சகதேவனின் அலறல் குரல் கேட்டது. அடுத்து நகுலன் துடித்து அலறுவது கேட்டது. அர்ஜுனனும் பீமனும் எங்கே என்று எண்ணிக் கொண்டு அந்த திசை நோக்கி விரைந்தான் தருமன். ஒரு காவலன் அது நரகம் செல்லும் வழி என்றான். இப்போது அர்ஜுனனின் ஆங்காரக் குரல் கேட்டது. பீமன் யாரையோ சபிக்கிறான் போலும்...ஒரு கணம் கூட தாமதிக்காமல் அந்த வழியாக நடக்க ஆரம்பித்தான் தருமன், அங்கே காரிருள், பல குரல்கள் கேட்டன. ஒரு அளவுக்கு மேல் தருமனுக்கு கண் தெரியவில்லை. அங்கேயே நின்றான். இப்போது அவனை சுற்றி அவன் தம்பிகள் வலியால் அலறும் குரல்கள் கேட்டன. தான் தம்பிகளுக்கு ஏன் இந்த நிலை என்று அவன் உள்ளம் கொதித்தது. ராஜ்ஜியம் இல்லாத போது இந்த வேதனை படவில்லை, காட்டில் படவில்லை, போரில் படவில்லை...திரவுபதி என்ன ஆனாள் என்று நினைக்க ஆரம்பித்தான். சுற்றி கேட்ட பல குரல்களில் தூரத்தில் மெல்லிதாக அவள் குரல் கேட்டது. தம்பிகளை கூவி அழைத்தான், திரவுபதியை கூப்பிட்டான். யாரும் பதில் சொல்லவில்லை. தருமனுக்கு நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது.
அவனை தரும தேவன் கூப்பிட்டான்: சொர்க்கம் அவனை அழைக்கிறது அது தான் தருமன் இருக்க வேண்டிய இடம் என்றான். தருமனோ தான் தம்பிகள் இருக்கும் இடமே தனக்கும் போதும், இங்கேயே இருந்து விட போவதாக கூறி தரும தேவனை திரும்பி போய்விட கூறினான்.
ஒரு நாழிகை கழிந்தது. தருமன் இருந்த இடத்தில் அலறல் குரல்கள் மறைந்தன, ஒளி வந்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தரும தேவன் சிரித்த வண்ணம் நின்றிருந்தான்: "உன் தம்பிகள் சொர்க்கத்திலேயே இருக்கிறார்கள். தருமத்தை நிலை நிறுத்த வேண்டி நீ சில பாவங்களை செய்திருக்கிறாய். அவைகளை கழிக்க வேண்டி நீ ஒரு நாழிகை நரகத்தை அனுபவிக்க வேண்டி இருந்தது. அதோ உன் தம்பிகள் சொர்க்கத்தில் மகிழ்வுடன் இருப்பதை பார்."
சொர்க்கத்துக்கு சென்ற தருமன் அங்கே துரியோதனனைப் பார்த்தான். தருமனுக்கோ ஒரே ஆச்சர்யம். துரியோதனனுக்கு ராஜ மரியாதை கிடைத்துக் கொண்டு இருந்தது. போரில் வீரமரணம் அடைந்ததால் அவனுக்கு சொர்க்கம் கிட்டியது என்று அவனுடன் வந்த தரும தேவதை சொல்லியது.
என் தம்பிகளை எங்கே என்று தருமன் கேட்பதற்குள் அவனுக்கு கடைசி தம்பி சகதேவனின் அலறல் குரல் கேட்டது. அடுத்து நகுலன் துடித்து அலறுவது கேட்டது. அர்ஜுனனும் பீமனும் எங்கே என்று எண்ணிக் கொண்டு அந்த திசை நோக்கி விரைந்தான் தருமன். ஒரு காவலன் அது நரகம் செல்லும் வழி என்றான். இப்போது அர்ஜுனனின் ஆங்காரக் குரல் கேட்டது. பீமன் யாரையோ சபிக்கிறான் போலும்...ஒரு கணம் கூட தாமதிக்காமல் அந்த வழியாக நடக்க ஆரம்பித்தான் தருமன், அங்கே காரிருள், பல குரல்கள் கேட்டன. ஒரு அளவுக்கு மேல் தருமனுக்கு கண் தெரியவில்லை. அங்கேயே நின்றான். இப்போது அவனை சுற்றி அவன் தம்பிகள் வலியால் அலறும் குரல்கள் கேட்டன. தான் தம்பிகளுக்கு ஏன் இந்த நிலை என்று அவன் உள்ளம் கொதித்தது. ராஜ்ஜியம் இல்லாத போது இந்த வேதனை படவில்லை, காட்டில் படவில்லை, போரில் படவில்லை...திரவுபதி என்ன ஆனாள் என்று நினைக்க ஆரம்பித்தான். சுற்றி கேட்ட பல குரல்களில் தூரத்தில் மெல்லிதாக அவள் குரல் கேட்டது. தம்பிகளை கூவி அழைத்தான், திரவுபதியை கூப்பிட்டான். யாரும் பதில் சொல்லவில்லை. தருமனுக்கு நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது.
அவனை தரும தேவன் கூப்பிட்டான்: சொர்க்கம் அவனை அழைக்கிறது அது தான் தருமன் இருக்க வேண்டிய இடம் என்றான். தருமனோ தான் தம்பிகள் இருக்கும் இடமே தனக்கும் போதும், இங்கேயே இருந்து விட போவதாக கூறி தரும தேவனை திரும்பி போய்விட கூறினான்.
ஒரு நாழிகை கழிந்தது. தருமன் இருந்த இடத்தில் அலறல் குரல்கள் மறைந்தன, ஒளி வந்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தரும தேவன் சிரித்த வண்ணம் நின்றிருந்தான்: "உன் தம்பிகள் சொர்க்கத்திலேயே இருக்கிறார்கள். தருமத்தை நிலை நிறுத்த வேண்டி நீ சில பாவங்களை செய்திருக்கிறாய். அவைகளை கழிக்க வேண்டி நீ ஒரு நாழிகை நரகத்தை அனுபவிக்க வேண்டி இருந்தது. அதோ உன் தம்பிகள் சொர்க்கத்தில் மகிழ்வுடன் இருப்பதை பார்."
மகாபாரத நீதி: தருமத்தின் வழி மிக சிக்கலானது, அதை புரிந்து கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல.
Tuesday, October 18, 2011
Saturday, October 15, 2011
Thursday, October 13, 2011
பழமொழி
மாமா சொன்ன பழமொழி: "சமத்தன் சந்தைக்கு போனா வாங்கவும் மாட்டான் விக்கவும் மாட்டான்"
விளக்கம்: எந்த ஒரு விஷயத்தையும் அளவுக்கு மீறி சிந்திக்க வேண்டாம்.
உங்க கருத்து என்ன என்பதை எழுதவும்
உங்க கருத்து என்ன என்பதை எழுதவும்
உணவும் பலன்களும்
|
Wednesday, October 12, 2011
வியாபாரி
ஓரிரு வருடங்களுக்கு முன்பு மாமா நிறைய கடனில் இருந்தார்கள். பணத்தை கைமாற்றி விட்டு சமாளித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு சமயத்தில் ஒருவரிடமிருந்து மாமாவுக்கு வர வேண்டிய பணம் வாங்குவதற்காக ஒருவரிடம் கேட்டு கொண்டு இருந்தார்கள். ஆனால் அந்த மனிதரோ தான் மகன் படிப்புக்கு வைத்திருக்கும் பணத்தை எடுத்து தருவதாக சொன்னார். மாமாவுக்கோ நிறைய டென்ஷன் பணம் வாங்கி உடனே தான் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். மாமா ஒரு தொழில் அதிபர், அடிப்படையில் ஒரு வியாபாரி. அவர்கள் தன்னுடைய லாபத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்திருக்க முடியும். ஆனால் மாமாவோ அந்த ஆளிடம் அவர் பையனுடைய படிப்புக்கு பணத்தை கட்டுமாறு சொல்லி விட்டு திரும்ப வந்து விட்டார்கள். அவர்கள் முகம் மிகுந்த நிறைவை வெளிப்படுத்தியது.
மாமாவோ ஒரு வியாபாரி என்பதைத் தாண்டி ஒரு உயர்ந்த மனிதர் என்பது புலப்பட்டது.
நண்டு, சுமை
கி.மு 400 கிரேக்க அறிஞர் ஹிப்போக்ரட்ஸ் காலத்தில் "கார்கினோஸ்" என்கிற பெயர் தோன்றியது. இந்த பெயராலேயே கான்செர் வியாதி அழைக்கப் பட்டது. கிரேக்க மொழியில் கார்கினோஸ் என்றால் நண்டு என்று பொருள். பின் வந்த மருத்துவர்கள் இந்த பெயருக்கு மேலும் விளக்கம் சேர்த்தார்கள். கான்செர் கட்டியும், சுற்றியிருக்கக் கூடிய பருத்த ரத்தக் குழாய்களையும் சேர்த்து பார்க்கும் போது கால்களை நன்கு பரப்பி மணலில் பதிந்து இருக்கும் நண்டு போன்று இருந்தது சிலருக்கு. நண்டின் ஓடு போன்று கடினமான கட்டியின் மேற்பரப்பு சிலருக்கு நண்டை நியாபகப் படுத்தியது. சிலர், தோலுக்கு அடியில் நண்டு போன்று ஒரு இடத்தில் இருந்து இது அடுத்த இடத்துக்கு சத்தமின்றி பரவுவதை நினைத்துக் கொண்டார்கள். இன்னொரு கிரேக்க வார்த்தையும் புழக்கத்தில் தோன்றியது - "ஆன்கொஸ்". கிரேக்க மொழியில் இதற்ககு சுமை என்று பொருள் உண்டு. ஒரு வகையில் இது சுமை தான்.
கிரேக்கர்களுக்கு உடலின் மூலக்கூறு "செல்" பற்றி தெரிந்து இருக்க நியாயம் இல்லை. எனவே பல பெயர்களை கொடுத்து கொண்டார்கள்.
Monday, October 10, 2011
ஸ்டீவ் ஜாப்ஸ் மேலும்...
ஸ்டீவ் ஜாப்ஸ் ஸ்டான்போர்ட் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகள்:
1) "என் வாழ்கையில் சம்பந்தம் இல்லாமல் நிறைய நடந்திருக்கிறது. அதற்கெல்லாம் அர்த்தம் எனக்கு முதலில் புரியவில்லை. ஆனால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின்னால் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய போது தான் எல்லாவற்றிற்கும் சம்பந்தம் புரிந்தது - நடந்த எல்லாம் இந்த நிறுவனத்தை தொடங்கவே நடந்தது. இதனால் உங்களுக்கு சொல்லும் அறிவுரை : வாழ்கையைப் பின்னோக்கி பார்க்கும்போது தான் புரியும், ஆனால் முன்னோக்கி பார்க்கும்போது ஒன்றும் புரியாது. நெறைய விஷயங்கள் நடக்கும், ஏன் என்று தெரியாது. ஆனால் நம்பிக்கை கொள்ளுங்கள்: நடப்பவை எல்லாம் ஏதோ ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்தவே நடக்கிறது. அது பின்னால் தான் புரியும்."
2) "என் வாழ்கையில் வெற்றியின் உச்சத்தில் நான் வேலை இழந்தேன், சில மாதங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பின் நான் தொடங்கியது தான் பிக்ஸார் நிறுவனம், NeXT நிறுவனம். இந்த நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள்; என்னையும் திரும்ப கொண்டு வந்தது. வேலை இல்லாத கட்டத்தில் தான் கல்யாணம் செய்தேன். புதிய நிறுவனங்களை தொடங்கினேன். புதிய சிந்தனைகள் வந்தன. நான் வேலையிலும் வெற்றியிலும் திளைத்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது. வேலையானது உங்கள் வாழ்கையின் பெரும் பகுதியை வியாபித்திருக்கிறது. அதனால் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அப்போது தான் மிக சிறந்த படைப்பு உங்களில் இருந்து வெளியாகும்."
3) "2004-ஆம் வருடம் எனக்கு கான்செர் இருக்கிறதென்று சொன்னார்கள். கணையத்தில் வருகிற கான்செர். ஒரு பத்து வருடம் வாழ்க்கை இருக்கும் என்றார்கள். சாவதற்கு தயாராகு என்று சொன்னார் டாக்டர். இறப்பு ஆண்டவனுடைய மிகப் பெரிய கண்டுபிடிப்பு. புதுமையை உண்டாக்கக் கூடிய கருவி. இறப்பு ஒரு அறிவார்ந்த விஷயம்: இறப்பு யாருக்கும் பிடிக்காது. சொர்கத்துக்கு செல்பவர்கள் கூட இதற்காக இறக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் இதற்குத் தப்பியவர்கள் யாரும் இல்லை, இது நிதர்சனம். இப்போது மாணவர்களாக இருக்கிற நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் கழித்து வயது முதிர்ந்து, உடல் தளர்ந்து, இந்த உலகிலிருந்து களையப் படுவீர்கள். கேட்க கஷ்டமாக இருந்தாலும் இது நிச்சயமான உண்மை. இந்த உண்மை நமக்கு உணர்த்துவது என்னவென்றால் நமக்கு கிடைத்திருக்கக் கூடிய நேரம் குறைவு. இதில் அடுத்தவர் சொல்கிற வாழ்கையை வாழாமல் உங்களுக்கு பிடித்த வாழ்கையை வாழுங்கள். அடுத்தவர் என்ன சொல்வார் என்று எண்ணாமல் உங்கள் உள்மனது சொல்வதை கேட்டு வாழுங்கள். உங்கள் மனதை கேட்டு வாழக் கூடிய தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதுக்கு மட்டுமே தெரியும், நீங்கள் என்னவாக வேண்டும் என்று, உங்களுக்கு உண்மையிலேயே என்ன பிடிக்கும் என்று."
Saturday, October 8, 2011
வலைப்பூ பார்வை
சென்ற வார புள்ளி விபரம்
| |||
| |||
| |||
| |||
| |||
|
ஸ்டீவ் ஜாப்ஸ்
ஸ்டீவ் ஜாப்ஸ் என்கிற மனிதனை இந்த கம்ப்யூட்டர் உலகம் சில நாட்கள் முன் இழந்து விட்டது. இந்த கம்ப்யூட்டர் உலகை செதுக்கிய முக்கியமான சிற்பி அவர் என்று சொன்னால் மிகையாகாது. இவர் தொடங்கியது தான் இந்த ஆப்பிள் நிறுவனம். இவரது வாழ்க்கை ஒன்றும் இன்பமானது இல்லை. அவரின் வளர்ப்பு அப்பா, அம்மா அவரை கல்லூரிக்கு அனுப்ப சிரமப் பட்டார்கள். இவர் வாழ்க்கை இவருக்கு கொடுத்தது கான்செர். ஆனால் இவர் உலகுக்குக் கொடுத்தது - ஆப்பிள் கம்ப்யூட்டர், ஐபாட் (ipod), ஐபோன் (iphone), ஐபெட் (ipad)
யோசித்து பார்த்தால் இவருக்கும் பிரமு மாமாவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது:
1) இருவரும் தாம் நினைத்ததை சாதிக்கக் கூடியவர்கள்
2) சுய சிந்தனை என்பது இவர்கள் இருவருக்கும் தாரக மந்திரம்
3) தொழிலில் நல்ல பெயர் சம்பாதித்தவர்கள்
4) கான்செர் நோயாளிகள்
5) பலரிடம் நல்ல பாதிப்புகளை ஏற்படுத்தியவர்கள், நல்ல தலைவர்கள்
6) ஏறக்குறைய ஒரு மாத இடைவெளியில் உலக வாழ்கையை முடித்துக் கொண்டவர்கள்
7) எல்லாரும் சொன்னது, நினைத்தது இது தான்: "இவர் இன்னும் நிறைய சாதித்திருப்பாரே, ஆண்டவன் ஏன் அழைத்தான் இவரை"
Emperor All Maladies - Biography of Cancer ( நோய்களின் அரசன் - கான்செர் பற்றிய வரலாறு)
இந்த புத்தகம் தமிழ்லே இன்னும் வரல்ல. இது கான்செர் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அறிவை ஏற்படுத்துற புத்தகம். இலக்கியத்துக்கான உயர்ந்த பரிசு - புலிட்சர் பரிசு - சித்தார்தா முகர்ஜி என்கிற புது தில்லியில் பிறந்த அமரிக்க குடியுரிமை வாங்கிவிட்டவருக்கு கிடைத்திருக்கிறது.
ரொம்ப நல்லாவே எழுதி இருக்காரு (சுமார் 600 பக்கங்கள்).
ரொம்ப நல்லாவே எழுதி இருக்காரு (சுமார் 600 பக்கங்கள்).
அவருடைய இணைய தளம்: http://sidmukherjee.com/
புத்தகத்தை வாங்க இந்த இணைப்பை சொடுக்கவும்: http://www.amazon.com/Emperor-All-Maladies-Biography-Cancer/dp/1439107955
அவரை பற்றி தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்: http://en.wikipedia.org/wiki/Siddhartha_Mukherjee
புத்தகத்தை பற்றி இங்கு பேசுகிறார்: http://www.amazon.com/gp/mpd/permalink/m1YK7X32OA8WBY/ref=ent_fb_link
ஒரு வேண்டுகோள்...!
இந்த வலைப்பூ வழியாக மற்றவர்களுக்கு நல்லது செய்ய முயற்சிப்போம். எல்லாருக்கும் பயன்படுகிற, எல்லாரும் ரசிக்க தக்க விஷயங்களை பதிவு செய்வோம். தனிப்பட்ட நம்முடைய தொடர்புகளை மின்னஞ்சல் வழியாக தொடருவோம், அல்லது இந்த வலைப்பூவில் நண்பராக (உறுப்பினராக) சேர்ந்தால் மற்றவர்களுடன் தனிப்பட்ட தொடர்புகளை தொடரலாம். ஆனால் வலைப்பூ பதிவாக வேண்டாமே... மேலும் இந்த வலைப்பூ பல நாடுகளில் இருந்து நிறைய பேரால் பார்க்கப் படுகிறது, அதில் பலருக்கு பிரமு யார் என்பது தெரியாது. மாமாவை எப்படிப் பட்ட மனிதராக நாம் நினைகிறோமோ அந்த எண்ணம் எல்லாருக்கும் வரும் வகையில் இந்த இணையத்தை தொடருவோம், நம்முடைய பங்களிப்பைத் தொடருவோம். உங்களுடைய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கிறேன்.
நன்றி
Thursday, October 6, 2011
Re: நல்ல மாமாவுக்கு
2011/10/5 shunmuga sundaram
அன்புள்ள என் இனிய நல்ல மாமாவுக்கு,உங்கள் அன்பு மருமகனின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !நீங்கள் என்றும் மறைவதில்லை எங்களோடுதான் என்றும்இருப்பீர்கள் என்பதை நான் நன்கு உணர்கிறேன்.
--
Thanks&Regards
Sundar
Fwd: நல்ல மாமா
அன்புள்ள அண்ணனுக்கு,
ஒரு தாழ்மையான வேண்டுகோள்! நாம எல்லோரும் நம்ம மாமாவ "நல்ல மாமா" னு கூப்பிடும் போது அவங்களுக்கு எவளவு பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கும்.அதனால நாம எப்பவும் அவங்கள அப்படிய கூப்பிடனும் என்பதுதான் அவங்களோட ஆசை நாம நம்மளோட வெப்சைட் பெயர் மற்றும் மெமோரியல் டிரஸ்ட் பெயரை இனிமேல் நல்ல மாமானு மாற்றுவோம்.
குறைந்தபட்சம் வெப்சைட் பெயரையாவது நல்ல மாமா@ ப்லோக்ச்போட்.காம் னு வைக்கலாம் என்பது என்னோட ஆசை.
தம்பி
சுந்தர்
Tuesday, October 4, 2011
Monday, October 3, 2011
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 1, 2
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 1 - ஆடித் திருநாள்
சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி நடக்கற கதை இது. வந்தியத் தேவன் தான் நம்ம ஹீரோ. குதிரைய்ல ஏறி நம்ம ஆளு சோழ நாட்டுக்குள்ள வர்றான், அவன் கிட்டே ரெண்டு ஓலை இருந்தது - ஒண்ணு சோழ மகாராஜாவுக்கு இன்னொன்னு குந்தவை பிராடியாருக்கு (நாட்டு இளவரசி, கரிகாலனோட அக்கா) . கொடுத்தது, வந்தியதேவனுடைய எஜமான், நாட்டு இளவரசன் ஆதித்த கரிகாலன். ஓலை இருக்கற விஷயத்த பத்தி யாரு கிட்டயும் மூச்சு விட கூடாதுனும் சொல்லி இருந்தார். ராத்திரிக்கு கடம்பூர் சம்புவரையர் (நண்பன் கந்தமாறனோட அப்பா, சோழ மகாராஜவோட ஆதிக்கத்துக்குட்பட்ட குறுநில மன்னர்) மாளிகைலே தங்கிட்டு காலைலே பிரயாணத்தை தொடரலாம்னு நெனைச்சான்.
அத்தியாயம் 2 - ஆழ்வார்க் கடியான் நம்பி
அப்படிப் போயடீருந்த வந்தியத் தேவன் மூணு பேரு வாக்குவாதம் பண்றத பாத்தான். அதிலே ஒருத்தன் முன்குடுமி வச்ச வீர வைஷ்ணவன் - ஆழ்வார்கடியான் நம்பி. சிவன் பெருசா விஷ்ணு பெருசான்னு தான் வாக்குவாதம். வந்திய தேவன் உள்ளே புகுந்து தடுத்து கூட்டத்த களச்சு விட்டான். அப்ப முரசு சத்தம் கேட்டுச்சு. "பெரிய பழுவேட்டரையர் வர்றார்"ன்னு கட்டியம் கூறுதல் கேட்டுச்சி. கைலே வேல் தாங்கி வீரர் கூடம் வந்துச்சு, அதுக்கு பின்னாடி பெரிய யானை மேல ஆஜானுபாகுவா பெரியவர் ஒருத்தர் வந்திட்டு இருந்தார். அவர் தான் பெரிய பழுவேட்டரையர் - சோழ நாட்டுக்கு பைனான்சியர், டாக்ஸ் கலக்ட் பண்ணறவர், எல்லா பொன் பொருளுக்கும், விளையிற பயிருக்கும் இன்-சார்ஜ். சோழ ராஜாக்கு பாடி-கார்டும் இவர் தான். சோழ ராஜா இவர் மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தார். அதனாலே பளுவேட்டரயருக்கு தனி கொடி, சின்னம் வைக்க அனுமதி கொடுத்திருந்தார். இவருக்கு பின்னாடி மூடின பல்லக்கு போயிட்டு இருந்தது. கொஞ்சம் தள்ளி மறைவா இருந்து ஆழ்வார்கடியான் நம்பி இந்த பல்லக்கையே உத்து பாத்திட்டு இருக்கறத நம்ம ஹீரோ கவனிச்சான்.
(தொடரும்)
மாமாவின் பிறந்த நாள்
மாமாவின் பிறந்த நாள் அக்டோபர் 5 (தகவல் - சுமதி)
இந்த நாளில் பிரமநாயகம் நினைவு அறக்கட்டளை வழியாக எதாவது செய்வோமா ?
Sunday, October 2, 2011
Saturday, October 1, 2011
Subscribe to:
Posts (Atom)