கி.மு 400 கிரேக்க அறிஞர் ஹிப்போக்ரட்ஸ் காலத்தில் "கார்கினோஸ்" என்கிற பெயர் தோன்றியது. இந்த பெயராலேயே கான்செர் வியாதி அழைக்கப் பட்டது. கிரேக்க மொழியில் கார்கினோஸ் என்றால் நண்டு என்று பொருள். பின் வந்த மருத்துவர்கள் இந்த பெயருக்கு மேலும் விளக்கம் சேர்த்தார்கள். கான்செர் கட்டியும், சுற்றியிருக்கக் கூடிய பருத்த ரத்தக் குழாய்களையும் சேர்த்து பார்க்கும் போது கால்களை நன்கு பரப்பி மணலில் பதிந்து இருக்கும் நண்டு போன்று இருந்தது சிலருக்கு. நண்டின் ஓடு போன்று கடினமான கட்டியின் மேற்பரப்பு சிலருக்கு நண்டை நியாபகப் படுத்தியது. சிலர், தோலுக்கு அடியில் நண்டு போன்று ஒரு இடத்தில் இருந்து இது அடுத்த இடத்துக்கு சத்தமின்றி பரவுவதை நினைத்துக் கொண்டார்கள். இன்னொரு கிரேக்க வார்த்தையும் புழக்கத்தில் தோன்றியது - "ஆன்கொஸ்". கிரேக்க மொழியில் இதற்ககு சுமை என்று பொருள் உண்டு. ஒரு வகையில் இது சுமை தான்.
கிரேக்கர்களுக்கு உடலின் மூலக்கூறு "செல்" பற்றி தெரிந்து இருக்க நியாயம் இல்லை. எனவே பல பெயர்களை கொடுத்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment