Memories

Wednesday, March 21, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 16

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 16 - அருள்மொழி வர்மர் 






கி.பி. 970 வாக்கில் சுந்தர சோழ சக்கரவர்த்தியோட சாம்ராஜ்யம் செழிச்சு வளர்ந்து இருந்துச்சு. ஆனா இவர் பட்டத்துக்கு வரும்போது நெலமை வேறயா இருந்தது. வடக்கிலும் தெக்கிலும் விரோதிகள் இருந்தாங்க. தெக்க படை எடுத்து போனாரு. அங்க இருந்த பாண்டிய ராசாக்கும் இவருக்கும் சேவூர் அப்படீங்கற இடத்திலே சண்டை நடந்துச்சு. சிங்கள மன்னன் மகிந்தன் என்கிறவன் பாண்டியர்களுக்கு உதவியா பெரிய படைய அனுப்பி இருந்த்தான். பாண்டியர் படையும், சிங்கள படையும் சின்னா பின்னமாயிட்டது. பாண்டிய மன்னன் ஓடி ஒளிஞ்சுகிட்டான். சிங்களர்கள் படை அனுப்பி பாண்டியர்களுக்கு உதவி செய்றது வழக்கமா ஆய்ட்டதால, அத தடுக்க, மகிந்தனுக்கு புத்தி புகட்ட ஒரு சோழ சைன்யம் (மிலிட்டரி) இலங்கைக்கு போச்சு, 
கௌம்பாளூர் சிற்றரசன் பராந்தகன் சிறிய வேளாண் (இவர் தான் வானதியோட அப்பா) தலைமைல. சோழர் படை பயணத்துல வந்த சிரமங்கள் காரணமா பிரிஞ்சு போச்சு. கரை இறங்கின சின்ன படைய, தன்னோட பெரிய படைய அனுப்பி துப்புரவா அழிச்சான், மகிந்தன். தோத்து போவோம்ன்னு தெரிஞ்சும் திரும்பி ஓடாம, வீரமா சண்டை போட்டு உயிரை விட்டான், பராந்தகன் சிறிய வேளாண். சோழரோட பெரிய படை சிலோன் பாட்டுன்னு தெரிஞ்சு படை திரட்டி வந்தான் பாண்டிய மன்னன். இந்த தடவ பாண்டிய சேனை மட்டுமில்ல பாண்டிய ராஜாவும் அழிஞ்சான். இந்த சண்டைல சுந்தர சோழரோட மூத்த பையன், பட்டத்து இளவரசர் (14 வயசு தான் ஆய்ருந்தது அப்போ), ஆதித்த கரிகாலர் தலைமைல தான் நடந்தது. 


பராந்தகன் சிறிய வேளாண் இறந்ததுக்கு பழி வாங்கவும், மகிந்தனுக்கு புத்தி வர்றதுக்கும் அவன தண்டிக்கணும்னு நினைச்சாங்க சோழ ராஜ்யத்தோட வீராதி வீரர்கள் எல்லாரும். யாரோட தலமைலே படைய அனுப்பலாம்னா எல்லாரும், நான் நீன்னு போட்டி போட்டுட்டு இருந்தாங்க. ராஜ்யமே பிரிஞ்சு போய்டும்ன்னு பயந்தாரு சுந்தர சோழ சக்கரவர்த்தி. ஆதித்த கரிகாலன் வட திசைலே இருந்து வந்த ராஷ்டிரகூடர்கள அடக்க படையோட இருந்தாரு. இந்த நிலமைய சமாளிக்க ஹெல்ப் பண்ண வந்தாரு சின்னவர், அருண்மொழி வர்மர். 20 வயசு கூட ஆகல, ஆனா இவரு தலைமைய மற்ற சிற்றரசர்கள் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்கன்னு நினைச்சாரு சுந்தர சோழர்.  சின்னவர் படை நடத்தின விதமே வித்யாசமா இருந்தது, அத விட வித்யாசமா இருந்தது அவரோட போர்த்தந்திரங்கள். சரியான நேரத்தில போர்த் தளவாடங்கள் (supply, reinforcements) வரல்ல. இதனால திரும்பி வந்து அப்பா கிட்ட பேசி ஏற்பாடுகள் செஞ்சுகிட்டாரு. திரும்பி போறப்போ அரண்மனை பெண்கள் ராஜ மரியாதை செஞ்சாங்க. கிலே தீபத் தட்ட எடுத்து ஆரத்தி எடுத்தாங்க. வானதி நடுங்கி தீபத் தட்ட கீழ விட்டா. இளவரசர் ஸ்மைல் பண்ணிட்டு போயிட்டாரு. அபசகுனம்னு சொன்னாங்க எல்லாரும், இளவரசருக்கு எதனா ஆகலாம்னாங்க. இவ டென்சன் அதிகமா ஆயி மயங்கி விழுந்தா. சலசலப்புக்கு காரணம் கேள்விப்பட்டு உள்ள வந்து பாத்தாரு அருள்மொழி வர்மர். குந்தவை வானதி மயக்க தெளிய முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. இவளோட அப்பா பத்தி தெரிஞ்ச உடனே ரொம்ப இரக்கப் பட்டாரு. இதே போல இலங்கைக்கு போன தன்னோட அப்பா நியாபகம் வந்திருக்கும்னு நினைச்சாரு. வானதி மேல தனி அன்பு வந்தது இளவரசருக்கு. அக்கா கிட்ட, அம்மா அப்பா இல்லாத அவள நாமதான் பாத்துக்கணும் அப்படீன்னார். 
 (யோசிச்சு பாருங்க, அவளுக்கு பிரியமான அப்பா இலங்கைக்கு சண்டைக்கு போகும் போது இப்படி தான் அனுப்பி வச்சுருப்பா, அவரு திரும்ப வரல. அடுத்து ரொம்ப ஆசை படர அருள்மொழி வரமர இலங்கைக்கு அனுப்பி வைக்கறா)
குந்தவைக்கு ஏதோ புரிஞ்சது. வானதி மேல தனி பிரியம் அப்போ இருந்து. இதெல்லாம் கவனிச்ச மத்த இளவரசிகள் எல்லாருக்கும் வானதி மேல பொறாமை வந்தது.

No comments:

Post a Comment