Memories

Saturday, October 8, 2011

Emperor All Maladies - Biography of Cancer ( நோய்களின் அரசன் - கான்செர் பற்றிய வரலாறு)



இந்த புத்தகம் தமிழ்லே இன்னும் வரல்ல. இது கான்செர் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அறிவை ஏற்படுத்துற புத்தகம். இலக்கியத்துக்கான உயர்ந்த பரிசு - புலிட்சர் பரிசு - சித்தார்தா முகர்ஜி என்கிற புது தில்லியில் பிறந்த அமரிக்க குடியுரிமை வாங்கிவிட்டவருக்கு கிடைத்திருக்கிறது.

ரொம்ப நல்லாவே எழுதி இருக்காரு (சுமார் 600 பக்கங்கள்). 

அவருடைய இணைய தளம்: http://sidmukherjee.com/
புத்தகத்தை வாங்க இந்த இணைப்பை சொடுக்கவும்: http://www.amazon.com/Emperor-All-Maladies-Biography-Cancer/dp/1439107955
அவரை பற்றி தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்: http://en.wikipedia.org/wiki/Siddhartha_Mukherjee 
புத்தகத்தை பற்றி இங்கு பேசுகிறார்: http://www.amazon.com/gp/mpd/permalink/m1YK7X32OA8WBY/ref=ent_fb_link





ஒரு வேண்டுகோள்...!


இந்த வலைப்பூ மாமா பற்றிய நினைவு கூறத் தக்க நல்ல விஷயங்களை பதிவு செய்வதற்காக தொடங்கப் பட்டது. மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது மாமாவின் இயல்பு. உலகின் மிகப் பெரிய பணக்காரரும் நிதியுலகின் சக்கரவர்த்தியான Warren Buffet ஒரு முறை சொன்னார்: "நான் இந்த சமுதாயத்தால் தான் நல்ல மனிதனாக, பணக்காரனாக வந்தேன். அதனால் தான் இந்த சமுதாயமும் நல்ல நிலைக்கு வருவதற்காக எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது" இதனால் தான் அமெரிக்க அரசாங்கம் அவரிடம் போய் அறிவுரை கேட்கிறது, அவர் சொல்வதை சட்டமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து எனக்குத் தெரிவது என்னவென்றால் சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணுவது பெரிய மனிதர்களின் குணம். அது பிரமு மாமாவிடம் இருந்ததில் வியப்பு இல்லை.
 இந்த வலைப்பூ வழியாக மற்றவர்களுக்கு நல்லது செய்ய முயற்சிப்போம். எல்லாருக்கும் பயன்படுகிற,  எல்லாரும் ரசிக்க தக்க விஷயங்களை பதிவு செய்வோம். தனிப்பட்ட நம்முடைய தொடர்புகளை மின்னஞ்சல் வழியாக  தொடருவோம், அல்லது இந்த வலைப்பூவில் நண்பராக (உறுப்பினராக)  சேர்ந்தால் மற்றவர்களுடன் தனிப்பட்ட தொடர்புகளை தொடரலாம். ஆனால் வலைப்பூ பதிவாக வேண்டாமே... மேலும் இந்த வலைப்பூ பல நாடுகளில் இருந்து நிறைய பேரால் பார்க்கப் படுகிறது, அதில் பலருக்கு பிரமு யார் என்பது தெரியாது.  மாமாவை எப்படிப் பட்ட மனிதராக நாம் நினைகிறோமோ அந்த எண்ணம் எல்லாருக்கும் வரும் வகையில் இந்த இணையத்தை தொடருவோம், நம்முடைய பங்களிப்பைத் தொடருவோம். உங்களுடைய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கிறேன்.  

நன்றி



Thursday, October 6, 2011

Re: நல்ல மாமாவுக்கு


2011/10/5 shunmuga sundaram
அன்புள்ள என் இனிய நல்ல மாமாவுக்கு,
                                                                          உங்கள் அன்பு மருமகனின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !
                                                                          நீங்கள் என்றும் மறைவதில்லை எங்களோடுதான் என்றும் 
                                                                           இருப்பீர்கள் என்பதை நான் நன்கு உணர்கிறேன்.
                                                                                



--
Thanks&Regards
Sundar

Fwd: நல்ல மாமா


அன்புள்ள அண்ணனுக்கு,
                                              ஒரு தாழ்மையான வேண்டுகோள்! நாம எல்லோரும் நம்ம மாமாவ "நல்ல மாமா" னு கூப்பிடும் போது அவங்களுக்கு எவளவு பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கும்.அதனால நாம எப்பவும் அவங்கள அப்படிய கூப்பிடனும் என்பதுதான் அவங்களோட ஆசை நாம நம்மளோட வெப்சைட் பெயர் மற்றும் மெமோரியல் டிரஸ்ட் பெயரை இனிமேல் நல்ல மாமானு மாற்றுவோம்.
                                              குறைந்தபட்சம் வெப்சைட் பெயரையாவது நல்ல மாமா@ ப்லோக்ச்போட்.காம் னு வைக்கலாம் என்பது என்னோட ஆசை.
தம்பி
சுந்தர்






Tuesday, October 4, 2011

இன்னும் புதிய போட்டோக்கள்