Person who made many lives change better. பலரது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியவர்.மேலும்...
Memories
Tuesday, February 7, 2012
Sunday, February 5, 2012
சட்டசபையில் இருந்து...
விஜயகாந்துக்கு பேச சரியா வாய்ப்புத் தரல்லன்னு அவருக்கு கோவம் வந்துது. ஆளும் கட்சி ஆளுங்க இவர உக்கார சொல்லி கத்தினாங்க. ஒரு கட்டத்தில இவருக்கு ரொம்ப கோபம் வந்து எழுந்து கத்திடாரு. சட்ட சபையில முரட்டுத் தனமா நடந்துக்கிட்டாருன்னு ஆளுங் கட்சி சொன்னது. கேப்டனுக்கு எப்பவுமே கோவம் கொஞ்சம் அதிகம் தான். சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலே வேட்பாளர அடிசிட்டாருன்னு பேச்சு இருந்தது.
போட்டோலே தே.மு.தி.க அவைத் தலைவர் (விஜயகாந்துக்கு இடது புறம் இருக்கவரு) அதிர்ச்சியா இருக்கறதையும் ஸ்டாலின் புன்னகையும் நிறைய விஷயங்கள சொல்லாம சொல்லுது. இவங்களுக்குள்ள இருந்த பகை இப்ப வெளிய வந்திட்டதா எல்லாரும் சொல்றாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க ?
Saturday, February 4, 2012
சமீபத்தில் ரசித்த படம் - தாவணி கனவுகள்
அவர் வீட்டுக்கு முன் ஒரு இளைஞர் பட்டாளமே இருக்கும், ஒருவன் சைக்கிளை பழுது பார்த்துக் கொண்டிருப்பான்; அவருடன் ஒருத்தன். இருவர் பாடம் பற்றி சீரியசாக விவாதித்துக் கொண்டு இருப்பார்கள். மோட்டார் சைக்கிளில் இருவர். அனைவர் கவனமும் பாக்யராஜ் வீட்டு மேல். ஒரு மக்கர் போனில் பாக்யராஜ் சொல்வார்:" எங்க வீட்டிலே மானம் மரியாதை தான் மிச்சம் இருக்கு, அத கெடுத்த பாவம் உங்களுக்கு வேண்டாம். இன்னும் போக மாட்டீங்கன்னா உங்களுக்கு எந்த தங்கய பிடிக்குன்னு சொல்லுங்க, அவள உங்களுக்கு கட்டி வைக்கறேன்" கூட்டம் கலைத்து காணாமல் போகிறது.
திரைக்கதை அமைப்பதில் அவருக்கு நிகர் அவரே. வேலை கிடைக்காமல் பிளாஸ்டிக் சாமான் கூடை தூக்கித் தலைமேல் வைத்து கூவி விற்கிறார்.எதிரே வேலை இல்லா இளைஞர் போராட்ட ஊர்வலம் கோஷமிட்டுக் கொண்டே வருகிறது. பாக்யராஜ் கூவி விற்பதும், போராட்ட கோஷமும் கீழ்க் கண்டவாறு சின்க் ஆகின்றன.
"வேலை இல்லா பட்ட தாரிகளுக்கு...." (கூட்டம்)
"பிளாஸ்டிக் சாமானம், பிளாஸ்டிக் சாமானம்" (இது பாக்யராஜ்)
"படித்த பட்டதாரி வாலிபர்களுக்கு..."
"பிளாஸ்டிக் சாமானம், பிளாஸ்டிக் சாமானம்"
இன்னொரு கட்டம். மிலிட்டரியாக வரும் சிவாஜி கணேசன் கோவில் பூசாரியிடம் கேட்டகிறார்: "நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் தெரியுமா உனக்கு?"
"போஸூ பக்கத்து தெருவில பொட்டிக்கட வச்சுருக்காருங்க. ஆனா, நேதாஜி, சுபாஸூ இவங்கள நமக்கு பழக்கமில்லீங்க"
கடைசி தங்கையாக வருபவர் நடிப்பு சூப்பர். தன் தங்கைகளை கரையேற்ற வேண்டி வேலை தேடி சென்னை செல்கிறார் அண்ணன் பாக்யராஜ். சம்பாதிக்க பல வழிகளை முயன்று கடைசியில், பாரதி ராஜா கண்ணில் பட்டு ஹீரோ ஆகிறார், பணம் கிடைக்கிறது. அது வரை குடும்பத்துக்கு பாதுகாப்பாகவும் இருந்து மாத செலவுக்கு பணம் கொடுக்கிறார் சிவாஜி. போஸ்ட் மேனாக வருகிறார் பார்த்திபன். பாரதி ராஜா அவராகவே வருகிறார். ராதிகா சென்னையில் சினிமா வாய்ப்பு தேடும் பாக்ய ராஜாவுக்கு உதவுகிறார். பணத்தை பெரிதாக நினைக்கும் வரன்களை ஒதுக்கி நல்லவர்களான வாலிபர்களை மனம் முடிக்கிறார்கள் தங்கைகள். இளையராஜாவின் இசை தாலாட்டுகிறது. காமிரா சில இடங்களில் சரியாக இருந்து இருக்கலாம். கல்யாணத்தை வியாபாரமாக்காதீர்கள் என்கிற செய்தியுடன் முடிகிறது படம்.
Wednesday, February 1, 2012
Subscribe to:
Posts (Atom)






