Memories

Saturday, March 10, 2012

சமீபத்தில் ரசித்த படம் - அழகன்

பாலச்சந்தரின் அழகான படம். உழைப்பால் உயர்ந்த அழகப்பன் என்கிற ஹோட்டல் முதலாளி, மம்மூட்டி, மூன்று பெண்களின் நடுவில் சிக்கி சின்னா பின்னாகி பின் எல்லாம் சுபமாக முடிவது தான் படம்.


"அவன் தான் அழகன்" பாடல் சுகம் என்று பார்த்தால் எல்லா பாடல்களும் முன்னதை விட சூப்பராக இருக்கின்றன. இதற்காக இசையமைப்பாளர் மரகதமணிக்கு ஒரு சபாஷ்.

மனைவியின் இறப்புக்கு பிறகு வேறு யாரையும் திரும்பி பார்க்காத இவர் மேல் பதினெட்டு வயது "குயின் மேரிஸ் காலேஜ் குயின்" என்று சொல்லிக்கொண்டு வரும் சொப்னா (மதுபாலா), டுடோரியல் காலேஜ் டீச்சர் கண்மணி (கீதா), நடன கலைஞர் பிரியா (பானுப்ரியா) ஈர்க்கப்படுகிறார்கள். அதனால் வரும் குழப்பங்கள் தான் கதை. கதை திரைக்கதை இயக்கம் பாலசந்தர், டி.வீ. நாடகம் போலத் தோன்றி விடாமல் படத்தை நன்றாக கொண்டு போயிருக்கிறார்.   


மதுபாலாவுக்கு இது முதல் படம், ஆனால் நடிப்பில் குறும்பு கொப்பளிக்கிறது. சும்மா பின்னி பெடலெடுத்து இருக்கிறார். பானுப்பிரியா ஹோட்டலுக்கு வர அவரிடம் ஹோட்டல் மெனுவை  மம்மூட்டி ஒப்பிக்கும் காட்சி சூப்பர். மம்மூட்டிக்கு நான்கு குழந்தைகள். 'நாம வேற வீட்ல போய் பிறந்திருக்கலாண்டா' என்று சொல்லும் சிறுவன் நடிப்பு சிறப்பு.  போட்டோ-வில் அம்மாவின் முதுகு தெரிவது பார்த்து ஒரு குழந்தை போட்டோவின் பின் பக்கம் போய் முகம் பார்க்க முயல்வது சூப்பர்.  ஒரு இடத்தில் மம்மூட்டி பேசும் வசனம் இது: "நான் சொல்றேன் நீ கேட்டுக்கோ..ஆனா டான்ஸ் ஆடிக்கிட்டே பேசத் தெரியாதெனக்கு.." சீரியசான இடத்திலும் சிரிப்பு வரும் நமக்கு. 


படத்தில் பல சின்ன பாத்திரங்கள் கூட முக்கியத்துவம் பெறுகின்றன. சந்தானம் என்கிற டிரைவர், வீட்டு வேலைக்காரராக வரும் பிருதிவி ராஜ், அதிராமப் பட்டினம் சொக்கு என்கிற கோள்மூட்டும் பாத்திரம் (மூன்று பெண்களுக்கும் இடையில் போட்டியையும் குழப்பத்தையும் மாறி மாறி ஏற்படுத்துகிறது), பானுப்பிரியாவின் அப்பா, அம்மா, மதுபாலாவின் பாட்டியாக வரும் சாவ்கார் ஜானகி. டெலிபோன் கூட ஒரு முக்கிய பாத்திரமாக மாறி இருக்கிறது. ஒரு பாடலில் பானுப்ப்ரியாவும் மம்மூட்டியும் இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்கள்: "சங்கீத ஸ்வரங்கள்" என்கிற பாட்டு சூப்பரோ சூப்பர். தூர்தர்ஷனில் வளையம் வரும்போது வரும் இசையையும் பாடலில் சேர்த்திருப்பது அருமை,  இதை படமாகிய விதம் மிகவும் அருமை.




சில சமயம் மம்மூட்டி ஹோட்டலை கவனிக்கறாரா இல்லை இந்த மூன்று பெண்களை மட்டும் கவனிக்கறாரா என்று நினைக்க தோன்றுகிறது. இயக்குனர் கொஞ்சம் கதையை நீட்டி இருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது. 


இன்றும் கூட பார்க்கலாம், ரசிக்கலாம் என்கிற வகையில் படம் இருப்பது தான் இயக்குனரின் வெற்றி. சிறந்த படம்.


Thursday, March 8, 2012

இதை வரைந்தார்களா இல்லை படம் பிடித்தார்களா?








Sunday, March 4, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 14, 15

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை 




வந்தியத் தேவன் குதிரை மேல ஏறி ஆத்தங்கரை வழிய போயிட்டு இருந்தான்."ஐயோ முதலை ! முதலை !! காப்பாத்துங்க" ன்னு ஒரு பொம்பளை கத்துறது கேட்டுச்சு. தூரத்திலே பெண்கள் ஆத்துலே குளிச்சுட்டு இருந்தாங்க. பக்கத்து மர நிழல்லே முதல ஒன்னு பாதி தண்ணிலையும் பாதி தரைலையும் வாய அகலமா திறந்து இருந்தது. முன்னாடி ஒரு பொண்ணு. கொஞ்சமும் யோசிக்கல, வந்தியத்தேவன். வேல உருவினான், வீசினான் முதலை மேல, தப்புமா குறி ? முதல முதுகில குத்தி நின்னது வேல். வாள உருவிகிட்டு  குதிரைல இருந்து ஜம்ப் பண்ணி முதலைய பாத்து ஓடினான். எல்லாம் ஒரு செகண்ட்ல நடந்திட்டு. திக்குன்னு பாத்திட்டு இருந்த பெண்கள் மெதுவா சிரிக்க ஆரமிச்சாங்க. ஒருத்தி முன்னாடி வந்து "ஐயா! உங்களுக்கு ரொம்ப நன்றி. ஆனா சிரமப் பட வேண்டாம்"ன்னா. ஒன்னும் புரியல இவனுக்கு.




அத்தியாயம் 15 - வானதியின் ஜாலம் 



அரசிளம் குமரிகள் ரெண்டு பேரு சோதிடர பாக்கறதுக்கு வந்தாங்க இல்லையா ? ஆனா நெறைய இளவரசிகள் இவங்க கூட வந்திருந்தாங்க. அவங்கள விட்டுட்டு குந்தவை வானதிய மட்டும் கூட்டிட்டு வந்தாங்க. அந்த பெண்கள் எல்லாம் வானதி பத்தி புரணி பேசிட்டு இருந்தாங்க. வானதிக்கு அருள்மொழி வர்மர் மேல இருந்த காதல் பத்தி பொறாமையா பேசிட்டு இருந்தாங்க. குந்தவை கூட இதுக்கு சம்மதிச்சதா பேசிகிட்டாங்க. 

Thursday, March 1, 2012

யுவராஜ் சிங் - புகைப்படங்கள்

இரண்டாவது கீமோ முடிந்து விட்டது...யூவி (யுவராஜை இப்படி தான் கூபிடுகிரார்கள்) சிங்கம் தான் !!



டுவிட்டரில் தொடர: yuvsingh09
இணைய முகவரி : http://www.yuvrajsingh.in/index.html


கும்ப்ளே யூவியை பாஸ்டனில் போய் பார்த்தார். போட்டோ இங்கே...


Sunday, February 26, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 13

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 13 - வளர்பிறை சந்திரன் 







வந்தியத் தேவன் அந்த பெண்கள் யாருன்னு சோதிடர் கிட்ட விசாரிச்சான், அவரு பிடி கொடுக்கல. பலரும் வந்து போவாங்க, யார் பத்தியும் யார் கிட்டயும் சொல்லறதுக்கு இல்லன்னு சொல்லிட்டார். இவரு கிட்ட நம்ம பருப்பு வேகாதுன்னு நினைச்சு நேரடியா கேட்டான்: "நான் போற காரியம் நல்ல படியா நடக்குமா?"
இவன் பேரு கேட்ட உடனே அவனோட ஜாதகத்த பொட்டிலே இருந்து எடுத்துக்கிட்டாரு. இவன் தஞ்சாவூரு போகனும்னும், அங்க சக்கரவர்த்திய பாக்கனும்னும், பழுவேட்டரையர் தடையா இருப்பாங்கன்னும் நெனைச்சு கேட்டான்.
ஜோசியரும் குறிப்பா பதில் சொல்லிட்டு இருந்தாரு. இளவரசர் அருள்மொழி வர்மர் கூட சேந்துக்க சொன்னாரு.