ஒரு தடவ வேலைல நிறைய கஷ்டம் வந்திட்டது. அது விடவே இல்ல. எப்போ தீரும்-ன்னு தெரியல. கஷ்டத்தை பத்தி நெனைக்கறதே ஒரு தனி கஷ்டமா போயிருச்சி. பிரமு மாமாவிடம் சொல்லிட்டு இருந்தேன். மாமா இப்படி சொன்னாங்க, அவங்க பாணியில்: கஷ்டம் என்பது தரையில் வரையிற பெரிய கோடு மாதிரி. அந்த கோடு எப்பவும் பெருசாத் தான் தெரியும். அது பக்கத்திலே அதை விட பெரிய இன்னொரு கோடு வரையும் போது இந்த கோடு சின்னதா ஆயிடும்.
ஒரு நிமிஷம் நெனைச்சு பாத்தேன்...பத்தாம் கிளாஸ் படிக்கும் போது அதை விட பெரிய கஷ்டம் இல்லைன்னு தோனுச்சு. பன்னண்டாம் கிளாஸ் படிக்கும் போது பத்தாம் கிளாஸ் கஷ்டம் ஒண்ணுமே இல்லைன்னு தோனுச்சு. அது அப்படி போய் கிட்டே இருக்கு. எதாவது கஷ்டம் வரும் போது மாமா சொன்னத நெனச்சுக்குவேன், அந்த கஷ்டம் ஈசி ஆயிடும்.
No comments:
Post a Comment