Memories

Sunday, February 26, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 13

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 13 - வளர்பிறை சந்திரன் 







வந்தியத் தேவன் அந்த பெண்கள் யாருன்னு சோதிடர் கிட்ட விசாரிச்சான், அவரு பிடி கொடுக்கல. பலரும் வந்து போவாங்க, யார் பத்தியும் யார் கிட்டயும் சொல்லறதுக்கு இல்லன்னு சொல்லிட்டார். இவரு கிட்ட நம்ம பருப்பு வேகாதுன்னு நினைச்சு நேரடியா கேட்டான்: "நான் போற காரியம் நல்ல படியா நடக்குமா?"
இவன் பேரு கேட்ட உடனே அவனோட ஜாதகத்த பொட்டிலே இருந்து எடுத்துக்கிட்டாரு. இவன் தஞ்சாவூரு போகனும்னும், அங்க சக்கரவர்த்திய பாக்கனும்னும், பழுவேட்டரையர் தடையா இருப்பாங்கன்னும் நெனைச்சு கேட்டான்.
ஜோசியரும் குறிப்பா பதில் சொல்லிட்டு இருந்தாரு. இளவரசர் அருள்மொழி வர்மர் கூட சேந்துக்க சொன்னாரு.  

கதிரும் வீச்சும்

சில மாதங்கள் கழித்து பிரான்ஸ் நாடு விஞ்ஞானி ஹென்றி பெக்வேறல், வில்ஹேல்மிங் கண்டுபிடிப்பை படித்து தெரிந்து மேலும் அதை ஆராய்ந்து புது கண்டுபிடிப்பை வெளியிட்டார்: சில தனிமங்கள் - யுரேனியம்  போன்றவை - இயற்கையாகவே எக்ஸ் கதிர்வீச்சை உருவாகுகின்றன. பிரான்சிலேயே பெக்வேரைல்ன் நண்பர்கள், பியரி மற்றும் மேரி க்யுரி இத்துறையில் தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார்கள். தன்னிச்சையாக கதிர்வீச்சை வெளியிடும் தனிமங்கள் கண்டுபிடிப்பதே அவர்கள் லட்சியம். அதற்காக ஒரு கருவியை கண்டுபிடித்தார்கள் 1880 ஆம் வருடம்.
[ புகைப்படம்: மேரி க்யுரி (நிற்பவர்), அவர் கணவர் பியரி க்யுரி (அமர்ந்திருப்பவர்) ] 


எவ்வளவு குறைவான கதிர்வீச்சையும் கண்டுபிடிக்கவும் அளவிடவும் கூடிய கருவி அது. அதைக் கொண்டு அருகாமையில் இருக்கக் கூடிய இடங்களுக்கு சென்று ஏதேனும் கதிர்வீச்சு கொண்ட வஸ்து இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த கருவி முயற்சி வீண் போகவில்லை, கருவி கதிர்வீச்சை தரும் பொருள் இங்கு இருக்கிறது என்று காட்டியது.  அந்த இடம் காட்டின் நடுவே இருந்த ஒரு தாது உற்பத்தி நிலையத்தின் கழிவுப்பொருள்  கூடம். டன் கணக்கில் இருந்த கழிவு பொருளை சுத்திகரிக்க ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான டன் தண்ணீர் தேவைப் பட்டது. அதில் இருந்து இறுதியாக ஒரு கிராமை விடக் குறைவான அந்த தனிமத்தை பிரித்து எடுத்தார்கள், 1902-ஆம் வருடம்.
[ புகைப்படம்: கதிர்வீசும் ரேடியம்]


யுரேனியத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிக கதிர்வீச்சை வீசிக் கொண்டிருந்தது அது.தன்னையே உருக்கி ஒளியாக கதிர்வீசிக் கொண்டு இருந்தது அது. இந்த தனிமத்தை பிரித்து தனிமைப் படுத்துவதற்கு பல மாதங்கள் ஆனது. நிலையிலாத தனிமம் அது, வஸ்து (mass) என்பதற்கும் எனர்ஜி (energy) என்பதற்கும் நடுவில் இருந்தது. ஒளியை ஏற்படுத்திக் கொண்டிருந்த இந்த தனிமத்தை "ரேடியம்" என்று பெயரிட்டு அழைத்தார் மேரி கியூரி. கிரேக்க மொழியில் ஒளி என்று பொருள் தரக்கூடிய  வார்த்தை அது.


[ புகைப்படம்: ஆராய்ச்சி கூடத்தில் மேரி க்யுரி ]

 கதிர்வீச்சு உடலின் தசைகளை தாண்டி போகக் கொடிய எக்ஸ் கதிர்கள் வெளியிடக் கூடியது என்பது தெரியும். இத்தகைய குணத்தால் தான் ராண்ட்ஜன் தன் மனைவியின் கையை எக்ஸ் ரே படம் பிடித்தார். (மேலும் தகவலுக்கு நம்முடைய தளத்தில் இந்த பதிப்பை பாருங்கள்: கதிர்கள் - வல்லிய கதிர் மெல்லிய வீச்சு ) ஆனால் தசைகளுக்குள்ளே தன்னுடைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பது ராண்ட்ஜனுக்கும், மேரி க்யுரிக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Thursday, February 23, 2012

லேப்டாப் சூடாகிறதா? தீர்வு இங்கே (!)


Saturday, February 18, 2012

என்று மாறும் இந்த நிலைமை ?

நன்றி: தினமலர் 


Wednesday, February 15, 2012

அட்டகாசமான படம்


என்ன சொல்றீங்க?

Saturday, February 11, 2012

சமீபத்தில் ரசித்த படம்: கன்னத்தில் முத்தமிட்டால்




மணிரத்னம், A. R. ரகுமான், மாதவன், நந்திதா தாஸ், சிம்ரன், பிரகாஷ் ராஜ், பசுபதி என்று ஒரு சிறந்த அணியின் படைப்பு சிறப்பாகத் தான் இருக்க முடியும். ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ரொம்பவும் வித்தியாசமான கதை. பிரச்னை தான் கதையின் களம், ஆனால் அதை தொட்டுக் கொள்ளாமல் ஊடே பயணிக்கிறது; அமுதா என்கிற குழந்தை அவளுடைய உண்மைத் தாயான ஷ்யாமா என்கிற இலங்கையின் மாங்குளம் கிராமத்தை சேர்ந்த பெண்ணைத் தேடும் பிரச்சனையை சொல்லுகிறது. படத்தின் முதல் பத்து நிமிடங்களுக்கு யாழ்ப்பாணத் தமிழ் மணக்கிறது.

டாக்டர் ஹெரால்ட் விக்கிரமசிங்கே என்ற சிங்களவராக ஆக வரும் பிரகாஷ்ராஜ் அருமை, அமுதாவுக்கும் அவருக்கும் வரும் உரையாடல்கள் மிகவும் அருமை. கடைசி காட்சியில் காமிரா எல்லாருடைய முகத்துக்கும் மாறி மாறி செல்லும் போது எல்லாருடைய நடிப்பும் தெரியும், அருமையாக செய்திருக்கிறார்கள். அமுதாவாக வரும் கீர்த்தனா கலக்கி (அதாவது நன்றாக செய்து) இருக்கிறார்.  நந்திதா தாஸ் பற்றி சொல்லவே வேண்டாம். A. R. ரகுமான் என்று சொல்லி விட்டோம், அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது. 
    
சின்ன சின்ன காட்சிகள் கூட தத்ரூபமாக வருகிறது. சிமரன் மூன்று குழந்தைகளுக்கு தாயாக வருகிறார். குழந்தைகளை பார்க்கும் தாயை தத்ரூபமாக பிரதிபலிக்கிறார். துணிகளை எடுத்து வைக்கிறார், பேசிக் கொண்டே மாவு பிசைகிறார், கடைசி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுகிறார். மூன்று குழந்தைகள் உள்ள தாய் எப்படி ஒரு கணம் சும்மா இருக்க முடியும். இலங்கையில் இருந்து அவர் தன் மற்ற இரண்டு குழந்தைகளுடன்  பேசும் காட்சி அருமை. "தாத்தா கிட்ட போன கொடு" அம்மா விட்டு விட்டு போனதால் கோபத்தில் இருக்கும் குழந்தை கேட்கிறது "நீ எனக்கு அம்மாவா, அவருக்கா?" "ரெண்டு பேருக்கும் தாண்டா" என்கிறார் சிமரன். 

கதை, திரைக்கதை மணி ரத்தினம். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார். படத்தில் எந்த ஒரு காட்சியும் சும்மா வருவதில்லை. யதார்த்தத்துக்கு குறைவே இல்லை படத்தில். அகில் என்கிற பெயரில் கடைசி பையனாக வரும் வாண்டு அம்மாவிடம் போய் அக்காவும், அண்ணனும் சண்டை போடுவதை கம்ப்ளைன்ட் பண்ணும் காட்சி சூப்பர். "நான் தான் நடூ...ல" என்று அம்மா அப்பாவின் நடுவில் அமுதா புகும் காட்சி சூப்பர். கல்யாணத்துக்கு முன் சிம்ரன், மாதவன் நடுவில் இருக்கும் காதல் கண்ணாமூச்சியை மணிரத்தினம் வடிவமைத்து இருக்கும் விதம் அருமை. மாதவனின் அக்காவாக வருபவரின் நடிப்பும் அருமை. அதிலும் "லட்டர்! அப்பா!" என்று குழந்தையை தூக்கி கொண்டு அவர் கணவனின் கடிதத்தை எடுத்து செல்லும் காட்சி கண நேர கவிதை . படத்தில் கவர்ந்த காட்சிகள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்றால் படம் முழுவதையும் சொல்ல வேண்டி வரும்.  

Tuesday, February 7, 2012

பேட்மேன், சூப்பர்மேன் - I.D கார்ட் பாத்திருக்கீங்களா ?

  

படத்த பாத்து ஒரு சரியான தலைப்பு கொடுங்க...



தலைப்ப பின்னூட்டமா போடுங்க

Sunday, February 5, 2012

சட்டசபையில் இருந்து...



விஜயகாந்துக்கு பேச சரியா வாய்ப்புத் தரல்லன்னு அவருக்கு கோவம் வந்துது. ஆளும் கட்சி ஆளுங்க இவர உக்கார சொல்லி கத்தினாங்க. ஒரு கட்டத்தில இவருக்கு ரொம்ப கோபம் வந்து எழுந்து கத்திடாரு.  சட்ட சபையில முரட்டுத் தனமா நடந்துக்கிட்டாருன்னு ஆளுங் கட்சி சொன்னது. கேப்டனுக்கு எப்பவுமே கோவம் கொஞ்சம் அதிகம் தான். சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலே வேட்பாளர அடிசிட்டாருன்னு பேச்சு இருந்தது. 
போட்டோலே தே.மு.தி.க அவைத் தலைவர் (விஜயகாந்துக்கு இடது புறம் இருக்கவரு) அதிர்ச்சியா இருக்கறதையும் ஸ்டாலின் புன்னகையும் நிறைய விஷயங்கள சொல்லாம சொல்லுது. இவங்களுக்குள்ள இருந்த பகை இப்ப வெளிய வந்திட்டதா எல்லாரும் சொல்றாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க ?    

Saturday, February 4, 2012

சமீபத்தில் ரசித்த படம் - தாவணி கனவுகள்


ஐந்து தங்கைகள் உள்ள அண்ணன் கதை. பாக்யராஜ் தான் அந்த அண்ணன். துவக்கமே அமர்க்களம். 

அவர் வீட்டுக்கு முன் ஒரு இளைஞர் பட்டாளமே இருக்கும், ஒருவன் சைக்கிளை பழுது பார்த்துக் கொண்டிருப்பான்; அவருடன் ஒருத்தன். இருவர் பாடம் பற்றி சீரியசாக விவாதித்துக் கொண்டு இருப்பார்கள். மோட்டார் சைக்கிளில் இருவர். அனைவர் கவனமும் பாக்யராஜ் வீட்டு மேல். ஒரு மக்கர் போனில் பாக்யராஜ் சொல்வார்:" எங்க வீட்டிலே மானம் மரியாதை தான் மிச்சம் இருக்கு, அத கெடுத்த பாவம் உங்களுக்கு வேண்டாம். இன்னும் போக மாட்டீங்கன்னா உங்களுக்கு எந்த தங்கய பிடிக்குன்னு சொல்லுங்க, அவள உங்களுக்கு கட்டி வைக்கறேன்"  கூட்டம் கலைத்து காணாமல் போகிறது.

திரைக்கதை அமைப்பதில் அவருக்கு நிகர் அவரே.  வேலை கிடைக்காமல் பிளாஸ்டிக் சாமான் கூடை தூக்கித் தலைமேல் வைத்து கூவி விற்கிறார்.எதிரே வேலை இல்லா இளைஞர் போராட்ட ஊர்வலம் கோஷமிட்டுக் கொண்டே வருகிறது.  பாக்யராஜ் கூவி விற்பதும், போராட்ட கோஷமும் கீழ்க் கண்டவாறு சின்க் ஆகின்றன.

"வேலை இல்லா பட்ட தாரிகளுக்கு...." (கூட்டம்)
"பிளாஸ்டிக் சாமானம், பிளாஸ்டிக் சாமானம்"  (இது பாக்யராஜ்)
"படித்த பட்டதாரி வாலிபர்களுக்கு..."
"பிளாஸ்டிக் சாமானம், பிளாஸ்டிக் சாமானம்"

இன்னொரு கட்டம். மிலிட்டரியாக வரும்  சிவாஜி கணேசன் கோவில் பூசாரியிடம் கேட்டகிறார்: "நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் தெரியுமா உனக்கு?" 
"போஸூ  பக்கத்து தெருவில பொட்டிக்கட வச்சுருக்காருங்க. ஆனா, நேதாஜி, சுபாஸூ  இவங்கள நமக்கு பழக்கமில்லீங்க"



கடைசி தங்கையாக வருபவர் நடிப்பு சூப்பர். தன் தங்கைகளை கரையேற்ற வேண்டி வேலை தேடி சென்னை செல்கிறார் அண்ணன் பாக்யராஜ். சம்பாதிக்க பல வழிகளை முயன்று கடைசியில், பாரதி ராஜா கண்ணில் பட்டு ஹீரோ ஆகிறார், பணம் கிடைக்கிறது. அது வரை குடும்பத்துக்கு பாதுகாப்பாகவும் இருந்து மாத செலவுக்கு பணம் கொடுக்கிறார் சிவாஜி. போஸ்ட் மேனாக வருகிறார் பார்த்திபன். பாரதி ராஜா அவராகவே வருகிறார். ராதிகா சென்னையில் சினிமா வாய்ப்பு தேடும் பாக்ய ராஜாவுக்கு உதவுகிறார்.  பணத்தை பெரிதாக நினைக்கும்  வரன்களை ஒதுக்கி  நல்லவர்களான  வாலிபர்களை மனம் முடிக்கிறார்கள் தங்கைகள். இளையராஜாவின் இசை தாலாட்டுகிறது. காமிரா சில இடங்களில் சரியாக இருந்து இருக்கலாம். கல்யாணத்தை வியாபாரமாக்காதீர்கள் என்கிற செய்தியுடன் முடிகிறது படம்.   

Wednesday, February 1, 2012

என் வாழ்க்கையே நான் இந்த உலகத்துக்கு சொல்லும் செய்தி !


சொன்னவர் மகாத்மா காந்தி. பெரிய மனிதர்கள் எல்லாம் அவர்கள் வாழ்க்கையைத் தான் செய்தியாக விட்டு செல்கிறார்கள். 

My life is my message - Mahatma Gandhi

This is what great men do.