Memories

Sunday, February 26, 2012

கதிரும் வீச்சும்

சில மாதங்கள் கழித்து பிரான்ஸ் நாடு விஞ்ஞானி ஹென்றி பெக்வேறல், வில்ஹேல்மிங் கண்டுபிடிப்பை படித்து தெரிந்து மேலும் அதை ஆராய்ந்து புது கண்டுபிடிப்பை வெளியிட்டார்: சில தனிமங்கள் - யுரேனியம்  போன்றவை - இயற்கையாகவே எக்ஸ் கதிர்வீச்சை உருவாகுகின்றன. பிரான்சிலேயே பெக்வேரைல்ன் நண்பர்கள், பியரி மற்றும் மேரி க்யுரி இத்துறையில் தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார்கள். தன்னிச்சையாக கதிர்வீச்சை வெளியிடும் தனிமங்கள் கண்டுபிடிப்பதே அவர்கள் லட்சியம். அதற்காக ஒரு கருவியை கண்டுபிடித்தார்கள் 1880 ஆம் வருடம்.
[ புகைப்படம்: மேரி க்யுரி (நிற்பவர்), அவர் கணவர் பியரி க்யுரி (அமர்ந்திருப்பவர்) ] 


எவ்வளவு குறைவான கதிர்வீச்சையும் கண்டுபிடிக்கவும் அளவிடவும் கூடிய கருவி அது. அதைக் கொண்டு அருகாமையில் இருக்கக் கூடிய இடங்களுக்கு சென்று ஏதேனும் கதிர்வீச்சு கொண்ட வஸ்து இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த கருவி முயற்சி வீண் போகவில்லை, கருவி கதிர்வீச்சை தரும் பொருள் இங்கு இருக்கிறது என்று காட்டியது.  அந்த இடம் காட்டின் நடுவே இருந்த ஒரு தாது உற்பத்தி நிலையத்தின் கழிவுப்பொருள்  கூடம். டன் கணக்கில் இருந்த கழிவு பொருளை சுத்திகரிக்க ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான டன் தண்ணீர் தேவைப் பட்டது. அதில் இருந்து இறுதியாக ஒரு கிராமை விடக் குறைவான அந்த தனிமத்தை பிரித்து எடுத்தார்கள், 1902-ஆம் வருடம்.
[ புகைப்படம்: கதிர்வீசும் ரேடியம்]


யுரேனியத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிக கதிர்வீச்சை வீசிக் கொண்டிருந்தது அது.தன்னையே உருக்கி ஒளியாக கதிர்வீசிக் கொண்டு இருந்தது அது. இந்த தனிமத்தை பிரித்து தனிமைப் படுத்துவதற்கு பல மாதங்கள் ஆனது. நிலையிலாத தனிமம் அது, வஸ்து (mass) என்பதற்கும் எனர்ஜி (energy) என்பதற்கும் நடுவில் இருந்தது. ஒளியை ஏற்படுத்திக் கொண்டிருந்த இந்த தனிமத்தை "ரேடியம்" என்று பெயரிட்டு அழைத்தார் மேரி கியூரி. கிரேக்க மொழியில் ஒளி என்று பொருள் தரக்கூடிய  வார்த்தை அது.


[ புகைப்படம்: ஆராய்ச்சி கூடத்தில் மேரி க்யுரி ]

 கதிர்வீச்சு உடலின் தசைகளை தாண்டி போகக் கொடிய எக்ஸ் கதிர்கள் வெளியிடக் கூடியது என்பது தெரியும். இத்தகைய குணத்தால் தான் ராண்ட்ஜன் தன் மனைவியின் கையை எக்ஸ் ரே படம் பிடித்தார். (மேலும் தகவலுக்கு நம்முடைய தளத்தில் இந்த பதிப்பை பாருங்கள்: கதிர்கள் - வல்லிய கதிர் மெல்லிய வீச்சு ) ஆனால் தசைகளுக்குள்ளே தன்னுடைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பது ராண்ட்ஜனுக்கும், மேரி க்யுரிக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1 comment:

  1. சிறப்பான பகிர்வு..நன்றி நண்பரே..

    ReplyDelete