செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப் பட்ட க்யுரியாசிட்டி என்கிற எந்திர வாகனம் பத்திரமாக இறங்கி தன் சோதனைகளைத் தொடங்கியது.
க்யுரியாசிட்டியின் ஒன்பது மாத பயணத்தையும் தரை இறங்குவதையும் காட்டும் விளக்கப் படம் மேலே. செவ்வாயின் வளி மண்டலத்தில் இது இறங்க ஆரம்பித்ததில் இருந்து தரையைத் தொடும் வரை உள்ள நேரம் ஏழு நிமிடங்கள் மட்டுமே. ஆனால் செவ்வாயில் இருந்து இந்த விண்கலம் அனுப்பும் செய்தி பூமியை வந்து அடைய பதினாலரை நிமிடங்கள் ஆகும். இந்த கலம் செவ்வாயின் வளி மண்டலத்தை அடைந்ததில் இருந்து ஒரு ஏழரை நிமிடங்கள் விஞ்சானிகள் குழுவுக்கு ஒரு மிகப் பெரிய சஸ்பென்சாக இருந்தது.
இந்த ஏழரை நிமிட காத்திருப்புக்குப் பின் அவர்களுக்கு க்யுரியாசிட்டி பத்திரமாக தரை இறங்கிய செய்தி வந்ததும் அவர்களுடைய சந்தோசம் கண்கொள்ளாதது.
No comments:
Post a Comment