வாயேஜர் என்கிற விண்கலம் சுமார் 35 வருடங்களுக்கு முன் விண்ணில் செலுத்தப் பட்டது. இதன் முக்கிய குறிக்கோள் சூரிய குடும்பத்தை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது. இந்த விண்கலம் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்களான வியாழன், சனி கிரகங்களை பற்றி ஆராய்ச்சி செய்து புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது.
இந்த விண்கலம் பூமியில் இருந்து பல கோடிக்கணக்கான மைல்கள் தாண்டி இன்னும் சென்று கொண்டே இருக்கிறது. சூரியனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் எல்லையை தொட்டு விட்டதாக அறிவியல் அறிகர்கள் சொல்கிறார்கள்.
அவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது அது திரும்பி பூமியை கடைசீயாக எடுத்த போட்டோ கீழே.
அம்புக்குறியிட்டு காட்டப் பட்டுள்ள இடத்தில் ஒளியில் தெரியும் பொட்டு தான் பூமி. கார்ல் சகான் என்கிற அறிஞர் சொல்கிறார்: "திரும்பவும் பாருங்கள் அந்த பொட்டுத் துகளை, அங்கு தான் இருக்கிறது...வீடு. அது தான் நாம். இங்கு தான் நீங்கள் அன்பு செலுத்துகிற ஒவ்வொருவரும், உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொருவரும், நீங்கள் கேள்விப் பட்ட எல்லாரும், நமக்குத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் - மகான்கள், அறிஞர்கள், ஹீரோக்கள், வீரர், கோழை, அரசன், சாமான்யன் - எல்லாரும் அந்த ஒளியில் மிளிரும் தூசித் துகளில் வாழ்ந்திருக்கிறார்கள், வாழுகிறார்கள்..."
குறிப்பு: வாயேஜர் விண்கலம் மீது சூரியனின் ஒளி பட்டு அந்த பிரதிபலிப்பின் கோடுகள் தெரிகின்றன. இதே போன்ற பிரதிபலிப்பினால் பூமியும் தெரிகிறது. இந்த இரு பிரதிபலிப்புகளும் ஒரே கோட்டில் வந்தது தற்செயல் தான். இந்த பிரதிபலிப்பில் தெரியும் பூமி அறிஞருக்கு தூசித் துகள் போல தோன்றியிருக்கிறது. "வெளிர் நீல துணுக்கு" என்கிற இந்த புகைப்படம் உலகப் புகழ் பெற்றது.
No comments:
Post a Comment