Memories

Sunday, September 30, 2012

ஏன் இந்த சோகம் ?

இன்டர்நெட்டில் கிடைத்தது... நல்லா  சிரிசீங்கன்னா லைக் போடுங்க...

கதிரும் வீச்சும் தொடர்கிறது...

கதிரும் வீச்சும் என்கிற தலைப்பில் அறிவியல் அறிஞர்களான மேரி க்யுரி ஆய்வுகள் பற்றி பார்த்தோம். அவருடைய ஆய்வு கதிர் வீச்சின் மோசமான மறு பக்கத்துக்கு சான்றாக இருந்தது. வாரக்கணக்கில் ரேடியத்தை பிரிக்க நடத்திய ஆய்வு அவருடைய கைகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது: தோல் கருகி காய்ந்து உரிய ஆரம்பித்தது. உள்ளிருந்து தசைகள் எரித்து கருகியது போலிருந்தது. கதிர் வீச்சின் காரணமாக அவருடைய எலும்பு மஜ்ஜை எரிந்து தீராத ரத்த சோகை வேறு வந்திருந்தது. எலும்பு மஜ்ஜை தான் ரத்தம் சுரக்க காரணம் என்று உங்களுக்க்து தெரிந்திருக்கும்.


ஆராய்சிகள் பல செய்து பல வருடங்களுக்கு பின்னால் தான் இவற்றுக்கான காரணங்கள் புரிய ஆரம்பித்தது. டி.என்.எ  என்கிற செல்லின் மூலக்கூறினை இந்த கதிர்வீச்சு தாக்குகின்றது என்று புரிய ஆரம்பித்தது அறிஞர்களுக்கு. குழந்தை அப்பா, அம்மாவின் அம்சங்களையும் தாத்தா, பாட்டி போன்ற பரம்பரை குணாதிசயங்களுடன் பிறக்கக் காரணம் தான் இந்த டி.என்.எ. ஒரு தலை முறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு தகவல்களை எடுத்து செல்லக்கூடியது. இந்த டி.என்.எ கதிர்வீச்சால் பாதிக்கப் பட்டு கான்சராகிறது.



கான்சரை உண்டாக்கும் எக்ஸ் கதிர்கள் கான்சரை அழிக்கவும் உதவுகிறது.1896 ஆம் ஆண்டு (எக்ஸ் கதிர்கள் கண்டு பிடிக்கப் பட்ட மறு ஆண்டு) எமில் கிரப் என்கிற மருத்துவக் கல்லூரி மாணவர் ரோஸ் லீ என்ற மருத்துவர்கள் கை விடப் பட்ட மூதாட்டிக்கு இருந்த மார்பக புற்று நோயை எக்ஸ் கதிர்கள் கொண்டு தாக்கினார்.தொடர்ந்து சுமார் 18 நாட்கள் இந்த வலி மிகுந்த மருத்துவம் செய்தார். லீ நிலையில் நல்ல முன்னேற்றம் வந்தது, சிகிச்சை முடிந்து பல மாதங்கள் கழித்து லீ மருத்துவரை பார்க்க திரும்ப வந்தார். கிரப்புக்கு எக்ஸ் கதிர்கள் கொண்டு மருத்துவம் செய்வதில் நம்பிக்கை வந்தது. ஆனாலும் ஒன்று புலப்பட்டது: ஆரம்ப நிலையில் கான்சரை குணப்படுத்த எக்ஸ் கதிர் பயன்படும் ஆனால் முதிர்ந்த கான்சருக்கு இது தீர்வாகாது. இந்த கதிர்வீச்சு மருத்துவம் இன்னும் ரேடியோதேரப்பி என்ற பெயரில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

மூலம்: சித்தார்த் முக்கர்ஜி.

மின் பற்றாகுறை - வாசகர் கருத்து


நன்றி:  மாலைமலர் 

Sunday, September 9, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 17, 18


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது! 


நாம ஒரு பிளாஷ் பேக்-இருந்து இன்னொன்னு போய் பல தாண்டிட்டோம். என்னதான் வானதிய  குந்தவைக்கு பிடிச்சாலும், அவளோட இந்த பயந்த சுபாவம் பிடிக்கல. எதுக்கெடுத்தாலும் பயந்து மயக்கம் போட்டிடுவா. அது தெரிஞ்ச மற்ற இளவரசிகள் செஞ்ச ஏற்பாடு தான் பொம்மை முதலை. இதில அவனா மாட்டி அவமானப் பட்டுட்டான் நம்ம வந்தியத் தேவன். அவன சமாதானப் படுத்த முயற்சி செஞ்சா குந்தவை. ஆனா மற்ற இளவரசிகள் சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க. கோவத்தோட பொம்மை முதல மேல இருந்த வேல உருவி எடுத்தான்; குதிச்சி ஏறினான் குதிரை மேல; சுள்ளுன்னு அடி கொடுத்தான் குதிரைக்கு...துள்ளி பறந்தது குதிரை! குந்தவை பாத்திட்டே இருந்தா.

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 18 - இடும்பன் காரி 



கொள்ளிடத்து கரைலே வந்தியத் தேவனுக்கு குதிரை ஏற்பாடு செஞ்சு கொடுக்க வந்த ஆளு பேரு தான் இடும்பன் காரி. இவன் கந்தமாறன் வீட்லே வேலையாளா இருந்தான். இவன் வந்தியத் தேவனை அனுப்பிச்சுட்டு திரும்ப வரும் போது ஆழ்வார்க்கடியானை ஒரு மரத்துக்கு கீழ பார்த்தான். ஆழ்வார்க்கடியான் தன்னாலேயே புலம்பிக்கிட்டு இருந்தான் (வந்தியத் தேவன் யாரு என்னன்னு ஒண்ணுமே கண்டு பிடிக்க முடியல...இவன் நல்லவனா..கெட்டவனா ? அப்படீன்னு தான் புலம்பினான்)
அதுக்குள்ளே இடும்பன் காரி பக்கத்தில வந்திட்டான்; வலது உள்ளங் கை மேல் இடது கைய வச்சு ரண்டு கட்டை விரலையும் ஆட்டினான். ஆழ்வார்க்கடியான் என்ன பண்ணினே நீ? அப்படீன்னு கேட்டான், இடும்பன் காரி சமாளிச்சான், திரும்பப் போறதா சொல்லிட்டு கிளம்பினான். உடனே ஆழ்வார்க்கடியான் என்கிற திருமலையும் பக்கத்திலே இருக்கற ஒரு ஊரு பேரு சொல்லிட்டு அங்க போறதா சொல்லிக் கிளம்பினான். இடும்பன் காரி கொஞ்சம் தள்ளிப் போனதும் திரும்ப வந்து பக்கத்தில இருந்த மரத்து மேல ஏறி ஒளிஞ்சுகிட்டான் வெயிட் பண்ணினான். எதிர் பார்த்த மாறியே இடும்பன் காரி திரும்ப வந்திட்டு இருந்தான். மரத்துக்குக் கீழ வெயிட் பண்ணினனான். ரொம்ப நேரம் போச்சு. நேரம் கழிச்சு இன்னொருத்தனும் வந்து மரத்துக்கு பக்கத்திலே நினுகிட்டான். இடும்பன் காரி மெதுவா அவன் பக்கத்திலே போய் ஆழ்வார்க்கடியான் கிட்ட செஞ்சு காட்டின மீன் சிக்னல  செஞ்சான். அவனும் அந்த சிக்னல பதிலுக்கு செஞ்சு காமிச்சான். வந்தவன் பேரு சோமன் சாம்பவன். ரெண்டு பேரும் பகைவனோட பள்ளிப்படைக்கு போறதா சொல்லிக் கிளம்பினாங்க. அந்த திசைலே இருந்த திருப்புறம்பியம் அப்படீங்கற இடத்தில இருந்த கங்க மன்னன் பிருதிவீபதி-யோட பள்ளிப்படக்குப் போறதா ஊகிச்சுகிட்டான்  ஆழ்வார்க்கடியான். 

ஒளியில் மிளிரும் தூசித் துகள் போல...


வாயேஜர் என்கிற விண்கலம் சுமார் 35 வருடங்களுக்கு முன் விண்ணில் செலுத்தப் பட்டது. இதன் முக்கிய குறிக்கோள் சூரிய குடும்பத்தை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது. இந்த விண்கலம் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்களான வியாழன், சனி கிரகங்களை பற்றி ஆராய்ச்சி செய்து புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது.
இந்த விண்கலம் பூமியில் இருந்து பல கோடிக்கணக்கான மைல்கள் தாண்டி இன்னும் சென்று கொண்டே இருக்கிறது. சூரியனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் எல்லையை தொட்டு விட்டதாக அறிவியல் அறிகர்கள் சொல்கிறார்கள்.  
அவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது அது திரும்பி பூமியை கடைசீயாக எடுத்த போட்டோ கீழே.



அம்புக்குறியிட்டு காட்டப் பட்டுள்ள இடத்தில் ஒளியில் தெரியும் பொட்டு தான் பூமி. கார்ல் சகான் என்கிற அறிஞர் சொல்கிறார்: "திரும்பவும் பாருங்கள் அந்த பொட்டுத் துகளை, அங்கு தான் இருக்கிறது...வீடு. அது தான் நாம். இங்கு தான் நீங்கள் அன்பு செலுத்துகிற ஒவ்வொருவரும், உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொருவரும், நீங்கள் கேள்விப் பட்ட எல்லாரும், நமக்குத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் - மகான்கள், அறிஞர்கள், ஹீரோக்கள், வீரர், கோழை, அரசன், சாமான்யன் - எல்லாரும் அந்த ஒளியில் மிளிரும் தூசித் துகளில் வாழ்ந்திருக்கிறார்கள், வாழுகிறார்கள்..."

குறிப்பு: வாயேஜர் விண்கலம் மீது சூரியனின் ஒளி  பட்டு அந்த பிரதிபலிப்பின் கோடுகள் தெரிகின்றன. இதே போன்ற பிரதிபலிப்பினால் பூமியும் தெரிகிறது. இந்த இரு பிரதிபலிப்புகளும் ஒரே கோட்டில் வந்தது தற்செயல் தான். இந்த பிரதிபலிப்பில் தெரியும் பூமி அறிஞருக்கு தூசித் துகள் போல தோன்றியிருக்கிறது. "வெளிர் நீல துணுக்கு" என்கிற இந்த புகைப்படம் உலகப் புகழ் பெற்றது.