பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது!
அத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது!
நாம ஒரு பிளாஷ் பேக்-இருந்து இன்னொன்னு போய் பல தாண்டிட்டோம். என்னதான் வானதிய குந்தவைக்கு பிடிச்சாலும், அவளோட இந்த பயந்த சுபாவம் பிடிக்கல. எதுக்கெடுத்தாலும் பயந்து மயக்கம் போட்டிடுவா. அது தெரிஞ்ச மற்ற இளவரசிகள் செஞ்ச ஏற்பாடு தான் பொம்மை முதலை. இதில அவனா மாட்டி அவமானப் பட்டுட்டான் நம்ம வந்தியத் தேவன். அவன சமாதானப் படுத்த முயற்சி செஞ்சா குந்தவை. ஆனா மற்ற இளவரசிகள் சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க. கோவத்தோட பொம்மை முதல மேல இருந்த வேல உருவி எடுத்தான்; குதிச்சி ஏறினான் குதிரை மேல; சுள்ளுன்னு அடி கொடுத்தான் குதிரைக்கு...துள்ளி பறந்தது குதிரை! குந்தவை பாத்திட்டே இருந்தா.
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 18 - இடும்பன் காரி
அத்தியாயம் 18 - இடும்பன் காரி
கொள்ளிடத்து கரைலே வந்தியத் தேவனுக்கு குதிரை ஏற்பாடு செஞ்சு கொடுக்க வந்த ஆளு பேரு தான் இடும்பன் காரி. இவன் கந்தமாறன் வீட்லே வேலையாளா இருந்தான். இவன் வந்தியத் தேவனை அனுப்பிச்சுட்டு திரும்ப வரும் போது ஆழ்வார்க்கடியானை ஒரு மரத்துக்கு கீழ பார்த்தான். ஆழ்வார்க்கடியான் தன்னாலேயே புலம்பிக்கிட்டு இருந்தான் (வந்தியத் தேவன் யாரு என்னன்னு ஒண்ணுமே கண்டு பிடிக்க முடியல...இவன் நல்லவனா..கெட்டவனா ? அப்படீன்னு தான் புலம்பினான்)
அதுக்குள்ளே இடும்பன் காரி பக்கத்தில வந்திட்டான்; வலது உள்ளங் கை மேல் இடது கைய வச்சு ரண்டு கட்டை விரலையும் ஆட்டினான். ஆழ்வார்க்கடியான் என்ன பண்ணினே நீ? அப்படீன்னு கேட்டான், இடும்பன் காரி சமாளிச்சான், திரும்பப் போறதா சொல்லிட்டு கிளம்பினான். உடனே ஆழ்வார்க்கடியான் என்கிற திருமலையும் பக்கத்திலே இருக்கற ஒரு ஊரு பேரு சொல்லிட்டு அங்க போறதா சொல்லிக் கிளம்பினான். இடும்பன் காரி கொஞ்சம் தள்ளிப் போனதும் திரும்ப வந்து பக்கத்தில இருந்த மரத்து மேல ஏறி ஒளிஞ்சுகிட்டான் வெயிட் பண்ணினான். எதிர் பார்த்த மாறியே இடும்பன் காரி திரும்ப வந்திட்டு இருந்தான். மரத்துக்குக் கீழ வெயிட் பண்ணினனான். ரொம்ப நேரம் போச்சு. நேரம் கழிச்சு இன்னொருத்தனும் வந்து மரத்துக்கு பக்கத்திலே நினுகிட்டான். இடும்பன் காரி மெதுவா அவன் பக்கத்திலே போய் ஆழ்வார்க்கடியான் கிட்ட செஞ்சு காட்டின மீன் சிக்னல செஞ்சான். அவனும் அந்த சிக்னல பதிலுக்கு செஞ்சு காமிச்சான். வந்தவன் பேரு சோமன் சாம்பவன். ரெண்டு பேரும் பகைவனோட பள்ளிப்படைக்கு போறதா சொல்லிக் கிளம்பினாங்க. அந்த திசைலே இருந்த திருப்புறம்பியம் அப்படீங்கற இடத்தில இருந்த கங்க மன்னன் பிருதிவீபதி-யோட பள்ளிப்படக்குப் போறதா ஊகிச்சுகிட்டான் ஆழ்வார்க்கடியான்.
No comments:
Post a Comment