Memories

Sunday, December 9, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 21, 22, 23, 24

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 21 - திரை சலசலத்தது  


திருவையாறு வழியா தஞ்சைக்கு குதிரைல வந்திட்டு இருந்தான் வந்தியத் தேவன். தன காரியங்கள எப்படி முடிக்க போறோம், மகாராஜாவ எப்படி பாக்க முடியும் எல்லா தடைகள் தாண்டி அப்படீன்னு நெனைச்சுட்டே வந்திட்டு இருந்தான். தூரத்தில பழுவேட்டரையரோட பல்லக்கு போயிட்டு இருந்தது. அதில பழுவேட்டரையர், இல்ல மதுராந்தகர் இருக்கலாம். மதுராந்தகர் இருந்தா அவர் கூட பழகி அப்படியே கோட்டைகுள்ள போய்டலாம் அப்படீன்னு நெனைச்சான். வேகமா போய் குதிரையால பல்லக்கை மோதினான்; உடனே கத்தினான்: "மஹாராஜா! மஹா ராஜா!! பல்லக்கு தூக்கரவங்க என்னோட குதிரைய இடிக்கறாங்க. ஐயோ ! ஐயோ!!" பல்லக்கோட திரை மெதுவா விலகிச்சி.

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 22 - வேளக்கார படை  
திரை விலகரத பாத்துட்டு உடனே இறங்கி கம்ப்ளைன்ட் செய்ய போனான் வந்தியத் தேவன். உள்ள இருந்தது மதுராந்தக தேவர் இல்ல, ஆனா ஆம்பளைங்கள கவர்ந்து பைத்தியமாக்குற அழகும் வசீகரமும் உள்ள பெண். ஷாக்  ஆகி நின்ன இவன வீரர்கள் சுத்திகிட்டாங்க. அதிசயமா இவனுக்கு மூள  வேலை செஞ்சது. பழுவூர் இளையராணிய பாக்கறதுக்காக இவளவு தூரம் வந்தான் அப்படீன்னும், ஆழ்வார்க்கடியான் அனுப்பி வச்சதாகவும் சொன்னான்.  இளையராணி ஸ்மைல் பண்ணினா மெதுவா, தன்னுடைய முத்திரை மோதிரத்தை கொடுத்து அப்பறமா வர சொன்னா. சாயங்கால வேளைலே மன்னரோட பாடி கார்ட்ஸ் - அதான் வேளக்கார படை - கோட்டைகுள்ள இருந்து வெளிய போனாங்க (அத்தியாய தலைப்ப மாட்ச் பண்ணனுமே..)


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 23 - அமுதனின் அன்னை  
ஊரை சுத்தி பாத்துட்டு மறுநாள் கோட்டைகுள்ள போகலாம்னு நெனைச்சான். அப்ப சேந்தன் அமுதன் என்கிற, கோவில்ல வேலை செய்யற இளைஞன் அறிமுகம் ஆனான். அவன் வீட்ல தங்கினான் வந்திய தேவன், அன்னிக்கி இராத்திரி. நெறைய விஷயங்கள் தெரிஞ்சது - மதுராந்தக தேவர் சின்ன பளுவேட்டரைரோட  பொன்னைத் தான் கல்யாணம் செய்திருக்காரு, இது நெறைய பேருக்கு தெரியாது. சின்ன பழுவேட்டரையர் தான் கோட்டை காவலுக்கு பொறுப்பு. பெரியவரும், சின்னவரும் கோட்டைகுள்ள மன்னர் கூட தான் தங்கி இருக்காங்க. இன்னும் முதல் மந்திரி அநிருத்த பிரம்மராயரும் மற்ற மந்திரிங்களும், பளுவேத்ட்டரைரோட வேலை செயாரவங்களும் உள்ள தான் தங்கி இருக்காங்க. 


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்  
ரெண்டு பழுவேட்டரையரும் தான் நாட்ட ஆளுராங்கன்னும், சக்கரவர்த்திய அவங்களோட கட்டுபாட்டில தான் வச்சிருக்காங்கன்னும் சொன்னான் சேந்தன் அமுதன். மதுரைல நடந்த யுத்தத்துக்கு அப்பறமா வீரபாண்டியன் மரணத்துக்கு பழி  வாங்க மன்னற கொள்ள சதி அப்படீன்னு சொல்லி மன்னற தஞ்சைக்கு கூட்டிட்டு வந்திட்டதாவும் அவரோட உடல் நிலை சரி இல்ல, பக்கவாதம் வந்து ரெண்டு காலும் சுவாதீனம் இல்லாம போச்சி, வைத்தியங்களும் இங்க தான் மன்னர் இருக்கணும்னு சொல்லிட்டாங்க. மன்னர் எதுவும் சொல்ல முடியல. அவருக்கு புத்தி சுவாதீனம் வேற இல்லாம போச்சின்னும் சொல்லிக்கறாங்க.
சேந்தன் அமுதனோட அம்மாக்கு காது கேக்காது, வாய் பேச வராது. சேந்தன் அமுதனுக்கு அவன் மாமன் மகள் பூங்குழலி மேல ஈடுபாடு. ஆனா, அவளுக்கு இவன் மேல ஈடுபாடான்னு தெரியல. 
அன்னிக்கே மன்னர கோட்டைக்குள பாத்திடணும்னு நெனைச்சான் வந்தியத் தேவன்.

No comments:

Post a Comment