Memories

Sunday, December 30, 2012

கீமோதெரப்பி..

 சென்ற அத்தியாயத்தில் உயிரியலும் வேதியியலும் ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடயன என்று பார்த்தோம். 1878-இல் 24 வயது மருத்துவ கல்லூரி மாணவர் பால் எஹ்ர்லிச் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தார் - செயற்கை இரசாயனங்களைக் கொண்டு உயிர் திசுக்களை நிறம் மாற்ற வேண்டும் என்கிற முயற்சியே அது. எப்படி தலைக்கு டை அடித்து நிறம் மாற்றம் செய்கிறார்களோ அதை போல. இந்த முயற்சியில் ஒரு வித்தியாசமான விஷயம் அவருக்குப் பட்டது - ரசாயனம் செல்லை முழுமையாக நிறம் மாற்றம் செய்யாமல் செல்லின் பகுதிகளை நிறம் மாற்றம் செய்தது. அதாவது செல்லின் சில ரசாயனங்களை அடையாளம் காட்டியது.

(படம்: பால் எஹ்ரில்ச் )

1882-இல் ராபர்ட் கோச் என்ற விஞ்சானியுடன் கூடு சேர்ந்து ஒரு மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். மைக்கோ பாக்டீரியா என்கிற நுண்ணுயிரியை அடையாளம் காட்டும் ரசாயனத்தை உண்டாக்கினார்.

(படம்: ராபர்ட் கோச்)


(படம்: செல்லின் பகுதியானது நீல சாயம் கொண்டு அடையாளம் காட்டப் படுகிறது)

பால் எஹ்ல்றிச் சில வருடங்களுக்கு பின்னால் இன்னொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். சில வகை விஷத் தன்மை பொருந்திய ரசாயனங்கள் உடலுக்குள் நுழையும்போது உடலானது ஒரு எதிர்விஷங்களை உருவாக்குகிறது. இந்த "எதிர்விஷங்கள்" தற்பொழுது "எதிர் உயிரிகள்" என்று அழைக்கப் படுகின்றன.

ஓர் இரவில் சாதாரணமாக பேசிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு உண்டான எண்ணம்: ஏன்  இந்த எதிர் உயிரிகள் நோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கக்  கூடாது? இந்த எண்ணம் தான் பின் நாளில் கீமோதெரபி உண்டாகக் காரணமானது.

செல்லின் பற்பல பகுதிகளையும், பல நுன்னுயிரிகளையும் அடையாளப் படுத்த புதிய புதிய சாயங்கள் தேவைப் பட்டன. எஹ்ர்ளிச்-இன் பார்வை சாயத் தொழிற்சாலைகள் குவித்து வைத்திருந்த சாயங்களின் மேல் பதிந்தது.

(தேடல் தொடரும்)

No comments:

Post a Comment