Memories

Sunday, December 29, 2013

வெறும் கை - நிமிடக் கதை




ஒரு ஓய்வான சோர்வான மத்திய பொழுதில் கணினியில் இணைய உலா சென்று கொண்டிருந்தேன். 

அப்போது எதேச்சையாக சீனாவின் குங்பூ மாஸ்டர்கள் செய்யும் சாகசத்தை பார்க்க நேரிட்டது. யப்பா...எத்தகைய சாகசங்களை செய்கிறார்கள். ஒருவர் கடப்பாரை கம்பியை கையில் வளையமாக சுற்றிக் கொள்கிறார். இருவர் நூற்றுக்கணக்கான செங்கற்களை உடைத்து   தள்ளுகிறார்கள். சிலர் கருங்கல் பளிங்கு சிமண்ட் பாளங்களை உடைக்கிறார்கள். இளம் வயது யுவதி ஒருவர் மீது கட்டைகள் கொண்டு தாக்க அவை தூள் தூளாகின்றன. ஒரு மாஸ்டர் வெறும் கையால் தடிமனான கட்டையில் ஆணிகள் அடிக்கிறார். 

ல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நான் வேகமாக சென்று சாத்துக்குடி ஒன்றை எடுத்து வெறும் கையால் உரிக்க ஆரம்பித்தேன்.... ஏதோ நம்மால் முடிந்தது (?)...

பீர்பால்




பீர்பால்கிட்ட ஒரு பண்டிதர் கேட்டார்: "கஷ்டமான 1 கேள்வி கேட்கட்டுமா, இல்ல 100 சிம்பிள் கேள்விகள் கேட்கட்டுமா?"

சக்கரவர்த்தி அக்பர் உடனே ஒரு வேலையா கிளம்ப வேண்டி இருந்தது. பீர்பால் சொன்னார்:"கஷ்டமான 1 கேள்வி கேளுங்க, பண்டிதரே"

"முட்டைல இருந்து கோழி வந்ததா இல்ல கோழி-ல இருந்து முட்டை வந்தாதா?"

"சந்தேகமே இல்ல, கோழி தான் முதல்ல வந்தது. "

"எப்படி?"

"இது இரண்டாவது கேள்வி, பண்டிதரே!" அப்படி முடிச்சார் பீர்பால்.

ஜென் கதைகள் - கோப்பை



ரொம்ப படித்த மேதை ஒரு ஜென் துறவி கிட்ட போனாரு : "குருவே, நான் படிக்காதது ஏதாவது இருந்தா அதை எனக்கு கத்துக் கொடுங்க" அப்படீன்னாரு. அதை கவனிக்காத துறவி அவரோட கோப்பைல தேநீர் ஊத்திட்டு இருந்தார். கோப்பை நிரம்பின பிறகும் இவர் ஊத்திரத்தை விடல. கோப்பை நிரம்பி வழிஞ்சது , இவரு நிறுத்தவே இல்ல. பண்டிதர் கேட்டாரு "குருவே, கோப்பை நிறைந்து விட்டது. இன்னும் இதில ஊத்த முடியாது"-ன்னு சொன்னாரு. குரு ஒரு ஸ்மைலோட சொன்னாரு:

"நிறைந்த கோப்பைல தேநீர் ஊத்த முடியாது; நிறைந்து இருப்பதாக எண்ணப் படும் மனது மேலும் அறிவை எடுத்துக்க முடியாது"

(இந்த கதையை நினைவு படுத்தும் வசனம் "avatar" படத்தில கூட வரும்.)

பெர்னாட் ஷா



பெர்னாட் ஷா கிட்ட ஒரு பெண் சொன்னா :"நீங்கள் மட்டும் என் கணவனா இருந்தா நான் காபியில் விஷம் வச்சு கொடுப்பேன்"

பெர்னாட் ஷா புன்முருவலோட சொன்னார்: "நீ மட்டும் என் மனைவியா இருந்தா நான் அத உடனே குடிச்சிடுவேன்"

ஜென் கதைகள் - சொர்க்கம்



மிகப் பெரிய தளபதி ஒருத்தர் ஒரு ஜென் துறவி கிட்ட கேட்டார்: "குருவே!, சொர்க்கம் நரகம் எங்க இருக்கு?" அப்படீன்னு கேட்டார். குரு உடனே "மூடனே, இது கூட தெரியாதா?" அப்படீன்னு டக்குனு கேட்டார். எதிர் பாராத தளபதி கண் இமைக்கரதுக்குள்ள  வாளை உருவி துறவிய வெட்டறதுக்கு ஓங்கினான். "இதோ நரகத்தின் கதவுகள் திறந்து விட்டன"-ன்னு சொன்னார். தவறை உணர்ந்த தளபதி குருவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். குரு சொன்னார்:"சொர்கத்தின் வாசல்கள் திறக்கின்றன"



சொர்க்கம் நரகம் ரெண்டுமே மனசில தான் இருக்கு. 

முயலும் ஆமையும்




அறிஞர் அண்ணா கிட்ட கேட்கப் பட்ட கேள்வி: "முயலும் ஆமையும்  கதையில், முயல் தோற்றது எதனால்?"

அண்ணாவின்  பதில்:"முயலாமையால்"

(முயல்+ஆமை = முயலாமை )

சமீபத்தில் ரசித்த படம் (ஹிந்தி) - ஸ்பெஷல் 26




படம் தொடங்கியதில் இருந்து ஒரே விறுவிறுப்பு தான். சப்-டைட்டில் வைத்து பார்த்ததால் கொஞ்சம் புரிஞ்சது.

சிபிஐ அதிகாரிகளாக அக்ஷய் குமாரும், அனுபம் கேர்-ரும் இண்டர்வீயு செய்வதில் தொடங்குகிறது படம்.

அங்க கட் செஞ்சி திடீர்னு மந்திரி வீட்டுக்கு சிபிஐ ரெயிட் போறா மாதிரி வருது அப்பறம். அனுபம் கேர்-க்கு லஞ்சம் கொடுக்க ட்ரை பண்றார் மந்திரி - '2 தரட்டுமா?' அப்படி கேக்கறார் மந்திரி …அதுக்கு இரண்டு அடி கொடுக்கிறார் அனுபம் - 'நேர்மை தான் உயிர் மூச்சு, நேர்மைனா டிக்சனரீல என் பேர் தான் மீனிங்கா போட்ருபாங்க' அப்படீங்கற மாறி பேசறார். சரியான சீரியஸ் படமாக்கும் அப்படீன்னு நெனைக்கும்போது தான் தெரியுது அக்ஷய் குமாரும் அனுபம் கெர்ரும் டுபாக்கூர் அப்படீன்னு. இவங்க கொள்ளை அடிக்கறதுக்கு ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கூட கிடையாது - ஏன்னா இவங்க CBI , இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட் மாதிரி பணக்காரங்க வீட்ல ரெயிட் செஞ்சு கருப்பு பணம் எல்லாம் கொள்ளை அடிக்கறாங்க.

கடைசீயா, பெருசா ஒரு கொள்ளை அடிக்க திட்டம் போடுது இந்த கும்பல். இவங்கள ரொம்ப க்ளோசா    வாட்ச் பண்றாங்க உண்மையான CBI. அவங்க பாத்திட்டு இருக்கும்போது அவங்க கண்ல மண்ணை தூவி கொள்ளை அடிச்சிட்டு போகுது இந்த கும்பல்.

"A  wednesday" (தமிழில் உன்னைப் போல் ஒருவன்) எடுத்த டைரக்டர் எடுத்த படம் இது.  1980கள்ல  நடந்த உண்மை சம்பவங்கள பின்புலமா வச்சி இந்த படம் எடுத்ருக்கார். அக்ஷய் குமார், காஜல் அகர்வால் காதல் இருந்தாலும், ஒரே ஒரு பாட்டில் அந்த காதலையும் ரொம்ப  அழகா காமிச்சதுக்கு டைரக்டருக்கு ஒரு சபாஷ் போடலாம். மரத்த சுத்தி டூயட் இல்ல, குத்து சாங் இல்ல.

"அட" சொல்ல வைக்கர மாதிரி நெறைய சீன்கள்: ஒரு  கட்டத்தில இவங்க ரெயிட் போற இடத்தில நிஜமான CBI  இருக்க சட்டுன்னு இவங்க அட்ரஸ் மாறி வந்ததா சமாளிக்கறது, யாரு அந்த ஸ்பெஷல் 26 அப்படீங்கறது, இன்னும் சொல்லிட்டே போகலாம்.
 



ஜென் கதைகள் - சுவை



ஒரு ஜென் துறவி மழைப் பாதை வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் இடறி மலை சரிவை நோக்கி விழத் துவங்கினார். அந்த நேரத்தில் கையில் அகப்பட்ட ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டார். கீழே அதல பாதாளம். கிளையில் இருந்த சிறிய பழம் ஒன்று அந்த துறவியின் கண்ணில்  பட்டது. அதை பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார்; சுவைத்தார்: "ஆஹா! என்ன சுவை!"

நீதி: வாழுகின்ற கணமே நிஜமானது; அதில் முழுமையாக இருப்பதே புத்திசாலித்தனம்.