படம் தொடங்கியதில் இருந்து ஒரே விறுவிறுப்பு தான். சப்-டைட்டில் வைத்து பார்த்ததால் கொஞ்சம் புரிஞ்சது.
சிபிஐ அதிகாரிகளாக அக்ஷய் குமாரும், அனுபம் கேர்-ரும் இண்டர்வீயு செய்வதில் தொடங்குகிறது படம்.
அங்க கட் செஞ்சி திடீர்னு மந்திரி வீட்டுக்கு சிபிஐ ரெயிட் போறா மாதிரி வருது அப்பறம். அனுபம் கேர்-க்கு லஞ்சம் கொடுக்க ட்ரை பண்றார் மந்திரி - '2 தரட்டுமா?' அப்படி கேக்கறார் மந்திரி …அதுக்கு இரண்டு அடி கொடுக்கிறார் அனுபம் - 'நேர்மை தான் உயிர் மூச்சு, நேர்மைனா டிக்சனரீல என் பேர் தான் மீனிங்கா போட்ருபாங்க' அப்படீங்கற மாறி பேசறார். சரியான சீரியஸ் படமாக்கும் அப்படீன்னு நெனைக்கும்போது தான் தெரியுது அக்ஷய் குமாரும் அனுபம் கெர்ரும் டுபாக்கூர் அப்படீன்னு. இவங்க கொள்ளை அடிக்கறதுக்கு ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கூட கிடையாது - ஏன்னா இவங்க CBI , இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட் மாதிரி பணக்காரங்க வீட்ல ரெயிட் செஞ்சு கருப்பு பணம் எல்லாம் கொள்ளை அடிக்கறாங்க.
கடைசீயா, பெருசா ஒரு கொள்ளை அடிக்க திட்டம் போடுது இந்த கும்பல். இவங்கள ரொம்ப க்ளோசா வாட்ச் பண்றாங்க உண்மையான CBI. அவங்க பாத்திட்டு இருக்கும்போது அவங்க கண்ல மண்ணை தூவி கொள்ளை அடிச்சிட்டு போகுது இந்த கும்பல்.
"A wednesday" (தமிழில் உன்னைப் போல் ஒருவன்) எடுத்த டைரக்டர் எடுத்த படம் இது. 1980கள்ல நடந்த உண்மை சம்பவங்கள பின்புலமா வச்சி இந்த படம் எடுத்ருக்கார். அக்ஷய் குமார், காஜல் அகர்வால் காதல் இருந்தாலும், ஒரே ஒரு பாட்டில் அந்த காதலையும் ரொம்ப அழகா காமிச்சதுக்கு டைரக்டருக்கு ஒரு சபாஷ் போடலாம். மரத்த சுத்தி டூயட் இல்ல, குத்து சாங் இல்ல.
"அட" சொல்ல வைக்கர மாதிரி நெறைய சீன்கள்: ஒரு கட்டத்தில இவங்க ரெயிட் போற இடத்தில நிஜமான CBI இருக்க சட்டுன்னு இவங்க அட்ரஸ் மாறி வந்ததா சமாளிக்கறது, யாரு அந்த ஸ்பெஷல் 26 அப்படீங்கறது, இன்னும் சொல்லிட்டே போகலாம்.
No comments:
Post a Comment