ஒரு ஜென் துறவி மழைப் பாதை வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் இடறி மலை சரிவை நோக்கி விழத் துவங்கினார். அந்த நேரத்தில் கையில் அகப்பட்ட ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டார். கீழே அதல பாதாளம். கிளையில் இருந்த சிறிய பழம் ஒன்று அந்த துறவியின் கண்ணில் பட்டது. அதை பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார்; சுவைத்தார்: "ஆஹா! என்ன சுவை!"
நீதி: வாழுகின்ற கணமே நிஜமானது; அதில் முழுமையாக இருப்பதே புத்திசாலித்தனம்.
No comments:
Post a Comment