Memories

Friday, December 9, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 7

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்  

  நம்ம பழுவேட்டரையர் சொன்னாரு: " சுந்தர சோழ மகராஜாவோட உடம்பு நாளுக்கு நாள் மோசமாயிட்டே வருது. அவருக்கு பாக்கற வைத்தியர்கள் கிட்டே தனியா கேட்டு பாத்தேன், அதிக காலம் உயிரோட இருக்க மாட்டாருன்னு சொல்லிட்டாங்க. அடுத்து பட்டத்துக்கு வர்றவங்க யாருன்னு யோசிக்கணும்"
  "இப்ப என்ன யோசிக்கறது. அதுதான் இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு இளவரசு பட்டம் கட்டியாச்சே" யாரோ கோட்டத்தில இருந்து சொன்னாங்க.
    "உண்மை தான். இளவரசு பட்டம் கட்ட முன்னாடி நம்ம யார் கிட்டயாவது கேட்டாங்கள? நாம ஒவ்வொருத்தரும் பல தலைமுறையா சோழ ராஜ்யதோட மேன்மைக்காக பாடு பட்டுட்டு இருக்கோம், ஆனா நம்மள ஒரு வார்த்த கூட கேக்கல"
  மழவரையர் சொல்ல ஆரமிச்சார்: "சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிஞ்சு கிடக்கு. அதோட வேகத்துக்கு இதுக்குள்ள வடக்க வேங்கியும், கலிங்கமும் தேக்க ஈழமும் இதுக்குள்ள பணிஞ்சு இருக்கணும். ஆனா இல்ல. அதுக்கு காரணம் ராஜாவோட மூத்த பையன் வட திசை மாதண்ட நாயகர் ஆதித்த கரிகாலர். தென் திசைல ஈழம் பணியாததுக்கு காரணம் படை தலைவரான தம்பி அருண்மொழி வர்மர். "
  பழுவேட்டரையர் பதில் சொன்னாரு: "சரி தான், இது வரை சேனாதிபதி வைக்கற வழக்கம் வேற, இப்ப நடக்கிறது வேற. வடக்க அண்ணன் தளபதி, தெக்க தம்பி தளபதி. வடக்க என்ன நடக்கு ? அண்ணன் வெங்கி மேலயோ, கலிங்கம் மேலயோ படை எடுக்கல. ஆனா தங்கத்தால மாளிகை கட்டிட்டு இருக்கார். வைர வைடூரியங்கள அதில பதிச்சுகிட்டு இருக்கார், தலை நகரத்துல இருக்கற பொக்கிஷ சாலைக்கு ஒரு செப்பு காசு கூட அனுப்பல. 
   தம்பி பண்ணறது ரொம்ப வித்தியாசமா இருக்கு. நாம கடைப் பிடிக்கறது என்ன, சண்ட போட போற இடத்திலேயே வீரர்களுக்கு சாப்பாடு சம்பாதிச்சுகுவோம். இவரு என்னடான்னா சோழ நாட்டில இருந்து சாப்பாடு சிலோனுக்கு போகணும்னு சொல்லறார். நானும் பத்து தடவ கப்பல்ல சாப்பாடு அனுப்பிட்டேன். அதுக்கு அவரு சொல்லற காரணம் என்னான்னா ஈழ ராஜா கூடத் தான் சண்டையாம், அங்க இருக்கற மக்கள் கூட இல்லையாம். மக்கள் கிட்ட இருந்து சாப்பாடு எடுத்தா மக்கள் நம்மள வெறுத்துருவான்கலாம். அரசர ஜெயிச்ச பிறகு மக்கள் விருப்பதோட ஆட்சி நடத்தணுமாம். அதுவர இங்க இருந்து தான் சாப்பாடும், பணமும் அனுப்பனுமாம்.
  இப்படி ரெண்டு பெரும் செய்யற காரியத்தால தஞ்சைலே பணமும் தானியமும் கரைஞ்சு போகுது. அத சமாளிக்க அதிக வரி போட வேண்டி இருக்கு. இதுக்கு தான் என்னைய இந்த பதவியில வச்சிருக்காங்க. நாட்டு நன்மைய நெனச்சு தான் இந்த பதவியில இருக்க வேண்டி இருக்கு இல்லன்ன எப்பவோ பதவிய விட்டுருப்பேன்"
    உடனே கூட்டதில இருந்து " அப்படி செஞ்சிராதீங்க. எங்கள கை விட்டுறாதீங்க. இந்த ராஜ்யத கை விட்டுறாதீங்க. இது சின்னா பின்னமாயடும்" ன்னு சொன்னாரு சம்புவரையர். 
   "அப்படீன்னா என்ன செய்யறதுன்னு நீங்க தாங்க சொல்லணும். ரொம்ப கேவலமா ஆன இந்த  அரசுக்கு என்ன பரிகாரம் செய்யனும்னு நீங்க தான் சொல்லணும்." அப்படீன்னு சொல்லி முடிச்சாரு பழுவேட்டரையர்.  
    
வாசகர்களுக்கு ஒரு விளக்கம்: குறுகிய பதிப்புன்னு சொல்லிட்டு பெரிசா எழுதறேன்னேன்னு நெனைக்க வேண்டாம். அத்தியாயம் 6 ல இருந்து 8 வர உள்ளது தான் இந்த நாவலோட ஆதாரம். இது தான் இப்ப இருந்து கதையோட கடைசி வர நடக்கற பல நிகழ்சிகளுக்கு காரனமாகுது. இத சொல்லும்போது கல்கி பத்தி சொல்லணும். அவர் காலத்துக்கு அப்பாற்பட்டு சூப்பரான நாவல எழுதிட்டு போயிருக்கார். யாரையும் நல்லவன், கெட்டவன் சொல்லிருக்க மாட்டாரு. நிகழ்சிகள் நடக்கறத அப்படியே கொடுத்திட்டு மத்த எல்லாத்தையும் நாமளா தீர்மானிக்க விட்டுடுவாரு. சந்தர்ப்பம், சூழ்நிலை, தான் இருக்கும் இடம், தான் கேள்விப்படும் தகவல் எல்லாம் தான் ஒரு மனிதனை முன்னோக்கி கொண்டு போகுது. வல்லவரையன் வந்தியதேவன் வழியா நாம இத எல்லாத்தையும் பாக்கிற சூழ்நிலைய கல்கி கொண்டு வருவாரு. நல்ல கதை அது நடக்கிற, இடம் (லொக்கேஷன்), காலம் (டயம்), மனிதர்களோட வித்தியாமான காரக்டர் எல்லாத்தையும் கணக்கில எடுக்கும், வித்தியாசங்கள கரக்டா காட்டும். கல்கியோட இந்த கதை அப்படித் தான்.  இப்ப வர்ற நிகழ்சிகள பாத்துட்டு பழுவேட்டரையர் கெட்டவர், வில்லன்னு நாம எல்லாருமே நெனைப்போம் (அது தப்பில்லே) ஆனா கல்கி பளுவேட்டரயர்களோட புகழ, அவங்க எப்படி இந்த இடத்துக்கு (ராஜாவுக்கு அடுத்த இடத்துக்கு) வந்தாங்கன்னு பின்னால சொல்லுவாரு. பழுவேட்டரையர் கூட தான் ராஜா ஆகணும்னு பேசல, யாருக்கு பட்டம் கொடுக்கணும்னு தான் சொல்லறாரு. அவர பாத்து நாம கேக்கனும்னு நெனைக்கறது எல்லாம் 'நீங்க  நல்லவரா, கெட்டவரா?' 

No comments:

Post a Comment