Memories

Tuesday, October 11, 2022

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 2 - அத்தியாயம் 33

இரண்டு தடி பசங்களும் கொஞ்சம் கூட கேப் விடாம கூடவே வந்து இருந்தாங்க. இவங்கள உருட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிறது ஈசி தான். ஆனா கோட்டையை விட்டு வெளியே போகும்போது பிடிச்சிப்பாங்க. இங்கவே இருந்தாலும் பெரிய பழுவேட்டரையர் வந்துட்டா நிச்சயமா சங்குதான். எங்க போலாம் எப்படி தப்பிக்கலாம் யார் வீட்டுக்கு போக முடியும் அப்படி எல்லாம் நினைச்சான்.
அப்போ ஒரு கூட்டம் சவுண்ட் அந்தப் பக்கம் வந்தது. யார் அவங்க என விசாரித்தான் வந்தியதேவன் அதுக்கு இவங்கதான் வேளக்கார படைனு பதில் கிடைத்தது. 'இவங்களைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கிறேன், இவங்களோட சேர்ந்து கிட்ட போறேன்' அப்படின்னு சொல்லி அந்த கும்பல்குள்ள ஓடிட்டான் வந்தியதேவன். சின்ன பழுவேட்டரையர் ஆளுங்களுக்கு அந்தக் கூட்டத்துக்கு உள்ள நுழைய முடியல. அந்த கும்பலில் ஒரு சின்ன குழப்பம் அவங்கள்ள ஒருத்தன் ஒரு மோர் விக்கிற பொம்பளைகிட்ட சச்சரவு பண்ணி அவளை துரத்திட்டு ஓடினான், தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கூட இன்னும் கொஞ்சம் பெரு ஓடினார்கள். இதுதான் நம்ம வாய்ப்பு என்று வந்தியத்தேவனும் கூட ஒன்னா ஓடினான். அங்க இங்க வளைஞ்சு ஓடி ஒரு முட்டுச் சந்தில நின்னுட்டான். 
ரொம்ப டயர்டு, ஓரமா உக்காந்தவன் அப்படியே தூங்கிட்டான். ராத்திரி ஆயிருச்சு. ஏதோ தோண, நிமிர்ந்து பார்த்தான். மரத்தில் ஒரு பேய்; அது பேச வேற செஞ்சது 'எவ்வளவு நேரம் கூப்பிடுறது? சரியான தூங்கு மூஞ்சி நீங்க" அப்படின்னு ஒரு பொம்பள குரல்ல சொல்லுச்சு. இது பேய் இல்ல, பொண்ணுதான் அப்படின்னு அவனுக்கு புரிஞ்சுது. அந்த பொண்ணு, "ராணி எவ்வளவு நேரம் வெயிட் பண்றாங்க... கொஞ்சம் கூட அவசரமே இல்லை உனக்கு" அப்படின்னா. சரிதான், இதுதான் நம்ம எஸ்கேப் ரூட்டு அப்படின்னு அவ கூட போன மரத்து மேல நூலேணி வழியாக ஏறி அந்தப் பக்கமே இறங்கினான்.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 2 - அத்தியாயம் 32


பாகம் 2  - புது வெள்ளம்
அத்தியாயம் 32 - பரிசோதனை 

நம்ம வந்தியத்தேவன் சின்ன பழுவேட்டரயர் கிட்ட இந்த திருட்டு பசங்க‌அவனோட பழைய டிரஸ் அதில் இருந்த பொருள்கள களவாடி கிட்டதா கம்ப்ளைன்ட் செஞ்சான். சின்ன பழுவேட்டரையர் இவன் வாய கிளருனாறு அந்த டிரஸ்ல அப்படி என்ன இருந்துச்சுன்னாரு.  இவன் தைரியமா கொஞ்சம் தங்க காசும் ஒரு முக்கிய ஓலையும் இருந்ததா சொன்னான். 'அது என்ன ஓலை?'ன்னாரு சின்ன பழுவேட்டரையர். 'இளவரசர் ஆதித்த கரிகாலர் சக்கரவர்த்திக்கு எழுதின ஓலை'ன்னான். 
'ஓலைல என்ன இருந்துச்சு'ன்னாரு. இவன் 'அடுத்தவங்க ஓலைய படிக்கிற பழக்கம் இல்லை'னு மடக்கினான். 
வேற வழியே இல்லை...கொடுத்திற வேண்டியது தான்னு எல்லாத்தையும் எடுத்து வர சொன்னார். காசு கொஞ்சம் அதிகமா தெரிஞ்சது. எக்ஸ்ரா காச ஒதுக்கி வச்சான். 
'வேற என்ன வேணும் கேளுன்னார் சின்ன பழுவேட்டரையர். 'ஊரு சுத்தி பாக்கணும்னான். 2 தடி மாட்டு பசங்களோட அனுப்பி வச்சாரு. எப்படி ரூட் போட்டாலும் அதுக்கு கேட் போடராரேன்னு நினைச்சான் வந்தியத்தேவன்.

Thursday, January 13, 2022

கோவிட்19 - ஒரு அலசல்

சீனாவின் வூகான் மாகாணத்தில் 2020ல் தொடங்கிய இந்த நோய் 2 வருடங்களாக உலகை முடக்கி வைத்துள்ளது

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


நோய் நொடிகள் நீங்கி சந்தோஷங்கள் பொங்கிட வாழ்த்துக்கள்!!

Tuesday, February 4, 2020

உலகத்தில் உள்ள தண்ணீர் காணாமல் போனா எப்படி இருக்கும்? https://youtu.be/-uOwv_Krqk8

https://youtu.be/-uOwv_Krqk8