ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்றும் அழுத போது தலைவனாகலாம்
மனம், மனம், அது கோவிலாகலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகியாகலாம்
உருகியோடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
சுமைதாங்கி திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதி P.B. ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல்
No comments:
Post a Comment