அத்தியாயம் 27 - ஆஸ்தானப் புலவர்கள்
ஒரு புலவர்கள் கும்பல் சுந்தர சோழர் இருந்த அறைக்குள்ள வந்தாங்க. அரசரும் வேற வழி இல்லாம அவங்கள கொஞ்சம் கவிதைகள் சொல்லணும்னு கேட்டுகிட்டாரு. புலவர்களும் பாடல்கள் சொன்னாங்க. சின்ன பழுவேட்டரையர் வந்தியத் தேவனை அவர் கண் பார்வையில இருக்கட்டும் அப்படீன்னு அங்கேயே இருக்க வச்சுகிட்டாரு. இவனும் அரசர் கிட்ட முழுசா சொல்லிட்டு போலாம்ன்னு இருந்துகிட்டான்.
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 28 - இரும்புப் பிடி
சக்கரவர்த்தி அவரு தன்னோட பொண்ணு குந்தவை கிட்ட சொன்ன பாடல் ஒன்ன புலவர்கள் கிட்ட சொல்லிட்டு இருந்தாரு. வந்தியத் தேவன் அநிச்சையா தன் இடுப்பில் கட்டி இருந்த துணிய தொடப் போனது. இங்க குந்தவை தேவிக்கு கொடுக்க வச்சிருந்த ஒலைய வச்சிருந்தான். தொட்டவனுக்கு திக்குன்னு இருந்தது. ஓலை அங்க இல்ல, எங்கேயோ தவற விட்டுட்டான்.
புலவர் கூட்டம் எல்லாம் முடிஞ்சி கிளம்பும் போது கூட்டத்தோட கலஞ்சு எஸ்கேப் ஆய்டலாம்னு டிரை பண்ணினான். அப்போ ஒரு கை அவன வலுவா பிடிச்சது - அது சின்ன பழுவேட்டரையர் தான்.
பாகம் 1 - புது வெள்ளம்
சக்கரவர்த்தி கிட்ட வந்தியத் தேவனை தள்ளிகிட்டு பொய் நிருத்தினாறு சின்ன பழுவேட்டரையர்: 'அரண்மனை வைத்தியர் அரசருக்கு அபாயம் இல்லங்கராரு, சோதிடர்கள் அபாயம் இல்லைங்கறாங்க. ஆனா இந்த தம்பி ஏதோ அபாயம் அப்படீன்னு சொல்லிச்சி. என்னத்த பத்தி சொன்ன?' அப்படீன்னு கேட்டாரு.
வந்தியத்தேவன் ரொம்ப உஷாரு பார்ட்டி. கவுக்க முடியுமா? 'நானு வாணர் குலத்தோட கடைசி துரும்பு. ஒரு காலத்தில நாங்க அரசர்களா இருந்தோம். பட் இப்போ எனக்கு இருக்க வீடு கூட இல்ல. அதனால "அபயம், அரசர் கிட்ட அபயம்" அப்படீன்னு கேட்டு ஒரு அஞ்சி கிராமமாவது கொடுத்தா புண்ணியமா இருக்குமின்னு கேட்டேன்' அப்படீன்னு பிளேட்ட மாத்தி போட்டான்.
பழுவேட்டரையர் மட்டுமில்ல சக்கரவர்த்தியும் அப்படியே கவுந்திடாங்க. மன்னர் சின்ன பழுவேட்டரையர் கிட்ட 'இந்த பிள்ள நம்ம விருந்தாளி. இன்னிக்கி இவன் இங்கயே தங்கட்டும்'-ன்னார்
பாகம் 1 - புது வெள்ளம்
அத்தியாயம் 30 - சித்திர மண்டபம்
சின்ன பழுவேட்டரையர் வந்தியதேவனை அவரோட சேவகர்கள் கிட்ட நல்ல படியா கவனிக்க சொல்லிட்டு திரும்ப வந்தார். வரும் போது ஒரு சேவகன் ஒரு ஓலை சுவடிய அவர் கிட்ட கொடுத்தான், மண்டபத்துக்கு வெளிய கிடைச்சதுன்னு சொன்னான். இவர் என்னன்னு பார்த்தார் : குந்தவை தேவிக்கு அவரோட அண்ணன் ஆதித்த கரிகாலர் அவர் கைப்பட எழுதிய ஓலை. 'அந்தரங்க காரியங்களுக்கு ஒற்றன் தேவைன்னு கேட்டாயில்ல, இவன் தான் அவன்' சின்ன பழுவேட்டரையர் அப்படியே ஷாக் ஆய்டாறு.
வந்தியத் தேவன் சாப்பிட்டு மண்டபத்தை வேடிக்கை பாத்தான். நெறைய பெயண்டிங்க்ஸ் வரஞ்சிருந்தாங்க சுவர்ல. அதில இருந்து சுந்தர சோழரோட ப்ளாஷ் பேக் தெரிஞ்சிகிட்டான்: சோழ சக்கரவர்த்தி பராந்தகர்க்கு 2 பசங்க. மூத்தவரு ராஜாதித்யர். ராஷ்டிர கூடர்களோட நடந்த சண்டைல வீர சொர்க்கம் அடஞ்சிட்டாரு (அப்படீன்னா சண்டைலே சாவறது).
இவரோட தம்பி கண்டராதிடர் அவர் அப்பா ஆசைப்படி ராஜாவானாறு. ஏன்னா அண்ணனுக்கு கொழந்த இல்ல. இவரு பக்தியில முழுகி போய் இருந்தாரு அப்படீங்கரதால அவரு தம்பி அரிஞ்சயர் அரசாங்கத்த கவனிச்சுகிட்டாறு. ராஷ்டிர கூடர்கள் கூட சண்டை போட்டுஜெயிச்சாரு. நல்ல திறமை இருந்ததாலும் அண்ணன் கண்டராதித்தர் கல்யாணம் செஞ்சுக்காது இருந்ததாலும் தம்பிய பட்டத்துக்கு இளவரசரா அனௌன்ஸ் பண்ணிட்டாரு. தம்பிக்கு கல்யாணம் ஆயீ குழந்தை இருந்ததால அரிஞ்சயருக்கும் அப்பறம் அவரு வாரிசுகளே பட்டத்துக்கு வரணும்னு அக்ரீமெண்ட் போட்டுடாரு அமைச்சர், மற்ற குறுநில ராஜாக்கள் கூட. இவங்கள எல்லாம் ஒரு பாடு பட்டு சம்மதிக்க வச்சாரு. எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. ரொம்ப நாள் கழிச்சு மழவராயர் அப்படீங்கற குறுநில மன்னரோட மகளை பாத்து பிடிச்சுப் போய் கல்யாணம் செஞ்சுகிட்டாறு. மதுராந்தகன் என்கிற மகன் பிறந்தான் இவங்களுக்கு. முறைப் படி பாத்தா மதுராந்தகன் தான் பட்டத்துக்கு வரணும், அரசரோட மகன் அப்படீங்கரதால. ஆனா மன்னரோட அரேஞ்ச்மேன்ட்ஸ் படி அரிஞ்சயர் பட்டத்துக்கு வந்தார், மன்னர் இறந்து போனப்பறம். இவரும் ரொம்ப நாள் வாழல. அப்பறம் இவர் பையன் சுந்தர சோழருக்கு பட்டம் சூட்டினாங்க எல்லாரும். சுந்தர சோழர் திறமையா ஆட்சிய நடத்தினாரு. அவரு பையங்க ஆதித்த கரிகாலர் & அருண்மொழி வர்மர் ரொம்ப சூப்பர். ஒருத்தர் நார்த் லயும் ஒருத்தர் சௌத்லயும் நடக்கற போர்கள நடத்திட்டு இருந்தாங்க.
(உறவு முறை விளக்கத்துக்கு இந்த பதிவை http://www.piramu.tk/2014/04/blog-post_14.html பாருங்க.
...அப்பறம் பின்னூட்டம் போட்டு உங்க கருத்த கக்குங்க பாஸ்!!)
இத்தோட "பாகம் 1 - புது வெள்ளம்" முடிந்தது.
(உறவு முறை விளக்கத்துக்கு இந்த பதிவை http://www.piramu.tk/2014/04/blog-post_14.html பாருங்க.
...அப்பறம் பின்னூட்டம் போட்டு உங்க கருத்த கக்குங்க பாஸ்!!)
இத்தோட "பாகம் 1 - புது வெள்ளம்" முடிந்தது.
No comments:
Post a Comment