Memories

Sunday, April 27, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 2 - அத்தியாயம் 31

பாகம் 2  - புது வெள்ளம்

அத்தியாயம் 31 - திருடர்! திருடர் !! 
சித்திர மண்டபத்தை சுத்தி பாத்திட்டு இருந்தான் வந்தியத் தேவன். இவன் சுத்தி பாக்கறத பாக்கறதுக்கு 3 தடியன்கள வேற அனுப்பி இருந்தார் சின்ன பழுவேட்டரையர். கொஞ்ச நேரத்தில போர் அடிச்சு அவங்களே உக்காந்து சொக்கட்டான் (சீட்டு மாதிரி) ஆட ஆரம்பிச்சிட்டாங்க. இவன் ஒவ்வொரு படமா பாத்திட்டு இருந்தான். 

ஒவ்வொரு படமும் சோழ சாம்ராஜியதோட முக்கியமான இன்சிடண்ட்-ஸ சொல்லிச்சி. ஒரு விஷயம் கவனிச்சான். அந்த ஒவ்வொரு ரிஸ்கான முக்கியமான நேரத்தில கூட பக்கத்தில கூட சேவை செய்தவங்க பழுவேட்டரையர்கள் தான். பரம்பரை பரம்பரையா அவங்க சோழ ராஜாக்கு கூடவே இருந்து உதவிய இருந்திருக்காங்க. அதனாலதான் இவங்களுக்கு அவ்வளவு மரியாதை.  (அத்தியாயம் 7-இல சொல்லி இருந்த மாதிரி இந்த இடத்தில கல்கி எந்த சோழ மன்னருக்கு எந்த இடத்தில பழுவேட்டரையர்கள் உதவி செய்தார்கள் அப்படீன்னு விளக்கமாக சொல்லுவார்)  


வெளிய சின்ன பழுவேட்டரையர் வர்றதா அறிவிப்பு வந்தது. சீக்கரம் எதனா பண்ணனும். அங்க சொக்கட்டான் விளையாடிட்டு இருந்த அந்த 3 தடியன்களோட வம்பு இழுக்க ஆரம்பிச்சான். 'என்னோட டிரஸ் எல்லாம் எங்க?' அப்படீன்னு கேக்க ஆரம்பிச்சான். அவங்க திருடிகிட்டாங்க-ன்னு பழி சொன்னான். 3 பேரு கூடையும் சண்டை பிடிச்சான்.  

விஸ்வரூபம் கமல் மாதிரி ஒரு நிமிஷத்தில அவங்க 3 பேரையும் தரைல உருள வச்சான். சின்ன பழுவேட்டரயர் உள்ள வந்தார். அவர் கிட்ட ஓடி போய் "திருடர்கள்! திருடர்கள்!!" அப்படீன்னு சொன்னான்.

No comments:

Post a Comment