Memories

Sunday, September 9, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 17, 18


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது! 


நாம ஒரு பிளாஷ் பேக்-இருந்து இன்னொன்னு போய் பல தாண்டிட்டோம். என்னதான் வானதிய  குந்தவைக்கு பிடிச்சாலும், அவளோட இந்த பயந்த சுபாவம் பிடிக்கல. எதுக்கெடுத்தாலும் பயந்து மயக்கம் போட்டிடுவா. அது தெரிஞ்ச மற்ற இளவரசிகள் செஞ்ச ஏற்பாடு தான் பொம்மை முதலை. இதில அவனா மாட்டி அவமானப் பட்டுட்டான் நம்ம வந்தியத் தேவன். அவன சமாதானப் படுத்த முயற்சி செஞ்சா குந்தவை. ஆனா மற்ற இளவரசிகள் சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க. கோவத்தோட பொம்மை முதல மேல இருந்த வேல உருவி எடுத்தான்; குதிச்சி ஏறினான் குதிரை மேல; சுள்ளுன்னு அடி கொடுத்தான் குதிரைக்கு...துள்ளி பறந்தது குதிரை! குந்தவை பாத்திட்டே இருந்தா.

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 18 - இடும்பன் காரி 



கொள்ளிடத்து கரைலே வந்தியத் தேவனுக்கு குதிரை ஏற்பாடு செஞ்சு கொடுக்க வந்த ஆளு பேரு தான் இடும்பன் காரி. இவன் கந்தமாறன் வீட்லே வேலையாளா இருந்தான். இவன் வந்தியத் தேவனை அனுப்பிச்சுட்டு திரும்ப வரும் போது ஆழ்வார்க்கடியானை ஒரு மரத்துக்கு கீழ பார்த்தான். ஆழ்வார்க்கடியான் தன்னாலேயே புலம்பிக்கிட்டு இருந்தான் (வந்தியத் தேவன் யாரு என்னன்னு ஒண்ணுமே கண்டு பிடிக்க முடியல...இவன் நல்லவனா..கெட்டவனா ? அப்படீன்னு தான் புலம்பினான்)
அதுக்குள்ளே இடும்பன் காரி பக்கத்தில வந்திட்டான்; வலது உள்ளங் கை மேல் இடது கைய வச்சு ரண்டு கட்டை விரலையும் ஆட்டினான். ஆழ்வார்க்கடியான் என்ன பண்ணினே நீ? அப்படீன்னு கேட்டான், இடும்பன் காரி சமாளிச்சான், திரும்பப் போறதா சொல்லிட்டு கிளம்பினான். உடனே ஆழ்வார்க்கடியான் என்கிற திருமலையும் பக்கத்திலே இருக்கற ஒரு ஊரு பேரு சொல்லிட்டு அங்க போறதா சொல்லிக் கிளம்பினான். இடும்பன் காரி கொஞ்சம் தள்ளிப் போனதும் திரும்ப வந்து பக்கத்தில இருந்த மரத்து மேல ஏறி ஒளிஞ்சுகிட்டான் வெயிட் பண்ணினான். எதிர் பார்த்த மாறியே இடும்பன் காரி திரும்ப வந்திட்டு இருந்தான். மரத்துக்குக் கீழ வெயிட் பண்ணினனான். ரொம்ப நேரம் போச்சு. நேரம் கழிச்சு இன்னொருத்தனும் வந்து மரத்துக்கு பக்கத்திலே நினுகிட்டான். இடும்பன் காரி மெதுவா அவன் பக்கத்திலே போய் ஆழ்வார்க்கடியான் கிட்ட செஞ்சு காட்டின மீன் சிக்னல  செஞ்சான். அவனும் அந்த சிக்னல பதிலுக்கு செஞ்சு காமிச்சான். வந்தவன் பேரு சோமன் சாம்பவன். ரெண்டு பேரும் பகைவனோட பள்ளிப்படைக்கு போறதா சொல்லிக் கிளம்பினாங்க. அந்த திசைலே இருந்த திருப்புறம்பியம் அப்படீங்கற இடத்தில இருந்த கங்க மன்னன் பிருதிவீபதி-யோட பள்ளிப்படக்குப் போறதா ஊகிச்சுகிட்டான்  ஆழ்வார்க்கடியான். 

ஒளியில் மிளிரும் தூசித் துகள் போல...


வாயேஜர் என்கிற விண்கலம் சுமார் 35 வருடங்களுக்கு முன் விண்ணில் செலுத்தப் பட்டது. இதன் முக்கிய குறிக்கோள் சூரிய குடும்பத்தை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது. இந்த விண்கலம் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்களான வியாழன், சனி கிரகங்களை பற்றி ஆராய்ச்சி செய்து புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது.
இந்த விண்கலம் பூமியில் இருந்து பல கோடிக்கணக்கான மைல்கள் தாண்டி இன்னும் சென்று கொண்டே இருக்கிறது. சூரியனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் எல்லையை தொட்டு விட்டதாக அறிவியல் அறிகர்கள் சொல்கிறார்கள்.  
அவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது அது திரும்பி பூமியை கடைசீயாக எடுத்த போட்டோ கீழே.



அம்புக்குறியிட்டு காட்டப் பட்டுள்ள இடத்தில் ஒளியில் தெரியும் பொட்டு தான் பூமி. கார்ல் சகான் என்கிற அறிஞர் சொல்கிறார்: "திரும்பவும் பாருங்கள் அந்த பொட்டுத் துகளை, அங்கு தான் இருக்கிறது...வீடு. அது தான் நாம். இங்கு தான் நீங்கள் அன்பு செலுத்துகிற ஒவ்வொருவரும், உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொருவரும், நீங்கள் கேள்விப் பட்ட எல்லாரும், நமக்குத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் - மகான்கள், அறிஞர்கள், ஹீரோக்கள், வீரர், கோழை, அரசன், சாமான்யன் - எல்லாரும் அந்த ஒளியில் மிளிரும் தூசித் துகளில் வாழ்ந்திருக்கிறார்கள், வாழுகிறார்கள்..."

குறிப்பு: வாயேஜர் விண்கலம் மீது சூரியனின் ஒளி  பட்டு அந்த பிரதிபலிப்பின் கோடுகள் தெரிகின்றன. இதே போன்ற பிரதிபலிப்பினால் பூமியும் தெரிகிறது. இந்த இரு பிரதிபலிப்புகளும் ஒரே கோட்டில் வந்தது தற்செயல் தான். இந்த பிரதிபலிப்பில் தெரியும் பூமி அறிஞருக்கு தூசித் துகள் போல தோன்றியிருக்கிறது. "வெளிர் நீல துணுக்கு" என்கிற இந்த புகைப்படம் உலகப் புகழ் பெற்றது. 

Sunday, August 26, 2012

செவ்வாயில் க்யுரியாசிட்டி



செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப் பட்ட க்யுரியாசிட்டி என்கிற எந்திர வாகனம் பத்திரமாக இறங்கி தன் சோதனைகளைத் தொடங்கியது.


க்யுரியாசிட்டியின் ஒன்பது மாத பயணத்தையும் தரை இறங்குவதையும் காட்டும் விளக்கப் படம் மேலே. செவ்வாயின் வளி மண்டலத்தில் இது இறங்க ஆரம்பித்ததில் இருந்து தரையைத் தொடும் வரை உள்ள நேரம் ஏழு நிமிடங்கள் மட்டுமே. ஆனால் செவ்வாயில் இருந்து இந்த விண்கலம் அனுப்பும் செய்தி பூமியை வந்து அடைய பதினாலரை நிமிடங்கள் ஆகும். இந்த கலம் செவ்வாயின் வளி  மண்டலத்தை அடைந்ததில் இருந்து ஒரு ஏழரை நிமிடங்கள் விஞ்சானிகள் குழுவுக்கு ஒரு மிகப் பெரிய சஸ்பென்சாக இருந்தது.

இந்த ஏழரை நிமிட காத்திருப்புக்குப் பின் அவர்களுக்கு க்யுரியாசிட்டி பத்திரமாக தரை இறங்கிய செய்தி வந்ததும் அவர்களுடைய சந்தோசம் கண்கொள்ளாதது.
இந்த தளத்தில் உள்ள பல புகைப்படங்கள் பிற இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப் பட்டவை. மறுப்புகளையோ கருத்துக்களை பின்நூட்டங்களாகத் தெரிவிக்கவும் 

Sunday, July 22, 2012

சமீபத்தில் ரசித்த படம்: பாட்ஷா


எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது; ஆனாலும் இன்னும் ஒரு முறை கூட பார்க்கலாம் என்று தோன்றுகின்ற  படம்.

சுரேஷ் கிருஷ்ணாவின் திரைக்கதை இயக்கத்தில் வேறு எந்த படம் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஒரு படம் மட்டும் அவ்வளவு அட்டகாசம். வசனங்கள் எழுதியது பாலகுமாரன்; "நான் ஒரு தடவை சொன்னா  நூறு தடவை சொன்ன மாதிரி " இவரா எழுதினார்? தெரியவில்லை.

துவக்கம் சாதாரணம் தான்; கொஞ்சம் பில்ட்-அப்  சீன்கள் ரஜினிக்காக. பின் ஒரு பாடலுடன் வருகிறார் ரஜினி. பேப்பர் தூவ நிறைய வாய்ப்புகள் தரப்படுகின்றன. அப்பா இல்லாத ஒரு தம்பி, இரண்டு தங்கைகள் மற்றும் அம்மாவை பார்த்துக் கொள்ளும் அண்ணன் ரஜினி. ஆட்டோ ஓட்டுகிறார். அடிதடி என்றால் அவ்வளவு பயம் அவருக்கு. நக்மாவின் அறிமுகம் கிடைக்கிறது. ஹீரோயின் வேண்டுமே... நக்மா கவர்ச்சி ஹீரோயின் பாத்திரத்துக்கு மிகவும் பொருந்துகிறார். 

மூத்த தங்கைக்கு அவர் விரும்பிய வரனை கலியாணம் செய்து வைக்கிறார். ஆட்டோ காரன் தங்கைக்கு தன மகனை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லும் பணக்காரனுக்கு பணம் முக்கியம் இல்லை என்பதை உணர்த்தி நல்ல படியாக திருமணம் செய்கிறார்.

தன் தம்பி இன்ஸ்பெக்டர் வேலைக்காக இன்டர்வியு போக போலிஸ் உயர் அதிகாரி மாணிக்கம் என்கிற ஆட்டோ டிரைவர் ரஜினியை பார்க்க வேண்டும் என்கிறார். ரஜினி பார்க்க செல்ல இவரை பார்த்ததும் போலிஸ் அதிகாரி எழுந்து நின்று மரியாதை செய்கிறார். அதற்க்கு முன் நெகடிவாக சில பழைய காட்சிகள் ஓடுகின்றன.

அவருடைய தங்கைக்கு மெடிக்கல் காலேஜ் சீட் கிடைக்காமல் போக ரஜினி அங்கு சென்று அந்த காலேஜ் அதிபருடன் பேசுகிறார். பேசி முடித்தவுடன் தங்கைக்கு சீட் கிடைக்க தங்கையின் கேள்விக்கு ரஜினியின் பதில்: "உண்மையை சொன்னேன்". கல்லூரி அதிபர் தன அடியாட்களுக்கு சொல்லும் பதில்: " தங்கச்சிக்கு அண்ணன்னா நமக்கெல்லாம் அண்ணன்...ஊருக்கே அண்ணன்டா...அன்ன்ன்னன் டா'

இந்திரன் என்கிற ரவுடி தன் தம்பியை அடிக்காமல் தடுக்க இவர் கம்பத்தில் கட்டப்பட்டு அடிக்கப் படுகிறார். ரத்தம் சிந்த சிந்த அவன் ரஜினியை அடித்து துவைக்க ஒரு எதிர்ப்பு காட்டாமல் வாங்கி கொள்கிறார். ஆனால் தன தங்கை அந்த ரவுடியால் ஒரு துளி ரத்தம் சிந்தும் போது அந்த ரவுடியையும் அவன் கும்பலையும் த்வம்சம் செய்கிறார் தனி ஆளாய். பின் இந்திரனை கம்பத்தில் வைத்து கிழித்து எடுக்கிறார்.

பின் "உன்ன இந்த பக்கம் மறுபடியும் பாத்தேன்..பாத்த இடத்திலேயே குழி தோண்டி பொதைசுடுவேன்.." இங்கிருந்து தான் 'நான் ஒரு தடவை சொன்னா" வசனம் வருகிறது.  இதுக்கு பின்னால் ரஜினியின் பிளாஷ் பேக்
அவர் மும்பையில் மாணிக் பாட்சா-வாக மார்க் அன்டனி என்கிற ரகுவரனுடன் மோதிக் கொண்டு இருந்ததும், மார்க் அன்டணியை ஜெயிலில் அடைத்து விட்டு இறந்து விட்டதாக உலகத்தை நம்ப வைத்து விட்டு சென்னை வந்திருப்பதும் தெரிகிறது. 

நக்மாவின் கல்யாண தினத்தில் தன் பட்டாளத்துடன் போய் அவரை கூட்டி வர விஷயம் தெரிந்து தப்பித்து வருகிறான் மார்க் அன்டனி. மீண்டும் சண்டை..


போலிஸ் ரகுவரனை கொன்று எல்லாம் சுபம். பல காட்சிகள் சூப்பர் என்று சொல்ல வைக்கும். நக்மாவின் அப்பா கேசவன் என்கிற காரக்டர் 'மார்க் அன்டனி தப்பித்தான்' என்று செய்தி வாசித்து பாப்பரை மடக்கும் போது மார்க் அன்டனி எதிரே இருக்கும் காட்சி. "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா' என்று தான் ஏற்பாடு செய்த ஆட்கள் துப்பாக்கி சகிதம் மார்க் அன்டணியை குறி வைத்திருப்பதை ரஜினி காட்டும் காட்சி. "உள்ளே போ" காட்சி போன்ற மேலே விவரித்த காட்சிகள் அருமையிலும் அருமை. எட்டு எட்டா பாடல் தத்துவம். நீ நடந்தால் பாடல் இனிமை. எங்கிருந்து உருவாக்கினாரோ தேவா  பாடல்கள் எல்லாம் சிறப்பு. இஸ்டையில் பாட்டு உற்சாகம்.

மொத்தத்தில் இன்னும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.