இதை தெரிந்து கொள்ள மனித உடலின் அடிப்படை கட்டுமானத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். மனித உடம்பு பல கோடிக்கணக்கான செல்களால் கட்டப் பட்டுள்ளது. வீடு ஆயிரக் கணக்கான செங்கலால் கட்டப் பட்டுள்ளதைப் போல. செல் என்பது உடலின் அடிப்படை மூலக்கூறு. செல்கள் பெரிதாவதில்லை, மனித உடல் வளரும்போது கூட. பெரிய வீடு கட்ட வேண்டுமானால் நாம் செங்கல்களைப் பெரிதாக்குவதில்லை, ஆனால் செங்கல்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவோம். அது போல உடல் வளரும்போது செல்கள் எண்ணிக்கையில் அதிகமாகுகின்றன. ஒவ்வொரு செல்லும் அதை போல் இன்னொரு செல்லை உருவாகுகிறது. ஒன்று இரண்டாகும், இரண்டு நாலாகும், நாலு எட்டாகும் இது போல பெருகி கொண்டே இருக்கும். இப்படி ஒரு செல் இன்னொரு செல்லை உருவாகுவதற்கு செல்லுடைய அடிப்படை கட்டுமானத்தை (செல்லுடைய மூளை-ன்னு நினைத்துக் கொள்ளுங்கள்) பிரதி எடுக்கிறது. அப்படி பிரதி எடுக்கும் போது வரும் குறைபாடுகள் தான் பின்னர் கான்சராக உருவாகிறது.
நன்றி: சித்தார்த்தா முகர்ஜி-யின் நோய்களின் அரசன் கான்சர்
இந்த வார்த்தையை படித்திருக்கிறேன், கேள்வி பட்டு இருக்கிறேன் பெரிய மன்னர்களிடத்தில் இது நிறைய இருந்தது என்று. இன்றைய காலகட்டத்தில் கேட்டதில்லை.
மாமா முதல் கீமோ ஏற்றி விட்டு வந்து இருக்கிறார்கள். மேல வீடு சசிகலா சித்தி அப்ப தான் செல்வம் சித்தப்பா இறந்த சோகத்தில் இருந்திருக்கிறார்கள். ஊரை விட்டு போய்டலாம்னு இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் பிரமு மாமா இப்படி சொன்னார்களாம்: "உனக்கு யாரும் இல்லை இங்கன்னோ, ஊரை விட்டு போலாம்னோ நெனைக்காதே சசிகலா. அண்ணன் நான் இருக்கேன் அந்த பிள்ளைகளுக்கு"
கீமோ ஏறும் போது கூட இந்த மன உறுதி இருக்குமா, நான் பாத்துக்கறேன் குழந்தைகளைன்னு அந்த சமயத்துல கூட சொல்லறதுக்கு யாருக்கு வரும் அந்த உறுதி.
ஹாரி பாட்டர் படத்தில் இந்த வசனம் வரும். வசனத்துக்கு முன் குறிப்பு:
ஹாரி பாட்டர் அப்பா அம்மாவை இழந்து விட்ட சிறுவன். அவனுக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்தவர் அவனுடைய பள்ளிக்கூட வாத்தியார். அவருடைய மறைவு ஹாரியை ரொம்பவும் பாதிக்கும். அப்போது ஹாரியின் கனவில் வந்து வாத்தியார் சொல்லுவார்: "இறந்தவர்களை நினைத்து கவலை படாதே, இருப்பவர்களை நினைத்து இறக்கப் படு. மேலும் அன்பே இல்லாமல் இருப்பவர்களை நினைத்து துக்கப் படு"
ஆங்கிலத்தில்:
"Do not pity the dead, Harry. Pity the living, and, above all, those who live without love."
Quote from movie "Harry Potter and the Deathly Hallows"