லவ்ஜாய் என்கிற வால் நட்சத்திரம் (தூமகேது என்பது அந்த கால வழக்கு) சூரியனை நோக்கிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது டிசம்பர் 15 ஆம் தேதி. சூரியனை நெருங்கும் போதே பஸ்பமாகி விடும் என்று எண்ணினார்கள் அறிவியல் வல்லுனர்கள். வால் நட்சத்திரத்தின் பாதையை கணக்கிட்டு பார்க்கும்போது சூரியனுக்கு அருகில் சென்று அதை சுற்றி செல்லும் (எரிந்து போகாது இருந்தால்) என்று தெரிந்தது. ஒரு சஸ்பென்ஸ் படத்தை பார்ப்பது போல பல வானியல் வல்லுனர்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் .
மேற்கண்ட படத்தில் நடுவில் உள்ள நீல நிற தட்டின் நடுவே உள்ள வெள்ளை வட்டம் தான் சூரியன். அதன் வெப்பம் மிகுந்த வெளிச்சமான பகுதி தான் நீல நிறமாக்கப் பட்டு காண்பிக்கப் படுகிறது. அந்த வெளிச்ச தட்டை நோக்கி பாய்ந்து செல்பவர் தான் நம்ம லவ்ஜாய் வால் நட்சத்திரம். நீங்கள் நினைப்பது சரி தான் - நீளமாக தெரிவது அதன் வாலே தான்.
லவ்ஜய் பிழைக்குமா இல்லையா என்று நமக்கும் ஆர்வம் தோன்றுவது இயல்பே...சரி என்ன ஆச்சு ?
எல்லா தொலை நோக்கிகளும் லவ்ஜாய் மேல் கண்களை பதித்து இருந்தன. லவ்ஜாய் சூரியனை நெருங்குவது வரை பார்க்கமுடிந்தது ஆனால் அடுத்து என்ன நடந்தது என்பது சில நிமிடங்கள் பெரிய சஸ்பென்ஸ் தான். சூரியனின் பின் பக்கத்தில் இருந்து சின்ன வெளிச்ச போட்டு ஒன்று பறந்து செல்வதை பார்த்த போது எல்லாருக்கும் பெரிய ஆச்சர்யம் ... லவ்ஜாய் பிழைத்துக் கொண்டது என்று.
அவ்வளவு பக்கத்தில் சூரியனை நெருங்கியதால் லவ்ஜாயின் வால் அறுபட்டு போனது...அறுபட்ட வால் சூரியனுக்கு ஒரு பக்கமும் தலை இன்னொரு பக்கமும் வந்தது.
ஆனாலும் லவ்ஜாய் அதிர்ஷ்டக் கார வால் (இல்லாத) நட்சத்திரம் தான்..!
பின் குறிப்பு: நம்முடைய முன்னோர்கள் இந்த சூழ்நிலையில் சூரிய பகவானுக்கும் எதாவது பாம்பு அரக்கனுக்கும் சண்டை என்றும் தலையும் வாலும் பிரிந்தன என்றும் கதை எழுதி இருப்பார்கள் இந்நேரம்.

No comments:
Post a Comment