Memories

Monday, December 5, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 6

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம் 
குரவைக் கூத்துக்கு அப்பறம் வந்தவங்களுக்கு பெரிய விருந்து நடந்துச்சி. கந்தமாறன் வந்தவங்க யாரு யாருன்னு வந்தியத் தேவனுக்கு சொல்லிட்டே வந்தான். பளுவேட்டரைரையும், சம்புவரையரையும் தவிர மழபாடி தென்னவன் மழவரையர், குன்றத்தூர் பேரு நிலக் கிழார், மும் முடிப் பல்லவராயர், தான் தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவ சேனாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பேரு நில வேளார்-ன்னு பெரிய சிற்றரசர் கூட்டமே வந்திருந்தது. அரசர்-ங்கறது மாறி அரயர்ந்னு ஆயிட்டது, அதனால எல்லா பேருலயும் அரயர்ங்கரத சேத்துகிட்டாங்க. இது அவங்க படிச்சு வாங்கின பட்டமில்ல, பல பொர்கள்-ள பங்கெடுத்துகிட்டு சம்பாதிச்சது. இதுலே பலரு சோழ சாம்ராஜ்யத்திலே நல்ல பொறுப்பிலே இருந்தாங்க.     
இவ்வளவு பேரு ஒரே நேரத்துல ஒரே இடத்துல கூடறது லேசா நடக்கற காரியமில்லே. இது தெளிவா தெரிஞ்சுது வந்தியத் தேவனுக்கு. இவங்க சங்கத்த ஏன் கூட்டி இருக்காங்கன்னு  நெனைச்சான் வந்தியத் தேவன், இவன் வந்தத பலரு விரும்பலங்கறதும் சேந்துகிச்சு. விருந்து மேல பெரிசா  ஈடுபாடு இல்ல அவனுக்கு.
"ரொம்ப களச்சு போயிருப்பே"-ன்னு அவனுக்கு தூங்கறதுக்கு இடத்த காமிச்சான் கந்தமாறன். மாளிகைல மேல் மாடத்தில இருந்த திறந்த மண்டபம் அது. "மத்த விருந்தாளிங்கள கவனிச்சுட்டு நானும் உன் பக்கம் வந்து படுத்துகிறேன்"ன்னு சொல்லிட்டு போய்ட்டான் கந்தமாறன்.
வந்தியத் தேவன் படுத்த உடனே தூங்கிட்டான். தூக்கத்திலே பயங்கரமான கனவெல்லாம் வந்தது, திடுக்குன்னு முழிச்சுகிட்டான். நேரா பாத்தா மாளிகயோட எதிர் பக்கம் சுத்து சுவர் மேல ஆழ்வார்கடியானோட தல தெரிஞ்சுது. துள்ளி எந்திச்சான், வாள எடுத்து இடுப்பில செருகினான், விறு விறுன்னு ஆழ்வார்கடியான் தல தெரிஞ்ச இடம் பாத்து நடக்க ஆரம்பிச்சான்.  மாளிகை சுவர், தூண்கள் எல்லாம் கடந்து நடக்க வேண்டி இருந்தது, அப்ப ஒரு இடத்துல நடக்கும் போது ஏதோ பேச்சு சத்தம் கேட்டது, அதுல தான் பேரு வேற கேட்டுச்சி இவனுக்கு. தூண்கள் பின்னாடி மறைவா நின்னுகிட்டு மெல்ல எட்டி பாத்தான். 
கீழ குறுகலான மறைவான முற்றம் ஒண்ணுல கொஞ்சம் மறைவான இடத்துல சுமார் பத்து பன்னெண்டு பேரு இருந்து பேசிட்டு இருந்தாங்க அதுல கந்தமாறனும் இருந்தான். பக்கத்திலே பழுவேட்டரையர் கூட வந்த மூடுபல்லக்கு இருந்தது. ஆழ்வார்கடியான் பெரிய ஆளு தான். அவன் பாத்துட்டு இருந்த இடத்த கீழ இருந்து யாரும் பாத்திட முடியாது ஆனா இவனுக்கு கீழ நடக்கிறது தெரியும், நல்லா கேக்கும்.
"...அந்த சிநேகிதன் எங்க படுத்திருக்கான்? நம் பேச்சு அவன் காதில விழுந்திடக் கூடாது. அவன் வட திசை மாதண்ட நாயகருக்கு கீழே வேலை செய்யற ஆளுங்கறது நினைவில இருக்கட்டும். நம் திட்டம் நெறைவேருற  காலம் வரை அது ரகசியமா இருக்கணும். அவனுக்கு இது தெரிஞ்சதுன்னா அவன வெளிய விடக் கூடாது, வேலை முடிச்சிட வேண்டியது தான்" 
வந்தியத் தேவனுக்கு திக்-ன்னு இருந்துச்சி, வட திசை மாதண்ட நாயகர்ன்னா இளவரசர் ஆதித்த கரிகாலர். அவருக்கு தெரியாம என்ன திட்டம் இதுன்னு நெனைச்சான். கந்தமாறன் வந்தியத் தேவனுக்கு பரிஞ்சு பேசினான்.பழுவேட்டரையர் சொன்னார்: "இவ்வளவு நம்பிக்கை உனக்கு இருந்தா சந்தோஷம். எங்களுக்கெல்லாம் அவனை தெரியாது, அதனால அப்படி சொன்னேன். நாம பேசறது ஒரு சாம்ராஜ்யத்தின் உரிமை பத்தின விஷயம் பாரு. கொஞ்சம் வெளிய தெரிஞ்சா கூட பல விபரீதங்கள் நடக்கலாம். இது எல்லாருக்கும் கவனத்திலே இருக்கட்டும்" 
உச்சியில  சுர்ருன்னு இருந்தது வந்தியத் தேவனுக்கு. முழு விசயத்தையும் கேட்டுர்ரதுன்னு முடிவு பண்ணினான்.
  (தொடரும்)
No comments:

Post a Comment